‘ரஞ்சிதமே ஸ்டைலில் கிஸ்.. ரசிகர்களுடன் போட்டோ.; நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

‘ரஞ்சிதமே ஸ்டைலில் கிஸ்.. ரசிகர்களுடன் போட்டோ.; நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய்க்கு தமிழக முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நற்பணி மன்றங்களையும் நடத்தி வருகிறார் விஜய்.

இந்த இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை அவ்வப்போது நடத்தி வருவது விஜய்யின் வழக்கம்.

இன்று நவம்பர் 20ல் இயக்கத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை செய்ய சென்னை ECR பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சேலம், நாமக்கல், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை வகித்தார்.

மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

விஜய்யைக் காண அவரது ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்களைப் பார்த்து விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே..’ பாடல் ஸ்டைலில் ஃப்ளையிங் கிஸ் கொடுத்தார்.

மேலும் 300-க்கும் மேற்பட்டோருடன் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

துணிவு-க்கு ரெட் ஜெயன்ட்..; வாரிசு-க்கு 7 ஸ்கீரின் ஸ்டூடியோ.; சபாஷ் சரியான போட்டி

துணிவு-க்கு ரெட் ஜெயன்ட்..; வாரிசு-க்கு 7 ஸ்கீரின் ஸ்டூடியோ.; சபாஷ் சரியான போட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள ’துணிவு’ படம் வரும் 2023 பொங்கல் திருநாளில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

மஞ்சு வாரியார் நாயகியாக நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற்று இருப்பதாக லைக்கா அறிவித்துள்ளது.

ஏற்கனவே ‘துணிவு’ படத்தின் தமிழக வெளியீடு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தின் தமிழக வெளியீடு உரிமையை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிறுவனமும் தமிழ் சினிமாவில் பல படங்களை தயாரித்தும் விநியோகித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் ‘வாரிசு’ படத்தை வம்சி இயக்க தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படமும் 2023 பொங்கல் தினத்தில் வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

BREAKING ரஜினியுடன் நான்.; தமிழில் உதயநிதி.. தெலுங்கில் ரவிதேஜா.; ‘கட்டா குஸ்தி’ விழாவில் விஷ்ணு விஷால் உருக்கம்

BREAKING ரஜினியுடன் நான்.; தமிழில் உதயநிதி.. தெலுங்கில் ரவிதேஜா.; ‘கட்டா குஸ்தி’ விழாவில் விஷ்ணு விஷால் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லெட்சுமி, கருணாஸ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கட்டா குஸ்தி’.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க செல்ல அய்யாவு இயக்கியுள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் ஆர்.டி. டீம் ஒர்க்ஸ் நிறுவனமும், விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரித்துள்ளன.

இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இதற்கான நிகழ்வு தற்போது சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியினை பிரபல நடிகை அர்ச்சனா மற்றும் விஜய் டிவி பாலா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

படத்தின் தயாரிப்பாளர் ரவி தேஜாவும் இந்த விழாவில் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

ரஜினி & விஷ்ணு விஷால் இணைந்து நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தை ஐஸ்வர்யா ரஜினி இயக்குகிறார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

இந்த விழாவில் விஷ்ணு விஷால் பேசும்போது…

நான் ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் கஷ்டங்களை சந்தித்தேன். அப்போது எனக்கு கிரிக்கெட்டும் ஒத்து வரவில்லை.

சினிமாவும் ஒத்து வரவில்லை. இதை விட்டு விலகலாமா என்று நினைத்தேன். அப்போது ஒருமுறை ரஜினியை சந்தித்தேன்.

இன்று ரஜினிகாந்துடன் நடிக்கிறேன் என்பதை நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்?என்றார்.

மேலும் பேசுகையில்..

“தமிழ்நாட்டில் எனது சினிமாவில் உதயநிதி மிக உதவியாக இருக்கிறார்.

அது போல தெலுங்கில் ரவி தேஜா அண்ணன் உதவியாக இருக்கிறார். அவரை சில முறை மட்டுமே சந்தித்தேன். ஆனால் அத்தனை பாசிட்டிவாக பேசினார். அவருடன் படம் செய்வதில் எனக்கு சந்தோஷம். அவர் இந்த படத்தை தயாரிக்க உடனே ஒப்புக்கொண்டார்.”

இவ்வாறு விஷ்ணு விஷால் பேசினார்.

JUST IN இந்த மாதிரி கேட்குற பசங்கள பிடிக்காது.; ‘கட்டா குஸ்தி’ இசை விழாவில் ஐஸ்வர்ய லட்சுமி டென்ஷன்

JUST IN இந்த மாதிரி கேட்குற பசங்கள பிடிக்காது.; ‘கட்டா குஸ்தி’ இசை விழாவில் ஐஸ்வர்ய லட்சுமி டென்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லெட்சுமி, கருணாஸ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கட்டா குஸ்தி’.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க செல்ல அய்யாவு இயக்கியுள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் ஆர்.டி. டீம் ஒர்க்ஸ் நிறுவனமும், விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரித்துள்ளன.

இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இதற்கான நிகழ்வு தற்போது சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியினை பிரபல நடிகை அர்ச்சனா மற்றும் விஜய் டிவி பாலா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

படத்தின் தயாரிப்பாளர் ரவி தேஜாவும் இந்த விழாவில் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி மேடை ஏறிய போது அவரிடம் பல கேள்விகளை கேட்டார் கே பி ஒய் பாலா.

