அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள்.. நீயா நானா நிகழ்ச்சி: கணவனை கலாய்த்த மனைவி பற்றி கவிஞர் தாமரை கருத்து

அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள்.. நீயா நானா நிகழ்ச்சி: கணவனை கலாய்த்த மனைவி பற்றி கவிஞர் தாமரை கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் வழங்கி வருகிறார்.

இந்த வார நிகழ்ச்சியில் கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

இதில் தன் கணவனுக்கு படிக்க தெரியாது.. அவர் இன்னும் முன்னேறவில்லை என மகள் முன்னிலையில் பேசியிருந்தார் ஒரு பெண்மணி.

ஆனால் அவருக்கு சிறந்த அப்பா என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார் கோபிநாத்.

இதனடுத்து ரசிகர்கள் அந்த பெண்ணை குறித்து விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் கவிஞர் தாமரை இந்த விவகாரம் குறித்து தன் சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது…

” அம்மாக்கள் இல்லை என்றால் குழந்தைகள் பள்ளி படிப்பை கூட தாண்ட முடியாது.

அந்த பெண் இதுபோன்ற நிகழ்ச்சியில் எப்படி பேச வேண்டும் என்பது தெரியாமல் பேசிவிட்டார். சிலர் இதுபோல பேசி தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொள்கிறார்கள்.

கோபிநாத் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கும்போது அவரது பிள்ளைக்கு அவரது தாய் மார்க் பட்டியலில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருப்பார்” என தெரிவித்துள்ளார்.

நீயா நானா

Neeya Naana latest Show Lyricist Thamarai Statement

‘வெந்து தணிந்தது காடு’.. சென்சார் சர்டிஃபிகேட் நியூஸ் போடு…

‘வெந்து தணிந்தது காடு’.. சென்சார் சர்டிஃபிகேட் நியூஸ் போடு…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிலம்பரசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியுள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு’.

இதில் சிம்புவின் காதலியாக சித்தி இதானி நடிக்க சிம்புவின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 2ம் தேதி ரசிகர்கள் முன்னிலையில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் பங்கேற்று பாடல்களை வெளியிட்டார்.

தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதி இந்த படம் வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் படத்திற்கு சென்சாரில் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Vendhu Thanindhadhu Kaadu censor certificate updates

விஜய்யை மிரட்ட பாலிவுட் வில்லனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

விஜய்யை மிரட்ட பாலிவுட் வில்லனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என அனைத்து படங்களும் தாறுமாறு ஹிட்டானது.

எனவே லோகேஷின் அடுத்தடுத்த படங்களுக்கு மாபெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார்.

இதில் அர்ஜூன், சஞ்சய்தத், கௌதம் மேனன், பிரிதிவிராஜ் உள்ளிட்ட அரை டஜன் வில்லன்களை களமிறக்க இருக்கிறாராம் லோகேஷ்

இதையும் தன் பாணியில் வழக்கம் போல கேங்ஸ்டர் கதையாக உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார். இதுவும் கைதி படம் போல இந்த படத்திலும் பாடல்களும் & நாயகியும் கிடையாதாம்.

எனவே விஜய் படங்களில் இது வித்தியாசமான படமாக இருக்கும் என கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.

இந்த நிலையில் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு மட்டும் ரூபாய் 10 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதில் இந்திய சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் நடிப்பதால் கண்டிப்பாக இது பான் இந்திய படமாக உருவாகும் எனவும் சொல்லப்படுகிறது.

சஞ்சய் தத்

Thalapathi 67 will have 6 villains includes Bollywood Actor

‘மாமன்னன்’ ஷூட்டிங்கில் வடிவேலு பர்த்டே பார்ட்டி.; ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ ரிலீஸ் தேதி

‘மாமன்னன்’ ஷூட்டிங்கில் வடிவேலு பர்த்டே பார்ட்டி.; ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று செப்டம்பர் 12ஆம் தேதி பிரபல காமெடி நடிகர் வடிவேலு தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இவரது கைவசம் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் மாமன்னன் ஆகிய படங்கள் உள்ளன.

