AK 61 TITLE DAY: அஜித்தின் ஹிட் படத்தலைப்பில் கதிர் – திவ்யபாரதி ஜோடி

AK 61 TITLE DAY: அஜித்தின் ஹிட் படத்தலைப்பில் கதிர் – திவ்யபாரதி ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தன் திறமையை நிரூபித்து வெற்றிகளை குவித்து வருபவர் நடிகர் கதிர்.

இவரின் அடுத்த படத்தில் ‘பேச்சிலர்’ பட நாயகி திவ்யபாரதி நாயகியாக இணைந்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று செப். 21ல் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்திற்கு ‘ஆசை’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.

வசந்த் இயப்கத்தில் நடிகர் அஜித் நடித்த சூப்பர் ஹிட் படம் தான் ‘ஆசை’. இந்த படம் 1995ல் வெளியானது.

ஈகில் ஐ புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஷிவ் மோஹா இயக்கியுள்ளார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெளியிட்டனர்.

இன்று AK 61 TITLE DAY என்பதால் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கதிர் - திவ்யபாரதி

Kathir and Divya Bharathi team up for Ajith movie title

சுனைனா நடிக்கும் க்ரைம் த்ரில்லர் ‘ரெஜினா’ 4 மொழிகளில் ரிலீஸ்

சுனைனா நடிக்கும் க்ரைம் த்ரில்லர் ‘ரெஜினா’ 4 மொழிகளில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை சுனைனா முக்கிய வேடத்தில் நடித்து வரும் படம் ‘ரெஜினா’.

க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது.

‘ஸ்டார்’ போன்ற படங்களின் மூலம் மலையாள திரையுலகில் நன்கு அறியப்பட்ட டொமின் டி’சில்வா இதனை இயக்குகிறார்.

‘பிப்பின் சுவத்திலே பிராணாயாம்’ ஹிட் மலையாள படத்தை தொடர்ந்து இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இப்படத்தை சதீஷ் நாயர் தனது யெல்லோ பியர் புரொடக்ஷன்ஸ் ( Yellow Bear Production LLP ) பேனரில் தயாரித்துள்ளார்.
அவர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்.

ரெஜினா

யெல்லோ பியர் புரொடக்ஷன்ஸ் மற்றும் டைம்ஸ் மியூசிக் இடையேயான படத்தின் இசை உரிமைக்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தானது.

தனது வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான நாள் என்றும், படம் முழுவதும் பெரும் ஆதரவாக இருந்ததற்காக தனது குடும்பத்தினர் அனைவருக்கும் தனது நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்கள், பத்திரிகை மற்றும் மீடியா நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

படத்தின் முக்கிய பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

மேலும், வந்தனா ஶ்ரீனிவாசன், சின்மயி, மாலதி, ஷாம், கல்பனா, ஹர்மோனிஸ், ப்ரியா ஹமேஷ், தீபாலி சாத்தே, பூமி திரிவேதி, பிஜேஷ் ஷந்திதியா, டாக்டர் அபர்ணா, ரம்ய நம்பீசன், வைக்கம் விஜயலக்‌ஷ்மி, ரிமி டோம்னி பாடியுள்ளார்கள்.

ரெஜினா

தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

“SN Musicals” மூலம் பல சுயாதீன பாடல்களை தந்த இசையமைப்பாளர் சதீஷ் நாயர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பாடல்களுக்கான வரிகளை தமிழில் யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.R ,
தெலுங்கில் ராகெண்டு ( rakendu ), இந்தியில் ராஷ்மி விராக் ( Rashmi Virag ),
மலையளத்தில் ஹரி நாராயண் ( Hari Narayan ) எழுதியுள்ளனர்.

பவன் K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். டோபி ஜான் எடிட்டிங் செய்ய, ஆடை வடிவமைப்பை ஏகன் செய்கிறார்.

