முதன்முறையாக ஆந்தாலஜி படத்தில் கமல்..; மம்மூட்டி-மோகன்லால் கூட்டணி

முதன்முறையாக ஆந்தாலஜி படத்தில் கமல்..; மம்மூட்டி-மோகன்லால் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைக்காலமாக முக்கியமாக கொரோனா லாக்டவுன் சமயத்தில் ஆந்தாலஜி படங்கள் நிறைய தமிழில உருவாகி வருகின்றன.

இதில் சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர்.

தற்போது இதுபோன்ற ஆந்தாலஜி படத்தில் முதன்முறையாக கமல்ஹாசன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

மலையாளத்தில் எம்.டி.வாசுதேவன் எழுதிய ஐந்து சிறுகதைகளில் உருவாகும் ஒரு ஆந்தாலஜி படத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கிறாராம்.

இந்தக் கதைகளை, பிரியதர்ஷன், லிஜோ ஜோச் பெலிசெர்ரி, ஜெயராஜ், ஷ்யாம் பிரசாத், சந்தோஷ் சிவன், மகேஷ் நாராயணன் ஆகியோர் இயக்கவுள்ளனர்.

இதில் மம்முட்டி, மோகன்லால், பகத் பாசில் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

இது மலையாளம் மற்றும் தமிழில் உருவாகும் என சொல்லப்படுகிறது.

இதில் கமல்ஹாசன் நடிக்கவில்லை என்றும் அவர் படம் தொடங்கும் முன் கதைகளை விவரித்துச் சொல்வார் (வாய்ஸ் ஓவர் கொடுப்பார்) எனவும் கூறப்படுகிறது.

ஆனால் இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Kamal Haasan Mammootty and Mohan lal to team up for anthology film?

அட எந்நாடு என்றாலும் அது நம்நாட்டுக்கு ஈடாகுமா..? இந்தியா சார்பில் விண்வெளியில் இளையராஜா இசை..

அட எந்நாடு என்றாலும் அது நம்நாட்டுக்கு ஈடாகுமா..? இந்தியா சார்பில் விண்வெளியில் இளையராஜா இசை..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2022 ஆண்டு ஆகஸ்ட் 15ல் சுதந்திர தின விழா அன்று மிக குறைந்த எடை கொண்ட சாட்டிலைட் ஒன்றை தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் குழு விண்வெணியில் ஏவ உள்ளனர்.

இந்த மாணவர்கள் தான் உலகிலேயே குறைவான எடைகொண்ட சாட்டிலைட்டை தயாரிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சாட்டிலைட்டில் கூடுதல் சிறப்பாக இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாக இளையராஜா பாடும் பாடலை ஒலிக்க திட்டமிட்டுள்ளன்ர.

அதாவது சுதந்திர விழாவின்போது விண்ணில் ஏவப்படும் சாட்டிலைட்டில் இளையராஜா பாடலை ஒலிக்க செய்ய மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த பாடல் சுவானந்த் கிர்கிரே கைவண்ணத்தில் ஹிந்தியில் உருவான பாடலாகும்.

தற்போது இளையராஜா இந்த பாடலை தமிழ் மொழியில் பாடியுள்ளார்.

இஸ்ரோ உதவியுடன் இந்த விண்வெளியில் இசை சாதனை இளையராஜா சிறப்பிக்க உள்ளார்.

மாணவர்களின் இந்த முயற்சி குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடமும் ஆலோசித்துள்ளனர்.

நாட்டிற்காக இந்த பாடல் எனது பங்களிப்பாக இருக்கட்டும் என சம்பளம் எதுவும் வாங்காமல் தேசப்பற்றோடு இசையமைத்து பாடி கொடுத்துள்ளார் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 75 ஆண்டுகள் நிகழ்ந்த இந்தியாவின் புதுமைகளையும், இனிவரும் காலங்களில் நம் இந்தியா உலகின் நம்பர் ஒன் தேசமாக இருக்கும் என்ற கருத்தை உள்ளடக்கிய பாடலாக இது இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.

ஜெய்ஹிந்த்..

சொர்க்கமே என்றாலும் அது நம்மூர் போல வருமா..?

அட எந்நாடு என்றாலும் அது நம்நாட்டுக்கு ஈடாகுமா..

என்ற இளையராஜா பாடல் வரிகள் தான் இப்போது நினைவுக்கு வருகிறது.

Isaignani Ilayaraja s music in space?

தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு என்னாச்சு.? விவாகரத்து பெற இதெல்லாம் காரணமா.?

தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு என்னாச்சு.? விவாகரத்து பெற இதெல்லாம் காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

40 ஆண்டுகளுக்கு மேலாகவே இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் ரஜினிகாந்த். அண்மைக்காலமாக ஹிந்திப்படங்களில் நடித்தும் தேசிய விருது பெற்றும் ரஜினியின் மருமகன் நடிகர் தனுஷ்ம் தற்போது இந்தியா முழுக்க பிரபலமாகி வருகிறார்.

இந்த நிலையில் ரஜினி மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதனால் இந்த செய்தி இந்தியா முழுக்க பரவியது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

விவாகரத்திற்கான காரணம் என்ன என்பதே தெரியாமல் திரையுலகினரும் ரசிகர்களும் குழம்பி போய் உள்ளனர்.

ஒரு பக்கம் தனுஷ் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மற்றொரு புறம் ரஜினி ரசிகர்கள் தலைவா.. நாங்க இருக்கோம் உன்னோடு என ஐஸ்வர்யா குடும்பத்தினருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

சில ரஜினி ரசிகர்கள் தனுஷ் பற்றி விமர்சிக்க அது தனுஷ் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது.

எனவே தனுஷ் ரசிகர்கள் ‘ We Love Dhanush… We stand with u Dhanush Anna..” என பதிவிட்டு வருகின்றனர். இதனால் ரஜினி தனுஷ் ரசிகர்களிடையே கருத்து மோதல் நிலவியது.

சில மாதங்களுக்கு முன் ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ் கார்டன் பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் சொந்தமாக ஒரு வீட்டை கட்டி வருகிறார் நடிகர் தனுஷ்.

அந்த நிகழ்வில் ரஜினி குடும்பத்தினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

அதன்பின்னர் டில்லியில் அக்டோபரில் நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த், தனுஷ் இருவரும் விருதுகள் பெற்றனர்.

தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் ரஜினி. அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் தனுஷ்.

அப்போது அந்த போட்டோக்களை பதிவிட்டு “இது ஒரு வரலாறு, பெருமைமிகு மகள், பெருமைமிகு மனைவி”என கருத்து பகிர்ந்திருந்தார் ஐஸ்வர்யா.

ஆனால் அதன்பிறகு தான் என்ன நடந்தது.? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக கோலிவுட்டில் எழுந்துள்ளது.

பொதுவாக ஒரு குடும்பத்தில் பிரச்ச்சினை உருவாக பெரிய காரணம்.. அன்பின்மை… பொருளாதார பிரச்சினை… நிம்மதியின்மை இப்படியாகத்தான் இருக்கும்.

நிச்சயமாக இவர்கள் குடும்பத்தில் பொருளாதார பிரச்சினை வர வாய்ப்பில்லை. கணவன் மனைவி இடையே அன்பு இல்லாமல் போனதால் நிம்மதியில்லாமல் இருந்திருக்கலாம்.

அப்படியென்றால் இவர்களிடையே வேறு யாராவது ஒருவர் நுழைந்துவிட்டாரா? என்பதும் கேள்வியாக ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சில வருடங்களுக்கு முன்னால் ஒரு சில நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டவர் தனுஷ். தங்கமகன் படத்தில் நடிக்கும்போது அப்பட நடிகையுடன் தனுஷ் நெருக்கம் காட்டியதாகவும் அது அப்போது முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது தெலுங்கு நடிகரை அந்த நடிகை விவாகரத்து செய்துவிட்டதால் தனுஷ் தன் மனைவியை பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இவையில்லாமல் 3 படத்தில் நடித்தபோது ஒரு நடிகையுடனும் விஐபி படத்தில் நடித்தபோது அந்த பட நடிகையுடனும் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டவர் தனுஷ் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

இவையில்லாமல் சுசி லீகிக்ஸில் தனுஷை பற்றிய விவகாரம் எழுந்தபோதே ஐஸ்வர்யா தனுஷ் இடையே மனக்கசப்பு உருவாக காரணமாக அமைந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தற்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை சென்ற போது சில நடிகைகளுடன் தனுஷ் நெருக்கம் காட்டியதால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மற்றொரு பக்கம் தனுஷ் ஐஸ்வர்யா கட்டும் புதிய வீடு பணிகள் ஒரு கட்டத்தில் ஈகோ பிரச்சினையாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

தனுஷை விட பெரிய நடிகர்கள் முக்கியமாக திருமணமான நடிகர்கள் காதல் காட்சிகளில் நெருக்கமான காட்சிகளை திரையில் தவிர்ப்பார்கள்.

