விஜய் அப்பா எஸ்ஏசி இயக்கத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவா

SAC Pandian stores jeevaவிஜய் டிவி சீரியல்களுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

இந்த தொடரில் 3 தம்பிகளில் ஒருவராக நடித்துள்ளவர் வெங்கட் ரங்கநாதன்.

இவர் ஜீவா என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

அதிலும் ஜீவா – மீனா (ஹேமா) ஜோடிக்கென்று ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தவிர சன் டிவி சீரியல் ‘ரோஜா’ தொடரிலும் வெங்கட் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களிடம் இருந்து வெங்கட்டுக்கு அழைப்பு வந்துள்ளது.

எனவே வெங்கட்டும் அவரின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

இந்த சந்திப்பு குறித்து வெங்கட் கூறியுள்ளதாவது…

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் என்னை போனில் அழைத்தார். மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். என்னை அழைக்க காரணம் விஜய்யின் தாயார் ஷோபா மேடம் தான்.

அப்போதுதான் ஷோபா மேடம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சிரியலின் மிகப்பெரிய ரசிகை என்பதை தெரிந்தேன்.

எஸ்.ஏ.சந்திரசேகர் சார் புதிய படத்துக்கு நடிகரைத் தேடிக் கொண்டிருந்தாராம். அப்போது ஷோபா மேடம் தான் என்னை பரிந்துரை செய்தார்.

மேடமுக்கு என் நன்றி. என்னால் இந்த மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.

எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து பேசியது என் வாழ்நாளில் மகிழ்வான விஷயம்.” என வெங்கட் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Pandian stores Jeeva to play the lead role in SAC movie

Overall Rating : Not available

Latest Post