ரஜினி-170ல் இணைகிறாரா உதயநிதி பட டைரக்டர்.? போனிகபூர் விளக்கம்

ரஜினி-170ல் இணைகிறாரா உதயநிதி பட டைரக்டர்.? போனிகபூர் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கிய ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கவுள்ள ‘தலைவர்169’ (தற்காலிக பெயர்) படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.

இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இப்பட சூட்டிங் தொடங்கவே இன்னும் 5 மாதங்கள் இருக்கும் நிலையில் ரஜினியின் 170 படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளதாகவும் அதனை போனிகபூர் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது.

(நாம் அப்படி ஒரு செய்தியை வெளியிடவில்லை)

இந்த நிலையில், இதுகுறித்து ‘வலிமை’ படத்தயாரிப்பாளர் போனி கபூர் தன் ட்விட்டரில் கூறியுள்ளார்.

அவரின் பதிவில்..” ரஜினி சாரும் நானும் பல வருட நண்பர்கள். இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டு கருத்துகளை பரிமாறிக் கொள்வோம். நாங்கள் இணைந்து ஒரு படம் எடுப்பதாக இருந்தால், அதை முதலில் அறிவிப்பது நானாகத்தான் இருப்பேன். இதுபோன்ற கசிந்த தகவல்களை ரசிகர்கள் நம்ப வேண்டாம்” என பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த ‘கனா’ படத்தை இயக்கியவர் அருண்ராஜா காமராஜ். மேலும் ரஜினியின் ‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற நெருப்புடா, நெருங்குடா என்ற பாடலை எழுதி பாடியிருந்தார்.

தற்போது ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான ‘ஆர்டிக்கிள் 15’ என்ற படத்தை உதயநிதி நடிப்பில் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் இயக்கி வருகிறார் அருண்ராஜா காமராஜ்.

No Leaked Ideas: Valimai producer Boney Kapoor Clarifies On Rajini’s Movie

ரஜினி போட்ட பிள்ளையார் சுழி.; ‘லீ கிரான்ட் ரெக்ஸ்’ தியேட்டரில் வலிமை

ரஜினி போட்ட பிள்ளையார் சுழி.; ‘லீ கிரான்ட் ரெக்ஸ்’ தியேட்டரில் வலிமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என்னதான் நம் நாட்டில் ஆயிரம் வளங்கள் இருந்தாலும் நம்மில் பலருக்கு வெளிநாட்டு மோகம் அதிகமாகவே உண்டு.

அட.. பாஃரீன் வேலை, பாஃரீன் பொருட்கள்,, பாரீன் மாப்ள… பாரீன் கார்.. என பலரும் வெளிநாட்டு புகழை பாடுவதை கேட்டு இருக்கிறோம்.

அதிலும் சினிமா பிரபலங்கள் பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு டூயட் சாங்க்கு கூட பாரீன் லொக்கேசன் தேடி பறப்பவர்கள் பலருண்டு.

அதுபோல் நம் நாட்டில் பிரபலமான பல தியேட்டர்கள் இருந்தாலும் உலகளவில் பிரபலமான பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள ‘லீ கிரான்ட் ரெக்ஸ்’ தியேட்டரில் தன் படத்தை வெளியிட பல தயாரிப்பாளர்கள் நினைப்பதுண்டு.

அந்த தியேட்டரில் 2700 இருக்கைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு அண்மைக்காலமாக தமிழ் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் தான் முதன்முதலாக இங்கு திரையிடப்பட்டது.

அதன்பின்னர் விஜய் அஜித் படங்களும் ‘லீ கிரான்ட் ரெக்ஸ்’ தியேட்டரில் திரையிடப்பட்டன.

தற்போது அஜித் நடித்த ‘வலிமை’ படம் பிப்ரவரி 25ம் தேதியன்று இரவு 8 மணிக்கு திரையிடப்பட உள்ளதாம்.