ரெஜினா பன்மொழி திரைப்படமாக தமிழில் படமாக்கப்பட்டு இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.

ரெஜினா

Times Music has bagged the Music Rights of the film REGINA

‘Regina’ is an upcoming Crime Thriller film starring Actress Sunaina in the lead role. It is directed by Domin D’Silva who is well known in the Malayalam film industry for his films like ‘Star.’ Pyppin Chuvattile Pranayam’ is making his tamil debut through this film.

Technicians:

Cinematography: Pavi K.Pavan.

Art Direction : Kamarudeen

Editor : Toby John

Costume Designer : Aegan

இன்று செப். 21ல் AK61 பட டைட்டில் & பர்ஸ்ட் லுக் ரிலீஸ்.? ரசிகர்கள் டிரெண்டிங்

இன்று செப். 21ல் AK61 பட டைட்டில் & பர்ஸ்ட் லுக் ரிலீஸ்.? ரசிகர்கள் டிரெண்டிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போனிகபூர் தயாரிப்பில் அஜித்குமார் நடிப்பில் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் புதிய படம் உருவாகி வருகிறது.

இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படம் தற்காலிகமாக ‘AK61’ என அழைக்கப்படுகிறது.

இதில் அஜித் ஜோடியாக ‘அசுரன்’ பட நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.

இவர்களுடன் ‘சார்பட்டா பரம்பரை’ ஜான் கொக்கென், யோகிபாபு, மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இன்று காலை முதலே அஜித் ரசிகர்கள் ஏகே61 படம் குறித்த ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்தப் படத்திற்கு துணிவு அல்லது துணிவே துணை என பெயர் வைக்கப்படலாம் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

AK 61 Title and first look release updates

‘பொன்னியின் செல்வன்’ உடன் ‘நானே வருவேன்’ என இணைந்தார் தனுஷ்

‘பொன்னியின் செல்வன்’ உடன் ‘நானே வருவேன்’ என இணைந்தார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கி தயாரித்துள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’.

இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இன்னும் பத்து நாட்களில் இந்த படம் ரிலீசாகவுள்ள நிலையில் படக்குழுவினர் இந்தியா முழுவதும் முக்கிய மாநிலங்களுக்கு சென்று படத்தை புரமோட் செய்து வருகின்றனர்.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி சரத்குமார், பிரபு, பார்த்திபன், ஜெயராம், ஆதேஷ் பாலா, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தை தமிழக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த வேளையில் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘நானே வருவேன்’ திரைப்படம் இதற்கு முந்தைய நாள் அதாவது செப்டம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Ponniyin Selvan and Naane Varuven movie release updates

சூரிக்கு சொந்தமான ஹோட்டல்களில் வருமானவரித்துறை ரெய்டு

சூரிக்கு சொந்தமான ஹோட்டல்களில் வருமானவரித்துறை ரெய்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் சூரி.

இவர் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகரின் படங்களில் நடித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.

நடிப்பு மட்டுமில்லாமல் இவர் ஹோட்டல் தொழிலையும் தன் சொந்த ஊரில் செய்து வருகிறார்.

சூரிக்கு மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம் உள்ளிட்ட பல இடங்களில் ‘அம்மன்’ என்ற பெயரில் உணவகங்கள் உள்ளன.

இந்த கிளைகள் அனைத்தும் எந்நேரமும் பிஸி’யாக செயல்பட்டன. சூரியைப் போலவே அச்சு அசலாக இருக்கும் இவரது சகோதரர் இந்த உணவகங்களை கவனித்து வருகிறார்.

இந்த ஓட்டல்களுக்கு தலைமையிடமாக காமராஜர் சாலை தெப்பக்குளம் அருகே ஓட்டல் உள்ளது.

இங்கு நேற்று செப். 20 மாலை வணிகவரித்துறை அதிகாரி செந்தில் தலைமையில் ஐந்து பேர் குழு சோதனை நடத்தினர்.

