தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்தியாவின் முன்னணி நடிகை நயன்தாரா விரைவில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக வந்த செய்திகளை நம் தளத்தில் படித்தோம்.
இப்படத்தில் நடிக்க அஜித்தின் கால்ஷீட்டை பெற நயன்தாரா முயற்சி வருவதாக கூறப்பட்டது.
ஆனால் அந்த முயற்சி, நிலுவையில் இருப்பதால் தற்போது நயன்தாரா தன் பார்வையை சூர்யா பக்கம் திருப்பியிருப்பதாக கூறப்படுகிறது.
சூர்யாவுக்கும் தமிழ்நாட்டை போல், ஆந்திராவிலும் ரசிகர் வட்டம் உள்ளதால் இவரை தேர்ந்தெடுத்து உள்ளதாக சொல்லப்படுகிறது.
விரைவில் இவர்களின் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.