லூஸ் மோசன் நிக்க்க்க்காம போவூது..; அட வெக்கங் கெட்டவங்களா.. இதையுமா வீடியோ எடுப்பீங்க..; பிரியங்காவை பிரித்து மேயும் நெட்டிசன்ஸ்

லூஸ் மோசன் நிக்க்க்க்காம போவூது..; அட வெக்கங் கெட்டவங்களா.. இதையுமா வீடியோ எடுப்பீங்க..; பிரியங்காவை பிரித்து மேயும் நெட்டிசன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay TV Priyankaவிஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளினி பிரியங்கா.

இவரை பல நிகழ்ச்சிகளில் எவ்ளோ கிண்டலடித்தாலும் அதை பொருட்படுத்தவே மாட்டார்.

இவர் ஒரு சாப்பாட்டு ராமன் (ராமி) என்பதை அவரே பல முறை கூறி ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் ரைஸ் மற்றும் பிரியாணி இரண்டும் ஒன்றாக சாப்பிட்டதால் தற்போது வயிற்றுப்போக்கு (லூஸ் மோசன்) 15 முறை போனதாக அவரது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரியங்கா.

பிரியங்கா அதனை நகைச்சுவையாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மருத்துவமனையில் நடந்த வீடியோவை எல்லாம் சூட் செய்து போட்டுள்ளார்.

இதை பார்த்து பிரியங்காவின் ரசிகர்கள் உற்சாகமானாலும் அட வெக்கங் கெட்டவங்களா.. இதையுமா வீடியோ எடுப்பீங்க.. என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Netizens slams Priyanka for her latest video

நட்சத்திர தம்பதிகளின் மகனுடன் ஜாலியாக சுற்றும் ‘பிக்பாஸ்’ ஜூலி..?

நட்சத்திர தம்பதிகளின் மகனுடன் ஜாலியாக சுற்றும் ‘பிக்பாஸ்’ ஜூலி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigg Boss julie2017ல் இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு ஒரேடியாக பிரபலமானவர் ஜூலி.

இதன் பின்னர் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு வந்தது.

இதில் கலந்துக் கொண்டு பிரபலமானார்.

தற்போது ஓரிரு திரைப்படங்களில் நாயகியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சமீபகாலமாக பிரபல நடிகரின் மகனுடன் ஊர் சுற்றுவதாக கூறப்படுகிறது.

ரியாஸ்கான் மற்றும் உமா தம்பதியரின் மகனுடன் ஜூலி சுற்றுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

ரியாஸ்கான் மகன் சாரிக் கானும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இவர் ஜிவி பிரகாஷ் நடித்த பென்சில் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாரிக் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss julie is in love with Shariq haasan ?

முதல் துரோகியே மகேந்திரன் தான்.. அதான் அவரே விலகிட்டாரு.; கடுப்பான கமலின் முழு அறிக்கை

முதல் துரோகியே மகேந்திரன் தான்.. அதான் அவரே விலகிட்டாரு.; கடுப்பான கமலின் முழு அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal mahendranகோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசனிடம் தோல்வியுற்றார் மநீம தலைவர் கமல்ஹாசன்.

கட்சி தோல்விக்கு பிறகு நிர்வாகக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மருத்துவர் மகேந்திரன், பொன்ராஜ் ஆகியோர் விலகல் கடிதத்தை கமலிடம் கொடுத்துள்ளனர்.

மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளனர்.

அதேபோல் பொதுச் செயலாளர்கள் சந்தோஷ்பாபு, சி.கே.குமரவேல், மௌரியா, முருகானந்தம் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் மகேந்திரன்… ”
கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னதாகவே கமல்ஹாசன் கட்சி நடத்துவதில் ஜனநாயகம் இல்லை.

அவர் கட்சி நடத்தும் நிலைப்பாடு மாறுவதாகத் தெரியவில்லை. எனவே கட்சியில் இருந்து மட்டுமல்ல கட்சியின் அடிப்படை பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.

கமல் தமிழகத்தைச் சீரமைக்கிறாரோ இல்லையே மக்கள் நீதி மய்யத்தைச் சீரமைக்க வேண்டும்.

அவர் விரும்பினால் ஒரு நண்பராக எப்பொழுதும் இருப்பேன்.”

இவ்வாறு மகேந்திரன் கூறியிருந்தார்.

இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…. ” ‘சீரமைப்பும் தமிழகத்தை’ எனும் பெருங்கனவை முன்வைத்து முதலாவது சட்டமன்றத் தேர்தலை சந்தித்தோம். ஒரு பெரிய போரில் திறம்பட செயல்பட்டோம்.

களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்து இருந்தார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டோம்.

துரோகிகள் களையெடுங்கள் என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படிக் களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர்.ஆர்.மகேந்திரன்.

கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிறார். ஜனநாயகமும் சமயங்களில் தோற்றுப் போகும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் இவர்தான்.

முகவரி கொடுத்தவர்களின் முகங்களை எடுத்துக் கொள்ளத் துணிந்தார். கட்சிக்காக உழைக்கத் தயாராக இருந்த பல நல்லவர்களை தலையெடுக்க விடாமல் செய்ததே இவரது சாதனை.

நேர்மை இல்லாதவர்களும், திறமை இல்லாதவர்களும் வெளியேறும்படி மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்பதை அனைவரும் அறிவர்.

தன்னுடைய திறமை இன்மையையும், நேர்மை இன்மையையும், தோல்வியையும் அடுத்தவர் மீது பழிபோட்டு அனுதாபம் தேட முயற்சிக்கிறார்.

தன்னை எப்படியும் நீக்கி விடுவார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக விலகிக் கொண்டார்.

ஒரு களையே தன்னைக் களை என்று புரிந்து கொண்டு தனக்குத் தானே நீக்கி கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன்.

இனி நம் கட்சிக்கு ஏறுமுகம்தான். என்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே வெளிப்படையானவை.

நான் செய்த தவறுகளை மறைக்கவோ மறுக்கவோ ஒருபோதும் முயற்சித்தது இல்லை.

என் சகோதர சகோதரிகளான மக்கள் நீதி மய்யத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு மனம் தளர வேண்டாம் என ஆறுதல் சொல்ல வேண்டியதில்லை.

உங்களின் வீரமும் தியாகமும் ஊர் அறிந்தவை. தோல்வியின் போது கூடாரத்தைப் பிடித்துக் கொண்டு ஓடும் கோழைகளைப் பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. கொண்ட கொள்கையில் தேர்ந்த பாதையில் சிறிதும் மாற்றம் இல்லை”

இவ்வாறு கமல்ஹாசன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Mahendran a betrayer: Kamal hits back at MNM vice president

எங்கள் நம்பிக்கைகளை உன் கையில் தந்துவிட்டோம்..; முதல்வர் ஸ்டாலினுக்கு பாடலாசிரியர் முருகன் மந்திரம் வாழ்த்து

எங்கள் நம்பிக்கைகளை உன் கையில் தந்துவிட்டோம்..; முதல்வர் ஸ்டாலினுக்கு பாடலாசிரியர் முருகன் மந்திரம் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மு.க.ஸ்டாலினுக்கு
பாடலாசிரியர் முருகன் மந்திரம்
வாழ்த்துக் கவிதை, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், பெருங்கிழவன் பெரியாரின் பேரனே,
பேரறிஞர் அண்ணாவின் தம்பியே, கலைஞரின் புரட்சிப் புதல்வனே

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு
பாடலாசிரியர் முருகன் மந்திரம்
வாழ்த்துக் கவிதை!
———————————————————-

தெற்கே
திராவிடமே

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்”
என்ற ஒற்றை வாக்கியத்திற்குள்
ஓராயிரம் புதிய வரலாறுகளை
படைக்க வந்த வல்லவனே…
வள்ளுவனே…!

தெரிந்தே தான்
உனக்கு ஸ்டாலின் என்று
பெயர் வைத்திருக்கிறார்,
கலைஞர்.

ஆம்,
ஸ்டாலின்கள் பாசிசத்தை
வீழ்த்தப் பிறந்தவர்கள்.

தமிழகம் மட்டுமல்ல…
இந்தியாவே இப்போது
உன்னை எதிர்பார்க்கிறது.

பூச்சிகளாய் புழுக்களாய்
நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
இந்தியக் குடிமக்கள்…
தெற்கைத் தான்
நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

வடக்கின்
வாடிய முகங்கள்
அத்தனையும்
தெற்குநோக்கி
பார்த்துக்கொண்டிருக்கிறது.

வடக்கின்
பாசிசத்தால் கட்டப்பட்ட
கைகள் அத்தனையும்
தெற்கு நோக்கி
கும்பிட்டுக்கொண்டிருக்கிறது.

