மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்தது..; தாயும் சேயும் நலம் என கணவர் தகவல்!

மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்தது..; தாயும் சேயும் நலம் என கணவர் தகவல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சரவணன் மீனாட்சி டிவி சீரியல் மூலம் புகழ் பெற்றவர் மைனா நந்தினி.

இவர் சீரியல் & சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் நந்தினி கர்ப்பமாக உள்ள நிலையில் அவருக்கு வளைகாப்பு நடந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு baby Coming Soon என அவரது கணவர் யோகேஷ்வரன் தெரிவித்திருந்தார்.

தற்போது நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் தாயும் குழந்தையும் நலமாக இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

myna nandhini

myna nandhini became mother

I am a தமிழ் பேசும் Indian.. ஹிந்தி தெரியாது போடா..; திடீரென கிளம்பிய ஸ்டார்ஸ்.. ஏன்.?

I am a தமிழ் பேசும் Indian.. ஹிந்தி தெரியாது போடா..; திடீரென கிளம்பிய ஸ்டார்ஸ்.. ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hindi theriyathu podaஇயக்குநர் வெற்றிமாறன் அளித்த சமீபத்திய பேட்டியில்… தனக்கு ஹிந்தி தெரியாததால், தன்னை 1 மணி நேரம் ஒரு ஆபிசர் ஏர்போர்ட்டிலே நிற்க வைத்தார் என சொல்லியிருந்தார்

இந்த பேட்டி, பெரும் சலசலப்பை கோலிவுட்டில் ஏற்படுத்தியது.

இதனையடுத்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா…

I am a தமிழ் பேசும் இந்தியன் என வாசகம் உள்ள டீ-சர்ட்டை போட்டு போட்டோ எடுத்துள்ளார்.

அவருடன் மெட்ரோ பட ஹீரோ சிரிஷ் நிற்கிறார்.

அவர் பனியனில் ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகம் உள்ளது.

இதேமாதிரியான டீ-சர்ட் ஐ நடிகர் சாந்தனு & அவரது மனைவியும் அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.

இவர்களை போல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் & தனது தம்பி நடிகர் மணிகண்டனுடன் போஸ் கொடுத்துள்ளார்.

பலரும் ஹிந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

திமுக எம்பி. கனிமொழி இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இத்துடன் திமுக வேணாம் போடா என்ற வாக்கியமும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

hindi theriyathu poda t-shirts set twitter-on-fire

சினிமா போதும்.. தமிழகத்தை ஆள வா..; சூர்யாவை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்

சினிமா போதும்.. தமிழகத்தை ஆள வா..; சூர்யாவை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக அரசியல் கோட்டை கோடம்பாக்கத்தில் உருவாகும் போல.. நடிகர்களே சும்மா இருந்தாலும் அவர்களை அரசியலுக்கு அழைப்பதையே வழக்கமாக வைத்துள்ளனர் ரசிகர்கள்.

எம்ஜிஆர்.. ஜெயலலிதா தொடங்கி சரத்குமார், விஜயகாந்த், கமல்ஹாசன் என அனைவரும் அரசியலுக்கு வந்துவிட்டனர்.

ரஜினிகாந்த் விரைவில் அரசியல் களம் காணவிருக்கிறார்.

விஜய் & அஜித் ரசிகர்கள் அவர்களை அரசியலுக்கு அழைத்து போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் சூர்யா ரசிகர்களும் இது போல போஸ்டர் களத்தில் இறங்கி உள்ளனர்.

மதுரை நகரில், சூர்யாவை புரட்சியாளர் சேகுவாரா போல் சித்தரித்து உள்ளனர்.

‘திரையுலகை ஆண்டது போதும் தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே’ என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

இந்த போஸ்டரில் தமிழக சட்டமன்ற படமும் இடம் பெற்றுள்ளது.

Suriya fans mass political poster designs goes viral

suriya_poster_fans

மீண்டும் டபுள் ரோலில் கார்த்தி.; மீண்டும் சிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் இணைகிறார்.!

