டாப் ஸ்டார் பிரசாந்தை இயக்கும் மோகன் ராஜா..?

Mohan raja to direct Top Star Prasanth ‘தி பியானோ டியூனர்’ என்ற பிரெஞ்ச் படத்தின் தழுவலாக வெளியான ‘அந்தாதுன்’ என்ற ஹிந்தி படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

மேலும் சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் வென்றது.

இதில் ஆயுஷ்மன் குரானா, தபு நடித்திருந்தனர்.

எனவே இந்த படத்தின் ரீமேக்குக்கு பலத்த போட்டி உருவானது.

தனுஷ், சித்தார்த், ஆகியோர் போட்டியிட்ட நிலையில் இதன் உரிமையை டாப் ஸ்டார் பிரசாந்த் கைப்பற்றினார்.

இந்த நிலையில் இப்படத்தை தனி ஒருவன் இயக்குனர் மோகன் ராஜா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

Mohan raja to direct Top Star Prasanth

Overall Rating : Not available

Latest Post