பகுத்தறிவே
எம் தமிழ் நிலத்தின்
பண்பாடு என்பதை
இந்தியாவைத் தாண்டி
உலகுக்கே நீ
உணர்த்தி இருக்கிறாய்.

ஜாதகம், ஜோசியம், ராசி, ராசி பலன்….

அத்தனை
மூடநம்பிக்கைகளையும்
தனியொருவனாய்
குப்பையில் அள்ளி
வீசி இருக்கிறாய்.

பெருங்கிழவன் பெரியாரின்
ப்ரியத்துக்குரிய பேரனே…
பேரறிஞர் அண்ணாவின்
பெருமைமிகு தம்பியே…
எங்கள் கலைஞரின்
புரட்சிப் புதல்வனே…

உன்னை
உளமார வாழ்த்துகிறேன்
உடன்பிறப்பே.

தமிழகமே
உன் பின்னால் இருக்கிறது.
அநீதிகளை அடித்து நொறுக்கு.

மதத்தை வைத்து
மடத்தனங்கள் செய்து
மக்களை ஏய்த்து
வன்முறை வெறியாடி
இரத்தம் குடிக்க நினைப்போரை
இரக்கமின்றி சிறைக்கனுப்பு.

வெளியில் வந்து மீண்டும்
அட்டூழியம் செய்யாதிருக்க
நீயே பொறுப்பு.

சாதியை வைத்து
சண்டித்தனங்கள் செய்து
கொலைகளைச் செய்வோரை
கூட்டமாய்
கூண்டுக்குள் அனுப்பு.

மீண்டு வந்து
மீண்டும் செய்யாதிருக்க
பாடம் சொல்லித் தருவதும்
நம் பொறுப்பு.

பெண்களின் மீது
வெறியாட்டம் நடத்துவோரை
குறி வைத்து பிடி.

இனியொருவனுக்கு
இப்படியோர்
எண்ணம் வராதிருக்க
நீ வழங்கும் தண்டனையே
முதல் படி.

பெரியாரிஸம்
அம்பேத்கரிஸம்
கம்யூனிஸம்
ஃபெமினிஸம்

மக்களுக்கான
அத்தனை இசங்களும்
நம்பும் ஒரு முதல்வரை
உன்னால்
பெற்றிருக்கிறது,
நம் தமிழகம்.

ஆனந்தக் கண்ணீரோடு
பரவசப்பட்டுக் கிடக்கிறார்கள்,
அன்னைத் தமிழ்நாட்டின் மக்கள்.

ஒரு முதலமைச்சர்
பதவியேற்பில்
இத்தனைக் கொண்டாட்டங்களை
என் வாழ்நாளில் கண்டதில்லை.

ஒரு முதல்வர்
பதவியேற்கும் நாளில்
இத்தனை மக்கள் கூடி
வாழ்த்துவதையும்
என் வாழ்நாளில் கண்டதில்லை.

ஆகப்பெரிய ஒரு
புரட்சியின் தொடக்கமாகவே
உன் பதவியேற்பை
வரவேற்கிறார்கள் மக்கள்.

ஒரு இரட்சகனைப் போல
உன்னைக் கொண்டாடுகிறார்கள்
தமிழ் மக்கள்.

எம் தலைவனே
எங்கள் முதல்வனே

எங்களின்
அனைத்து நம்பிக்கைகளையும்
இன்றே
உன் கையில் தந்துவிட்டு
நாளை முதல்
நாங்கள்
எங்கள் பிழைப்பை
பார்க்கப் போகிறோம்…

ஆம்…

நாளை முதல்
நாங்கள் பிழைத்திருப்பதை
நீ பார்த்துக் கொள்வாய்…
என்ற பெருநம்பிக்கையில்!

– முருகன் மந்திரம்

@mkstalin @muruganmantiram @Udhaystalin @arivalayam @urkumaresanpro

Lyricist Murugan Manthiram wishes to MK Stalin

MK Stalin (1)

கொரோனா நிவாரணம் 4000.. ஆவின் பால் விலை குறைப்பு.. பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம்..; 5 அரசாணைகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கையெழுத்து.!