பிரான்ஸ் நாட்டில் மட்டும் சுமார் 55 தியேட்டர்களில் வலிமை ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Valimai grand release in Lee grand rex like Rajinikanth’s Kabali

ஓட்டு போட இன்ஸ்சூரன்ஸ் எக்ஸ்பியரியான காரில் வந்தாரா.? விஜய் விளக்கம்

ஓட்டு போட இன்ஸ்சூரன்ஸ் எக்ஸ்பியரியான காரில் வந்தாரா.? விஜய் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று முன்தினம் சனிக்கிழமை 19ம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

வயது முதியவர்கள் வரை பொதுமக்கள் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். நடிகர்களில் கமல், விஜய், சூர்யா, கார்த்தி, அருண்விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் அவரவர் பகுதிகளில் வாக்களித்தனர்.

சென்னையில் வழக்கம்போல் மந்தமான வாக்குபதிவு இருந்தது. பிரபல நடிகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த், அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன், சிம்பு, தனுஷ் உள்ளிட்டவர்கள் வாக்களிக்க வரவில்லை.

சென்னை நீலாங்கரை உள்ள வாக்குச்சாவடியில், தனது வாக்கை பதிவு செய்திருந்தார் நடிகர் விஜய்.

அவர் சிவப்பு நிற ஆல்டோ காரில் வந்திருந்தார். பிராண்ட் சொகுசு கார்களை வைத்துள்ள விஜய் ச்சாதாரண ஆல்டோ காரில் வருகை தந்தது பேசும் பொருளானது.

இத்துடன் அந்த காருக்கு இன்சூரன்ஸ் செலுத்தப்படவில்லை என்ற சர்ச்சையும் கூடவே எழுந்தது. இன்சூரன்ஸ் (எக்ஸ்பியரி) காலாவதியானதாகவும் கூறப்பட்டது.

எனவே சோஷியல் மீடியாவில் விஜய்யை அவரின் எதிர்ப்பாளர்கள் கண்டித்து வறுத்தெடுத்தனர்.

இந்த நிலையில் இன்சூரன்ஸ் தொடர்பான சர்ச்சைக்கு விஜய் தரப்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விஜய் வந்த Maruti /Celerio ZXI மாடல் காருக்கு Own Damage இன்சூரன்ஸ், ஜூன் 16 2021 முதல் ஜூன் 15 2022 வரை உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் Third party insurance 2019ம் ஆண்டு மே மாதம் 29 முதல் 2022 மே 28 வரை வரை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் வந்த குறிப்பிட்ட கார் ஜோசப் விஜய் என்ற பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Actor Vijay is not a car insurance defaulter team issues statement

பைனான்சியர் அன்புசெழியனின் மகள் திருமணம்.; ரஜினி கமல் பிரபு நேரில் வாழ்த்து

பைனான்சியர் அன்புசெழியனின் மகள் திருமணம்.; ரஜினி கமல் பிரபு நேரில் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், திரையரங்கு உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர் திரு அன்புசெழியன் அவர்களது இல்ல திருமண விழா இன்று 21 பிப்ரவரி 2022 காலை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

மணமக்கள் சுஷ்மிதா MBA – மணமகன் R.சரண் MBA , இருவரையும், தமிழ் சினிமா பிரபலங்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தயாரிப்பாளர் போனிகபூர், பிரபு, விக்ரம் பிரபு, விஜய் ஆண்டனி, வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் தாணு, தேனாண்டாள் முரளி, அருள்பதி, எல்ரெட்குமார், நடிகர் நாசர், அம்மா சிவா, மனோபாலா, மயில்சாமி, இயக்குநர்கள் N.லிங்குசாமி, சுசிகணேசன், சரண், நடிகர் வைபவ், சுப்பு பஞ்சு, ரோகிணி தியேட்டர் பன்னீர் செல்வம் ஆகிய பிரபலங்களுடன்,

அரசியல் பிரமுகர்கள்

தங்கம் தென்னரசு, சேகர் பாபு, TTV.தினகரன், SV.சேகர், ராணிபெட் காந்தி, கு. பிச்சாண்டி, V V ராஜன் செல்லப்பா, R B உதயகுமார், வாணதி சீனிவாசன், செல்லூர் ராஜு, SP வேலுமணி, ஜெயக்குமார், LK சுதீஷ், ஆகியோர்..

