சூர்யா-தனுஷுக்கு இடையில் நுழையும் சிவகார்த்திகேயன்

சூர்யா-தனுஷுக்கு இடையில் நுழையும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya Dhanush and Sivakarthikeyan movie release newsகே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படம் இன்று செப்டம்பர் 20ஆம் தேதி ரிலீஸாகியுள்ளது.

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

வெற்றிமாறன் தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படம் அக்டோபர் 4ஆம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இரண்டு வாரங்களுக்கு பிறகு வெளியாகிறது.

இந்த நிலையில் இந்த 2 வாரங்களுக்கு இடையில் உள்ள வெள்ளிக்கிழமையை அதாவது செப்டம்பர் 27ஆம் தேதியை சிவகார்த்திகேயன் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

அவர் நடிப்பில் உருவாகியுள்ள நம்ம வீட்டுப் பிள்ளை படத்தை அன்று வெளியிடுகின்றனர். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இன்று இப்படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Suriya Dhanush and Sivakarthikeyan movie release news

கோலிவுட்டை மிரட்டும் மாஃபியா டீஸர் !

கோலிவுட்டை மிரட்டும் மாஃபியா டீஸர் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mafiaசமீபத்தில் வெளியாகி கோலிவுட்டின் ஒற்றை பேசுபொருளாக மாறியிருக்கிறது அருண் விஜய்யின் “மாஃபியா” டீஸர். முழுக்க ஸ்டைலீஷான லுக்கில் அருண்விஜய்யும், அசத்தும் வில்லன் லுக்கில் பிரசன்னாவும் என அட்டகாசமான டெக்னீஷியன்களின் உழைப்பில் “மாஃபியா” டீஸர் அனைவரின் நெஞ்சத்தையும் லைக்ஸால் அள்ளியிருக்கிறது.

இயக்குநர் கார்த்திக் நரேனின் வித்தியசாமான உருவாக்கத்தில் டீஸரில் அருண்விஜய் சிங்கமாகவும், பிரசன்னா நரியாகவும் மாறி மோதிக்கொள்வது அனைவரிடத்திலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. படத்தில் அவர்களின் உண்மையான பாத்திரம் பற்றி எந்தவொரு விசயமும் டீஸர் மூலம் வெளிப்படாமல், இருவருக்கும் படத்தில் நடக்கும் மோதலையும், படத்தின் தன்மையையும் அட்டகாசமாக எடுத்துச் சொல்லியிருக்கிறது டீஸர்.

ஒருபுறம் டீஸருக்கு குவியும் வாழ்த்துக்கள் படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் அதே நேரம், இணையத்தில் யூடுயூப் தளத்தில் 2.9 மில்லியன் பார்வைகளை கடந்தும், அதைவிட பெரும் கொண்டாட்டமாக டீஸர் பார்த்து, தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தந்த ஆசிர்வாதம் கொண்ட வாழ்த்துகளும் படக்குழுவை சந்தோஷத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.

மாஃபியா படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகின்றது. படத்தின் டிரெய்லர் வெளியீடு மற்றும் பட வெளியீட்டு தேதிகளை தயாரிப்பு நிறுவனம் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் அருண் விஜய், பிரசன்னா உடன் ப்ரியா பவானி சங்கர் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜேக்ஸ் பெஜாய் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா !

“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Parthibanஇன்று வெளியாகியுள்ள “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தினை முன் திரையிடலில் கண்ட விமர்சகர்களும், ரசிகர்களும் படத்தினை கொண்டாடி வருகிறார்கள். இயக்குநர் பார்த்திபன் படம் முழுக்க ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே வரும்படி எழுதி இயக்கி தயாரித்திருக்கும் இப்படத்தினை அனைவரும் ஆச்சர்யத்தின் உச்சத்தில் வாய்பிளந்து பாராட்டி வருகிறார்கள். படத்தினை தூக்கி சுமந்து உயிர் தந்திருக்கும் இசையமைப்பாளர் சத்யாவிற்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த ஒற்றைப்படத்தின் மூலம் தன் தரத்தின் அடுத்த உயரத்தை அடைந்திருந்திருக்கிறார் இசையமைப்பாளர் சத்யா.

