ஓடிடி ரிலீஸ் நிரந்தரமானால் திரைத்துறை பாதிப்பு..; தியேட்டர்கள் திறப்பு எப்போது.? அமைச்சர் கருத்து

ஓடிடி ரிலீஸ் நிரந்தரமானால் திரைத்துறை பாதிப்பு..; தியேட்டர்கள் திறப்பு எப்போது.? அமைச்சர் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kadambur rajuசென்னை கலைவாணர் அரங்கில் எழுதுபொருள் அச்சுத்துறை தொடர்பாக ஆலோசனை கூட்டம் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது..

திரையரங்குகள் என்பது திரைத்துறையில் ஒரு அங்கம்தான் கொரோனா பாதிப்பு பிறகு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியதால் பல்வேறு தளர்வுகள் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

திரைத்துறையின் நலவாரிய அமைப்புகள் மூலம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறோம் என்றார்.

கொரோனா பாதிப்பு இப்போது தான் கட்டுக்குள் வந்திருக்கிறது இந்த நேரத்தில், 3 மணி நேரம் ஒரே அரங்கில் இருக்க வேண்டிய நிலை உள்ளது இதை எல்லாம் கருத்தில் கொண்டு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மத்திய மற்றும் மாநில சுகாதார குழுவுடன் ஆலோசித்து அதன் பிறகு முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்திய பிறகு திரையரங்குகள் திறப்பது குறித்து நல்ல முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

OTT யில் படம் வெளியாவது குறித்து பேசிய அவர்…

OTT என்பது மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும் தளம் அல்ல. கொரோனா ஊரடங்கு காலத்தில் தற்காலிக ஏற்பாடாக அதில் படங்களை வெளியிட்டால் நல்லது. நிரந்தரமாக வெளியிட்டால் திரைத்துறை பாதிக்கப்படும் என்றார்.

திரையரங்கு சென்று படம் பார்த்தால் தான் மக்களுக்கு படம் பார்த்த திருப்தி இருக்கும் என்றார்.

மேலும், திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்த அரசு அவர்களுக்கு உதவும்.

தொடர்ந்து முதல்வர் வேட்பாளர் நாளை அறிவிக்கப்பட இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்…

செயற்குழுவில் அக்டோபர் 7 தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் கூறியிருக்கிறார்கள் அதன்படி அறிவிப்பார்கள் எங்களுக்கும் உங்களைப் போன்று முடிவு என்னவென்று நாளை அறிவித்த பின்பு தான் தெரியவரும்” என தெரிவித்தார்.

Kadambur Raju about movies releasing in OTT

ஓடிடி வேதனை..; சின்ன படங்களை காப்பாற்ற ‘ஜீ’ பூம்பா தேவை.. – தனஞ்செயன்

ஓடிடி வேதனை..; சின்ன படங்களை காப்பாற்ற ‘ஜீ’ பூம்பா தேவை.. – தனஞ்செயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer dhananjayanகொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டன. வெளியீட்டுக்குத் தயாராக இருந்த படங்கள் திரையரங்குகளுக்கு செல்லாமல் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டன.

இந்தியாவில் தற்போது தான் திரையரங்குகளை திறக்கப்பதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான தனஞ்செயன் ஓடிடி தளங்களின் பெயர்களை மறைமுகமாகக் குறிப்பிட்டு வேதனையாக தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

”உங்கள் படங்களில் ‘ஹாட் ஸ்டார்ஸ்’ இல்லையெனில் அவற்றை ஓடிடி தளங்களுக்கு விற்பது எளிதல்ல.

ஒரே வழி என்னவென்றால் அவற்றை ‘நெட்’ விலையை விடக் குறைவான விலையில் விற்பது அல்லது வருவாய் பங்கீடு அடிப்படையில் விற்பது. ‘அமேசிங்’காக இருக்கிறது இல்லையா? சிறிய நடிகர்களைக் கொண்டு படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற ஒரு ‘ஜீ’ பூம்பா தேவைப்படுகிறது”.

இவ்வாறு தனஞ்ஜெயன் கூறியுள்ளார்.

