JUST IN திரைப்பட நடிகரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகருமான நெல்லை சிவா காலமானார்.

JUST IN திரைப்பட நடிகரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகருமான நெல்லை சிவா காலமானார்.

nellai sivaபிரபல திரைப்பட நடிகரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகருமான நெல்லை சிவா (வயது 60) மாரடைப்பால் காலமானார்.

மகாபிரபு, வெற்றிக் கொடி கட்டு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் படம் 1985 இல் வெளியான ஆண்பாவம் ஆகும்.

இவர் முற்றிலும் நெல்லை வட்டார பாஷை பேசும் வழக்கம் உள்ளவர்.

இது இவரை மற்ற துணை நடிகர்களிடமிருந்து தனித்துவமாகக் காட்டுகிறது.

வடிவேலு & விவேக் உடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நெல்லை சிவா திருமணம் செய்து கொள்ளவில்லை. திருநெல்வேலி மாவட்டம் அவரின் சொந்த ஊரான பணகுடியில் வீட்டிலேயே மாரடைப்பால் காலமானார்.

அவரின் அண்ணன் பிள்ளைகள் தான் இறுதி சடங்குகளை நாளை நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Pandian Stores actor Nellai Siva passed away

JUST IN ‘மெர்சல்’ படத் தயாரிப்பாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான முரளி மருத்துவமனையில் அனுமதி

JUST IN ‘மெர்சல்’ படத் தயாரிப்பாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான முரளி மருத்துவமனையில் அனுமதி

thenandal films muraliதமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்.

இந்த நிறுவனம் தனது 100வது படைப்பாக அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தை தயாரித்து இருந்தது.

மேலும் 2020 நவம்பரில் நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் முரளி 557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி் (எ) ராமசாமி.

இந்த நிலையில் முரளிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Mersal producer admitted in hospital

தமிழகத்திற்கு 4 பாஜக MLAகளை வென்று கொடுத்த மாவட்ட தலைவர்களுக்கு கார் பரிசளிக்கும் முருகன்

தமிழகத்திற்கு 4 பாஜக MLAகளை வென்று கொடுத்த மாவட்ட தலைவர்களுக்கு கார் பரிசளிக்கும் முருகன்

l muruganநடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக உடன் பாஜக கூட்டணி வைத்து இருந்தது.

இதில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் பாஜக 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

நெல்லையில் நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர் காந்தி, கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் டாக்டர் சரஸ்வதி ஆகியோர் வெற்றி அடைந்தனர்.

இதில், தமிழக பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மே 11 இன்று 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இதில், தற்காலிக தலைவர் கு.பிச்சாண்டி முன்னிலையில், உறுப்பினர்கள் உறுதிமொழியை வாசித்து சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

முதலாவதாக மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏவாக பதவியேற்றுக் கொண்டார். சபாநாயகராக பொறுப்பேற்கவுள்ள அப்பாவு இவர்களும் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடவுள் அறிய என்று கூறி எம்எல்ஏவாக பொறுப்பேற்றார்

இவர்களைத் தொடர்ந்து
20 ஆண்டுகளுக்கு பின்னர் சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்தனர் பாஜக உறுப்பினர்கள்.

இந்த நிலையில் சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எல்.முருகன் கூறும்போது…

தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என்று பலர் கூறினர்.

தற்போது, 4 தொகுதிகளில் வென்று தக்க பதிலடி கொடுத்துள்ளோம்.

அந்த 4 பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்த அந்ததந்த மாவட்ட கட்சித் தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும்.

திமுகவும், காங்கிரஸும் ஆட்சியில் இருக்கும் போது நீட் தேர்வை கொண்டு வந்தனர்.

ஆனால், இன்று நீட்டுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவோம் என மக்களை எமாற்றுகிறார்கள் எனவும் முருகன் கூறினார்.

TN BJP gifts Innova cars to 4 district secretaries

மதுரை ஆவின் நிறுவனத்தில் ரூ 13.72 கோடி முறைகேடு.; 5 பேர் பணி இடை நீக்கம்.!

மதுரை ஆவின் நிறுவனத்தில் ரூ 13.72 கோடி முறைகேடு.; 5 பேர் பணி இடை நீக்கம்.!

madurai aavinமதுரை ஆவின் நிறுவனத்தில் பால் உபபொருள்கள் விற்பனையில் ரூ .13.72 கோடி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

இங்கு தினமும் கொள்முதல் செய்யப்படும் பாக்கெட்டுகளாக அடைத்து விற்பனை செய்யப்பஎட்டு வருகிறது.

