சஞ்சய் தத்தை தொடர்ந்து ‘லியோ’ சூட்டிங்கில் இணைந்த பிரபல நடிகர்

சஞ்சய் தத்தை தொடர்ந்து ‘லியோ’ சூட்டிங்கில் இணைந்த பிரபல நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் மற்றும் த்ரிஷா முக்கிய வேடங்களில் நடித்து வரும் படம் ‘லியோ’.

இப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

மிஷ்கின் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இப்படத்தில் தங்களது பாகங்களின் படப்பிடிப்பை முடித்துள்ளனர்.

தற்போது பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் காஷ்மீரில் நடக்கும் படப்பிடிப்பில் விஜய் உடன் இணைந்துள்ளார்.

இந்நிலையில், அவரைத் தொடர்ந்து மலையாள நடிகர் பாபு ஆண்டனியும் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

சமூக ஊடகங்களில், பாபு ஆண்டனி டெல்லி விமான நிலையத்திலிருந்து ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் மற்றும் விஜய் மற்றும் சஞ்சய் தத்துடன் ‘லியோ’ படப்பிடிப்பிற்குச் செல்வதாகக் கூறினார்.

பாபு ஆண்டனி

Malayalam actor Babu Anthony joins the cast of Leo

LEO UPDATE : விஜய் படப்பிடிப்பில் பங்கேற்கும் பாலிவுட் நடிகர்

LEO UPDATE : விஜய் படப்பிடிப்பில் பங்கேற்கும் பாலிவுட் நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் நடித்து வரும் படம் ‘லியோ’.

இப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது, தற்போது படக்குழு காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் ஏற்கனவே ‘லியோ’ படத்தின் தங்களது படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பி விட்டார்கள்.

இந்நிலையில், ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க சஞ்சய் தத் தற்போது காஷ்மீர் சென்றுள்ளார்.

மேலும், அவர் காஷ்மீரில் ‘லியோ’ படத்திற்காக இரண்டு வாரங்கள் படப்பிடிப்பில் இருப்பார் தகவல் வெளியாகியுள்ளது.

சஞ்சய் தத்

Sanjay Dutt joining sets of the leo film

12 வருட கனவை நிறைவேற்றிய ‘டாடா’; மகிழ்ச்சி வெள்ளத்தில் கவின்

12 வருட கனவை நிறைவேற்றிய ‘டாடா’; மகிழ்ச்சி வெள்ளத்தில் கவின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் நடிகர் கவின் நடித்திருக்கும் படம் ‘டாடா’.

இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணாதாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ். அம்பேத் குமார் தயாரித்துள்ளார்.

‘டாடா’ திரைப்படம் பிப்ரவரி 10 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இந்தப் படம் நிறைய பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

‘டாடா’ இன்று மார்ச் 10-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களின் பெரும் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் கவின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்டார்.

அந்த வீடியோவில், “டாடா திரைப்படம் OTT இல் இன்று வெளியாகிறது, மக்கள் எதிர்பார்த்ததை விட திரையரங்குகளில் மக்கள் அளித்த ஆதரவு அதிகம். நல்ல கதை இருப்பதால் திரையரங்குகளில் படத்தின் வெற்றியைப் பற்றி நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தோம். வெற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. மேலும் எனது 12 வருட கனவு இறுதியாக நனவாகியுள்ளது என்பதை உணர வைத்தது. மக்களை மகிழ்விக்கும் நல்ல படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறி விடைபெற விரும்புகிறேன்.” என கூறியிருந்தார்.

டாடா

Kavin says his 12 years dream has come true of dada

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவானார் சூரி.; ஹீரோயின் யார்.?

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவானார் சூரி.; ஹீரோயின் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கூழாங்கல்’ எனும் மாபெரும் வெற்றிக்குப் படத்தை இயக்கியவர் இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ்.

பி.எஸ்.வினோத்ராஜ் தற்போது தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார்.

இப்படத்தில் நடிகர் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

அன்னா பென்

சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை வெளியிட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயனின் SK புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ‘கொட்டுக்காளி’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களைப் பகிர்ந்துகொண்ட சிவகார்த்திகேயன், “எங்கள் SK புரொடக்‌ஷனின் அடுத்த படத்தை அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதில் எனது அன்பான சூரி அண்ணன் & ஒரு திறமையான நடிகை அன்னா பென் இணையும் படத்தின் தலைப்பை கொட்டுக்காளி”என கூறியுள்ளார்.

கொட்டுக்காளி

sivakarthikeyan producered next movie poster and title released

ஜெயம் ரவி படம் இயக்குவது எப்போது.? அகிலனின் அசத்தலான பதில்

ஜெயம் ரவி படம் இயக்குவது எப்போது.? அகிலனின் அசத்தலான பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பூலோகம் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் கல்யாண இணைந்துள்ள படம் ‘அகிலன்’.

இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்க ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் நாயகிகளாக பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் இருவரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

எனவே படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

‘அகிலன்’ திரைப்படம் நாளை மார்ச் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் ரசிகர்களுடன் தன் சமூக வலைத்தள பக்கத்தில் உரையாடினார் ஜெயம் ரவி.

அப்போது ஒரு ரசிகர்.. “உங்களுக்கு படம் இயக்கும் எண்ணம் இருக்கிறதா.? அது எப்போது நிறைவேறும் என கேட்டுள்ளார்?

எனக்கு 50 வயது ஆவதற்குள் நான் படம் இயக்குவேன்” என தெரிவித்துள்ளார் ஜெயம் ரவி.

i will film directing idea for jayam ravi

‘வடசென்னை’ மிஸ் ஆச்சு.. ‘விடுதலை’ கிடைச்சிடுச்சி.. – விஜய்சேதுபதி

‘வடசென்னை’ மிஸ் ஆச்சு.. ‘விடுதலை’ கிடைச்சிடுச்சி.. – விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘விடுதலை’.

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது..

” இப்போது சூரி பேசியது எப்படி உங்களை ஆட்கொண்டுள்ளதோ அதுபோலவே படம் முழுக்க அவரது கதாபாத்திரமும் நடிப்பும் உங்களை ஆட்கொள்ளும். வெற்றிமாறனின் ‘வடசென்னை’யில் நடிப்பதை நான் மிஸ் செய்து விட்டேன்.

விடுதலை

அதனால் ‘விடுதலை’ படத்தின் வாய்ப்பை தவற விரும்பவில்லை. எட்டு நாள் தான் கால்ஷீட் என சொல்லி வெற்றிமாறன் என அழைத்து சென்றார். ஆனால் போன பின்பு தான் தெரிந்தது அது எனக்கான ஆடிஷன் என்று. வெற்றி சாருடன் வேலை பார்த்தது மிகவும் அறிவு சார்ந்தது.. முக்கியமானதாக பார்க்கிறேன்.

இளையராஜா இசையை போலவே அவருடைய பேச்சும் மிகவும் ஆழமானது அதை கூர்ந்து கவனியுங்கள். நன்றி”.

இவ்வாறு விஜய்சேதுபதி பேசினார்.

விடுதலை

I missed Vadachennai movie but got Viduthalai says Vijay Sethupathi

More Articles
Follows