“பெல் பாட்டம்” படத்தில் மூன்றாவது முறையாக இணையும் வெற்றிக் கூட்டணி !

“பெல் பாட்டம்” படத்தில் மூன்றாவது முறையாக இணையும் வெற்றிக் கூட்டணி !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Krishna in bell bottomநடிகர் கிருஷ்ணா மற்றும் இயக்குநர் சத்யசிவா இணைந்து “கழுகு, கழுகு 2” என தொடர்ந்து இரு வெற்றிபடங்களை தந்துள்ளனர். தற்போது மூன்றாம் முறையாக இக்கூட்டணி ஒரு புதிய படத்திற்காக இணைகிறது. இப்படத்திற்கு “பெல் பாட்டம்” என பெயரிடப்பட்டுள்ளது. இதே பெயரில் கன்னடத்தில் வெளியாகி 20 கோடி ரூபாயை வசூலித்து பெரு வெற்றிபெற்ற படத்தின் தமிழ்ப்பதிப்பாக இப்படம் உருவாகிறது. இதன் இந்தி பதிப்பில் பாலிவுட் பேரரசனாக உலாவரும் அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

“பெல்பாட்டம்” முந்தைய கால ரெட்ரோ பின்களத்தில் நடக்கும் நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. போலீஸாக ஆசைப்பட்டு, சூழ்நிலைகளின் இடர்பாட்டால் முடியாமல்போய், தனியார் துப்பறிவாளனாக, குற்றங்களை கண்டுபிடிப்பவராக, திவாகர் எனும் பாத்திரத்தில் கிருஷ்ணா நடிக்கிறார். கைவிடப்பட்ட குற்ற வழக்கு ஒன்றை விசாரிக்க அந்த வழக்கு பல எதிர்பராத சிக்கல்களையும், திருப்பங்களையும் கொண்டு வருகிறது. இவை அத்தனையையும் மீறி அந்த வழக்கின் மர்மத்தை ஆராய்ந்து கண்டுபிடிப்பது தான் இப்படத்தின் கதை. ஆனால் அது அவ்வளவு எளிதாக நடந்தேறுவதில்லை அவர் சந்திக்கும் விவகாரமான, வித்தியாசமான மனிதர்கள், அவர் மனதை இளக்கி காதலில் விழச்செய்யும், சட்டத்திற்கு புறம்பாக சரக்கு விற்கும் குஷ்மா, இந்த பாத்திரங்கள் எல்லாம் அந்த வழக்கை விசாரிப்பதை பன்மடங்கு கடினமாக்குகிறார்கள்.

தமிழ் சினிமாவில் வெகு நாகரீகமான படங்கள் மூலம் ஒரு தனிச்சிறப்பான இடத்தை கிருஷ்ணா பெற்றிருக்கிறார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சந்தோஷ் சிவன் இயக்கத்தில் டெரரிஸ்ட் படத்தில் மிக வித்தியாசமான பாத்திரத்தில் நடித்து, நாயகனாக காமெடி ஹாராரன “யாமிருக்க பயமேன்” படத்தில் கலக்கி, சொல்லப்படாத மனிதர்களின் கதையை சொல்லிய “கழுகு” என அவர் தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்கள் கொண்ட, தரமான படங்களில் நடித்து, தொடர் வெற்றிகள் தந்து, தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தரக்ளின் நம்பிக்கை நாயகனாக திகழ்கிறார். தற்போது முற்றிலும் மாறுபட்ட, ரெட்ரோ கால துப்பறிவாளனாக “பெல்பாட்டம்” படத்தில் நடிக்கிறார். “குற்றம் 23, மகாமுனி” படங்களில் வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் மூலம் ரசிகர்கள் மனதை வென்ற மஹிமா நம்பியார் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். காமெடி நடிகர் சரவணன் உட்பட தமிழ் சினிமாவின் திறமை மிகு நடிகர்கள் பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

தனது தனிச்சிறப்பான பாடல்கள் மட்டுமில்லாமல் பின்னணி இசை மூலமும் ரசிகர்களை கவர்ந்து வரும் இசையமைப்பாளர் சாம் CS இப்படத்திற்கு இசையமைக்கிறார். “பியார் பிரேமா காதல், கரம் மசாலா, டிக்கெட்” படங்கள் மூலம் புகழ்பெற்ற ராஜா பட்டாசார்ஜி இப்படத்தில் ஒளிப்பதிவு செய்கிறார். “வழக்கு எண் 18/9, தனி ஒருவன், 1945, டோரா, கழுகு 2” புகழ் கோபி கிருஷ்ணா இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார்.

