நான் சந்தோசமாக இல்லை.; மஞ்சிமா – கௌதம் ஜோடிக்கு கீர்த்தி சுரேஷ் வாழ்த்து

நான் சந்தோசமாக இல்லை.; மஞ்சிமா – கௌதம் ஜோடிக்கு கீர்த்தி சுரேஷ் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் காதலிக்க தொடங்கினர்.

இதனையடுத்து பெற்றோர் சம்தத்துடன் நவம்பர் 28ஆம் தேதி மிக எளிமையாக திருமணம் செய்து கொண்டனர்.

திரை பிரபலங்களும் ரசிகர்களும் புதுமண ஜோடிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தன் வாழ்த்து பதிவில்…

“திருமணத்திற்கு தன்னால் வரமுடியவில்லை என்பதை நினைத்து, நான் சந்தோசமாக இல்லை அம்மு, உன்னுடைய சிறப்பான நாளில் உன்னோடு நான் இருந்திருக்க ஙேண்டும்’ என்று கூறி இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்

I couldn’t be happier for you Ammu! I wish I were there with you on your special day! Congratulations to you both @mohan_manjima @Gautham_Karthik God bless ?❤️ https://t.co/ulQ6AMwg9V

Keerthy Suresh congratulates Manjima-Gowtham couple

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஜெய்பீம்2’ அப்டேட் கொடுத்த சூர்யா டீம்

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஜெய்பீம்2’ அப்டேட் கொடுத்த சூர்யா டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990-களில் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையில் ‘ஜெய்பீம்’ படம் உருவானது.

ஞானவேல் இயக்கிய இந்த படத்தை சூர்யா தயாரித்து நடித்திருந்தார்..

இந்த உண்மை சம்பவ வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரு கேரக்டரில் சூர்யா நடித்திருந்தார்.

இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானாலும் நாடெங்கிலும் பரபரப்பாக பேசப்பட்டது.

20 வருடங்களுக்குப் பிறகு பல உண்மைச் சம்பவங்களும் அம்பலமானது.

இந்த நிலையில் கோவாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகரன் பாண்டியன் கலந்து கொண்டு பேசும்போது…

” கண்டிப்பாக ஜெய்பீம் திரைப்படத்தின் பாகம் இரண்டு உருவாகும் என்றார். இது போன்ற பல உண்மை சம்பவங்களை நீதியரசர் சந்துரு விசாரணை நடத்தி தீர்ப்பளித்து இருக்கிறார்.

அதன் அடிப்படையில் ‘ஜெய்பீம்2’ உருவாகும்” என அவர் தெரிவித்தார்.

Jaibhim2 update at 53rd International Film Festival

அம்பேத்கர் சொல்லையே ‘ஜெய்பீம்’ படமாக்கினோம் – இயக்குநர் ஞானவேல்

அம்பேத்கர் சொல்லையே ‘ஜெய்பீம்’ படமாக்கினோம் – இயக்குநர் ஞானவேல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யா தயாரித்து நடித்த திரைப்படம் ‘ஜெய் பீம்’ ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் பல சர்ச்சைகளும் உருவானது.

இந்நிலையில் கோவாவில் நடைபெற்று வரும் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஜெய்பீம்’ படத்தின் இயக்குநர் ஞானவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார்.

அவர் பேசியதாவது… “ஜெய்பீம் என்பது வெறும் வார்த்தையல்ல. அது ஓர் உணர்வு.

மேலும் நாம் கற்கும் கல்வி மட்டுமே மக்களை அதிகாரப்படுத்தும் கருவி என்ற அம்பேத்கரின் சொல்லை வைத்து இப்படம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் ‘ஜெய்பீம்’ படம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை அது பிரதிபலித்தது.” என்று பேசினார்.