மீண்டும் டபுள் ரோலில் கார்த்தி.; மீண்டும் சிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் இணைகிறார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director ps mithranமணிரத்னம் இயக்கத்தில் ’பொன்னியின் செல்வன்’ மற்றும் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ’சுல்தான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.

இந்த நிலையில் இரும்புத்திரை’ மற்றும் ’ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் கார்த்திக்கு இரட்டை வேடம் கொடுக்க போகிறாராம் மித்ரன்.

ஏற்கெனவே ’சிறுத்தை’ & ‘காஷ்மோரா’ ஆகிய படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் கார்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்யராஜ் கண்ணன் (ரெமோ) & மித்ரன் (ஹீரோ) ஆகிய இருவரும் கார்த்தியை இயக்குவதற்கு முன் சிவகார்த்திகேயனை இயக்கினர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Actor Karthi to play dual role in Ps Mithrans next

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட தயாராகும் நமக்கு நாமே அணி!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட தயாராகும் நமக்கு நாமே அணி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Namakku Naamae teamநமக்கு நாமே குழுவின் சார்பாக அரசு விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் தயாரிப்பாளர் எஸ் விஜயசேகரன் அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த 10 ஆண்டுகளாக பதவி வகித்த நிர்வாகிகள் சரியாக செயல்படாத காரணத்தினால் அனைத்து தயாரிப்பாளர்களும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். மேலும் தயாரிப்பாளர்கள் சந்தித்து வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் விதமாக இனி வரும் தேர்தலில் இதுவரை பதவி வகித்தவர்கள் மீண்டும் பதவிக்கு வராமல் தடுக்க புதியவர்கள் தலைமேயேற்று நல்ல நிர்வாகம் அமைய கலந்துரையாடப்பட்டது.

இந்த சிறப்பு கூட்டத்தில் விஜயசேகரன், எஸ்டி சுரேஷ்குமார், ராமச்சந்திரன் தயாளன், தங்கம் சேகர், திருப்பூர் செல்வராஜ், திருநெல்வேலி ஜெயக்குமார், அமல்ராஜ், தன சண்முக மணி, வெங்கடேஷ் துருவா மற்றும் பல தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். கூடிய விரைவில் அனைத்து தயாரிப்பாளர்களையும் ஒருங்கிணைத்து ஆலோசித்த பிறகு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என்று புதிய அணியினர் தெரிவித்துள்ளனர்.

Namakku Naame team to contest in TFPC election

‘சிங்கம்’ பட ஹீரோவாக தன்னை நினைக்கும் போலீஸ்க்கு மோடி அட்வைஸ்

‘சிங்கம்’ பட ஹீரோவாக தன்னை நினைக்கும் போலீஸ்க்கு மோடி அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

modi singam suriyaஐதராபாத்தில் நடைபெற்ற தேசிய போலீஸ் அகாடெமி காணொளி காட்சி மூலம் பேசினார் பிரதமர் மோடி.

அவர் பேசும்போது… ’ காக்கிச் சட்டை அணியும் நீங்கள் பெருமை கொள்ள வேண்டும். அதற்கான மரியாதையை ஒருபோதும் இழக்கவேண்டாம்.

போலீஸ் அதிகாரிகள் ஏரியாவில் உள்ள ரவுடிகள் பயப்பட வேண்டும் என நினைக்கின்றனர்

‘சிங்கம்’ போன்ற போலீஸ் படங்களைப் பார்த்துவிட்டு தங்களை அவர்கள் பெரிய அளவில் நினைக்கின்றனர்.” இவ்வாறு மோடி பேசினார்.

தமிழில் சூர்யா நடித்த ’சிங்கம்’ படம் ஹிந்தியில் அஜய்தேவ்கான் நடிப்பில் ரீமேக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

PM Modi advises INDIAN POLICE SERVICE officers not to act like SINGHAM police

More Articles
Follows