அந்தந்த மொழிகளில் நடிக்கும்போது அந்தந்த மொழிகளை கற்கிறேன்.. அதுதான் மரியாதை – நேகா சக்ஸேனா

அந்தந்த மொழிகளில் நடிக்கும்போது அந்தந்த மொழிகளை கற்கிறேன்.. அதுதான் மரியாதை – நேகா சக்ஸேனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஆபரேஷன் அரபைமா’ என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் முன்னாள் கப்பல்படை வீரர் பிராஷ்.

இதில் ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது நடிகை நேஹா சக்ஸேனா பேசியதாவது…

நான் பஞ்சாபி பெண். ஆனால், தமிழ் படிக்க வேண்டும் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என் அப்பா என்னுடைய சிறு வயதில் ஒரு விபத்தில் இறந்து விட்டார். என் அம்மா தான் என்னை வளர்த்தார்.

வாழ்க்கையில் முன்னேற எதாவது ஒரு லட்சியம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அம்மா கூறினார். பல மொழிகளில் 12 வருடங்களாக நடித்து வருகிறேன். சினிமாவிற்கு மொழிகள் கிடையாது.

ஒரு மாநிலத்திற்குள் நாம் வேலைக்காக அல்லது நம் தேவைக்காக செல்லும்போது அந்த மாநிலத்தின் மொழியை நாம் கற்றுக்கொள்வது அந்த மாநிலத்திற்குச் செய்யும் மரியாதை.

நான் பஞ்சாபி பெண்… ஆனால் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள சினிமாக்களில் வேலை செய்யும் போது அந்தந்த மொழியைக் கற்றுக்கொள்கிறேன். அதில் எனக்கு ரொம்பவே சந்தோஷம் என்று பேசி கைத்தட்டல்களை வாங்கினார்.

நடிகர் டினி டாம் பேசும்போது

தமிழில் இது எனக்கு முதல் படம். அனைத்து நடிகர்களுக்கும் தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். காரணம், தமிழ் தான் உலகின் பழமையான மொழி.

மேலும், கலாபவன் மணி சார் தான் என்னுடைய குரு. நேற்று அவரின் 7 ஆம் ஆண்டு நினைவஞ்சலி. நேற்று, கலாபவன் மணி விருதினை எனக்கு வழங்கினார்கள் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த படத்திற்கு உங்கள் ஆதரவைத் தந்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார்.

Learning respective languages while working particular language movies – Neha Saxena

தமிழ் புத்தாண்டில் ‘சூர்யா 42’ படக்குழு தரும் மெகா விருந்து

தமிழ் புத்தாண்டில் ‘சூர்யா 42’ படக்குழு தரும் மெகா விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘சூர்யா 42′ என்ற தற்காலிகப் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தப் படத்தில் சூர்யா மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படம் 10 மொழிகளில் வெளியாகும் என்றும் இரண்டு பாகங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ​​’சூர்யா 42′ டைட்டில் டீசர் ஏப்ரல் 14 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளதாக சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டின் போது ஹைதராபாத்தில் ஒரு பிரமாண்ட நிகழ்வில் டீசரை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘Suriya 42’ title teaser to be launched in april 14

‘சேது’-க்கு பிறகு ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ தான்.; அடிச்சு சொல்லும் அலெக்ஸ் பாண்டியன்

‘சேது’-க்கு பிறகு ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ தான்.; அடிச்சு சொல்லும் அலெக்ஸ் பாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ லட்சுமி திரை கலைக்கூடம் பெருமையுடன் வழங்கும் ஸ்தபதி டாக்டர் ஆர் பிரபாகர் தயாரிப்பில் உருவாகும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு கும்பகோணம் அருகில் தாராசுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சில தினங்களுக்கு முன் தொடங்கியது.

‘பவுடர்’ படத்தின் இயக்குந‌ர் விஜய் ஸ்ரீஜியிடம் அசோசியேட் டைரக்டராக பணியாற்றிய எஸ் ஜே அலெக்ஸ் பாண்டியன் இந்தப் படத்தின் மூலம் இயக்குந‌ராக அறிமுகம் ஆகிறார்.

காலங்களில் அவள் வசந்தம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிய கௌஷிக் ராம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக புவனேஸ்வரி.

இவர்களுடன் ரவி, சிங்கம்புலி, குக் வித் கோமாளி புகழ் சில்மிஷம் சிவா, அஜித் யுனிக், டி எஸ் ஆர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

ஸ்ரீ லட்சுமி திரை கலைக்கூடம் சார்பில் கும்பகோணத்தை சேர்ந்த உலக புகழ் பெற்ற ஸ்தபதி ரோட்டேரியன் டாக்டர் பிரபாகரின் தயாரிப்பில் இந்தத் திரைப்படம் உருவாகிறது. துர்கா தேவி பாண்டியன் இணைத் தயாரிப்பாளராக உள்ளார்.

பிரஹத் முனியசாமி ஒளிப்பதிவு செய்ய தயாரிப்பு மேற்பார்வையாளராக நமஸ்காரம் சரவணன் பணியாற்றுகிறார்.

