வம்சம் சீரியலில் நடித்த பிரியங்கா தற்கொலை

வம்சம் சீரியலில் நடித்த பிரியங்கா தற்கொலை

vamsam fame priyankaபிரபல டிவியில் ஒளிபரப்பாகி வந்த வம்சம் என்ற தொடரில் ஜோதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரியங்கா.

இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருமணமாகிய பிரியங்கா வளசரவாக்கத்தில் அவரது கணவருடன் வசித்து வந்தார்.

இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மனஅழுத்தத்தால் பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரியங்காவின் உடலை மீட்ட வளசரவாக்கம் போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணா இருந்தா ரேப் செஞ்சிருப்பேன்.; ஓவரா பேசி சிக்கிய மிஷ்கின்

பெண்ணா இருந்தா ரேப் செஞ்சிருப்பேன்.; ஓவரா பேசி சிக்கிய மிஷ்கின்

Mysskin Controversy speech in Peranbu audio launchராம் இயக்கிய பேரன்பு படத்தில் மம்முட்டி, அஞ்சலி, சாதனா ஆகியோர் நடித்துள்ளனர்.

யுவன் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட மிஷ்கின் உணர்ச்சி வசப்பட்டு ஓவராக பேசினார்.

தமிழ் சினிமாவில் நடிக்கத் தெரிந்த நடிகர்களே இல்லை. நடிக்கவே தெரியாது.

மம்முட்டி மலையாளி இல்லை. அவரும் தமிழன்தான். அவரை கொண்டாடுவோம்.

“மம்முட்டிக்கு வயது கம்மியாக இருந்தா நான் பெண்ணாக இருந்தால் காதலித்து இருப்பேன்.

இந்நேரம் நான் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் அவரை ரேப் பண்ணியிருப்பேன்” என கூறினார்.

மிஷ்கினின் இந்த பேச்சுக்கு பெண்கள் அமைப்பினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Mysskin Controversy speech in Peranbu audio launch

___-க்கு அலையும் மனுஷ ப்ராணிகளை காயடிக்கனும்.: பார்த்திபன் பாய்ச்சல்

___-க்கு அலையும் மனுஷ ப்ராணிகளை காயடிக்கனும்.: பார்த்திபன் பாய்ச்சல்

Parthiban condemned Minor girl gang raped by 18 for 7 monthsசென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 11 வயது சிறுமியை கற்பழித்த குற்றத்திற்காக 17 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

போதை மருந்து கொடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் (7 மாதங்களாக) ஒருவர் மாற்றி ஒருவர் கற்பழித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த குற்றத்திற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டங்கள் எழுந்துள்ளது.

வழக்கறிஞர்கள் யாரும் அந்த குற்றவாளிகளுக்காக வாதாட மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற பாலியல் தொல்லைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நடிகரும், இயக்குநருமான பார்த்திபனும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அறுத்தெறியுங்கள் என்ற தலைப்பில் தெரிவித்துள்ளதாவது…

இந்த நிமிடம்
இதே மணிக்கு
இங்கோ அங்கோ எங்கோ
ஒரு பாலியல் வன் கொடுமை
நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது…
அதுவும் தொலைக்காட்சியில் இன்றைய
நிகழ்வை பார்த்தபடி!!!
அதை தடுப்பது எப்படி?
ஏனெனில்,
போன வாரம்
போன மாதம்
போன வருடம்
வேறு ஒரு சிறுமியின் உறைந்த
ரத்தத்தின் மீது ஈனஸ்வரத்தில் நம் துயர்,
ஈக்களாய் மொய்த்துக்
கொண்டிருக்கையில்
இந்த 17-ம், இன்னும் சில மிருகங்களும்
செவி திறனற்ற ஒரு சங்கு புஷ்பத்தினை
பிய்த்தெறிந்து கொண்டிருந்தனர்.
எனவே நம் கண்களையும், காதுகளையும்
கூர்மையாக்கி, ____-க்கு அலையும்
மனுஷ ப்ராணிகளை கண்டறிந்து
காயடிக்க வேண்டும்!

