சிலம்பரசன் படத்தை தொடர்ந்து நாவலை படமாக்கும் சுரேஷ் காமாட்சி

சிலம்பரசன் படத்தை தொடர்ந்து நாவலை படமாக்கும் சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி..

இதில் ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்ததுடன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் வெற்றி பெற்றார்..

இந்த நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் TR நடிக்கும் ‘மாநாடு’ என்கிற படத்தைத் தயாரித்து வருகிறார் சுரேஷ் காமாட்சி.

அரசியல் கதைக்கள பின்னணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது..

இதைத் தொடர்ந்து தனது தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தை தானே இயக்கவுள்ளார் சுரேஷ் காமாட்சி.

ஒரு இளம் பெண் காவலர் தனது பணியில் அன்றாடம் சந்திக்கும் அவலங்களை நெற்றிப்பொட்டில் அறைந்தது போல ‘மிக மிக அவசரம்’ படத்தை இயக்கிய, சுரேஷ் காமாட்சி, தனது அடுத்த படத்திலும் அதேபோன்ற யதார்த்த வாழ்வியல் ஒன்றையே படமாக்க இருக்கிறார்.

கிராமத்துப் பின்னணியில், வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியலை மையமாக வைத்து, உணர்வுப்பூர்வமான கதைகளை எழுதிவருபவர் பிரபல எழுத்தாளர் ம. காமுத்துரை. இவர் எழுதிய ‘முற்றாத இரவொன்றில்’ என்கிற நாவலை தழுவி இப்படம் உருவாக இருக்கிறது.

இந் நாவலைப் படமாக்கும் உரிமையை மா.காமுத்துரையிடம் இருந்து முறைப்படி பெற்றுள்ளார் சுரேஷ் காமட்சி..விரைவில் தொழில் நுட்பக் கலைஞர்கள் விபரம் தெரிவிக்கப்படும்.

Maanaadu producer Suresh Kamatchi next film announced
IMG-20210128-WA0054

ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்

ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhruv Vikramஇயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குனர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் காலம் கடந்து பேசப்படும் படங்களையும் வழங்கியுள்ளார்.

அந்த வகையில் அவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு’ ஆகிய திரைப்படங்கள் விமர்சன மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இந்த வெற்றியைத்தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புதிதாக ஐந்து திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக, கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி அறிவித்திருந்தார்.

இதில் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரைப்படத்தின் இயக்குனர் லெனின் பாரதி, மற்றும் அறிமுக இயக்குனர்கள் சுரேஷ் மாரி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஆகிய ஐந்து இயக்குனர்களும் புதிதாக தயாரிக்க உள்ள ஐந்து திரைப்படங்களையும் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இயக்குனர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் ’ரைட்டர்’ என்ற படத்தில் சமுத்திரகனி நடிப்பில் அதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நீலம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

Maari Selvaraj and Dhruv Vikram joins for new film

குடியரசு தினத்தில் செங்கோட்டையில் வன்முறை..; விவசாய சங்க தலைவருக்கு போலீஸ் நோட்டீஸ்

குடியரசு தினத்தில் செங்கோட்டையில் வன்முறை..; விவசாய சங்க தலைவருக்கு போலீஸ் நோட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

red fort violence (1)ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தில் செங்கோட்டையில் நடைபெற்ற வன்முறையில், விவசாய சங்க தலைவர்களுக்கு பங்கு உள்ளதாக, டெல்லி காவல்துறை நேற்று அறிவித்தது.

இதில் போராட்டத்திற்கு தலைமை தாங்குபவர்களில் ஒருவரும், கிரந்திகாரி விவசாய சங்க தலைவருமான தர்ஷன் பாலிற்கு, மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

செங்கோட்டையில் நடைபெற்ற வன்முறை இழிவான மற்றும் தேச விரோத செயல் எனவும், அதுதொடர்பாக உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், தங்கள் அமைப்பில் இருந்து வன்முறையில் ஈடுபட்டவர்களின் விவரங்களை சமர்பிக்க தர்ஷன் பாலிற்கு காவல்துறை கேட்டுக்கொண்டது.

Police issued notice to farmers head due to violence at red fort

‘வாய்தா’ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டரை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய்சேதுபதி…!

‘வாய்தா’ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டரை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய்சேதுபதி…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா லாக்டவுனால் திண்டாடிய திரையுலகம் தற்போது தான் மெல்ல தளைக்க ஆரம்பித்துள்ளது. இந்த சமயத்தில் தயாரிப்பாளர் முதல் இசையமைப்பாளர் வரை முற்றிலும் புதுமுகங்களின் முயற்சியாக தயாராகி உள்ளது “வாய்தா” திரைப்படம். அறிமுக இயக்குநர் மகிவர்மன் C.S. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் வாய்தா படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகிறார்.

‘ஜோக்கர்’, ‘கே.டி. என்கிற கருப்பத்துரை’ படம் மூலம் பிரபலமான நடிகர் மு.ராமசாமி, நாசர், அறிமுக நாயகி ஜெசிகா பவுலின், ‘நக்கலைட்ஸ்’ புகழ் பிரசன்னா மற்றும் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனிடம் நீண்ட காலமாக உதவியாளராக பணியாற்றிய சேது முருகவேல் அங்காரகன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘அசுரன்’, ‘வடசென்னை’, ‘சூரரைப்போற்று’ உள்ளிட்ட படங்களில் பிரம்மாண்ட செட் அமைத்த கலை இயக்குநர் ஜாக்சன் இந்த படத்தில் பணியாற்றியுள்ளார். வராஹா சுவாமி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கே.வினோத்குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சி.லோகேஷ்வரன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை இன்று காலை 11 மணி அளவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். போஸ்டரில் கழுதையுடன் மு.ராமசாமி கோர்ட் கூண்டுக்குள் இருப்பது போன்ற காட்சியும், சாமானியர்கள் மேல் நடத்தப்படும் வன்முறை என்ற வாசகமும் கவனம் ஈர்த்துள்ளது. மோஷன் போஸ்டரின் இறுதியில் சட்டம் குறித்து நாசர் பேசும் வசனம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற ‘வாய்தா’ திரைப்படம் இதுவரை 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vaaitha

Vijay Sethupathi launched Vaaithaa first look and motion poster

தமிழில் ரீமேக் ஆகிறது ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’: கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கிறார்!