ரீல் லைஃப் சினிமா வேறு… ரியல் லைஃப் வாழ்க்கை வேறு.. என்பதை அவர்கள் புரிந்து கொண்டதால் அவர்கள் பிரச்சினையின்றி வாழ்கிறார்கள். இதை இளைய தலைமுறை நடிகர்கள் நட்சத்திர தம்பதியர்கள் புரிந்துக் கொண்டால் பிரச்சினையில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இன்னும் சில மாதங்களில் விவாகரத்துக்கான உண்மையான காரணம் தெரியாமலா போகும்… காத்திருப்போம் மக்களே…

Reason behind Dhanush and Aishwarya divorce?

MGR கனவை நிறைவேற்ற இளையராஜா இசையில் ‘பொன்னியின் செல்வன்’.; மணிரத்னம் – ரஹ்மானுக்கு போட்டி.?

MGR கனவை நிறைவேற்ற இளையராஜா இசையில் ‘பொன்னியின் செல்வன்’.; மணிரத்னம் – ரஹ்மானுக்கு போட்டி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்று புதினம் ‘பொன்னியின் செல்வன்’. இந்த நாவலை திரையில் படமாக கொண்டு வர ஆசைப்பட்டவர்களில் எம்.ஜி.ஆர். முக்கியமானவர்.

‘பொன்னியின் செல்வன்’ கதையை தானே இயக்கி வந்தியத்தேவனாகவும், அருண் மொழிவர்மனாகவும் இரட்டை கதாப்பாத்திரத்தில் நடிக்க அவர் விரும்பினார். ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போனது.

இயக்குநர் மணிரத்னம் தற்போது ‘பொன்னியின் செல்வன்’ கதையை திரைப்படமாக இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார்.

ரஹ்மான் இசையில் விக்ரம், கார்த்தி, ‘ஜெயம்’ ரவி, ஐஷ்வர்யாராய், த்ரிஷா, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதன் முதல் பாகம் இந்த வருடம் கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இதே பெயரில் மற்றொரு தளத்தில் வெப் தொடராக படம் உருவாகிறது. அதன் விவரம் வருமாறு.

எம்.ஜி.ஆரின் கனவுத் திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’, படம் அஜய் பிரதீப் இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் திரைப்படமாகவும் வெப் தொடராகவும் உருவாக உள்ளது.

‘ஜெனோவா’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த ஓமனாவின் மகன் தான் அஜய் பிரதீப். இவரது தந்தையான கிருஷ்ணன் தமிழகத்தின் தலை சிறந்த புகைப்படக் கலைஞர்களின் ஒருவராவார். இவர் திரைப்படக் கல்லூரியில் பயின்றவர் ஆவார்.

பழம்பெரும் ஒளிப்பதிவாளரான கே எஸ் பிரசாத்தின் உதவியாளராக பணிபுரிந்துள்ள அஜய் பிரதீப், எண்ணற்ற விளம்பர படங்கள் மற்றும் அரசு மற்றும் இதர ஆவணப்படங்களை இயக்கியுள்ளார்.

ஸ்ரீநிதி அஜய் தயாரிக்கும் இப்படத்தை எட்டர்னிட்டி ஸ்டார் மற்றும் எட்டர்னிட்டி மோஷன் கிராஃப்ட் ஹப் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் வழங்குகின்றன.

பல்வேறு மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த அகில இந்திய படம் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

வெப்சீரிஸ் 12 சீசன்களில் 153 எபிசோட்களைக் கொண்டிருக்கும் என்று இயக்குநர் கூறினார். அதை தவிர இரண்டு வருடங்களில் மூன்று பாகங்களாக இப்படம் வெளியாகவுள்ளது. வெளிநாட்டு மொழிகளிலும் டப் செய்யப்பட உள்ளது.

படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, சாபு சிரில் கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி செய்யவுள்ளார். பாகுபலி புகழ் விஸ்வநாத் சுந்தரம் மற்றும் சண்முகவேல் ஆகியோர் ஓவிய சித்திரங்களை வடிவமைக்கின்றனர்.

எம்.ஜி.ஆரின் பிறந்தநாளான (ஜனவரி 17) இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம் என்று அஜய் பிரதீப் கூறினார்.

எம்.ஜி.ஆருக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக, மூன்று போஸ்டர்களும் வெளியிடப்படுகின்றன. எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய லட்சிய கதாபாத்திரங்களான அருள்மொழிவர்மன் மற்றும் வந்தியத்தேவன் வேடங்களில் இந்த போஸ்டர்களில் அவர் இடம் பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற எழுத்தாளரான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் இந்த பிரமாண்ட படைப்பு அர்ப்பணிக்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளான எம்ஜிஆர் மற்றும் கலைஞரை இயக்குநர் அஜய் பிரதீப் தனது மானசீக குருவாக நினைப்பதால் இந்தப் படைப்பை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறார்.