படத்தில் பணிபுரிந்தது பற்றி இசையமைப்பாளர் சத்யா பகிர்ந்து கொண்டது….
பல சாதனைகள் புரிந்து, பலரது பாராட்டுக்களையும் பெற்று வரும் இந்தப்படத்தில் பணிபுரிந்ததை நான் மிகுந்த பெருமையாகவும், எனக்கு கிடைத்த கௌரவமாகவும் கருதுகிறேன். இத்தகையதொரு படத்தில் எனது புதுமையான முயற்சிகளுக்கும், யோசனைகளுக்கும் செவிமடுத்த இயக்குநர் பார்த்திபன் சார் அவர்களுக்கு இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஒரு திறமையான திரைக்கதை எழுத்தாளர் உள்ளத்தளவில் ஒரு இசைக்கலைஞனும் கூட, அவர் இசை என்பது ஒரு கருவி அல்ல அது படத்தின் உயிர். படத்தில் உலவும் கதாப்பாத்திரம் போன்றது என்பதை அறிவார்.

உண்மையாய் சொல்வதானால் பார்த்திபன் சார் படத்தை பாடல்கள் மற்றும் இசையே இல்லாமல் ரசிகர்கள் ரசிக்க தயாராய் இருப்பார்கள். அவரது திரைக்கதையும், வசனங்களும் ரசிகர்களை சுவாரஸ்யத்தின் உச்சியில் கட்டி வைத்திருக்கும் தன்மைகொண்டது.

முதலில் படத்தின் இசையற்ற பதிப்பை நான் பார்த்தபோது பார்த்திபன் சார் பல இடங்களை வசனங்களே இல்லாமல் இசை நிரப்பிக் கொள்ளும் இடங்களை உருவாக்கி வைத்திருந்தார். எனக்கான தளத்தை உருவாக்கி தந்திருந்தார். இப்போது படத்தினை பார்த்துவிட்டு பின்னணி இசைக்கும் கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் பார்த்திபன் சாருக்கு உரியது. “குளிருது புள்ள” எனும் ஒற்றைப் பாடல் மூலம் அனைவரது பாராட்டைப் பெற்று சந்தோஷ் நாரயணன் அவர்களும் பிரமிப்பை தந்துள்ளார் அவருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியாகியுள்ள இயக்குநர் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 அனைத்து தரப்பினரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

BIGIL BREAKING: பாட்டு. பன்ச். அட்வைஸ். அரசியல்; வேற லெவல் விஜய்

BIGIL BREAKING: பாட்டு. பன்ச். அட்வைஸ். அரசியல்; வேற லெவல் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Vera level punch dialogues in Bigil Audio launchபிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு ஹைலைட்டாக அமைந்துவிட்டது எனலாம்.

படத்தில் பணியாற்றிய விவேக், நயன்தாரா முதல் அனைவரையும் பாராட்டி பேசினார்.

வெறித்தனம் என்ற பாடலை பாடி தன் பேச்சை ஆரம்பித்தார்.

அந்த அனல் பறக்கும் பேச்சை இறுதிவரை கொண்டு சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

அவரின் பேச்சில் உள்ள ஹைலைட்ஸ் இதோ…

வாழ்கைல அவங்க மாதிரி இவங்க மாதிரி வரணும்னு ஆசைப்படாதீங்க. அதுக்கு தான் அவங்களே இருக்காங்களே.. நீங்க நீங்களா வாங்க.

விளையாட்டில் மேம்படனும்னா அரசியல்ல புகுந்து விளையாட்டு பண்ணுங்க.. விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க. எதனை யாரால் முடிக்க முடியும் என பார்த்து யாரை எங்க உக்கார வெக்கணும்னு திறமை வெச்சு முடிவு பண்ணுங்க.

உலகத்துலயேப் உழைச்சவனை மேடையில் ஏத்தி அழகு பார்க்குற முதலாளி ரசிகன் தான்! வேற லெவல் யா நீங்க,

பெண்கள் ஜெயிக்கற படத்தில வாழ்க்கையில ஜெயிச்ச நயன்தாரா இருக்கறது ரொம்ப சந்தோஷம்

பல லட்ச மரக்கன்று நடும் விவேக் அவர்களுக்கு நன்றி & பாராட்டுகள்

நாம கோல் போடுறத தடுக்க ஒரு கூட்டம் இருக்கும். நம்ம கூட இருக்கறவங்களே கூட சேம் சைட் கோல் போடுவாங்க.

கலர பத்தி பேசுறதில்ல வெற்றி காலர தூக்கிட்டு கெத்தா சொல்றதுல இருக்கு வெற்றி..

உழைத்தவர்களை மேடையில் ஏற்றிப் பார்க்கும் ரசிகர்கள் தான் முதலாளி என தெரிவித்தார்

பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என்னோட ஆறுதல்! சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி டிரைவர் மற்றும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் வழக்கு போடுகிறார்கள்.

இதுபோன்ற சமூக பிரச்சனைக்கு ஹாஷ் டாக் போடுங்க. சமூக பிரச்சனைல கவனம் செலுத்துங்க.

