தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM)) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ‘எல்.ஜி.எம்’ படத்தின் புது ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) திரைப்படம் தெலுங்கில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
‘எல்.ஜி.எம்’ படத்தின் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வெளியீட்டு உரிமையை ஜே.பி.ஆர் பிலிம்ஸ், திரிபுரா புரொடக்ஷன்ஸ் கைப்பற்றியுள்ளது.
மேலும், இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
‘Let’s Get Married’ telegu releasing on August 4th