தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காமெடி நடிகராகவும் தனி நாயகனாகவும் நடித்து வருபவர் கருணாஸ்.
மேலும் நடிகர் சங்கத்தில் துணைத் தலைவர் பதவியையும் வகித்து வருகிறார்.
இவையில்லாமல், திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு, எம்எல்ஏவாக சட்டசபையிலும் நுழைந்துள்ளார்.
இந்நிலையில் இவரின் சமீபத்தில் பேட்டியில் இவர் கூறியதாவது..
“சினிமா, எம்எல்ஏ பதவி, நடிகர் சங்க துணைத்தலைவர் ஆகிய பொறுப்புகளால் எனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே விரைவில் நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியில் இருந்து விலக இருக்கிறேன்.
எனது தொகுதி பிரச்சினைகளை தீர்க்கும்மாறு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மனு கொடுத்திருக்கிறேன்.
அவர் விரைவில் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்.
சமுதாயத்தில் மக்களுக்காக உழைப்பவர்கள் அரசியலுக்கு வரலாம்.
ஆனால் ஒரு சிலர் நான்கைந்து படங்களில் நடித்து விட்டு முதலமைச்சர் ஆக ஆசைப்படுவது சரியல்ல.
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.