உங்களுக்கு பிடிச்ச ஹீரோயின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

kollywood actressஆண்கள் இல்லாமல் கூட ஒரு சில சினிமாக்கள் வந்துள்ளன. ஆனால் பெண்கள் இல்லாமல் சினிமா எடுக்க முடியுமா? என்பது பெரும் சந்தேகம்தான்.

ஆனால் ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்கு சம்பளம் குறைவு என்பதே நிதர்சன உண்மை.

அண்மைக்காலமாக சில முன்னணி நாயகிகள் நாயகன் இல்லை என்றாலும் கூட தங்கள் கேரக்டர் எப்படி உள்ளது? சம்பளம் எவ்வளவு? என்பதை குறி வைத்தே கதைகளை கேட்டு வருகின்றனர்.

அந்த நாயகிகள் யார் என்பது உங்களுக்கு தெரியும்தானே…?

அந்த டாப் ஹீரோயின்கள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த ஒரு பார்வை இதோ..

நயன்தாராவும், அனுஷ்காவும் முதல் இடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் சம்பளம் ரூ.4 கோடியில் இருந்து 5 கோடியாக உயர்ந்துள்ளது.

இவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

காஜல் அகர்வால் மற்றும் தமன்னாவின் சம்பளம் தற்போது ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது.

இவர்களைத் தொடர்ந்து நடிகை அமலாபாலும் ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறாராம்.

த்ரிஷா தற்போது 1.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடும் கீர்த்தி சுரேஷ் ஒரு கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

திருமணத்திற்கு பிறகும் தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளார் சமந்தா. இவரது சம்பளம் 2 கோடியை நெருங்குகிறதாம்.

ரகுல் பிரீத் சிங் கின் சம்பளம் தீரன் அதிகாரம் ஒன்று படம் வசூலுக்கு பிறகு ரூ.1½ கோடியாக உயர்ந்துள்ளது.

Overall Rating : Not available

Latest Post