பேனர் கட் அவுட்லாம் கிழிச்சப்போ ரசிகர் வருத்தப்பட்ட அளவு நானும் வருத்தப்பட்டேன்.. என் போட்டோவ கிழிங்க, உடைங்க. என் ரசிகன் மேல கை வைக்காதீங்க.

என் ரசிகர்கள் எவ்வளோ ஆசைகளோட கனவோட சிரமத்துள பேனர்லாம் வெக்குறாங்க அதை கிழிச்சா அவங்களுக்கு கோவம் வரது நியாயம் தான்! அதுக்காக அவங்க மேல கை வைக்காதீங்க இது வேண்டுகோள்! கேக்க முடிஞ்சா கேளுங்க.

எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும். காரில் செல்லும் போது கருணாநிதியை பற்றி தவறாக கூறியவரை இறக்கி விட்டவர் எம்ஜிஆர்…

என அனைத்தையும் கலந்து பேசினார் விஜய்.

Vijay Vera level punch dialogues in Bigil Audio launch

BIGIL BREAKING விஜய்யை விட மனசில்ல; அவர் இல்லேன்னா நானில்ல..: அட்லி

BIGIL BREAKING விஜய்யை விட மனசில்ல; அவர் இல்லேன்னா நானில்ல..: அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Atlees emotional speech about Vijay at Bigil audio launchசென்னையில் தற்போது விஜய்யின் ‘பிகில்’ பட இசை வெளியீட்டு விழா நடைற்று வருகிறது.

இந்த விழாவில் அட்லி பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பேசுவதாவது…

தெறி மற்றும் மெர்சல் படங்களை விட பிகில் பெஸ்ட்டா இருக்கும். மெர்சல் படத்திற்கு பிறகு நிறைய படங்களை இயக்க வாய்ப்புகள் வந்தன.

ஆனால் எனக்கு விஜய் அண்ணனை விட்டு போக மனசுல்லை.

இந்த படத்துல ஒன்னும் ஒன்னும் பார்த்து செஞ்சுருக்கேன்.

என்னுடைய பேவரைட் ஹீரோ எப்பவும் அவர்தான்.

எல்லா இயக்குனருக்கும் ஒரு ஹீரோ இருப்பாங்க. எனக்கு விஜய் அண்ணா தான்.

என்னுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அவர்தான். அவர் இல்லேன்னா நான் ஒன்னுமில்ல..” என்றார் அட்லி.

மேலும் அக்டோபர் 1ஆம் தேதி பிகில் டீசர் ரிலீஸ் என்றும் தெரிவித்தார்.

Director Atlee emotional speech about Vijay and Bigil

நான் பேசுவதை விட படம் பேசும்.; ‘அசுரன்’ பற்றி கலைப்புலி தாணு

நான் பேசுவதை விட படம் பேசும்.; ‘அசுரன்’ பற்றி கலைப்புலி தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Kalaipuli Thanu shares his experience with Asuranகலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் அசுரன். இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பசுபதி, பவன், யோகி பாபு, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், குரு சோமசுந்தரம் என தேர்ந்த நடிகர்கள் இணைந்துள்ளனர்.

இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வெற்றி மாறன் – தனுஷ் கூட்டணியின் நான்காவது படம் இது. இவர்களுடன் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இசையமைப்பாளராக இணைந்துள்ளார் ஜிவி பிரகாஷ். அண்மையில் இந்தப் படத்தின் பாடல்கள், ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.

தனுஷின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தைத் தந்த படம் ஆடுகளம். வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் பெற்ற வெற்றி அசாதாரணமானது.

சிறந்த நடிகர். சிறந்த இயக்குநர் உள்பட ஆறு தேசிய விருதுகளையும் இந்தப் படம் அள்ளியது. அதற்கு இணையான படமாக அசுரன் உருவாகியுள்ளதாக படம் குறித்து பேசப்படுகிறது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறுகையில்,

“இந்தப் படம் அதன் தலைப்பைப் போலவே ஒரு அசுரத்தனமான படம். நான் பேசுவதை விட படம் பேசட்டும் என்பதால் இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்வேன்.

வணிக ரீதியாக இந்த ஆண்டின் முக்கியமான படமாக அசுரன் இருக்கும். அது உறுதி,” என்றார்.

உலகம் முழுவதும் வரும் அக்டோபர் 4-ம் தேதி 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் அசுரன் வெளியாகிறது.

இதில் அமெரிக்காவில் மட்டும் 110 அரங்குகளில் அசுரன் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Producer Kalaipuli Thanu shares his experience with Asuran

More Articles
Follows