Producer Dhananjayan on movies releasing in oTT

தியேட்டர்கள் திறப்பு.; ரசிகர் விவரம் சேகரிப்பு.. ஸ்நாக்ஸ்க்கு தடை உள்ளிட்ட வழிகாட்டு முறைகள்…

தியேட்டர்கள் திறப்பு.; ரசிகர் விவரம் சேகரிப்பு.. ஸ்நாக்ஸ்க்கு தடை உள்ளிட்ட வழிகாட்டு முறைகள்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

theaters reopen in indiaகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த 7 மாதங்களாக இந்தியா முழுவதும் திரைஅரங்குகள் மூடப்பட்டது.

தற்போது வருகிற 15-ஆம் தேதி மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ள நிலையில், திரையரங்குகளை திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி,

ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்களை அமர செய்ய வேண்டும். அனைவரும் மாஸ்க் அணிந்த படியே தியேட்டருக்கு வந்து படம் பார்க்க அனுமதிக்க வேண்டும்.

50 சதவீத இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்.

திரைப்படம் தொடங்குவதற்கு முன்பும், இடைவெளி முடிந்த பிறகும் கோவிட்-19 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டும்.

அனைத்து தியேட்டர்கள்/ சினிமா ஹால்கள்/ மல்டிபிளக்ஸ்களிலும் மத்திய அரசு வெளியிட்டுள்ள கோவிட்-19 வழிகாட்டுதல்களை மற்றும் நிலையான செயல்பாட்டு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

திரையரங்குகளுக்கு உள்ளே 24 – 30 டிகிரி வெப்பநிலை நிலவுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

டிக்கெட் முன்பதிவு செய்வோரின் விவரங்களை கட்டாயம் சேகரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அதன் பின்னணி மற்றும் தொடர்ச்சியை கண்டறிய உதவிகரமாக இருக்கும்.

தியேட்டர்களில் டிக்கெட் கவுன்ட்டர்கள் நாள் முழுவதும் திறந்திருக்க வேண்டும். இது கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், முன்பதிவு செய்வதற்கும் உதவியாக இருக்கும்.

திரையரங்கு உள்ளே உணவு, நொறுக்குத் தீனி விற்க தடை விதிக்கப்படுகிறது.

ஒவ்வொரு காட்சிக்குப் பிறகும் தியேட்டர்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

உள்ளிட்ட பல வழிகாட்டுமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

ஆனால் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் திறக்க இந்த மாதம் அக்டோபர் முழுவதும் அனுமதியில்லை. திறப்பதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Movie Theatres can reopen with 50% seating from October 15

2020 மருத்துவம் & இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020 மருத்துவம் & இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nobel prize 2020 physics and medicineஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டில் முதலாவதாக மருத்துவத்துக்கான நோபல் பரிசை, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் குழுவின் பொதுச் செயலாளர் தாமஸ் பெர்ல்மான் அறிவித்தார்.

இதன்படி, இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வி ஜே.ஆல்டர், சார்லஸ் எம்.ரைஸ் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த மைக்கேல் ஹூட்டன் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு அளிக்கப்படவுள்ளது.

கல்லீரல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் சார்ந்த நோயை ஏற்படுத்தும் காரணிகளை எதிர்த்துப் போராட மிகச்சிறந்த பங்களிப்பை அளித்தமைக்காக இந்த மூன்று விஞ்ஞானிகளுக்கும் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் வகையில் ரத்தத்தில் உருவாகும் ஹெபடிடிஸ் வைரஸிலிருந்து குணப்படுத்துவதற்கான பங்களிப்பை அளித்ததற்காக மூன்று பேரும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில், அடையாளம் தெரியாத வைரஸால் நீடித்த ஹெபடிடிஸ் பிரச்சினை ஏற்படுவது குறித்து ஹார்வி ஜே.ஆல்டர் ஆய்வுசெய்துள்ளார். ஹெபடிடிஸ் சி வைரஸை தனிமைப்படுத்துவதற்கான உத்திகளை மைக்கேல் ஹூட்டன் கண்டறிந்திருக்கிறாராம்.