தமிழில் ரீமேக் ஆகிறது ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’: கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கிறார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KS Ravi Kumarசில திரைப்படங்களைக் காணும் போது, இப்படியொரு கதையை எப்படி யோசித்தார்கள் என்று சிந்திக்க வைக்கும். அப்படி பலராலும் பேசப்பட்டு, கொண்டாடப்பட்ட மலையாள படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகளை வென்றது.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றினார் முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். பலரும் அவர் இயக்குவதற்காகக் கைப்பற்றியுள்ளார் என எண்ணினார்கள். ஆனால் கமல் நடித்த ‘தெனாலி’ படத்தைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார், ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ தமிழ் ரீமேக்கை தயாரித்து நடிக்கிறார்.

‘கூகுள் குட்டப்பன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படக்குழுவினர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, இயக்குநர் விக்ரமன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் படப்பூஜையில் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ கதையைத் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி சுவராசியமாகத் திரைக்கதை அமைத்துள்ளனர். இந்தப் படத்தை சுமார் 10 ஆண்டுகளாக கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்து வரும் சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இயக்குகிறார்கள். இதன் படப்பிடிப்பு பிப்ரவரி 15-ம் தேதி முதல் தென்காசியில் தொடங்குகிறது. ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான சுராஜ் கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், செளபின் கதாபாத்திரத்தில் தர்ஷன் நடிக்கவுள்ளார்கள். ஆர்.கே செல்லுலாய்ட்ஸ் சார்பாக கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்கிறார்.

இதில் நாயகியாக லாஸ்லியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், யோகி பாபு, மனோபாலா, மாரியப்பன், ப்ராங்ஸ்டார் ராகுல் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். ‘பண்டிகை’, ‘ரங்கா’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள ஆர்வி ஒளிப்பதிவாளராகவும், இசையமைப்பாளராக ஜிப்ரானும், பாடலாசிரியராக மதன் கார்க்கியும் பணிபுரியவுள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி, தென்காசி, சென்னை மற்றும் சில காட்சிகளை வெளிநாட்டிலும் படமாக்கவுள்ளனர். தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாகக் களமிறங்கியுள்ளது படக்குழு.

தமிழக மக்களுக்கு ஒரு வித்தியாசமான காமெடி கலந்த எமோஷனல் கதை ஒன்று தயாராகி வருகிறது. கண்டிப்பாகத் திரையரங்குகளில் சிரிப்பலைக்கு கியாரண்டி தான்!

‘கூகுள் குட்டப்பன்’ படக்குழுவினர் விவரம்
தயாரிப்பு: கே.எஸ்.ரவிகுமார்
கதை: ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவால்
திரைக்கதை, வசனம், இயக்கம் – சபரி – சரவணன்
நடிகர்கள்: கே.எஸ்.ரவிகுமார், தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு, மனோபாலா, மாரிமுத்து, ப்ராங்ஸ்டார் ராகுல் உள்ளிட்ட பலர்
தயாரிப்பு வடிவமைப்பு: பி.செந்தில் குமார்
ஒளிப்பதிவாளர்: ஆர்வி
இசையமைப்பாளர்: ஜிப்ரான்
எடிட்டர்: ப்ரவீன் ஆண்டனி
கலை: சிவகிருஷ்ணா
பாடலாசிரியர் – மதன் கார்க்கி
ஆடை வடிவமைப்பு: ஜே. கவிதா
படங்கள்: ராமசுப்பு
டிசைன்ஸ்: ரெட்டாட் பவன்
பி.ஆர்.ஓ – யுவராஜ்

KS Ravi kumar’s Google Kuttappan kick-starts in Chennai

கமல் & சிம்புவை அடுத்து மீண்டும் அருண் விஜய்யுடன் இணையும் ப்ரியா பவானி சங்கர்

கமல் & சிம்புவை அடுத்து மீண்டும் அருண் விஜய்யுடன் இணையும் ப்ரியா பவானி சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arun vijay priya bhavani shankarதமிழ் பெண்களுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைவு என்பதை மாற்றி மளமளவென தமிழ் படங்களை குவித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.

அதர்வாவுடன் ‘குருதி ஆட்டம்’, ஹரிஷ் கல்யாண் உடன் ‘ஓ மணப்பெண்ணே’, எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘பொம்மை’, ஜீவா & அருள்நிதியுடன் ‘களத்தில் சந்திப்போம்’ உள்ளிட்ட படங்கள் இவர் கைவசம் உள்ளன.

இந்த படங்கள் இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’, சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.

இந்நிலையில் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே அருண் விஜய், பிரசன்னாவுடன் ‘மாஃபியா சாப்டர் 1 படத்தில் பிரியா நடித்துள்ளார்.

இப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சக்திவேல் தயாரிக்கிறார்.

அருண் விஜய் படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

பிப்ரவரி மாதம் 2021-ம் ஆண்டு படப்பிடிப்பை ஆரம்பித்து ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

சூர்யா நடிக்காமல் விலகிய ‘அருவா’ படத்தின் கதைதான் இப்படம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Arun Vijay and Priya Bhavani Shankar joins for a new film

More Articles
Follows