படத்தைப் பற்றிய கூடுதல் அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் விரைவில் வெளியாகும். எம்.ஜி.ஆருடன் இயக்குநர் அஜய் பிரதீப் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Top stars to play lead roles in film based on Ponniyin Selvan to be directed by Ajay Pratheeb

ராஜமௌலி தந்தையுடன் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ பட தயாரிப்பாளர் ஒப்பந்தம்

ராஜமௌலி தந்தையுடன் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ பட தயாரிப்பாளர் ஒப்பந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி ரங்கநாதனின் ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதுவதற்காக இந்திய சினிமாவின் பிரபல திரைக்கதை மேதையும், முன்னணி இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்திற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் பி ரங்கநாதன் தெரிவித்தார்.

‘பாகுபலி 1 மற்றும் 2’, ‘பஜ்ரங்கி பைஜான்’, ‘மணிகர்னிகா’ மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘ஆர் ஆர் ஆர்’ உட்பட தெலுங்கு, தமிழ், இந்தி என 25க்கும் மேற்பட்ட இந்திய அளவிலான பிரமாண்ட வெற்றி படங்களுக்கு விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்கும் படத்தில் முன்னணி நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்றும் நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் வெளியிடப்படும் என்றும் ரங்கநாதன் கூறினார்.

ஸ்ரீவாரி பிலிம் ஏற்கனவே ‘தர்மபிரபு’ மற்றும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ ஆகிய இரண்டு வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது.

‘தர்மபிரபு’ படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார்.

‘ஆனந்தம் விளையாடும் வீடு’ ஒரு உணர்ச்சிபூர்வமான குடும்ப சித்திரமாகும். இதில் சேரன், கௌதம் கார்த்திக், சரவணன், சிவாத்மிகா, வெண்பா, சௌந்தர்ராஜா முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர்.

விநியோகஸ்தராக திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரங்கநாதன் தனது கடின உழைப்பின் மூலம் தயாரிப்பாளராக உயர்ந்தவர் ஆவார்.

தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் பல படங்களை அவர் விநியோகம் செய்து சந்தைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sri Vaari films producer joins KV Vijayendra Prasad for his next

டைவர்ஸ் அறிக்கையில் கூட அதை சொன்னீங்களே.. பர்ஸ்ட் நீங்க பாஃலோ பண்ணுங்க தனுஷ்!

டைவர்ஸ் அறிக்கையில் கூட அதை சொன்னீங்களே.. பர்ஸ்ட் நீங்க பாஃலோ பண்ணுங்க தனுஷ்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று (ஜனவரி 17) தன் இல்வாழ்க்கையில் இருந்து தன் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார் நடிகர் தனுஷ்.

இது தனுஷ் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ரஜினி மகளின் வாழ்க்கை இப்படியானதே என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விவாகரத்து என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். கணவன் மனைவி இடையில் தலையிட நாம் யார்.? தங்கள் வாழ்க்கையை தீர்மானிக்க அவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. தற்போது விஷயம் அதுவல்ல.

தனுஷின் சமீபகால கடிதம் மற்றும் அறிக்கைகளை பார்த்தால் தன் முழுப்பெயரை குறிப்பிடமாட்டார். அதில் வெறும் D என்ற எழுத்து மட்டுமே இருக்கும்.

மேலும் தவறாமல் ஓம் நமசிவாயா.. என்ற வார்த்தையும் அத்துடன் SPREAD LOVE என்ற வார்த்தையும் இடம் பெற்றிருக்கும்.

நேற்றை விவாகரத்து அறிக்கையில் கூட இறுதியாக SPREAD LOVE என்பதையும் குறிப்பிட்டு இருந்தார்.

SPREAD LOVE… SPREAD LOVE… என மூச்சுக்கு 300 முறை சொல்லும் நீங்கள் அதை பாஃலோ செய்யாமல் தானே இப்படி ஒரு விவாகரத்து உங்களுக்குள் நிகழ்ந்துள்ளது.

அப்படியென்றால் அதை மீண்டும் மீண்டும் நீங்கள் ஏன்? சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்..?

நீங்கள் சரியாக SPREAD LOVE செய்திருந்தால் உங்கள் விவகாரம் விவாகரத்து வரை வந்திருக்குமா? ப்ரோ..

எனவே அட்வைஸ் யாரு வேணாலும் செய்யலாம்.. ஆனால் அதை பாஃலோ செய்வது ரொம்ப கஷ்டம். மிஸ்டர் .டி.

எனவே இனிமேலாவது அதை தவிர்த்துவிடுங்கள் தனுஷ்

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் …
சொல்லிய வண்ணம் செயல்

A common man doubt on Dhanush’s decision

More Articles
Follows