தமிழில் ரீமேக் ஆகிறது ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’: கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கிறார்!

தமிழில் ரீமேக் ஆகிறது ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’: கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கிறார்!

KS Ravi Kumarசில திரைப்படங்களைக் காணும் போது, இப்படியொரு கதையை எப்படி யோசித்தார்கள் என்று சிந்திக்க வைக்கும். அப்படி பலராலும் பேசப்பட்டு, கொண்டாடப்பட்ட மலையாள படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகளை வென்றது.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றினார் முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். பலரும் அவர் இயக்குவதற்காகக் கைப்பற்றியுள்ளார் என எண்ணினார்கள். ஆனால் கமல் நடித்த ‘தெனாலி’ படத்தைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார், ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ தமிழ் ரீமேக்கை தயாரித்து நடிக்கிறார்.

‘கூகுள் குட்டப்பன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படக்குழுவினர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, இயக்குநர் விக்ரமன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் படப்பூஜையில் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ கதையைத் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி சுவராசியமாகத் திரைக்கதை அமைத்துள்ளனர். இந்தப் படத்தை சுமார் 10 ஆண்டுகளாக கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்து வரும் சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இயக்குகிறார்கள். இதன் படப்பிடிப்பு பிப்ரவரி 15-ம் தேதி முதல் தென்காசியில் தொடங்குகிறது. ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான சுராஜ் கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், செளபின் கதாபாத்திரத்தில் தர்ஷன் நடிக்கவுள்ளார்கள். ஆர்.கே செல்லுலாய்ட்ஸ் சார்பாக கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்கிறார்.

இதில் நாயகியாக லாஸ்லியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், யோகி பாபு, மனோபாலா, மாரியப்பன், ப்ராங்ஸ்டார் ராகுல் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். ‘பண்டிகை’, ‘ரங்கா’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள ஆர்வி ஒளிப்பதிவாளராகவும், இசையமைப்பாளராக ஜிப்ரானும், பாடலாசிரியராக மதன் கார்க்கியும் பணிபுரியவுள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி, தென்காசி, சென்னை மற்றும் சில காட்சிகளை வெளிநாட்டிலும் படமாக்கவுள்ளனர். தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாகக் களமிறங்கியுள்ளது படக்குழு.

தமிழக மக்களுக்கு ஒரு வித்தியாசமான காமெடி கலந்த எமோஷனல் கதை ஒன்று தயாராகி வருகிறது. கண்டிப்பாகத் திரையரங்குகளில் சிரிப்பலைக்கு கியாரண்டி தான்!

‘கூகுள் குட்டப்பன்’ படக்குழுவினர் விவரம்
தயாரிப்பு: கே.எஸ்.ரவிகுமார்
கதை: ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவால்
திரைக்கதை, வசனம், இயக்கம் – சபரி – சரவணன்
நடிகர்கள்: கே.எஸ்.ரவிகுமார், தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு, மனோபாலா, மாரிமுத்து, ப்ராங்ஸ்டார் ராகுல் உள்ளிட்ட பலர்
தயாரிப்பு வடிவமைப்பு: பி.செந்தில் குமார்
ஒளிப்பதிவாளர்: ஆர்வி
இசையமைப்பாளர்: ஜிப்ரான்
எடிட்டர்: ப்ரவீன் ஆண்டனி
கலை: சிவகிருஷ்ணா
பாடலாசிரியர் – மதன் கார்க்கி
ஆடை வடிவமைப்பு: ஜே. கவிதா
படங்கள்: ராமசுப்பு
டிசைன்ஸ்: ரெட்டாட் பவன்
பி.ஆர்.ஓ – யுவராஜ்

KS Ravi kumar’s Google Kuttappan kick-starts in Chennai

கமல் & சிம்புவை அடுத்து மீண்டும் அருண் விஜய்யுடன் இணையும் ப்ரியா பவானி சங்கர்

கமல் & சிம்புவை அடுத்து மீண்டும் அருண் விஜய்யுடன் இணையும் ப்ரியா பவானி சங்கர்

arun vijay priya bhavani shankarதமிழ் பெண்களுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைவு என்பதை மாற்றி மளமளவென தமிழ் படங்களை குவித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.