நேரில் ஆசிர்வதித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Rajinikanth, Kamal Haasan and Prabhu Light Up Tamil Film Producer GN Anbu Chezhiyan’s Daughter’s Wedding

இயக்குநர் சங்க தேர்தல்.: போர்ஜரி செய்த செல்வமணி மீது பாக்யராஜ் பாய்ச்சல்

இயக்குநர் சங்க தேர்தல்.: போர்ஜரி செய்த செல்வமணி மீது பாக்யராஜ் பாய்ச்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2022 – 2024 ஆண்டுக்கான இயக்குநர் சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆசியுடன் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் 30 பேர் குழு பங்கு கொள்கிறது.

இவர்களின் அறிமுக விழா நேற்று பிப்ரவரி 20ல் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில் வரவேற்புரை அளித்த மங்கை அரிராஜன் பேசியதாவது…*

இமயம் அணி என்றாலே அனைவருக்கும் தெரியும், இது இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் ஆசி பெற்ற அணி. தலைவர் பாக்யராஜ் தலைமையிலான அணி. இது கண்டிப்பாக வெற்றி பெறும்.

இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் அனைவரையும் இயக்குநர் R.சுந்தர்ராஜன் அவர்கள் பத்திரிகை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தார்.

இமயம் அணி சார்பில்

K.பாக்யராஜ் – தலைவர்

ரா. பார்த்திபன் – செயலாளர்

வெங்கட் பிரபு – பொருளாளர் பதவிகளுக்கு போடியிடுகிறார்கள்

இணை செயலாளர் பதவிகளுக்கு,

A.ஜெகதீசன், R.ஜெனிஃபர் ஜீலியட், ராஜாகார்த்திக் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு,

மங்கை அரிராஜன், பாலசேகரன், K.P.ஜெகன், நாகேந்திரன், KBB.நவீன், R.பாண்டியராஜன், வி. பிரபாகர், சசி, R.ஷிபி, S.S.ஸ்டேன்லி, சாய் ரமணி, வேல்முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த அணியிலிருந்து துணைத் தலைவர்கள் பதவிக்கு…

R.மாதேஷ், எழில் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

இயக்குநர் K.பாக்யராஜ் பேசியதாவது…

எங்கள் இமயம் அணி இன்று அறிமுகமாவது மகிழ்ச்சி. பத்திரிக்கை நண்பர்கள் அனைவரின் ஆதரவும் எங்களுக்கு இருப்பது மகிழ்ச்சி. உதவி இயக்குநர்களுக்கு, இயக்குநர்களுக்கு என்னென்ன சிக்கல்கள் கஷ்டங்கள் உள்ளது என குழுவாக விவாதித்தே இந்த வாக்குறுதி அறிக்கையை உருவாக்கினோம்.

பெயருக்காக இல்லாமல் வெற்றி பெற்றவுடன் இதில் அறிவித்துள்ள அனைத்து உறுதிமொழிகளும் நிறைவேற்ற, முழுமையான அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஜெகன் பேசியதில் ஒன்றை மறுக்கிறேன். இந்த டீம் ஜெயித்தால் சங்கத்திற்கு நல்லது, இல்லாவிட்டால் எங்களுக்கு நல்லது என்றார். ஆனால் நாங்கள் இங்கு ஜெயிக்க தான் வந்திருக்கிறோம். நல்லது செய்யத்தான் வந்துள்ளோம், நாங்கள் பெரிய வாக்குறுதிகள் தரவில்லை.

மீன் பிடிக்க தூண்டில் மட்டுமே தருவோம் பிழைத்து கொள்வது உங்கள் சாமர்த்தியம், யாரையும் குற்றம் சொல்ல வரவில்லை, நாங்கள் நல்லது செய்ய வந்திருக்கிறோம். தேர்தலில் போட்டியிட முடிவெடுத்த போது செல்வமணி உடன் போட்டியிட வேண்டாம் என பலர் பயமுறுத்தினார்கள், ஆனால் எல்லாவற்றையும் சந்திக்க முடிவு பண்ணியே இறங்கியுள்ளேன்.

சர்கார் விசயத்தில் ராஜேந்திரன் யாரென்றே தெரியாது, ஆனால் அவர் வந்து பிரச்சனை என்று சொன்னபோது குழுவில் இருக்கும் எல்லோரிடமும் கலந்து ஆலோசித்தேன். முருகதாஸையே வீட்டுக்கு கூப்பிட்டு பேசியபிறகு, செல்வமணி அது வேற கதை இது வேற கதை என்றார் அங்குதான் எனக்கும் அவருக்கும் முதல் பிரச்சனை ஆரம்பித்தது.