ஹெபடிடிஸ் சி வைரஸ் மட்டுமே, ஹெபடிடிஸ் நோய் ஏற்படுவதற்கு காரணம் என்பதற்கான ஆதாரங்களை சார்லஸ் எம்.ரைஸ் வெளியிட்டார்.

இந்த ஆய்வுகள் மூலம், ஹெபடிடிஸ் சி வைரஸ் பாதிப்பை குணப்படுத்த முடியும் என்றும், நீடித்த ஹெபடிடிஸ் நோயை ரத்த பரிசோதனை மூலம் கண்டறிந்து, கோடிக்கணக்கானோரை காப்பாற்ற முடியும் என்றும் நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு. அதில்.. ரோஜர் பென்ரோஸ், ரெயின் ஹார்ட் ஜென்சில், ஆண்டிரியா கெஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.

கருந்துளை உருவாக்கம் குறித்த பொதுவான சார்பியல் கோட்பாட்டின் வலுவன கணிப்பை கண்டுபிடித்ததற்காக ரோஜர் பென்ரோசுக்கும், விண்மீன் திரளின் மையப்பகுதியில் உள்ள ஒரு அதிசய சிறு பொருளை கண்டுபிடித்ததற்காக ரின்ஹெர்ட் கென்செல், ஆன்ட்ரியா கெஸ் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

பரிசுத்தொகையில், ரோஜர் பென்ரோசுக்கு 50 சதவீதமும், ரின்ஹெர்ட் கென்செல், ஆன்ட்ரியா கெஸ் ஆகியோருக்கு தலா 25 சதவீதமும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 nobel prize winners list tamil

அக்டோபர் 15 முதல் பள்ளிகள் திறப்பு.; அரசின் வழிகாட்டுமுறைகள் இதோ..

அக்டோபர் 15 முதல் பள்ளிகள் திறப்பு.; அரசின் வழிகாட்டுமுறைகள் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

school reopen indiaகொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது.

தற்போது சில வணிகங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் தியேட்டர்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் மட்டும் கிட்டத்தட்ட 7 மாதங்களாக மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அக்டோபர் 15ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை பார்த்தோம்.

இதனை தொடர்ந்து பள்ளிக்கூடங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.

அதில்…

முதலாவதாக… பெற்றோரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகைப்பதிவேட்டில் நெகிழ்வுத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், நேடிரயாக பள்ளி வர முடியாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது-

மாணவர்களுக்கு மதிய உணவு உரிய முன்னெச்சரிக்கையுடன் தயாரிக்கப்பட வேண்டும். எழுத்துப்பூர்வ தேர்வுகளை தவிர்க்க வேண்டும்.

பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு அடுத்த 3 வாரங்களுக்கு தேர்வுகளை தவிர்க்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் கல்வி கற்பதை ஊக்குவிக்க வேண்டும் என்றும், வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Centre issues guidelines for reopening of schools from Oct 15th

ஸ்ரீகாந்த்-வித்யா-திஷா இணையும் ‘எக்கோ’ சூட்டிங் பூஜையுடன் தொடங்கியது

ஸ்ரீகாந்த்-வித்யா-திஷா இணையும் ‘எக்கோ’ சூட்டிங் பூஜையுடன் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீகாந்த் & வித்யா பிரதீப், திஷா பாண்டே ஆகியோரது நடிப்பில் உருவாகும் படம் ‘எக்கோ’.

நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பூஜையுடன் தொடங்கியது. ஸ்ரீகாந்த் மற்றும் வித்யா பிரதீப் நடிக்கும் காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டன.

காளி வெங்கட், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர்.ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார்.

ஜான் பீட்டர் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை ஏக்நாத் எழுதுகிறார். ‘கில்லி’, ‘தூள்’, ‘தடம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

சுதர்ஷன் படத்தொகுப்பு செய்ய, மைக்கேல் ராஜ் கலையை நிர்மாணிக்கிறார். ராதிகா நடனம் அமைக்க, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

tamil film echo

Srikanth – Vidya starring Echo movie shoot started

More Articles
Follows