இந்தப் பட விழாவில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் இந்திய பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது.

director gnanavel speech in 53rd International Film Festival

நடிகையுடன் நெருக்கமாக விக்ரம் – ரஞ்சித்.; ‘தங்கலான்’ தாராளம்

நடிகையுடன் நெருக்கமாக விக்ரம் – ரஞ்சித்.; ‘தங்கலான்’ தாராளம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம் – இயக்குனர் ரஞ்சித் இருவரும் முதன்முறையாக கூட்டணி அமைத்து பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் கூட்டணியில் ‘தங்கலான்’ படம் தயாராகி வருகிறது. ‘ஸ்டூடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இதில் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கே.ஜி.எப் படத்தை போன்று தங்க வயல் கதையை மையப்படுத்தி படம் தயாராகி வருகிறது.

இந்தப் படத்திற்காகவே சில மாதங்களாக நீண்ட தலைமுடியும் நீண்ட தாடியும் வளர்த்து வருகிறார் விக்ரம்.

மேலும் இப்பட காட்சிகளும் வீடியோவும் வெளியாகி வைரல் ஆனது

இந்த நிலையில் தற்போது ஒரு புதிய போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் நடிகர் விக்ரம் – நடிகை பார்வதி இயக்குனர் ரஞ்சித் ஆகிய மூவரும் அருகருகே படுத்தபடி கேமராவை நோக்கி வெற்றிக்கான விரல் சின்னத்தை காட்டுவதாக புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

Vikrams Thangalaan movie photo goes viral

1 வருடமாக 10 ரூபாய் சாப்பாடு வழங்கி வரும் கார்த்தியின் மக்கள் நல மன்றம்

1 வருடமாக 10 ரூபாய் சாப்பாடு வழங்கி வரும் கார்த்தியின் மக்கள் நல மன்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலகம் வாசலில் ஒரு வண்டிக் கடை உணவகம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் ரூ.50 மதிப்புள்ள பிரிஞ்சி சாதம் ரூ.10-க்கு வழங்கப்பட்டு வருகிறது. தினமும் ஆட்டோ டிரைவர்கள், லாரி டிரைவர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள்; குறிப்பாக ஸ்விக்கி, ஜூமோட்டோ டெலிவரி பாய்கள் என்று 100க்கும் அதிகமானோர் உணவு உட்கொண்டு பயன் பெற்று வருகிறார்கள்.

தினசரி மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை இந்த உணவகம் செயல்படுகிறது.

(ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுமுறை)

இந்த உணவகத்தின் 400-வது நாள் இன்று (29.11.22) கொண்டாடப்பட்டது.

actor karthi fans club providing ten rupees food

உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை.? ‘வாரிசு’ ரிலீசில் கடுப்பான தயாரிப்பாளர்

உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை.? ‘வாரிசு’ ரிலீசில் கடுப்பான தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி என்பவர் இயக்கி இருக்கிறார்.

தமன் இசையமைத்துள்ள இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ என்பவர் தயாரித்திருக்கிறார்.

இந்த படத்தை அடுத்த ஆண்டு 2023 பொங்கல் தினத்தில் வெளியிட உள்ளனர்.

அதே சமயம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மேலும் அங்கு முன்னணி நடிகர்களின் தெலுங்கு படங்களும் அதே நாளில் வெளியாக உள்ளது.

எனவே தமிழ் படத்திற்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்சனை உருவானது.

இதனையடுத்து தில் ராஜு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது…

“‘வாரிசு’ படம் சங்கராந்தி பண்டிகைக்கு வெளியிடப்படும் என முன்பே (மே மாதம்) நாங்கள் கூறிவிட்டோம். அதன் பி்ன்னரே சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ சங்கராந்தி வெளியீடு என ஜூனில் அறிவிக்கப்பட்டது.

பாலகிருஷ்ணா காரூவின் ‘வீரசிம்ம ரெட்டி’ படத்தை டிசம்பரில் வெளியிட முடியாமல் போனதால் அதுவும் சங்கராந்தி ரேஸில் இணைந்து விட்டது.

மேலும் பண்டிகை காலங்களில் 3 படங்கள் வெளியாகும் அளவிற்கு போதுமான திரைகள் உள்ளன.

‘வால்டர் வீரய்யா’ பட மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர்களே தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்காதபோது மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை. ஏன் பிரச்சினை செய்கிறார்கள்?” என பதிலளித்துள்ளார் தில் ராஜூ.

What is the problem with you all? ‘Dil Raju’s fiery reply

More Articles
Follows