கொரோனா வைரஸை பார்ட்டி வைத்து பரப்பிய பாடகி கனிகா

கொரோனா வைரஸை பார்ட்டி வைத்து பரப்பிய பாடகி கனிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kanika Kapoor tests corona positive She hid travel and threw party சீனாவில் உருவான கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல பல நாடுகளில் அதன் தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர் மூலமாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் பாலிவுட் பாடகி கனிகா கபூர் செய்த காரியத்தை பார்த்தால் நிச்சயம் எல்லாரும் ஆவேசம் அடைவார்கள் என்பதுதான் உண்மை.

இவர் லண்டனுக்கு சென்று மார்ச் 15ம் தேதி இந்தியா திரும்பினார்.
இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இரண்டு வாரங்கள் தனிமை படுத்தப்படுவதில் இருந்து தப்பிக்க கனிகா ஏதோ ஒரு வழியில் தப்பியுள்ளார்.

தான் லண்டன் சென்று வந்ததை மறைத்துள்ளார்.

மேலும் தன் நண்பர்களுக்கு ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி கொடுத்துள்ளார்.

அதில் சுமார் 100 பிரபலங்கள் வரை பங்கேற்றுள்ளனர். இதனால் பலருக்கும் பரவியிருக்கலாம் எனலாம் தெரிய வந்துள்ளது.

மேலும் கனிகா தங்கியிருந்த அபார்ட்மென்டில் வசித்து வரும் பலருக்கும் கொரோனா பரவி இருக்குமா என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

எனவே அந்த கட்டிட வாசிகள் முழுவதையும் தனிமை படுத்தவுள்ளனர் என கூறப்படுகிறது.

தன்னிடம் நோயுள்ளதை தெரிந்த பின்னும் மற்றவர்களின் வாழ்க்கையைல் விளையாடிய கனிகா கபூர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Kanika Kapoor tests corona positive She hid travel and threw party

தலைவர் 170 படத்தை இயக்க தன் வெறியருக்கு வாய்ப்பளிக்கும் ரஜினி..?

தலைவர் 170 படத்தை இயக்க தன் வெறியருக்கு வாய்ப்பளிக்கும் ரஜினி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini raghava larenceசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இதில் ரஜினியுடன் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இமான் இசையமைத்து வரும் இந்த படத்தை செப்டம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தை முடித்துவிட்டு கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பார் என கூறப்படுகிறது.

இது ரஜினியின் 169 படமாக அதாவது தலைவர் 169 உருவாகவுள்ளது.

வாவ்.. ரஜினி வயதை கேட்டு ஷாக்கான பியர் கிரில்ஸ்… வைரல் வீடியோ

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் தலைவர் 170 படம் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த படத்தை ரஜினியின் தீவிர ரசிகர்… ரசிகர் என்பதை விட ரஜினி வெறியர் என்றே சொல்லலாம்.

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியிடம் லாரன்ஸ் கதையின் ஒன்லைன் கூறியதாகவும் அது ரஜினிக்கு பிடித்து போகவே முழுக்கதையை தயார் செய்து வர சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.

அடிச்சா பாரு கொரோனா கிஸ்ஸ்ஸ்… இது என்னய்யா புதுசா இருக்கே…?!!

அடிச்சா பாரு கொரோனா கிஸ்ஸ்ஸ்… இது என்னய்யா புதுசா இருக்கே…?!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

poonam pandeyஎந்த விதமான சர்ச்சைகள் வந்தாலும் அதை கண்டுக் கொள்ளாதவர்கள் பாலிவுட் நடிகைகள். அதிலும் நடிகை பூனம் பாண்டே ஒரு படி மேலே தான்.
கவர்ச்சியான போட்டோ வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு தன் ரசிகர்கள் கிறங்கடிப்பார்.

ஒருமுறை சுய இன்பம் காணும் வீடியோவை வெளியிட்டார்.

தன் ஹாட்டான வீடியோக்களுக்கு தனி வெப்சைட்டே வைத்திருக்கிறார் இவர்.