அந்த பிரச்சனையில் செல்வமணி போர்ஜரி செய்தார், நான் எடுத்த நடவடிக்கையில் பிறகு காம்ப்ரமைஸ் ஆனார்கள். நான் இருந்த சங்கத்திலேயே அவரால் போர்ஜரி நடத்த முடிகிறது எனும் போது, அவர் தலைவராக இருக்கும் சங்கத்தில் என்னென்ன செய்திருப்பார்.

அதனால் தான் இந்த தேர்தலில் நிற்க முடிவு செய்தேன். இந்த தேர்தலில் கண்டிப்பாக எங்கள் அணி ஜெயிக்கும். எங்களுக்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

பின்னர் இமயம் அணி சார்பிலான 18 வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை பத்திரிக்கை நண்பர்களுடன் இணைந்து வெளியிட்டார்.

வேட்பாளர்களை வாழ்த்தி இயக்குநர் செந்தில் நாதன் பேசியதாவது…

இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் ஆசி பெற்று தலைவர் பாக்யராஜ் தலைமையில் போட்டியிடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஒரு சங்கம் என்பது அனைவருக்கும் சம உரிமையை தருவது, ஆனால் ஒரு குழு மட்டுமே அமர்ந்து கொண்டு நாங்களே இருப்போம் என்பது என்ன மாதிரியான மனநிலை என்பது தெரியவில்லை.

ஒரு குழு மட்டும் தான் நல்லது செய்ய வேண்டுமா? வேறு யாரும் வரக்கூடாதா?, இயக்குநராக ஆசைப்பட்டு நிறைய பேர் லட்சியத்தோடு ஊரிலிருந்து வந்தவர்கள் லட்சியத்தை மறந்து சாப்பாட்டுக்காக வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும்.

இந்த பதவியில் அவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள் இது மாற வேண்டும். நீங்கள் ஜெயித்து வந்து நல்லது செய்ய வேண்டும். கண்டிப்பாக இவர்கள் தான் ஜெயிப்பார்கள் வெற்றி மேடையில் நான் இருப்பேன் என வாழ்த்துகிறேன் நன்றி.

இயக்குநர் சங்க துணை தலைவர் R.மாதேஷ் பேசியதாவது…

போட்டி போட்டு ஜெயித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஆனால் என்னை போட்டியின்றி தேர்ந்தெடுத்து விட்டார்கள். சங்கத்தில் பல ஆண்டுகளாக இருக்கிறேன். ஆனால் போட்டியிட்டதில்லை. கஷ்டப்படும் ஒவ்வொரு உதவி இயக்குநர்களுக்கும் உதவுகிறேன் என்று அறிக்கையில் கூறியுள்ளனர் அதற்காகவாவது இந்த அணியை வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த அணி கண்டிப்பாக ஜெயிக்கும் நன்றி.

இயக்குநர் சாய் ரமணி பேசியதாவது..

எழுத்தாளர் சங்கத்தில் பாக்யராஜ் சாருடன் சில ஆண்டுகளாக பயணித்து கொண்டிருக்கிறேன். அந்த சங்கம் இருந்த நிலையை மாற்றி நல்ல நிலைக்கு கொண்டுவந்துள்ளார். ஓட்டே இல்லாதவர்கள் கருத்து சொன்னாலும் அவர்களை அழைத்து பிரச்சனைகளை கேட்டு தீர்த்துள்ளார். பெரிய நடிகர், பெரிய நிறுவனத்திற்கு எதிராக போராடி ஒரு அசோஸியேட்டுக்கு நியாயம் வாங்கி தந்தார். தனக்கான ஒரு பொறுப்பை சரியாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்.