இத்திரைப்படத்தின் கலை இயக்குந‌ர் நந்தகுமார் ஆவார். நிர்வாக தயாரிப்பாளர் பொறுப்பை பாண்டியன் கவனிக்கிறார். படத்தொகுப்பை குணா கவனிக்க, ஹரி எஸ் ஆர் இசையமைக்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் மேற்கொள்கிறார்.

இத்திரைப்படம் குறித்து அறிமுக இயக்குந‌ர் எஸ் ஜே அலெக்ஸ் பாண்டியன் கூறுகையில்…

“இது ஒரு ரொமான்டிக் காமெடியாக, எதிர்பாராத பல திருப்பங்கள் நிறைந்த, உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம்,” என்றார்.

கிராமத்திலிருந்து கல்லூரி படிப்பிற்காக நகரத்திற்கு வரும் கதாநாயகன் சந்திக்கும் பிரச்சனைகளே படத்தின் முக்கிய கருவாக உள்ளது என்றும், அழுத்தமான சமூக கருத்துக்களை நகைச்சுவையுடன் கூறக்கூடிய படமாக இது இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறும் என்றும் சேதுவுக்கு பின் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் எடுக்கப்படும் படமாக இது இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

A rom-com thriller Christina Kathirvelan movie updates

சிம்பு-வின் ‘பத்து தல’ இசை வெளியீட்டு விழாவுக்கு வரும் கெஸ்ட் இவரா?

சிம்பு-வின் ‘பத்து தல’ இசை வெளியீட்டு விழாவுக்கு வரும் கெஸ்ட் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு மீண்டும் தனது ரசிகர்களை மகிழ்விப்பதற்காக ‘பத்து தல’ படத்தின் மூலம் மீண்டும் வருகிறார். STR நீண்ட நாட்களுக்குப் பிறகு க்ரைம் த்ரில்லர் படத்தில் நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகமா உள்ளது. இசை புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் மார்ச் 30ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

பத்து தல படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 18 ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. அந்த நிகழ்வில் ARR நேரலையில் பங்கேற்க உள்ளார். தற்போது, ​​இந்த விழாவில் நடிகர் சூர்யா விருந்தினர்களில் ஒருவராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Is this top hero joining Atman Simbu in the grand audio launch of ‘Pathu Thala’?

MEENA 40.. ரஜினி முதல் 90s நட்சத்திரங்கள் மீனாவுக்கு பாராட்டு

MEENA 40.. ரஜினி முதல் 90s நட்சத்திரங்கள் மீனாவுக்கு பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரம் ஆக அறிமுகமானவர் நடிகை மீனா.

1980களில் குழந்தை நட்சத்திரமாக ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ என்ற படத்தில் நடித்தவர் மீனா.

இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், பாக்யராஜ், கார்த்தி, முரளி, சரத்குமார், அஜித், விஜய், பிரசாந்த் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார்.

MEENA 40

மீனா திரையுலகில் 40 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சென்னையில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிலையில், இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மீனாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், நடிகர்கள் சரத்குமார், ராஜ்கிரண், நாசர், பிரபுதேவா, பிரசன்னா, இசையமைப்பாளர் தேவா, தயாரிப்பாளர்கள் போனிகபூர், தாணு, நடிகைகள் ரோஜா, ராதிகா, குஷ்பு, சினேகா, தேவயாணி, சுஹாசினி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

MEENA 40

meena 40 event rajinikanth and 90s stars attend

சமூக கண்ணோட்டத்துடன் சூர்யா & சசிகுமார்.; ‘அயோத்தி-க்கு சுசீந்திரன் பாராட்டு

சமூக கண்ணோட்டத்துடன் சூர்யா & சசிகுமார்.; ‘அயோத்தி-க்கு சுசீந்திரன் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மந்திரமூர்த்தி இயக்கி சசிகுமார் நடிப்பில் உருவான படம் ‘அயோத்தி’.

இப்படத்தில் சசிகுமார், யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்க ட்ரைன் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ளார்.

‘அயோத்தி’ திரைப்படம் மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, நாளுக்கு நாள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், சசிகுமார் நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ படத்திற்காக இயக்குனர் சுசீந்திரன் பாராட்டியுள்ளார்.

மேலும், சுசீந்திரன் சசிகுமாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், “சூர்யா சார், சசிகுமார் போன்றோர் தான் சமூக கண்ணோற்றத்துடனும் திரைப்படம் நடிக்கிறார்கள்…மனிதத்தை போற்றும் அயோத்தியை ஆதரிப்போம்…சசிகுமார் அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள்..சிறப்பான திரைப்படம்…” என சசிகுமாரை பாராட்டியுள்ளார்.

குறிப்பு..

சுசீந்திரன் இயக்கி 2019 ஆம் ஆண்டு வெளியான ‘கென்னடி கிளப்’ படத்தில் நடிகர் சசிகுமார் முக்கிய வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி

Director Susienthiran lauds Sasikumar’s ‘Ayothi’

More Articles
Follows