“உங்களுக்கு நாகரிகமாக டிரஸ் பண்ணிட்டு இன் பண்ற பசங்கள பிடிக்குமா? லுங்கி கட்டிட்டு FUN பண்ற பசங்கள பிடிக்குமா? என ஒரு கேள்வி கேட்டார்.

அதற்கு… இந்த மாதிரி கேள்வி கேட்டா எனக்கு பிடிக்காது? என்றார் ஐஸ்வர்யா.

அதன் பின்னர்.. “என்னய உங்களுக்கு பிடிக்குமா என கேட்டார் பிடிக்கும் என்றார்.

அதன் பின்னர்.. “விஷ்ணு விஷால் உடன் இணைந்து மேடையில் ஆட்டம் போட்டார் ஐஸ்வர்யா லட்சுமி.

இதனைத் தொடர்ந்து என்னிடம் இணைந்து ஆடுங்கள் என்று கெஞ்சி கேட்டார் பாலா.

அதன் பின்னர் பாலா உடனும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார் ஐஸ்வர்யா.

பட்டைய கிளப்பும் ‘பட்டத்து அரசன்’ ட்ரைலர்

பட்டைய கிளப்பும் ‘பட்டத்து அரசன்’ ட்ரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரொடக்‌ஷன் தயாரிப்பு நிறுவனத்தின் சமீபத்திய வெற்றிப் படங்களை அடுத்து தற்போது வரிசையாக படங்களை கைவசம் வைத்துள்ளது.

அதில் அதர்வா முரளியின் ‘பட்டத்து அரசன்’ படமும் ஒன்று. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

குடும்பத்தின் வெவ்வேறு விதமான உணர்ச்சிகள், செண்டிமெண்ட்ஸ், அழகான கிராமப் பின்னணி, விளையாட்டு மற்றும் ஆக்‌ஷன் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி 100% எண்டர்டெயினர் படமாக வெளியாக இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், குடும்ப ரசிகர்களுக்குப் பிடித்த விதமான படங்களை எடுப்பதில் இயக்குநர் சற்குணம் திறமையானவர். அந்த வரிசையில் ‘பட்டத்து அரசன்’ திரைப்படமும் நிச்சயம் கவனம் பெறும்.

’பட்டத்து அரசன்’ திரைப்படம் இந்த வருடம் நவம்பர் 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதர்வா முரளியின் ஒவ்வொரு படத்தேர்வும் அவரது நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தும் விதமாக அமைந்துள்ளது.

அந்த வகையில், இந்தத் திரைப்படமும் அவரது திறமையையும் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தும் விதமாகவும் அமையும். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ‘பட்டத்து அரசன்’ திரைப்படத்தை சற்குணம் இயக்க, G.K.M. தமிழ்க்குமரன் (லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத் தலைவர்) இந்த படத்தை மேற்பார்வை செய்துள்ளார்.

நடிகை ஆஷிகா ரங்கநாத் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஆர்.கே. சுரேஷ், ராஜ் அய்யப்பா, ஜெயபிரகாஷ், சிங்கம் புலி, பால சரவணன், ஜி.எம். குமார், துரை சுதாகர், கன்னட நடிகர் ரவி காலி, தெலுங்கு சத்ரு மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

*படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:*

இசை: ஜிப்ரான்,
ஒளிப்பதிவு: லோகநாதன் ஸ்ரீனிவாஸ்,
படத்தொகுப்பு: ராஜா முகமது,
கலை இயக்கம்: அந்தோணி,
பாடல் வரிகள்: விவேக்-மணி அமுதவன்-A,
ஆடை வடிவமைப்பு: நட்ராஜ்,
ஒப்பனை: சசி குமார்,
சண்டைப் பயிற்சி: கனல் கண்ணன்,
நடன இயக்குநர்: பாபி ஆண்டனி ஷெரிஃப்,
தயாரிப்பு மேலாளர்: எம். கந்தன்,
படங்கள்: மூர்த்தி மெளலி,
நிர்வாகத் தயாரிப்பாளர்: நாராயணன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா (D’One)

Trailer – https://youtu.be/BopMbDpJmy0

நான் கர்ப்பமா? எனக்கே தெரியல.. டெலிவரி தேதி சொல்லுங்க.; நிக்கி கல்ராணி கலாய்

நான் கர்ப்பமா? எனக்கே தெரியல.. டெலிவரி தேதி சொல்லுங்க.; நிக்கி கல்ராணி கலாய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மரகத நாணயம் & யாகவராயினும் நாகாக்க
ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் ஆதி & நிக்கி கல்ராணி.

அப்போது இருவருக்கும் காதல் மலரவே இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் பரவியது.

எனவே தன் இன்ஸ்டா ஸ்டோரியில் அது குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் நிக்கி கல்ராணி. அதில்…

“நான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு செய்தி. அப்படியானால் டெலிவரி தேதியை சொல்லுங்கள்.

அப்படி பரவும் செய்தியில் உண்மை இல்லை. அது வெறும் வதந்தியே.

நான் கர்ப்பமானால் அது குறித்த செய்தியை வெளியிடுவேன். அதைவிட எனக்கு சந்தோசமான விஷயம் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார் நிக்கி கல்ராணி.

More Articles
Follows