அவருடன் இருந்து பார்த்தவன் என்ற முறையில், அவர் வந்தால் இயக்குநர் சங்கம் இன்னும் வளப்படும். அவர் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் கண்டிப்பாக நிறைவேற்றுவார். சங்கத்தை சிறப்பாக முன்னெடுப்பார். இந்த இமயம் அணி கண்டிப்பாக வெற்றி பெறும்

இயக்குநர் ஜெகன் பேசியதாவது…

ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது 10 ஆண்டுகளாக இந்த சங்கத்தில் இருக்கிறேன், ஒரு வேட்பாளர் அறிமுகம் பத்திரிக்கையாளர் முன்னிலையில் நடக்கிறது. எங்கள் சங்கம் மிகவும் பின் தங்கி இருக்கிறது. சங்கம் பற்றி சமூக வலைதளங்களில் பேசினால் தகுதி நீக்கம் என ஒரு சட்டம் உள்ளது.

பத்திரிகைகளை சந்திக்கவே கூடாது என சொல்வது சர்வாதிகாரம், இந்த விதிமுறையை மீறி உங்கள் முன்னிலையில் இந்த நிகழ்வை நடத்தும் தலைவருக்கு நன்றி. பாக்யராஜ் எதற்கும் துணிந்தவர். இங்கு வேலை பார்ப்பவர்கள் 75 சதவீதம் மெம்பராக இல்லாதவர்கள், இதையெல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லை.

எதிரணியில் நீங்கள் நன்றாக வேலை செய்கிறீர்கள் ஆனால் வேறு யாருமே நன்றாக வேலை செய்ய மாட்டார்கள் என ஏன் நினைக்கிறீர்கள், இது மாற வேண்டும். ஒவ்வொரு தேர்தலுக்கு முன் ஒரு அறிக்கையை சமர்பிப்பார் செல்வமணி ஆனால் தேர்தலுக்கு பின் அவையெல்லாம் காணாமல் போய் விடும், என்ன நாடகம் இது என்று தெரியவில்லை. தேர்தல் என்றால் எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும், இந்த டீம் ஜெயித்தால் சங்கத்திற்கு நல்லது, இல்லாவிட்டால் எங்களுக்கு நல்லது. எங்கள் அணி சார்பாக அனைத்து பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு நன்றி.

Director Bhagyaraj’s harsh criticism of RK Selvamani has caused a great stir in the movie industry

இந்தியாவில் திரைப்பட உரிமைகளுக்கான பிளாக்செயின் மேம்படுத்தல்

இந்தியாவில் திரைப்பட உரிமைகளுக்கான பிளாக்செயின் மேம்படுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி தயாரிப்பாளர்கள் அதிக வருவாய் ஈட்ட உதவும் இந்தியாவின் முதல் NFT திரைப்பட சந்தை இந்தியாவில் திரைப்பட வணிகம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதில் தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்ப தொழில்முனைவோர் செந்தில் நாயகம் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் & திரைப்பட வணிக ஆலோசகர் ஜி கே திருநாவுக்கரசு ஆகியோர் இணைந்து இந்தியாவின் முதல் NFT திரைப்பட சந்தையாக இருக்கும் Oracle Movies ஐ அறிமுகப்படுத்தியுள்ளனர்.

‘நான்- ஃபங்கிபிள் டோக்கன்’, விரைவில் NFT, திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நிறுவனங்களை மேம்பட்ட மற்றும் பாதுகாப்பான பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்பட உரிமைகளை வாங்கவும் விற்கவும் அனுமதிக்கிறது.

NFT தனித்துவமானது மற்றும் வேறு எதையாவது மாற்ற முடியாது. எனவே, இது முறைகேடுகளைத் தடுக்கிறது மற்றும் பங்குதாரர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்குகிறது.

ஆரம்பத்தில், Oracle Movies தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலத் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் ஐபி உரிமை வைத்திருப்பவர்களுக்கு அதன் சேவைகளை வழங்கும்.

இந்தச் சேவைகள் விரைவில் நாடு முழுவதும் பிற மொழிகளிலும் விரிவுபடுத்தப்படும்.

Oracle Movies இந்திய திரைப்படங்களின் வணிகத்தை பாரம்பரிய உலகளாவிய சந்தைக்கும், புதிய அறியப்படாத மற்றும் ஆராயப்படாத சந்தைகளுக்கும் கொண்டு செல்லும்.

