ரா ரா சரசுக்கு ரா ரா.. நினைவிருக்கா..?; கலைமாமணி விருதால் சிவாங்கி குடும்பம் சிலிர்ப்பு..

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ மூலம் தமிழகத்தில் பிரபலமானவர் சிவாங்கி.

தன் இனிமையான குரல் வளத்தாலும் நகைச்சுவையாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சின்னத்திரையில் பிரபலமான இவர் வெள்ளித்திரையில் சிவகார்த்திகேயன் தயாரித்து நடிக்கும் ‘டான்’ படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

இந்த நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட ‘கலைமாமணி விருதால் சிவாங்கி மகிழ்ச்சியாக இருக்கிறாராம்.

என்னாது… சிவாங்கி-க்கு கலைமாமணி விருது? அப்படின்னு ஷாக்காக வேண்டாம்.

சிவாங்கியின் அம்மா பின்னி கிருஷ்ணகுமார் என்பவர் ஒரு பிரபல கர்நாடக சங்கீத பாடகி் ஆவார்.

இவர் ரஜினி நடித்த ‘சந்திரமுகி’ படத்தில் இடம்பெற்ற ‘ரா ரா’ என்ற பாடலை பாடியவராவர்..

தற்போது பின்னிக்கும் அவரது கணவர் கிருஷ்ணகுமாருக்கும் தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது.

இதனை சிவாங்கியின் அம்மா பின்னி கிருஷ்ணகுமார் தனது இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார்.

இதனால் சிவாங்கியின் குடும்பமே மகிழ்ச்சியில் உள்ளதாம்.

Kalaimamani award for Shivangi family

Overall Rating : Not available

Latest Post