மேலும் சந்திரமுகி 2 படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மாமன்னன் படப்பிடிப்பில் வடிவேலு இன்று தன் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார்.

வடிவேலு

வடிவேலு பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் பிரியாணி உபசரிப்பு நடந்துள்ளது.

உதயநிதி தயாரித்து வரும் இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், ரவீனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் அடுத்த மாதம் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகும் என வடிவேலு தெரிவித்துள்ளார்.

வடிவேலு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

வடிவேலு

Actor Vadivelu celebrated his birthday at Maamannan set

கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கும் ‘சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’

கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கும் ‘சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

The Route & Passion studios தயாரிப்பில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும், மலையாள திரைப்படம் ‘சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’.

The Route & Passion studios தயாரிப்பில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, மனு C குமார் இயக்கும் புதிய மலையாள திரைப்படம் ‘சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’ படத்தின் அறிவிப்பை தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இயக்குநர் மனு C குமார் இயக்க, இசையமைப்பாளராக ஹேஷாம் அப்துல் வஹாப், ஒளிப்பதிவாளராக சந்தான கிருஷ்ணன், எடிட்டராக கிரண் தாஸ் மற்றும் கலை இயக்குநராக நிமேஷ் தானூர் ஆகியோர் இப்படத்தில் பணிபுரிகின்றனர்.

படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 14 முதல் தொடங்குகிறது.

தொழில் நுட்ப குழு:

தயாரிப்பாளர்கள் – ஜெகதீஷ் பழனிசாமி & சுதன் சுந்தரம்
நடிப்பு – கல்யாணி பிரியதர்ஷன்
புரொடக்‌ஷன் பேனர் – தி ரூட் & பேஷன் ஸ்டுடியோஸ்
இயக்குநர் – மனு C குமார்
இசையமைப்பாளர் – ஹேஷாம் அப்துல் வஹாப்
ஒளிப்பதிவு – சந்தான கிருஷ்ணன்
எடிட்டர் – கிரண் தாஸ்
கலை – நிமேஷ் தானூர்
ஆடை – தன்யா K B
ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர்
எக்ஸிக்யூட்டிவ் புரொடுயூசர் – ரஞ்சித் நாயர்
சீஃப் அஸோசியேட் – சுகு தாமோதர்
விளம்பரம் – யெல்லோ டூத்ஸ் ( Yellow Tooths )
தயாரிப்பு ஒருங்கிணைப்பு – சேவியர் ரிச்சர்ட்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – ஐஸ்வர்யா சுரேஷ்

கல்யாணி பிரியதர்ஷன்

Sesham Mike-il Fathima starring Kalyani Priyadarshan

வேலைக்காரி வீட்டு விசேஷத்தில் விக்ரம்.; ரசிகர்களும் வாழ்த்து

வேலைக்காரி வீட்டு விசேஷத்தில் விக்ரம்.; ரசிகர்களும் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரசிகர்களின் அன்பிற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கும் நட்சத்திரங்களில் முன்னிலையில் இருப்பவர் சீயான் விக்ரம்.

ரசிகர்களையே குடும்ப உறவாக கருதும் சீயான் விக்ரம், அவருடன் பணியாற்றும் சக ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் சுப வைபங்களிலும் கலந்துகொள்வது வழக்கம்.

இந்த நிலையில் சீயான் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். அவரது மனைவியான மேரி என்பவரும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது வீட்டில் பணியாற்றி வருகிறார்.

சீயான் விக்ரம்

இவர்களது வாரிசான தீபக் என்பவருக்கும், மணமகள் வர்ஷினி என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற தீபக் = வர்ஷினியின் திருமணத்தில் சீயான் விக்ரம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.

இதன் போது சீயான் விக்ரமின் ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும் உடனிருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சீயான் விக்ரம்

Vikram join in his house worker’s family wedding

More Articles
Follows