அப்போது உணவுப்பொருட்கள் கொள்முதலில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் சோதனை நடந்தது.

இந்தச் சோதனையின் போது முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், அலுவலகத்திற்கு வந்து விளக்கமளிக்கவும் ஓட்டல் ஊழியர்களுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

IT department raid at Actor Sooris hotels

ஆர்ஆர்ஆர்.. ராக்கெட்ரி.. இரவின் நிழல் OUT.; ஆஸ்கர் விருதுக்கு இந்திய சார்பில் போட்டியிடும் படம் எது?

ஆர்ஆர்ஆர்.. ராக்கெட்ரி.. இரவின் நிழல் OUT.; ஆஸ்கர் விருதுக்கு இந்திய சார்பில் போட்டியிடும் படம் எது?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது.

இந்த விருதானது சிறந்த படம், சிறந்த கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் Best International Feature Film) என்ற பிரிவிற்கு பல்வேறு நாட்டிலிருந்து பல்வேறு திரைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

2023ஆம் 95வது ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக போட்டியிட குஜராத்தி மொழி படமான ‘செல்லோ ஷோ’ (Chhello Show) Last Film Show படம் தேர்வாகியுள்ளது.

பேன் நளின் இயக்கத்தில் வெளியான இப்படம் சில சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் முன் விவரம் வருமாறு…

ஆஸ்கர் விருது தேர்வுக்கான இந்திய திரைப்படங்கள் அறிவிப்பு..

இந்திய சார்பில் 95வது ஆஸ்கர் விருதுக்காக இந்திய சார்பில் அனுப்பப்படவுள்ள திரைப்படத்தை அறிவிக்கும் விதமாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பினில் இந்திய திரைப்பட சங்கத்தின் தேர்வு குழுவினர் பங்கு கொண்டு தேர்வு செய்த படத்தினை அறிவித்தனர்.

இந்த சந்திப்பினில்…

தயாரிப்பாளர் ரவி கொட்டாரகரா பேசியதாவது..

இந்திய சார்பில் வருடர்த்திற்கு 4000, 5000 படங்கள் எடுக்கப்படுகிறது. மிக சிறந்த கதைகள் படைப்புகள் இக்காலத்தில் எடுக்கப்பட்டுகின்றன. 1929 ல் ஆஸ்கர் விருது விழா துவங்கப்பட்டது ஆனால் அப்போது வெளிநாட்டு படங்கள் ஏற்காத நிலை இருந்தது. ஆனால் இப்போது இந்த நிலை மாறியுள்ளது. ஆஸ்கருக்கு இந்தியாவில் இருந்து தரமான படங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த வருடம் தேர்தெடுக்கப்பட்ட படத்தினை தலைவர் அறிவிப்பார்.

தலைவர் நாகாபரணா (தலைவர்) பேசியதாவது…

இங்கு இந்த விழாவில் பங்கு கொண்து மிகவும் மகிழ்ச்சியாக பெருமையாக இருக்கிறது. ஆஸ்கர் விருது தேர்வுக்கு 13 படங்கள் பரிந்துரைக்கப்பட்டது. பல மொழிகளில் இருந்து பல சிறந்த திரைப்படங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக குஜராத்தி திரைப்படம் ‘செலோ ஷோ’ (தி லாஸ்ட் ஷோ) படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழிக்கான இந்திய ஆஸ்கார் நுழைவுத் தேர்வைத் தேர்ந்தெடுத்ததற்காக மதிப்பிற்குரிய இயக்குநர் திரு. டி.எஸ். நாகபரணா ஜூரி வாரியத்தின் சார்பாக கௌரவிக்கப்பட்டார்.

