ஜர்னலிஸ்ட் ஆபிரகாம் லிங்கன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இசையில் ‘பசும்பொன் தேவர் வரலாறு’

ஜர்னலிஸ்ட் ஆபிரகாம் லிங்கன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இசையில் ‘பசும்பொன் தேவர் வரலாறு’

நேதாஜியோடு இணைந்து தேச விடுதலைக்கு பாடுபட்ட தென்னாட்டு நேதாஜி தேசிய தலைவர் பசும்பொன் சிங்கம் அய்யா முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று ஆவண படத்தை “பசும்பொன் தேவர் வரலாறு” என்ற பெயரில் கடந்த 2008ம் ஆண்டு திரையரங்குகள் மூலம் வெளியிட்டோம்.

அதுவரை அவர் தொடர்பான எந்த ஒரு படைப்பும் வரவில்லை. எங்களின் “பசும்பொன் தேவர் வரலாறு” ஆவண படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதோடு, உலக அளவில் ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்று ஆவண படம் தியேட்டரில் வணிக ரீதியில் வெளியாகி வந்த ஒரே படம் என்ற பெயரையும் பெற்றது.

இப்போது அந்த படத்தின் டிஜிட்டல் வடிவம் வரும் அக்டோபர் 30 தேதி இணையத்தில் முதல் முறையாக வெளியாக உள்ளது.

முன்னதாக நாளை 29.10.20 அன்று மதியம் 1 மணிக்கு “பசும்பொன் தேவர் வரலாறு” ஆவண படத்தின் டிரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட இருக்கிறார்கள்.

நீண்டகாலம் விளம்பர துறையில் கோலோச்சிவரும் பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் கார்த்திகேயன் தயாரித்திருக்கிறார்.

பிரபலமான பல முன்னணி நாளிதழ்களில் மூத்த செய்தியாளராக பணியாற்றிய எம்.பி. ஆபிரகாம் லிங்கன் இந்த வரலாற்று படத்துக்கான வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

மக்கள் தொடர்பு – நிகில்முருகன்

பின்னணி குரல்- நடிகர் வாகை சந்திரசேகர் MLA

பாடல்கள் – யுகபாரதி

எடிட்டிங் – தணிகாசலம்

இசை – விஜய் ஆண்டனி

ஒளிப்பதிவு – ஜீவா ஷங்கர்

நிர்வாகம்,ஆவணங்கள் சேகரிப்பு – மோனிதா

எழுத்து – இயக்கம் – எம்.பி.ஆபிரகாம் லிங்கன்.

தயாரிப்பு – பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் கலைச்செல்வி

பத்திரிகையாளர் MP ஆபிரகாம் லிங்கன் இயக்கி @BigPrintKarthik தயாரித்த தேசியதலைவர் பசும்பொன் #முத்துராமலிங்கதேவர் திருமகனாரின் வாழ்க்கை வரலாற்று ஆவண படமான “#பசும்பொன்தேவர்வரலாறு” டிரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா நாளை வெளியிடுகிறார்.

Pasumpon thevar varalaaru digital release on october 30

பொ உ ப கே – PUBG படத்தின் ‘ரணகளம்’ பாடல் ப்ரோமோ வீடியோ வெளியீடு..!

பொ உ ப கே – PUBG படத்தின் ‘ரணகளம்’ பாடல் ப்ரோமோ வீடியோ வெளியீடு..!

Ranagalam promo song பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG)
படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமா வீடியோ வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே அசாதாரண வரவேற்பைப் பெற்றுள்ளது.

படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகையரை அறிமுகப்படுத்தும் காட்சியாக இப்பாடலின் ப்ரோமா வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் நடித்த ‘தாதா 87’ திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் நடித்ததன் மூலம் உலகிலேயே வயதான நாயகன் என்ற பெருமையை அவர் பெற்றார்.

