தல-தளபதியை ஒரே படத்தில் இயக்க ஆசைப்படும் பாகுபலி கலைஞர்

தல-தளபதியை ஒரே படத்தில் இயக்க ஆசைப்படும் பாகுபலி கலைஞர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lee Whittaker likely to direct Vijay and Ajith in Single movie1990களில் விஜய் மற்றும் இஜித் இருவரும் ‘ராஜாவின் பார்வையிலே’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் இணைந்து நடித்தனர்.

தற்போது இருவருக்கும் தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. எனவே அவர்களை இணைத்து ஒரு படத்தை இயக்க பலரும் ஆசைப்பட்டு வருகின்றனர்.

ஆனால் கடந்த 25 வருடங்களாக எந்தப் படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.

இந்த நிலையில் பாகுபலி, விஸ்வரூபம், எக்ஸ்மென் உள்ளிட்ட படங்களுக்கு சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றிய லீ விட்டேகர் என்பவர் இயக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் அஜித் விஜய் ரசிகர்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருக்கின்றனர். ஒருவேளை அவர்கள் இணைந்து நடித்தால் இது ரசிகர்களின் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைய வாய்ப்பு வரலாம்.
தல தளபதி பரிசீலனை செய்வார்களா..?

Lee Whittaker likely to direct Vijay and Ajith in Single movie

தமிழக ஏரி குளங்களை தூர் வாரும் ரசிகர்கள்; ரஜினி மகிழ்ச்சி

தமிழக ஏரி குளங்களை தூர் வாரும் ரசிகர்கள்; ரஜினி மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I am very happy with my fans work in lake clean up works says Rajiniமுருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பை முடித்து விட்டு, சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.

அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது-..

தர்பார் படம் எடுக்கப்பட்ட வரையில் சிறப்பாக வந்துள்ளது.

படம் திட்டமிட்டபடி, அடுத்தாண்டு ஜனவரி 14ல், அதாவது பொங்கல் நாளில் ரிலீசாகும்.

தமிழகத்தின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்பதற்காக, என் ரசிகர்கள் குளங்களை தூர் வாருவது மகிழ்ச்சியாக உள்ளது.

மாவட்டம் தோறும் தன்னிச்சையாக செய்து கொண்டிருக்கின்றனர். நான் ரொம்பவும் சந்தோஷப்படுகிறேன்.

அவர்களின் அந்தப் பணி தொடர வேண்டும். தண்ணீர் தேவைக்கான பணிகளில், எல்லோரும் இதைப் போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டும்.” என் பேசினார் ரஜினிகாந்த்.

I am very happy with my fans work in lake clean up works says Rajini

ஹரிஷ் கல்யாணை இயக்கும் பிச்சைக்காரன் பட இயக்குனர்

ஹரிஷ் கல்யாணை இயக்கும் பிச்சைக்காரன் பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)தமிழ் சினிமாவில் உள்ள இளைய நடிகர்களில் முக்கியமானவர் ஹரிஷ் கல்யாண். இவருக்கு ரசிகைகள் பலர் உள்ளனர்.

இவர், கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார்.

மேலும் பியார் பிரேமா காதல் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலமானார்.

இந்த நிலையில் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தைத் தயாரித்த மாதவ் மூவிசாரே தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை பிச்சைக்காரன் பட இயக்குனர் சசி இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

விரைவில், இப்பட சூட்டிங் தொடங்கவுள்ளதாகவும் இந்த வருட இறுதிக்குள் இப்படம் வெளியாகும் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

ரஜினியை கலாய்ப்பதா.? கடுப்பான கமல்.; காட்சியை நீக்க கோமாளி பட புரொடியூசர் சம்மதம்

ரஜினியை கலாய்ப்பதா.? கடுப்பான கமல்.; காட்சியை நீக்க கோமாளி பட புரொடியூசர் சம்மதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் முதன்முறையாக இணைந்துள்ள கோமாளி என்ற படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதீ இசையமைத்துள்ளார்.

வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

அதில், 16 வருடங்களாக கோமாவில் இருந்து மீள்கிறார் ஜெயம் ரவி.

எனவே அவரை நம்ப வைக்க “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று ரஜினிகாந்த் கூறும் வீடியோவைப் போட்டுக்காட்டுகிறார் யோகி பாபு.

அதைப்பார்த்து ஜெயம் ரவி அதிர்ச்சியுடன் “ஏய், இது 96. யாரை ஏமாத்துறீங்க” என்று கேட்பதாக ட்ரெய்லர் முடிவடைகிறது.

இந்தக் காட்சிக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த படத்தை தாங்கள் புறக்கணிக்க போவதாக அறிவித்தனர்.

மேலும் அந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் கமல் அவர்கள் அந்த டிரைலரை பார்த்துவிட்டு தயாரிப்பாளரிடம் பேசினாராம்.

இதுகுறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஒரு பேட்டியில் கூறியதாவது…

“ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர் நோக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்.

அவரின் பெயருக்கு என்னால் கலங்கம் ஏற்பட விடமாட்டேன்.

கோமாளி பட ட்ரெய்லரைப் பார்த்த கமல்ஹாசன் என்னிடம் வருத்தம் தெரிவித்தார்.

மேலும் ரஜினி ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி நீக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

பிக் பாஸிலிருந்து சேரனை வெளியே அழைத்து வாருங்கள் – இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்

பிக் பாஸிலிருந்து சேரனை வெளியே அழைத்து வாருங்கள் – இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஅண்ணன் சேரன் அவர்கள் இயக்குனர் நடிகர் என்பதையும் தாண்டி, தங்கள் குடும்பத்தில் ஒருவராக தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.