அண்மையில் தன்னுடைய வெறித்தனமான ரசிகர்களுக்கு சாம்சங் மற்றும் ஆப்பிள் ஐ போனை பரிசாக வழங்கினார்.

2வது திருமணம் செய்து சூடான படங்களை வெளியிட்ட அமலாபால்

அதுவும் எப்படி தெரியுமா..? மேலாடை இன்றி நின்ற பூனம் இரண்டு போன்களை மார்பில் வைத்து அதை சூடேற்றி ரசிகர்களுக்கு பரிசளித்தார்.

தற்போது கொரேனா சீசன் என்பதால் அதற்கு ஏற்றப்படி புதிய போட்டோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தன் பாய் பிரெண்டுக்கு லிப் கிஸ் அடித்துள்ளார். அதாவது முகத்தில் மாஸ்க் போல கைக்குட்டையை கட்டி உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துள்ளார்.

இதனை பல நெட்டிசன்கள் கண்டித்தாலும் அந்த படம் வைரலாகி வருகிறது.


View this post on Instagram

Caption this.

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

நிர்பயா வழக்கு நால்வருக்கு தூக்கு.; விஜய் ஸ்டைலில் கமிஷ்னர் கெத்து

நிர்பயா வழக்கு நால்வருக்கு தூக்கு.; விஜய் ஸ்டைலில் கமிஷ்னர் கெத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Theri vijayகடந்த 2012 ஆண்டு டிசம்பர் 16ல் டெல்லியில் மருத்துவ மாணவி, ‘நிர்பயா’ நண்பருடன் இரவில், தனியார் பஸ்சில் பயணம் செய்த போது, 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டார். அவளுடைய நண்பரும் தாக்கப்பட்டார்.

இதனையடுத்து பஸ் டிரைவர் ராம்சிங், அவரது சகோதரர் முகேஷ்சிங், ராஜஸ்தானில் கைது. வினய் சர்மா, பவன் குப்தா, 17 வயது சிறுவன் டெல்லியில் கைது. அக்‌ஷய்குமார் சிங் ஆகியோர் அவுரங்கபாத்தில் கைது செய்யப்பட்டார்.

அப்போது சப்தர்ஜங் மருத்துவமனையில், மாஜிஸ்திரேட்டிடம் நிர்பயா வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

இந்த சம்பவம் நாடெங்கும் பற்றி எரியவே குற்றவாளிகளை தூக்கிலிட வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது.

நிர்பயா மேல் சிகிச்சைக்காக, சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை டிசம்பர்-29 நிர்பயா உயிரிழந்தார்

இது தொடர்பான வழக்கு கிட்டதட்ட 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

பல கட்ட விசாரணை, மனு தள்ளுபடி உள்ளிட்ட பல விஷயங்கள் அரங்கேறியது.

இன்று காலை இறுதியாக குற்றவாளி பவன் குப்தா சார்பாக அளிக்கப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

நிர்பயா வழக்கில் கைதான குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து திருநெல்வேலி கமிஷ்னர் அர்ஜீன் சரவணன் என்பவர் தெறி பட விஜய் ஸ்டையில் தன் ட்விட்டரில் ஒரு போஸ்டரை வெளியிட்டு… டீ சொல்லுங்க ராஜேந்திரன் என கெத்தாக பதிவிட்டுள்ளார்.

இது தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வழக்கை போல் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என பலரும் கமிஷ்னருக்கு வேண்டுகோள் விடுத்து கமெண்ட் அளித்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் சங்க தேர்தல்; தயாரிப்பாளர் நலன் காக்கும் அணி போட்டி 2

தயாரிப்பாளர் சங்க தேர்தல்; தயாரிப்பாளர் நலன் காக்கும் அணி போட்டி 2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil Film Producers Council election Welfare team detailsவிரைவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் போட்டியிடுவதற்காக அம்மா கிரியேஷசன் டி.சிவா தலைமையிலான அணியில் போட்டியிடுபவர்கள் பட்டியல் நேற்று வெளியானது.

