கேஎஸ். ரவிக்குமார்-நயன்தாரா கூட்டணியில் மற்றொரு மலையாள நடிகை

கேஎஸ். ரவிக்குமார்-நயன்தாரா கூட்டணியில் மற்றொரு மலையாள நடிகை

natasha doshi in ksravikumar movieதெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் 102வது படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நாயகியான நயன்தாரா நடித்து வருகிறார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தில் மற்றொரு நாயகியாக நடாஷா தோஷி இணைந்திருக்கிறார்.

இவரும் மலையாள நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடிக்கும் காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார் இயக்குனர் கேஎஸ். ரவிக்குமார்.

Natasha doshi joins with KS Ravikumar Balakrishnas combo movie

கலக்கல் காளி; அசத்தும் அண்ணாதுரை… விஜய்ஆண்டனியின் இரண்டு பட போஸ்டர்கள்

கலக்கல் காளி; அசத்தும் அண்ணாதுரை… விஜய்ஆண்டனியின் இரண்டு பட போஸ்டர்கள்

KAALI 1st Look Posterதொடர் வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று வருபவர் விஜய்ஆண்டனி.

எமன் படத்தை தொடர்ந்து ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் அண்ணாதுரை மற்றும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காளி ஆகிய படங்கள் இவரது நடிப்பில் வளர்ந்து வருகிறது.

இதில் அண்ணாதுரை படத்தில் இரண்டு வேடங்களை ஏற்றுள்ளார். மேலும் இப்படத்தின் எடிட்டராகவும் பணிபுரிந்துள்ளார் விஜய் ஆண்டனி.

இப்படத்தை ராதிகா சரத்குமார் மற்றும் விஜய் ஆண்டனி இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு ‘இந்திரசேனா’ என பெயரிடப்பட்டுள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிரஞ்சீவி வெளியிட்டுள்ளார்.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள காளி படத்தில் சுனைனா நாயகியாக நடித்துள்ளார்.

ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்தையும் விஜய் ஆண்டனியே தயாரித்துள்ளார்.

இதன் பர்ஸ்ட் லுக்கும் இன்றே வெளியானதால் இரண்டு பட போஸ்டர்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay Antonys Kaali and Annadurai movie first look released

annadurai new poster

திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வச்சிக்கிட்டா நல்லது… பிரபல நடிகர்

திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வச்சிக்கிட்டா நல்லது… பிரபல நடிகர்

Sex before Marriage is compulsory says Bollywood Actor Aayushman Kuranaபிரசன்னா நடிப்பில் தமிழில் வெளியான கல்யாண சமையல் சாதம் படத்தின் இந்தி ரீமேக்காக ‘சால்தன்’ படம் உருவாகியுள்ளது.

இதில் ‘வக்கிடோனார்’ படத்தின் மூலம் இந்தியில் பிரபலமான ஆயுஷ்மான் குரானா நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தண்ணீருக்குள் குதிப்பதற்கு முன் நீச்சல் எப்படி என்று தெரிந்துகொள்வது நல்லது.

அதுபோல் திருமணத்துக்கு முன்பே சில தாம்பத்ய பிரச்சினைகளை தெரிந்துக் கொள்வது நல்லது.

ஒரு பெண்ணால் பிரசவிக்க முடியாவிட்டால் எல்லாரும அந்த பெண்ணை ஏளனம் செய்வார்கள்.

அதுபோல் ஆணுக்கும் பிரச்சினை என்றாலும் அந்த பெண்னுக்கு சிக்கல் தான்.

திருமண வாழ்வில் செக்ஸ் ரொம்ப முக்கியம். சினிமா போல வாழ்க்கை கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.

Sex before Marriage is compulsory says Bollywood Actor Aayushman Kurana

Connection-Before-marriage

அடுத்த சுதந்திர போராட்டத்திற்கு வாருங்கள்.. அழைக்கிறார் கமல்

அடுத்த சுதந்திர போராட்டத்திற்கு வாருங்கள்.. அழைக்கிறார் கமல்

Get Ready Foe one more Freedom fight says Kamalhassanநீட் தேர்வு விவகாரத்தால் மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கமல்ஹாசன் தொடர்ந்து தன் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது….