அதர்வாவுடன் ‘குருதி ஆட்டம்’, ஹரிஷ் கல்யாண் உடன் ‘ஓ மணப்பெண்ணே’, எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘பொம்மை’, ஜீவா & அருள்நிதியுடன் ‘களத்தில் சந்திப்போம்’ உள்ளிட்ட படங்கள் இவர் கைவசம் உள்ளன.

இந்த படங்கள் இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’, சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.

இந்நிலையில் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே அருண் விஜய், பிரசன்னாவுடன் ‘மாஃபியா சாப்டர் 1 படத்தில் பிரியா நடித்துள்ளார்.

இப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சக்திவேல் தயாரிக்கிறார்.

அருண் விஜய் படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

பிப்ரவரி மாதம் 2021-ம் ஆண்டு படப்பிடிப்பை ஆரம்பித்து ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

சூர்யா நடிக்காமல் விலகிய ‘அருவா’ படத்தின் கதைதான் இப்படம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Arun Vijay and Priya Bhavani Shankar joins for a new film

விஜய்க்கு ஜோடியாகி 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹீரோயினாகும் ‘பிக்பாஸ்’ வனிதா

விஜய்க்கு ஜோடியாகி 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹீரோயினாகும் ‘பிக்பாஸ்’ வனிதா

vanitha vijayakumar (1)விஜய் நடித்த ’சந்திரலேகா’ படம் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். இப்படம் 1995ல் ரிலீசானது.

ராஜ்கிரன் நடித்த ’மாணிக்கம்’ உள்ளிட்ட ஓரிரு படங்களில் பின்னர் நாயகியாக நடித்தார்.

பின்னர் திருமண வாழ்வில் பிசியானதால் (1… 2… திருமணங்களை செய்ததால்) சினிமாவில் நடிக்கவில்லை.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர் கொரோனா லாக்டவுன் சமயத்தில் 3வது திருமணம் செய்து ஓரிரு மாதங்களில் விவாகரத்து செய்து யூடிப்பில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி ஒரேடியாக பிரபலமானார்.

தற்போது மீண்டும் நாயகியாகுகிறார் வனிதா.

பாபி சிம்ஹா நடித்த ’பாம்பு சட்டை’ படத்தை இயக்கிய ஆதம்தாஸன் என்பவரின் அடுத்த பட நாயகி வனிதா தான்.

இது நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதை என கூறப்படுகிறது. இவருடன் முக்கிய வேடத்தில் கருணாகரன் நடிக்கிறார்.

Actress Vanitha Vijayakumar joins hands with Paambhu Sattai director for a woman-centric film

இமான் இசையில் டூயட் பாடும் பிரபுதேவா & ரம்யா நம்பீசன் ..; டைரக்டர் யார்..?

இமான் இசையில் டூயட் பாடும் பிரபுதேவா & ரம்யா நம்பீசன் ..; டைரக்டர் யார்..?

Prabhu Deva Ramya Nambeesan (2)‘மஞ்சப்பை’ மற்றும் ‘கடம்பன்’ ஆகிய படங்களை இயக்கியவர் ராகவன்.

தற்போது அவர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் பிரபுதேவா நடிக்க உள்ளார்

இந்த படத்தில் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார்.

டி.இமான் இசையமைக்க செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

அபிஷேக் பிலிம்ஸ் தங்களது 8வது படைப்பாக இப்படத்தை தயாரிக்கின்றனர்.