தாதா 87 வெற்றிப்படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி தான் தற்போது ‘பொல்லாத உலகின் பயங்கர கேம்’ (PUBG) படத்தையும் இயக்குகிறார்.

இது ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

பப்ஜி படத்திற்கு இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டின் இசையமைத்துள்ளார்.

ஏற்கெனவே தாதா 87 படத்தில் இவரது இசையில் ‘ஆறடி ஆண்டவன்’ பாடல் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்தது.

தற்போது PUBG படத்திற்காக விஜய் ஸ்ரீ ஜி-யின் வரிகளுக்கு இசையமைத்துள்ளார்.

முண்டாசு கவி பாரதியாரின் ‘நான் வீழ்வேன் என நினைத்தாயோ’ வரிகளுடன் பாடலைத் துவக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ ஜி.

இப்பாடலை, பிரபல ராப் இசைக் கலைஞர் ஃபைவ் ஓ (Five O) பாடியிருக்கிறார்.

இவர் லாட்வியா நாட்டைச் சேர்ந்தவர்.

இவருடைய ஆல்பங்கள் Aizejot, CitadaksReps, Nothing Compares, Nesteijties, Vis Man Ir Arlauts மிகவும் பிரபலமானவை.

சர்வதேச புகழ் பெற்ற ஃபைவ் ஓ, பப்ஜி படத்தின் ‘நான் வீழ்வேன் என நினைத்தாயோ’ பாடலின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தில் புரட்சி செல்வி ஐஸ்வர்யா தத்தா, நடிகர் விக்ரமின் தங்கை மகன் அர்ஜூமன், அனித்ரா நாயர் , ஆராத்யா, சான்ரியா, சாந்தினி, மொட்ட ராஜேந்திரன், சதீஷ் முத்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பாடல்களை
இசை வெளியீட்டில் தனி ட்ரெண்ட்டை ஏற்டுத்திவரும் “டிரெண்ட் நிறுவனம்” வெளியிடுகிறது.

பாடல்கள், லாட்வியாவில் உள்ள ஜெனிஸ் ஸ்ட்ராம் ஸ்டூடியோஸ் (Janis Straume Studios) மற்றும் சிங்கப்பூரில் உள்ள அர்டாண்ட் ஸ்டீடியோஸில் (Ardant Studios) பதிவு செய்யப்படவுள்ளன.

பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தின் இசை சரவெடி வருகிற தீபாவளி தினத்தில் ஆரம்பமாகிறது.

இந்த படம், உலகமெங்கும் 2021 பொங்கலன்று வெளியாகிறது.

Ranagalam promo song from PUBG is out now

கமல் – ஷங்கரின் ‘இந்தியன் 2’ என்னதான் ஆச்சு..? சூட்டிங் தொடங்க தாமதம் ஏன்.?

கமல் – ஷங்கரின் ‘இந்தியன் 2’ என்னதான் ஆச்சு..? சூட்டிங் தொடங்க தாமதம் ஏன்.?

indian 2 shooting updateகொரோனா ஊரடங்கில் சில தளர்வுகளுடன் சினிமா சூட்டிங்கை நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

ஆனாலும் லைகா-கமல்- ஷங்கர் -அனிருத் ஆகியோர் இணையும் பிரம்மாண்ட படமான ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்கப்படாமலே உள்ளது.

இதனால் இந்தியன் 2 படம் டிராப் ஆகிவிட்டதாக தகவல்கள் பறந்தன.

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் தெரியவந்துள்ளன.

அதாவது இந்தியன் 2 பட சில காட்சிகளில் குறைந்தது 250 பேர் வரை பணிபுரிவதாக உள்ளதாம்.

ஆனால், 100 பேருடன்தான் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் இன்னும் தாமதம் ஆகிறதாம்.