NH Hari Silver Screens நிறுவனம் சார்பில் H. சார்லஸ் இம்மானுவேல் “பெல் பாட்டம்” படத்தை தயாரிக்கிறார். புதிதாக துவங்கப்பட்டுள்ள NH Hari Silver Screens நிறுவனம் மாறுபட்ட கதைகளங்களை கொண்ட, தரமான படங்களை தயாரிப்பதை குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான “தீதும் நன்றும்” விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது. இயக்குநர் சத்யசிவா தற்போது நடிகர் ராணாவை நாயகனாக வைத்து இயக்கியுள்ள “1945” படமும் பெரும் எதிர்பார்ப்பிர்கிடையில் விரைவில் வெளியாகவுள்ளது.

வலிமை Vs அருவா.; இனி சூர்யாவை எதிர்க்க தயாராகும் அஜித் ரசிகர்கள்.?

வலிமை Vs அருவா.; இனி சூர்யாவை எதிர்க்க தயாராகும் அஜித் ரசிகர்கள்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith suriyaதமிழகத்தில் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சில ஆண்டுகளாக மாறாத ஒரே விஷயம் விஜய் & அஜித் ரசிகர்களின் சண்டை தான்.!

தல தளபதி படம் பற்றிய தகவலே இல்லை என்றாலும் எதையாவது ஒரு விஷயத்தை வைத்து ட்விட்டரில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி சண்டை போட்டுக் கொள்வார்கள்.

விரைவில் அஜித் ரசிகர்களின் கவனம் சூர்யா பக்கம் திரும்பும் எனத் தெரிகிறது.

இந்தாண்டு 2020 தீபாவளிக்கு அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படம் வெளியாக உள்ளது.

வினோத் இயக்கி வரும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

சூர்யாவின் ‘அருவா’ திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஹரி இயக்கவுள்ள இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளார். சூட்டிங் ஏப்ரலில் துவங்கவுள்ளது.

ஆக இனி வலிமையுடன் அருவா மோதும் என எதிர்பார்க்கலாம்.

பெரிய ஸ்கீரினில் படு கவர்ச்சியான போட்டோ; டென்ஷனாகி வாக் அவுட் செய்த ஷாலு ஷம்மு.!

பெரிய ஸ்கீரினில் படு கவர்ச்சியான போட்டோ; டென்ஷனாகி வாக் அவுட் செய்த ஷாலு ஷம்மு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நாயகி ஸ்ரீதிவ்யாவின் தோழியாக நடித்தவர் ஷாலு ஷம்மு.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருப்பவர் ஷாலு ஷம்மு.

சில மாதங்களுக்கு முன் ஆண் நண்பருடன் படுகவர்ச்சியாக நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அப்போது முதலே இளைஞர்களின் கனவுக் கன்னி என்றால் ஷாலு தான்.

Actress Shalu Shamu hot photos

மேலும் பல்வேறு விதமான கவர்ச்சி புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

இதனால் இவரின் போட்டோக்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது..

சமீபத்தில் ஷாலு ஷம்மு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி கேங்ஸ்டர் என்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.

அப்போது ஷாலுவின் சில புகைப்படங்களை திரையில் காட்டியுள்ளனர்.

அதில் அவர் சமீபத்தில் வெளியிட்டிருந்த புகைப்படத்தை (ரோஜாக்கள் மீது ஷாலு ஷம்மு படுத்திருந்தார். நம் தளத்திலும் அதை சில தினங்களுக்கு முன் பதிவிட்டு இருந்தோம்) காட்டியதால் டென்ஷன் ஆன ஷாலு ஷம்மு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.
shalu shamu hot

அஜித் ஜோடியாக காலா நாயகி; வில்லனாக தெலுங்கு நடிகர்!