ஒரு பெண் இறந்துவிட்டாள். இனி இதுபோன்ற நிகழ்வு நடைபெற கூடாது.

நீட் தேர்வுக்கு எதிராக என்னோடு போராட வாருங்கள். துரோகம் செய்பவர்களை இனியும் பார்த்துக் கொண்டு இருக்கக்கூடாது.

தவறு செய்பவர்களை திருத்துவோம். இல்லையென்றால் தள்ளி வைப்போம்.

மூச்சுவிடுவது மட்டும் சுதந்திரம் அல்ல. இந்த போராட்டம் இன்னொரு சுதந்திர போராட்டம் என்றுதான் கூறுவேன். என்று ஆவேசமாக பேசினார் கமல்ஹாசன்.

Get Ready Foe one more Freedom fight says Kamalhassan

உங்கள் காத்திருப்புக்கு தகுதியானது மெர்சல் டீஸர்… தயாரிப்பாளர் ஹேமா

உங்கள் காத்திருப்புக்கு தகுதியானது மெர்சல் டீஸர்… தயாரிப்பாளர் ஹேமா

Vijay fans waiting will be worth for Mersal Teaser says Producer Hema Rukumaniஏஆர்.ரஹ்மான், விஜய், அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் விரைவில் மெர்சல் டீசர் வெளியாகும் என தெரிவித்திருந்தார் அட்லி.

இப்படத்தை தீபாவளி தினத்தன்று வெளியிடவுள்ளதால் போஸ்ட் புரொடக்சன் பணிகளை முடுக்கி விட்டுள்ளார் அட்லி.

இந்நிலையில் இப்பட டீசர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் இதன் தயாரிப்பாளர் ஹேமா ருக்குமணி.

அதில்.. “டீசர் விரைவில் வெளியாகும், தேதி அறிவிக்கப்படும். ரிலாக்ஸாக இருங்கள், உங்கள் காத்திருப்புக்கு தகுதியானது மெர்சல் டீஸர்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். தவறான எண்ணங்களை தவிருங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Vijay fans waiting will be worth for Mersal Teaser says Producer Hema Rukumani

mersal vijay nithya menon

பொதுப்பிரிவுக்கே தகுதியானவர் அனிதா… காலா இயக்குனர் ரஞ்சித்

பொதுப்பிரிவுக்கே தகுதியானவர் அனிதா… காலா இயக்குனர் ரஞ்சித்

Kaala Director Ranjith makes his statement on Anithas suicideநீட் தேர்வு முறையால், மருத்துவம் படிக்காத முடியாத விரக்தியில் தற்கொலை செய்துக்கொண்ட மாணவி அனிதாவுக்கு சென்னையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ் சினிமாவைச் சார்ந்த பல்வேறு இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் கலந்துக் கொண்டர்.

இந்த நிகழ்வின் போது பத்திரிகையாளர்களிடம் காலா இயக்குனர் ரஞ்சித் பேசியதாவது…

“சமூகத்தில் யார் படிக்கலாம்? யார் படிக்கக் கூடாது? என்பதை முடிவு செய்ய மருத்துவக் கல்வி கொள்கை இருக்கிறது என நினைத்து பார்க்கும்போது மிகுந்த வேதனையளிக்கிறது.

+2 தேர்வில் அனிதா 1176 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். அவருக்கு பொதுப்பிரிவிலேயே இடம் கிடைக்க கூடிய தகுதி உள்ளது.

இடஒதுக்கீட்டில் சிலர் எளிதாக படிக்கிறார்கள் என பல கூறியதை கேட்டு அந்த பெண் எரிச்சலைடைந்து தன்னை இந்தளவுக்கு தயார் படுத்தியிருக்கிறார்.

மாணவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை கேட்டறிய வேண்டும்.” என்று இயக்குனர் பா.ரஞ்சித் பேசினார்.

Kaala Director Ranjith makes his statement on Anithas suicide

More Articles
Follows