இந்த அணிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் பாதுகாப்பு அணி என்று பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் மற்றொரு அணியினர் அவர்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

ஸ்ரீ தேணான்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியினர் அறிவிக்கப்பட்டனர்.

தலைவராக முரளி, துணை தலைவர்களாக சுபாஷ் சந்திரபோஸ், மைக்கேல் ராயப்பன், செயலாளர்களாக ராதாகிருஷ்ணன், கே.ஜே.ஆர்., ஸ்டூடியோஸ் ராஜேஷ், பொருளாளராக சந்திர பிரகாஷ் ஜெயின் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர் போட்டியிடுகின்றனர்.

இவர்களின் அறிமுகவிழாவில் நடிகரும், தயாரிப்பாளருமான S.V.சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Tamil Film Producers Council election Welfare team details

Tamil Film Producers Council election Welfare team details

பெண்கள் மீதான வன்முறையை கண்டிக்கும் “அசுர காதல்” மியூசிகல் வீடியோ பாடலை வெளியிட்டார் காஜல் அகர்வால் !

பெண்கள் மீதான வன்முறையை கண்டிக்கும் “அசுர காதல்” மியூசிகல் வீடியோ பாடலை வெளியிட்டார் காஜல் அகர்வால் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Asura kadhalமிக அழகான முறையில் அழுத்தமாக உருவாக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கெதிரான வன்முறையை கண்டிக்கும் “அசுர காதல்” மியூசிகல் வீடியோ பாடலை வெளியிட்டார் நடிகை காஜல் அகர்வால். பல வித பின்னணியில் பெண்களுக்கெதிராக இல்லங்களில் நிகழ்த்தப்படும் வன்முறையை கூறுவதாக அமைந்திருக்கும் இந்த வீடியோவை திரு TK உருவாக்கியுள்ளார்.

வீடியோ பாடலை இயக்கிய இயக்குநர் திரு TK இது குறித்து கூறியதாவது…

எங்கள் மொத்த குழு சார்பாக இப்பாடலின் தன்மையை புரிந்துகொண்டு, எங்களை பாராட்டி, வெளியிட்டமைக்கு நடிகை காஜல் அகர்வால் அவர்களுக்கு நன்றி. இப்பாடலை வெளியிட சரியானவர் அவர் என்பது எங்கள் மொத்த குழுவின் கருத்து. சினிமாவிலும் சரி, இயல்பு வாழ்க்கையிலும் சரி, பெண்களுக்கெதிரான வன்முறைக்கு எதிராக, எப்போதும் குரல் கொடுத்து வருபவர் அவர். அவர் எங்கள் பாடலை வெளியிட்டது எங்கள் அனைவருக்கும் பெருமை.

சிங்கப்பூரை சார்ந்த one clan நிறுவனத்தார் இந்த மியூசிகல் வீடியோவை தயாரித்துள்ளார்கள். திரு TK, தர்மேனிசம் இணைந்து இப்பாடலை உருவாக்கி, பாடியுள்ளார்கள். ( Diyo )தியோ இசையமைக்க ராப்பர்ஸ் – சோக்கோ (choco), B மற்றும் ஸ்பைஸ் ( spice ) பாடலுக்கு வலிமை கூட்டியுள்ளார்கள்.

இந்த ஐந்து நிமிட பாடல் வீடியோவை இயக்கியுள்ளார் திரு TK. லெவின் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு JK சரவணா, குட்டி குமார் மற்றும் சிதம்பரம் S செய்துள்ளனர். JK சரவணா மற்றும் அவரது Tantra Studios இணைந்து போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளை செய்துள்ளார்கள்.

சமூகத்திற்கு தேவையான அழுத்தமான கருத்தை சொல்லும்
இந்த வீடியோவிற்கு Wish a Smile Foundation மற்றும் #IKilledSucide Movement ஆதரவளித்துள்ளார்கள்.

Link : https://youtu.be/7_GqRZMpNTI

More Articles
Follows