பெட்ரோமாக்ஸ், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Prabhu Deva and Ramya Nambeesan joins for new film

தியேட்டரில் ரிலீசான 15 நாட்களிலேயே ஆன்லைனில் ‘மாஸ்டர்’..; கடுப்பான தியேட்டர் உரிமையாளர்கள் திடீர் முடிவு

தியேட்டரில் ரிலீசான 15 நாட்களிலேயே ஆன்லைனில் ‘மாஸ்டர்’..; கடுப்பான தியேட்டர் உரிமையாளர்கள் திடீர் முடிவு

Masterவிஜய் நடிப்பில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ல் ரிலீசானது.

இந்த படம் வசூல் ரீதியாக உலகளவில் நெம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளதாம்.

தற்போது வரை ‘மாஸ்டர்’ படம் உலக அளவில் ரூ 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம்.

கொரோனா லாக்டவுனிற்கு பிறகு தியேட்டர்கள் திறந்தவுடன் மாஸ்டர் நல்ல வசூலை தருவதாக திரையுலகினர் உற்சாகத்தில் உள்ளனர்.

தமிழகத்தைப் போல கேரளா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகாவிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்புள்ளது.

இந்த நிலையில் நாளை மறுநாள் ஜனவரி 29ல் அமேசானில் மாஸ்டர் ரிலீஸ் என படக்குழு அறிவித்துள்ளது.

அதாவது இந்த படம் ரிலீசாகி 16 நாட்களில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாபியுள்ளனர்.

எனவே உடனடியாக இன்று மாலை ஆலோசனையில் ஈடுப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

விஜய் என்ன செய்ய போகிறார்? பார்ப்போம்

Blindsided by Vijay’s Master’s early OTT release, theatre owners rue lack of transparency

சூர்யா படத்தில் தன் மகனுடன் இணைந்து நடிக்கும் அருண் விஜய்

சூர்யா படத்தில் தன் மகனுடன் இணைந்து நடிக்கும் அருண் விஜய்

Arun Vijay (2)மூத்த நடிகர் விஜய்குமார் அவர்களின் பேரனும் நடிகர் அருண் விஜய் அவர்களின் மகனுமாகிய அர்னவ், நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் அர்னவிற்கு தந்தையாக அவரது தந்தை அருண் விஜய்யே நடிக்கிறார்.

இது குறித்து இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது…

இந்த கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடிப்பாரா? எனும் பெரும் சந்தேகத்துடன் தான் முதலில் அவரை அணுகினேன்.

அவர் இந்தப்படத்தில் அர்னவிற்காக மட்டுமென்றால் நான் நடிக்க மாட்டேன் என முதலிலேயே கூறிவிட்டார்.

நான் திரைக்கதையை கூறிய பிறகு அந்த கதாப்பாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஒப்பந்தமாவதற்கு முன்னால் தனது கதாப்பாத்திரம் குறித்து நிறைய கேட்டு தெரிந்து கொண்டார்.

தற்போது ஊட்டியில் எங்களுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். படம் உருவாகி வரும் விதம் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ள்து.

அர்னவ் மிகவும் துறுதுறுப்பான, உற்சாகம் கொண்ட திறன்மிகு நடிகர். இயல்பாகவே அவரிடம் நடிப்பு திறன் நிறைந்திருக்கிறது. இப்படம் மிக அழகாக உருவாகி வருகிறது.

குழந்தைகளின் உலகை மையமாக வைத்து உருவாகும், இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் நடிகர் அருண் விஜய் அவர்களின் 32 வது படமாகும்.

இப்படம் முழுக்க ஊட்டியில் படமாக்கப்படுகிறது சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது.

ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், RB Films யின் S.R.ரமேஷ் பாபு உடன் இணைந்து இணை தயாரிப்பு செய்கிறார். சரவ் சண்முகம் இப்படத்தை இயக்குகிறார்.

கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கிறார். மேகா படத்தொகுப்பு செய்ய, தயாரிப்பு வடிவமைப்பை மைக்கேல் செய்கிறார். உடை வடிவமைப்பை வினோதினி பாண்டியன் மேற்கொள்கிறார்.

Actor Arun Vijay to share the screen with his son Arnav

More Articles
Follows