ஆட்டோகிராபில் வேற்று மாநிலத்தவர்களால் அவமானப்படுத்தப்பட்ட போதும், சொல்ல மறந்த கதையில் தன் மாமனாரால் அவமானப்படுத்தப்பட்ட போதும், அது திரைப்படத்திற்காக கற்பனையாக எழுதப்பட்ட கதை, அதற்காக எடுக்கப்பட்ட காட்சி என்பதையும் தாண்டி மக்கள் அவருக்காக பரிதாபப் பட்டார்கள். கோபப்பட்டார்கள். அந்தப் படங்களின் வெற்றியே அதற்கு சாட்சி.

ஒரு படத்தில் அவர் சிகரெட் பிடிப்பது போல் ஒரு காட்சி. திரையரங்கில் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி” அய்யய்யோ சேரன் சிகரெட் எல்லாம் குடிக்க மாட்டாரே..” என்று புலம்பிய போது ஒரு நடிகரை நம் மக்கள் எப்படி உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன்.

அவர் குடும்பத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டபோது ஒட்டுமொத்த தமிழகமே தன் வீட்டுப் பிரச்சினை போல் எண்ணி அவருக்காக மனம் உருகியதும், அவர் பத்திரிக்கையாளர்கள் காலில் விழுந்து வணங்கியதைக் கண்டு மக்கள் கண்கலங்கியதும் யாரும் மறந்து விடவில்லை.

எனது வெங்காயம் திரைப்படம் வெளியாகி சரியாக கவனிக்கப்படாத பொழுது, எந்த சம்பந்தமும் இல்லாமல் ஒரு சாதாரண பார்வையாளனாக படத்தைப் பார்த்த அவர், ஒரு நல்ல படம் மக்களை சென்றடையாமல் போய்விடக்கூடாது என்று அவருக்குத் தெரிந்த அத்தனை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என்று எந்த கவுரவமும் பார்க்காமல் ஒவ்வொருவரிடமும் சென்று அந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க கெஞ்சியதை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.

அவர் பணம் சம்பாதிக்க திரைத்துறைக்கு வந்தவர் என்றால் யாரோ ஒருவரின் படத்தை தூக்கிக்கொண்டு இப்படி எல்லோரிடமும் கெஞ்சி இருக்க வேண்டியதில்லை. தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்க வேண்டும், நல்ல திரைப்படங்கள் வரவேண்டுமென்பதில் அவரைப்போல அக்கறை கொண்டவர் வேறு யாருமில்லை.

சினிமாவில் சம்பாதித்த பணத்தை நிறுவனங்களிலும் ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்து தன் குடும்பத்தை வளப்படுத்திக் கொள்ளும் சிலருக்கு மத்தியில், C2H என்ற நிறுவனத்தை தொடங்கி சினிமாவை மாற்று வழியில் மக்களுக்கு கொண்டு செல்ல முயற்சி செய்து அதனால் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளானவர்.

இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று அங்கு நடக்கும் சம்பவங்களை நாடே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோ என்று சொல்லப்படுகிறது. அது உண்மையா பொய்யா என்பதை பற்றி நமக்கு கவலை இல்லை. ஆனால் பார்க்கின்ற மக்கள் அதை உண்மை என்றே நம்புகிறார்கள்.

ஒரு பெண் அவர் தவறான எண்ணத்துடன் தன்னை தொட்டதாக சொல்கிறார். ஒரு நடிகர் அவரை வாடா போடா என்று ஒருமையில் பேசுகிறார். ஒரு சராசரி மனிதனுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடந்தாலே அதை மிகப்பெரிய அவமானமா கருத வேண்டி இருக்கும் பொழுது, மக்களால் கொண்டாடப்படும் ஒரு கலைஞன் கூனிக் குறுகி நிற்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

விஜய் சேதுபதி சொன்னதற்காக தான் அங்கே போனேன் என்று சொல்கிறார். அவருக்கு ஏற்பட்ட அவமானங்கள் தனக்கு ஏற்பட்டதாக எண்ணி மரியாதைக்குரிய விஜய் சேதுபதி அவர்கள் சேரன் அண்ணனை இதற்கு மேலும் அவமானப்பட வைக்காமல் வெளியே அழைத்து வந்து விட வேண்டும்.

இல்லாவிட்டால் என்னைப் போல் அவரால் பயனடைந்தவர்கள் மற்றும் அவர் மீது மரியாதை கொண்ட பலரையும் ஒருங்கிணைத்து பிக்பாஸ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை வெளியே அழைத்து வருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.

ஆகஸ்ட்டில் இருந்து செப்டம்பருக்கு தாவிய ‘காப்பான்’

ஆகஸ்ட்டில் இருந்து செப்டம்பருக்கு தாவிய ‘காப்பான்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya and Mohanlals Kaappaan set to release on 20th Sept 2019லைகா தயாரிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காப்பான்.

இதில் சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி பலர் நடித்துள்ளனர்.

இதன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, ஷங்கர், வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படத்தை ஆகஸ்ட் 30ம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்து இருந்தனர்.

ஆனால் அன்றைய தினத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் வெளியாகவுள்ளதால் இப்படத்தை செப்டம்பர் 20ம் தேதிக்கு மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமிழில் ‘காப்பான்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘பந்தோபஸ்து’ என பெயரிலும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.

Suriya and Mohanlals Kaappaan set to release on 20th Sept 2019

More Articles
Follows