சினிமா துறை ஒரு மின்சாரம்.. தப்பா தொட்டா ஷாக் அடிக்கும்..; அமைச்சருக்கு அன்றே அட்வைஸ் சொன்ன ஜெயலலிதா

kadambur rajuசவுத் இந்தியன் சினி அண்ட் டிவி மேக்கப் ஆர்டிஸ்ட் அண்ட் ஹேர் ஸ்டைலிஸ்ட் யூனியன் சார்பில் நேற்று ( பிப்ரவரி 1ம்தேதி) சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலை, ஏவிஎம் காலனியில் எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி திறப்பு விழா நடந்தது.

பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் பி.என்.சுவாமிநாதன் முன்னிலை வகித்தனர்.

தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார். நடிகையும், ஆந்திரா எம் எல் ஏவுமான நடிகை ரோஜா குத்துவிளக்கு ஏற்றினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:..

எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி திறந்து வைப்பதில் மகிழ்ச்சி. புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா சினிமாவிலிருந்து வந்தவர் கள். அவர்களை சினிமாவில் பார்த்து ரசித்து அவர்கள் சொன்ன நல்ல கருத்துக்களை கேட்டுதான் நாங்கள் அரசிய லுக்கு வந்தோம்.

எனக்கு செய்தி துறை அமைச்சர் பதவியை அம்மா அளித்த போது அதில் என்னவெல் லாம் பிற துறைகள் இடம் பெறும் என்பதை சொல்லி சினிமா துறையும் அதில் இருக்கும் அதை ஜாக்கிரதை யாக கையாள வேண்டும்.

சினிமா துறை மின்சாரம் போன்றது நன்கு ஒளி தரும் தவறுதலாக கைவைத்தால் ஷாக் அடித்துவிடும் என்று அறிவுரை வழங்கினார்.

சினிமா துறைக்காக திரைப்பட ஸ்டுடியோ அமைக்க வேண்டும் பெப்ஸி ஆர்.கே. செல்வமணி கோரிக்கை வைத்தபோது அதனை அம்மா விடம் சொன்னேன்.

அவர்கள் உடனடியாக பையனூரில் 5 கோடி செலவில் சினிமா ஸ்டுடியோ அமைத்து தருவ தாக அறிவித்ததுடன் நிதியும் அளித்தார்.

அம்மாவின் வழியில் இன்றைக்கு ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல் வரும் ஸ்டியோவுக்கான தவணை தொகை அளித்தார். மற்றொரு தவணையும் விரைவில் அளிப்பார்.
திரைப்பட துறைக்கு விருது வழங்குவதுபற்றியும் நம் முதல்வரிடம் கோரிக்கை வைத்தபோது 150 படங் களுக்கு தலா ரூ 7 லட்சம் அளித்தார்.

அதேபோல் கொரோனா காலகட்டத்தில் சினிமா துறை பாதிக்கப்பட்டி ருந்தபோது நிறைய உதவிகளை அரசு அளித்தது. மீண்டும் தொழில் தொடங்கவும் உடனுக்குடன் அனுமதி அளிக்கப்பட்டது,

தியேட்டர்களில் முதலில் 100 சதவீத டிக்கெட் அனுமதி அளித்தது தமிழக அரசுதான். ஆனால் அன்றைக்கு 50 சதவீத டிக்கெட் தான் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் அனுப்பியது.

15 நாட்கள் கழித்து இன்று மத்திய அரசே 100 சதவீத டிக்கெட் அனுமதி அளித்திருக்கிறது.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழக அரசுதான் செயல்பட்டது என்பதை குறிப்பிடுகிறேன்.

இங்கு கலந்துகொண்டு பேசிய ரோஜா எம் எல் ஏ ஆந்திரா வில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பக்க பலமாக இருந்துசெயல்படுகிறார். தனக்கு அரசியல் வழிகாட்டி யாக அம்மாதான் இருந்ததாக கூறினார்.

பெப்ஸி தலைவராக ஆர்.கே.செல்வமணி சிறப்பாக செயல்படுகிறார். பெப்ஸியில் அங்கம் வகிக்கும் தொழிலா ளர்கள் மற்றும் டெக்னீஷியன் களுக்கு என்ன தேவையென் றாலும் அரசிடம் கோரிக்கை வைத்து பெற்று தருகிறார்.

இன்றைக்கு தொடங்கப்பட்டி ருக்கும் இந்த மேக்கப் அகாடமி சிறப்பாக செயல் பட்டு தமிழகம் முழுவதும் கிளைகள் அமைத்து செயல் பட வேண்டும் என்று எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

Minister Kadambur raju about cine industry

Overall Rating : Not available

Latest Post