தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய்க்கு தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் மார்கெட் இருப்பது நாம் அறிந்ததே.
தற்போது இவருக்கு போட்டியாக ஒரு ஹீரோ அங்கு உருவாகி வருகிறார். ஆனால் அவர் மலையாள ஹீரோ இல்லை. தெலுங்கு சினிமாவின் பிரபலமான அல்லு அர்ஜுன்தான்.
விஜய் படங்களை போல் இவரது தெலுங்கு படங்களுக்கும் அங்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் அல்லு அர்ஜுனின் ‘சரோனைடு’ படத்தின் டப்பிங் வெர்ஷனான ‘யோதாவு’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கேரளாவில் கலந்து கொண்டார் அல்லு.
இப்படத்தை மலையாள இயக்குனர் பி.உன்னி கிருஷ்ணன் தனது ஆர்டி இலுமினேஷன் கம்பெனி சார்பாக கேரளாவில் வெளியிடுகிறார்.
அப்போது கூடியிருந்த கட்டுங்கடங்காத ரசிகர்களை பார்த்து அல்லு அர்ஜுன் பேசியதாவது…
“என் மீது அன்பு காட்டும் உங்களுக்கு நன்றி. இன்னும் இரண்டு வருடங்களுக்குள் நேரடி மலையாளப் படத்தில் நடிப்பேன் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதற்காf அவர் தனது சம்பளத்தை குறைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.