இவையில்லாமல் தயிர் வெண்ணெய் , நெய் உள்ளிட்ட பல்வேறு உபபொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஆவின் நிறுவனத்தில் உபபொருள்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருவதும் இங்கே கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில் மதுரை ஆவின் நிறுவனத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன .

இதில் முக்கியமாக பால் உபபொருள்கள் விற்பனையில் ரூ .13.72 கோடி முறைகேடு நடந்துள்ளது..

இது தொடர்பான விசாரணையில் ரூ. 13.72 கோடி முறைகேடு நடந்துள்ளது உறுதியானது.

இதனையடுத்து, உதவி பொது மேலாளர்கள் கிருஷ்ணன், சேகர், மேலாளர் மணிகண்டன் உள்பட 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணையில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு லட்டு தயாரிக்க மதுரை ஆவின் நிறுவனத்திலிருந்து நெய் அனுப்பியதிலும் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

5 people suspended in Madurai Aavin scam

‘இந்தியன் 2’ பட தாமத்திற்கு அடுக்கடுக்கான காரணங்களை கோர்ட்டில் தெரிவித்த ஷங்கர்

‘இந்தியன் 2’ பட தாமத்திற்கு அடுக்கடுக்கான காரணங்களை கோர்ட்டில் தெரிவித்த ஷங்கர்

director shankarஉலகநாயகன் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை ஷங்கர் இயக்க லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த திரைப்படத்தை முடிக்காமல், வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி பட தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது லைகா.

இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பில் பதில் மனு இன்று கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், பல உண்மை தகவல்களை மறைத்துவிட்டது லைகா நிறுவனம் என குற்றம் சாட்டியுள்ளார் இயக்குனர் சங்கர்.

அவர் தெரிவித்துள்ளதாவது…

“இந்தியன் 2 படத்தை முதலில் தில்ராஜு என்பவர் தயாரிக்க முன் வந்தார்.

அதன்பின் அவரை சமாதானப்படுத்தி, படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் முன் வந்தது.

படத்தை தயாரிக்க 270 கோடி ரூபாய் செலவாகும் என பட்ஜெட் போடப்பட்டது.

அதை குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியது. எனவே பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்தேன்.

ஆனால், படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமத்தை ஏற்படுத்தியது லைகா.

தில்ராஜு படத்தை தயாரித்திருந்தால் படம் ஏற்கனவே வெளியாகியிருக்கும்.

செட் அரங்குகள் அமைத்து தருவதில் தாமதம், நிதி ஒதுக்கீடில் தாமதம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானது.

நடிகர் கமலுக்கு மேக் அப் அலர்ஜி ஏற்பட்டது. அதற்கு தான் பொறுப்பல்ல.

படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நடிகர் விவேக் இறந்துவிட்டார். நடிகர் பாபி சிம்மா உள்ளிட்ட கலைஞர்கள் தற்போது வேறு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இதுதவிர படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது.

மேலும் கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களாலும் படப்பிடிப்பு தாமதமானது.

ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பை மீண்டும் துவங்க தயாராக இருப்பதாக கூறியும், அதை கருத்தில் கொள்ளாமல் தனக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் ஷங்கர்.

கடந்த ஓராண்டு காலத்தை வீண்டித்தது லைகா நிறுவனம் தான்.

இதன் காரணமாக தனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டது.

எனவே, தனக்கெதிராக லைகா நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் ஷங்கர் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Shankar blames lyca for Indian 2 delay

கவிதை ஈசியா எழுதுறோம்.. டியூனுக்கு பாட்டு எப்படி எழுதுவது..? இதோ பத்தே நாளில் பாட்டு எழுத ஆன்லைன் க்ளாஸ்.!

கவிதை ஈசியா எழுதுறோம்.. டியூனுக்கு பாட்டு எப்படி எழுதுவது..? இதோ பத்தே நாளில் பாட்டு எழுத ஆன்லைன் க்ளாஸ்.!

lyricistபத்து நாள்களில் பாடலாசிரியர் ஆக இணைய வழி பயிற்சி வகுப்பு.

10 வகுப்புகள் |

ஒரு வகுப்பு குறைந்த பட்சம் 1 மணி நேரம் |

எளிமையான பயிற்சி |

வீட்டுப்பாடம் & தேர்வு உண்டு |

பயிற்சி வகுப்பு தவிர பயிற்சியின் சிறப்பு பகுதியாக 5 பாடலாசிரியர்கள் உடன் கலந்துரையாடல் |

பயிற்சி முடிவில் சான்றிதழ் உண்டு.

பயிற்சி கட்டணம் மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள…

கீழ்க்காணும் எண்களில் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்பு எண்கள்:
9841869379
9500059379
8489368355

Online coaching class for Lyricist

More Articles
Follows