தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அருள்நிதியின் ‘தேஜாவு’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தருணம்’.
கிஷன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார்.
ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் மற்றும் ARKA என்டர்டெயின்மெண்ட்ஸ் இணைந்து
தயாரிக்கிறது.
இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார்.
ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். அருள் இ சித்தார்த் படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.
இந்நிலையில், ‘தருணம்’ படத்தின் கிளிம்ப்ஸ் (Glimpse) வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ, பயத்தில் இருக்கும் ஸ்மிருதி வெங்கட்டுக்கு கிஷன் தாஸ் லிப் கிஸ் கொடுப்பது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Kishan Das gave a lip kiss to Smruthi Venkat