அஜித் ஜோடியாக காலா நாயகி; வில்லனாக தெலுங்கு நடிகர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Valimai ajithபோனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’.

இதுவரை 40% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார்.

ஆனால் பட நாயகி & வில்லன் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

தற்போது காலா பட ஹீரோயின் ஹியூமா குரோஷி நாயகியாக நடித்து வருவது உறுதியாகியுள்ளது.

3 பேர் வில்லன்களாக நடிப்பதால் வில்லன்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வந்தது.

இதில் மெயின் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஒப்பந்தம்

மனிதமே பெரியது; 3 மதங்களுக்கும் ஒரே ஆலயம் கட்டும் லாரன்ஸ்!

மனிதமே பெரியது; 3 மதங்களுக்கும் ஒரே ஆலயம் கட்டும் லாரன்ஸ்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrenceமூன்று மதங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு அசாத்திய விசயத்தை கையில் எடுத்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

சமூகம் சார்ந்த சிந்தனைகளையும் சமூக சேவைகளையும் மேலும் அவர் தனது அறக்கட்டளையின் மூலமாக எத்தனையோ உதவிகளையும் செய்து வருகிறார்.

இப்போது அவர் மத வேறுபாடுகளை கடந்து மனிதம் தான் பெரிது என்பதை உணர்த்தும் வகையில் இந்து கிறிஸ்டின், முஸ்லீம் ஆகிய மூன்று மதத்தினரும் வந்து வழிபடும் படி ஓர் ஆலயம் அமைக்க இருக்கிறார். மதங்களாலும் சாதிகளாலும் மக்கள் பிரிக்கப்படுகிறார்கள் அதனால் தான் இந்த முயற்சி.

நெருப்பிற்கும் பசிக்கும் சாதி மதம் தெரியாது அந்த வகையில் அனைவரும் சமமாக உணவருந்த அந்த ஆலயத்தில் அண்ணதான கூடம் அமைக்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானமும் வழங்க இருக்கிறார்.

இந்த அறப்பணி இதுவரை யாருமே சிந்தித்திராத முயற்சி. ராகவேந்திரர் சுவாமியின் பிறந்த நாளான இன்று இதை அறிவித்துள்ளார்.

இந்தப்பணிகளை மிகச்சிறப்பாக விரைவில் துவங்க இருக்கிறார்.

ரசிகர்கள் இல்லாமல் ‘மாஸ்டர்’ இசை வெளியீடு..? அரசியல் காரணமா.?

ரசிகர்கள் இல்லாமல் ‘மாஸ்டர்’ இசை வெளியீடு..? அரசியல் காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Master Audio launch and Political issue updates சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.

இதில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்பட சூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு விஜய்சேதுபதி முத்தம் கொடுத்துள்ளார்.
அந்த படத்தை வெளியிட்டு மாஸ்டர் சூட்டிங் முடிவடைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் மாஸ்டர் படம் தொடர்பான அறிவிப்புகள் மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஒரு குட்டி கதை பாடல் வெளியான நிலையில் இரண்டாவது பாடலுக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அனிருத் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை அடுத்த மாதம் ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் மார்ச் 15-ம் தேதி இசை வெளியீட்டு விழாவை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடத்த திட்டமிட்டுள்ளனர்

மெர்சல், பிகில், சர்கார் உள்ளிட்ட படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் ரசிகர்கள் பங்கேற்றனர். அப்போது விஜய் அரசியல் பற்றி பேசினார்.

அண்மையில் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை வேற நடைபெற்றது.

எனவே சர்ச்சைகளை தவிர்க்க விஜய் விரும்புகிறார் எனவும் எனவே தான் ரசிகர்கள் இல்லாமல் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

படத்தின் இசைவெளியீட்டு உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijays Master Audio launch and Political issue updates

More Articles
Follows