மேலும் சர்வதேச திரைப்படங்களை வெளியிடுவதற்கும், டப்பிங் செய்வதற்கும், ரீமேக் செய்வதற்கும் இந்திய சந்தைக்கு கொண்டு வரும்.

NFTகள் மூலம், எந்தவொரு சொத்தையும் (உடல் அல்லது டிஜிட்டல்) “டோக்கனைஸ்” செய்து, பிளாக்செயின் எனப்படும் பரவலாக்கப்பட்ட லெட்ஜரில் சேமிக்கப்பட்டு, அதை வாங்கவும் விற்கவும் முடியும்.

தற்போதைய அமைப்பு, நவீன சினிமாவிற்கு நல்லதல்லாத காகித ஒப்பந்தங்களை நம்பியிருப்பதாலும், விற்கப்படும் திரைப்பட உரிமைகளைக் கண்காணிக்கும் மத்திய நிறுவனம் எதுவும் இல்லாததாலும், மிகப்பெரிய இடைவெளியை நிவர்த்தி செய்ய NFT கைகொடுக்கிறது மற்றும் Oracle Movies ஒரு நிறுத்த சேவை வழங்குனராக இருக்கும். .

திரைப்பட தயாரிப்பு, விநியோகம், வசூல் மேலாண்மை போன்றவற்றில் உலக அளவில் சிறந்த நடைமுறைகளை இந்திய சினிமாவுக்கு கொண்டு வருகிறார்கள்.

OracleMovies இந்த ஆண்டின் பிற்பகுதியில் RBI இன் சென்ட்ரல் வங்கியின் டிஜிட்டல் நாணயமான DigitalRupee ஐ ஒருங்கிணைக்கும்.

செந்தில் நாயகம் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக திறந்த மூல தொழில்நுட்பங்களில் பணியாற்றி வருகிறார். அவர் சென்னை, பெங்களூர் மற்றும் கனடாவில் அலுவலகங்களைக் கொண்ட நூற்றுக்கணக்கான நபர்களுக்கு வேலை செய்யும் 16 வயது மென்பொருள் சேவை நிறுவனமான Sedin Technologies உடன் இணைந்து நிறுவினார்.

ஜி.கே.திருநாவுக்கரசு, ஊடகத்துறையில் 15 வருடங்கள் அனுபவம் வாய்ந்தவர் மற்றும் வானொலி, தொலைக்காட்சி, நிகழ்வுகள் மற்றும் திரைப்படம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். ஒரு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஆலோசகர், அவர் OracleMovies இன் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் ஆவார்

OracleMovies ஐந்து ஆலோசகர்களைக் கொண்டுள்ளது:

காமேஷ் இளங்கோவன், இணை நிறுவனர் மற்றும் COO, GuardianLink.io (அவர்கள் சமீபத்தில் அமிதாப் பச்சன் NFT ஐ வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய பிறகு 12 மில்லியன் டாலர் நிதி திரட்டினர்);

பரத் எம்எஸ், நிறுவனர் கேஆர்ஐஏ லா & மூத்த ஐபி மூலோபாய நிபுணர், திரைப்படம், திரைப்படங்கள் மற்றும் வர்த்தக முத்திரை தொடர்பான பல்வேறு வழக்குகளில் வெற்றி பெற்றவர் மற்றும் பல உயர்தர திரைப்பட கலைஞர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுடன் பணிபுரிகிறார்;

வெங்கடேஷ் சீனிவாசன், CEO, Nexus Consulting, பல தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களுடன் பணிபுரியும் வரலாற்று உள்ளடக்கம், விளையாட்டு போன்றவற்றுக்கு உண்மையான தரவுகளை வழங்குகிறார்;

ஸ்ரீராம், Contus இன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர், மேலும் புதிய தலைமுறை OTT தளமான GudSho ஐ இயக்குகிறார்.

பி ரங்கநாதன், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர், உள்ளடக்கம் கையகப்படுத்துதல் மற்றும் சிண்டிகேஷனில் 25+ வருட அனுபவம் கொண்டவர். இவர் சமீபத்தில் #பாகுபலி #RRR எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் காருவுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்..

மேலும் அறிய – https://oraclemovies.com/

India’s first NFT movie marketplace to help film producers earn more revenue

More Articles
Follows