கொரோனா நிவாரணம் 4000.. ஆவின் பால் விலை குறைப்பு.. பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம்..; 5 அரசாணைகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கையெழுத்து.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK Stalinதமிழகத்தின் முதல்வராக இன்று மே 7ல் மிக எளிய முறையில் (கொரோனா காரணமாக) ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார் மு.க.ஸ்டாலின்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…’ எனும் நான்’ என்று கூறி தமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்.. அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

இவருடன் 33 புதிய அமைச்சர்களும் இன்று பதவிஏற்றுக் கொண்டனர்.

இந்த அமைச்சரவைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்டாலின் முதல் கையெழுத்து என்னவாக இருக்கும்.? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவியது.

இந்த நிலையில் கோட்டையில் தனது அறைக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், கோப்பில் முதல் கையெழுத்தாக எந்தத் திட்டத்துக்குப் போடுவார் என்கிற கேள்வி எழுந்த நிலையில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.

1. முதல் அரசாணையாக கொரோனா நிவாரணமாக அரிசி குடும்ப அட்டை ஒன்றுக்கு கருணாநிதி பிறந்த நாளில் ரூ.4000 என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதை முதல் தவணையாக மே மாதத்திலேயே ரூ.2000-ஐ குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் அரசாணை. இதன்படி 2 கோடியே, 7 லட்சத்து 66,000 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்.

2. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுகிறது. அது இந்த மாதம் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

3. மகளிர், பணிக்குச் செல்லும் பெண்கள், படிக்கும் பெண்கள் இலவசமாக உள்ளூர் பேருந்தில் பயணம் செய்யும் திட்டம் நாளை முதல் அமல்.

4. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற திட்டத்தின் கீழ் தேர்தல் பிரச்சாரத்தின்போது பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களில் தீர்வு காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கிற திட்டத்தின் கீழ் துறை உருவாக்கப்படுகிறது. இதற்காக ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுகிறார்.

5. கரோனா சிகிச்சை பெறுவோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை செலவுகளை அரசே வழங்கும்.

கூடுதல் தகவல்..:

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தனக்கு சேவை வாய்ப்பு வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

MK Stalin signs 5 orders on Day 1 as TN CM

புதுச்சேரி முதலமைச்சரானார் ரங்கசாமி.; துணை முதல்வர் உட்பட 3 அமைச்சர் பதவிகளை கேட்கும் பாஜக.!

புதுச்சேரி முதலமைச்சரானார் ரங்கசாமி.; துணை முதல்வர் உட்பட 3 அமைச்சர் பதவிகளை கேட்கும் பாஜக.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rangasamyபுதுச்சேரி மாநிலம் (காரைக்கால் மாஹி ஏனாம்) 30 தொகுதிகளைக் கொண்டது.

இம்மாநில சட்டசபைத் தேர்தலில்… காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

அதே போல என்.ஆர்.காங்கிரசின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 9 தொகுதிகளிலும், அ.தி.மு.க. 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

இதில்… 15 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 2 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான தி.மு.க 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.

எதிரணியில் 16 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது.

9 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க 6 இடங்களிலும் வெற்றிபெற்றது.

5 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க அனைத்திலும் தோல்வியைத் தழுவியது.

என்ஆர். காங். தலைவரும் முன்னாள் முதல்வருமான ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.

தட்டாஞ்சாவடி தொகுதியில் 12,978 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் ரங்கசாமி.

ஏனாம் தொகுதியில் 646 வாக்குகள் வித்தியாசத்தில் ரங்கசாமியை வீழ்த்தியிருக்கிறார் சுயேட்சை வேட்பாளரான கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்.

இதனையடுத்து பாஜக ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரினார் என்ஆர் காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி.

இந்த நிலையில் இன்று மே 7ல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

ரங்கசாமிக்கு தமிழில் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

பாஜக மேலிட பொறுப்பாளர் ரவி, தமிழக பாஜக தலைவர் எல் முருகன் உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்‍.

புதுச்சேரி அமைச்சரவை பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால் வேறொரு தேதியில் அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

*கூடுதல் தகவல்..:*

புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் பாஜக நமச்சிவாயத்துக்கு துணை முதல்வர் என கூறப்படுகிறது.

மே 9ல் துணை முதல்வர் உட்பட மூன்று அமைச்சர்கள் பதவியேற்பர் எனவும் சொல்லப்படுகிறது.

என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக இடையேயான உறவு சுமுகமாக உள்ளது என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

AINRC leader N Rangasamy sworn in as Puducherry Chief Minister

More Articles
Follows