என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Parthiban condemned Minor girl gang raped by 18 for 7 months

ரஜினிக்காக படையப்பா2-வை பட்டைத் தீட்டும் கே.எஸ். ரவிக்குமார்

ரஜினிக்காக படையப்பா2-வை பட்டைத் தீட்டும் கே.எஸ். ரவிக்குமார்

KS Ravikumar works for Script Rajinis Padaiyappa 2ரஜினிகாந்த் கேரியரில் மிக முக்கியமான படம் படையப்பா.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய இப்படத்தல் சிவாஜி கணேசன், ரஜினி, ரம்யா கிருஷ்ணன், மணிவண்ணன், சௌந்தர்யா, நாசர், பிரகாஷ் ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படம் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியானது.

தமிழ் சினிமா வசூல் வரலாற்றில் மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தின் 2ஆம் பாகத்தை இயக்க கே.எஸ். ரவிக்குமார் முன்வந்துள்ளாராம்.

படையப்பா 2 படத்தின் ஒன்லைனை ரஜினியிடம் சொல்ல அவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.

கார்த்திக் சுப்பராஜ் படத்தில் தற்போது நடித்து வரும் ரஜினி, அரசியலில் இறங்குவதற்கு முன் தான் ஒப்புக் கொண்ட சில படங்களை முடிக்கத் திட்டமிட்டுள்ளராம்.

அதற்குள் தமிழக சட்டமன்ற தேர்தல் வராவிட்டால் படையப்பா 2 சாத்தியமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

படையப்பா படத்தில் நடித்த சிவாஜி கணேசன், சௌந்தர்யா, மணிவண்ணன் ஆகியோர் தற்போது உயிருடன் இல்லை. அதுபோல் வில்லியாக நடித்த ரம்யா கிருஷ்ணனும் படத்தில் இறந்து விடுவார்.

எனவே படையப்பா 2 எப்படி இருக்குமோ..?

KS Ravikumar works for Rajinis Padaiyappa 2 Script

ஹாலிவுட்டில் புட்பால் விளையாட்டை படமாக்கும் கமலின் சீடர்

ஹாலிவுட்டில் புட்பால் விளையாட்டை படமாக்கும் கமலின் சீடர்

Kamals asst Amjath Meeran to direct hollywood Movie titled Brazil

உலகநாயகன் கமலின் உதவியாளரான அம்ஜத் மீரான் என்பவர் பிரேசில் என்று தலைப்பிடப்பட்டுள்ள ஹாலிவுட் படத்தை இயக்கி வருகிறார்.

இவர் ஏற்கெனவே ஏராளமான குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்கள் இயக்கியுள்ளார். மேலும் இவர் ஒரு அனிமே‌ஷன் கலைஞர் ஆவார்.

சென்னை மற்றும் உலகின் பல பகுதிகளில் உருவாகும் இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை ஒருவர் நடிக்கிறாராம்.

படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக உலகின் சிறந்த 3 கிராபிக்ஸ் நிறுவனங்களை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Kamals asst Amjath Meeran to direct hollywood Movie titled Brazil

Exclusive : சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய்-அட்லி.?

Exclusive : சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய்-அட்லி.?

Thalapathy 63 likely to direct by Atlee produced by Sivaji Productionsஏஆர். முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை அடுத்த விஜய் யார் இயக்கத்தில் நடிக்க போகிறார்? என்ற கேள்வி நெடு நாட்களாக கோலிவுட்டில் வலம் வருகிறது.

இந்நிலையில் மீண்டும் அட்லியுடன் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஏற்கெனவே இந்த கூட்டணி தெறி மற்றும் மெர்சல் ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் 63வது படமாக உருவாகும் இப்படத்தை பிரபுவின் சிவாஜி புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஒருபுறம் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினியின் மன்னன், சந்திரமுகி, அஜித்தின் அசல் ஆகிய படங்களை தயாரித்த நிறுவனத்திற்கு வெகு நாட்களாக ஒரு படம் செய்ய வேண்டும் என விரும்பினாராம் விஜய். எனவே இந்த நிறுவனத்திற்கே கூடுதல் வாய்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

Thalapathy 63 likely to direct by Atlee produced by Sivaji Productions

More Articles
Follows