தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தன் இளம் வயதிலேயே தேசிய விருதை வென்றவர் நடிகர் தனுஷ்.
இன்று கோலிவுட் முதல் பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று தன் நடிப்பால் கலக்கி வருகிறார்.
மேலும் பாடகர், பாடல் ஆசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்து பிஸியாக இருக்கிறார்.
இவையில்லாமல் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ்வாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ட்விட்டரில் இவரை பின்தொடர்பவர்கள் பட்டியலில் 50 லட்சத்தை (5 மில்லியன்) எட்டியுள்ளார்.
ட்விட்டரில் உள்ள ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களை கடந்து தனுஷ் தற்போது முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Only Tamil Actor Dhanush crossed 5 millions followers in twitter