மேலும், கமல் மேக்கப்பிற்கு வெளிநாட்டிலிருந்து ஆட்கள் வரவேண்டும் என்பதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

Major clarifications on Indian 2 shooting

‘ரெமோ’ & ‘சுல்தான்’ டைரக்டருக்கு திருமணம்..; சிவகார்த்திகேயன் அட்லி பிரபு வாழ்த்து

‘ரெமோ’ & ‘சுல்தான்’ டைரக்டருக்கு திருமணம்..; சிவகார்த்திகேயன் அட்லி பிரபு வாழ்த்து

சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு கலக்கிய திரைப்படம் ‘ரெமோ’.

இதில் நாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷை விட சிவகார்த்திகேயன் அழகாக இருப்பதாக ரசிகர்களே அப்போது கமெண்ட் செய்தனர்.

இந்த படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் டைரக்டராக அறிமுகமானவர் பாக்யராஜ் கண்ணன்.

இவர் இயக்குனர் அட்லியிடம் ராஜா ராணி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

தற்போது கார்த்தி-ராஷ்மிகா இணைந்துள்ள ‘சுல்தான்’ படத்தை இயக்கி வருகிறார். இதன் சூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணனுக்கும் ஆஷா என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. இவர்கள் திருமணம் வேலூர் அருகே உள்ள சேவூரில் நடந்தது.

இதில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் அட்லி, தயாரிப்பாளர் எஸ்ஆர். பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Sulthan director Bakkiyaraj Kannan married Asha in chennai today

Bakkiyaraj Kannan wedding

சக்ரா & துப்பறிவாளன் 2..; ஒரே நாளில் விஷால் போட்ட டபுள் பூஜை..

சக்ரா & துப்பறிவாளன் 2..; ஒரே நாளில் விஷால் போட்ட டபுள் பூஜை..

விஷால் தயாரித்து நடித்துள்ள படம் ‘சக்ரா’.

எம்எஸ் ஆனந்தன் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெஜினா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது.

அதுபோல் விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய படம் துப்பறிவாளன் 2.

படத்தின் சூட்டிங் நடந்த சில நாட்களில் விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட மிஷ்கின் படத்திலிருந்து விலகினார்.

தற்போது இந்த படத்தை விஷாலே இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு ‘சக்ரா’ படத்தின் டப்பிங் உள்ளிட்ட பின்னணி வேலைகளுக்கான பூஜையும், ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கான பூஜையும் ஒரே நாளில் போட்டுள்ளார் விஷால்.

Here’s an exciting update about Vishal’s Thupparivaalan 2 and Chakra

vishal movie

BREAKING உயிருக்கு ஆபத்து.. முதல்வர் உதவனும்.. – சீனுராமசாமி அவசர தகவல்

BREAKING உயிருக்கு ஆபத்து.. முதல்வர் உதவனும்.. – சீனுராமசாமி அவசர தகவல்

மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சீனு ராமசாமி.

கடந்த 2007ல் ‘கூடல் நகர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி 2வது படமான ‘தென்மேற்கு பருவக்காற்று’ மூலம் தேசிய விருதை பெற்றார்.

விஜய் சேதுபதியை அந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்து பின்னர் அவருக்கு மக்கள் செல்வன் பட்டம் கொடுத்தார்.

நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட தரமான படங்களை தந்து கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு இளையராஜா, யுவன்சங்கர்ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.

இப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

இந்த நிலையில் சற்றுமுன் தன் ட்விட்டர் பக்கத்தில்… “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும்.
அவசரம்.” என்று மட்டும் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான அவரது ஆடியோ பதிவில்… நான் தமிழ் ஆர்வலர். நான் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவன் அல்ல.

நான் எடுத்துள்ள தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டால் சிலரிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளன. ஆனால் தற்போதுள்ள அரசியல் கட்சிகள் அல்ல.” என தெரிவித்துள்ளார்.

விரைவில் விரிவான தகவலுடன் சந்திப்போம்.

Director Seenu Ramasamy urgent message regarding threatening

More Articles
Follows