என் இசையை கேட்டுத்தான் ஆகனும்.. அது தலையெழுத்து.. – இளையராஜா

ilaiyaraajaகடந்த 45 வருடங்களாக தன் இசை பணிகளை பிரசாத் ஸ்டூடியோவில் செய்து வந்தார் இளையராஜா.

சில பிரச்சனைகளால் அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டடார்.

தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் (பழைய MM தியேட்டர்) தன் இசை பணிகளை தொடர புதிய ஸ்டூடியோ ஒன்றை தொடங்கியுள்ளார் இசைஞானி இளையராஜா.

இன்று பிப்ரவரி 3 முதல் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி – விஜய் சேதுபதி நடிக்கும் பட பாடல் ரெக்கார்டிங்கை தொடங்கியுள்ளார்.

எனவே இளையராஜாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த பணிகளின் போது சில செய்தியாளர்களை சந்தித்தார் இளையராஜா.

அப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.

ஒரு இடத்தை (தியேட்டரை) வாங்கி அதை புதுப்பித்து ஸ்டுடியோ அமைத்துள்ளேன்.

இன்னும் சில பணிகள் முடியாமல் உள்ளது.

கேள்வி.. : என்ன மாதிரியான இசையை இனி வரும் படங்களில் கொடுக்கப் போகிறீர்கள்.?

பதில்.: மழை எப்போது வரும் என தெரியாது. அது போல தான் என்ன மாதிரியான இசை வரும் என தெரியாது.

நாங்க என்ன இசை போட்டாலும் அதை ரசிகர்கள் கேட்டுத்தான் ஆகனும்.. அது அவங்க தலை எழுத்து.

எந்த மாதிரியான இசை என்பது அந்த பாடலுக்கு இசை போடும் போதுதான் தெரியும்.” என்றார்.

Music director Ilaiyaraaja talks about his composing

Overall Rating : Not available

Latest Post