பல சிறந்த படைப்புகளில் இருந்து ஒருமனதாக ஆஸ்கர் விழாவிற்கு ‘செலோ ஷோ’ (தி லாஸ்ட் ஷோ) என்ற தலைப்பில் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இப்படம் வாழ்வில் சினிமாவின் அருமையை சொல்வது மட்டுமின்றி ஒவ்வொரு திரைப்பட ரசிகனின் உணர்வுகளை கூறும் சிறந்த படைப்பாக உருவாகியுள்ளது. இப்படம் இந்திய மரபையும், பாரம்பரியங்களையும் நுட்பமாகவும் உண்மையாகவும் வெளிப்படுத்துகிறது, இது வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு இந்தியாவின் முகத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.

ஆஸ்கார் நுழைவுக்கு பரிசீலிக்கப்பட்ட படங்கள்

மொத்தம் -13 படங்கள்
இந்தி-6
01-பதாய் தோ
02-ராக்கெட்ரி
03-ஜுண்ட்
04-பிரம்மாஸ்திரம்
05-தி காஷ்மீர் ஃபைல்ஸ்
06-அனெக்

திமாசா (அசாம்)-1
செம்கோர்

தமிழ்-1
இரவின் நிழல்

குஜராத்தி-1
செல்லோ ஷோ

தெலுங்கு-2
ஆர்ஆர்ஆர்
ஸ்தலம்

மலையாளம்-1
அரியுப்பு

பெங்காலி-1
அபராஜிதோ

மேலும் விவரங்கள்…

அகாடமி விருதுகளுக்கான (ஆஸ்கார்) வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய திரைப்படம் குறித்த இந்திய திரைப்பட கூட்டமைப்பின் செய்தி குறிப்பு..

2022-ம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் இந்திய திரைப்படத்தை தேர்வு செய்யும் இயக்குநர் திரு டி. எஸ். நாகபரணா தலைமையிலான குழு 2022-ம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் இந்திய திரைப்படத்தை தேர்வு செய்தது.

பட்டியிலிடப்பட்டிருந்த பல்வேறு படங்களில் இருந்து இந்த குழு ‘செலோ ஷோ’ (தி லாஸ்ட் ஷோ), திரைப்படத்தை ஒருமனதாக தேர்வு செய்துள்ளது.

‘செலோ ஷோ’வில் உள்ள சிறப்பம்சங்கள் தான் இந்த படத்தை ஒரு மனதாக தேர்வு செய்ய காரணமாக இருந்தது.

‘செலோ ஷோ’ என்பது வெளிநாட்டில் பொதுவாக காட்டப்படும் வழக்கமான இந்திய சினிமா போல் இல்லாமல், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு திரைப்பட ஆர்வலர்களின் உணர்ச்சிகளையும் தொடும் ஒரு திரைப்படமாகும்.

தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சிறப்பான கதைக்களத்தில், சினிமாத்துவத்துடன், சிறப்பான நடிப்பு, ரம்மியமான காட்சியமைப்பு மற்றும் சிறந்த ஒலி தரத்தில் துல்லியமாக இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் இந்திய சினிமா துறையின் நுணுக்கங்களையும் பாரம்பரியங்களையும் நுட்பமாகவும் உண்மையாகவும் வெளிப்படுத்துகிறது.
இந்த அனுபவம் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு புதிதாக இருக்கும்.

கதை புதுமையாக ஆரம்பித்து நம்பிக்கை தரும் விதத்தில் முடிவடையும்.

படம் முடிந்த பின்னும் அதில் வரும் கதாபாத்திரங்கள், இடங்கள் மற்றும் கதைக்களம் ரசிகர்கள் மனதில் நிற்கும். படத்தில் கூறுவது போல சிறந்த திரைப்படங்களை உருவாக்கும் கதைகளைச் சொல்லும் ஒளியை நாம் கண்டறிவோம்.

செல்லோ ஷோ‘ உணர்ந்து அனுபவிக்க வேண்டிய ஒரு படமாகும்.

Last Film Show movie Becomes Indias Official Entry For Oscars 2023

More Articles
Follows