Breaking : வளரும் விஜய்க்கு இது நல்லதல்ல.; சர்காருக்கு அமைச்சர் எச்சரிக்கை

Breaking : வளரும் விஜய்க்கு இது நல்லதல்ல.; சர்காருக்கு அமைச்சர் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarkar movie into trouble Minister Kadambur Raju warns Vijayநேற்று தீபாவளி தினத்தன்று விஜய் நடிப்பில் உருவான சர்கார் திரைப்படம் உலகமெங்கும் வெளியானது.

இதன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்னது போலவே அரசியலை மெர்சல் செய்திருந்தார் இயக்குனர் முருகதாஸ்.

இப்படத்தை பெரும்பாலானோர் பாராட்டினாலும் சிலர் நெகட்டிவ்வான விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படம் குறித்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல

சர்கார் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். (அதாவது ஒரு காட்சியில் மக்கள் அரசுக்கு எதிராக வெகுண்டெழும் போது அரசு கொடுத்த இலவச பொருட்களை தீயில் போட்டு கொளுத்துவார்கள்)

அதில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்படும். இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம்.

இவ்வாறு இன்று கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த போது நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

Sarkar movie into trouble Minister Kadambur Raju warns Vijay

Breaking: நான் மக்களின் கருவி; இன்று தன் பிறந்தநாளில் கமல் பேச்சு

Breaking: நான் மக்களின் கருவி; இன்று தன் பிறந்தநாளில் கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I am Peoples tool says Kamalhassan on his birthday todayநடிகர் கமல்ஹாசன் சில மாதங்களுக்கு தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்து மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.

அதன்படி கட்சியை வளர்க்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இன்று (7.11.18) அவர் தன் 64வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ஓரிரு தினங்களுக்கு முன் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

அதில் ‘இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம். கேக் வெட்டுதல் உள்ளிட்ட ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம்.

அதற்குப் பதிலாக ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஆசிரமங்களில் உள்ளவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். ரத்த தானம் போன்ற நற்பணிகளில் ஈடுபட வேண்டும்’ என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது…

ஊழலற்ற சுகாதாரமான அரசியல் தேவை என்பதில் மக்கள் நீதி மய்யம் உறுதியாக உள்ளது.

மேலும் தமிழகத்தில் நடைபெறவுள்ள 20 தொகுதிகளின் இடைத்தேர்தலை சந்திக்கவு மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது.

நான் எந்த கட்சிக்கும் குழலோ ஊதுகுழலோ கிடையாது; நான் மக்களின் கருவி.” என பேசினார்.

I am Peoples tool says Kamalhassan on his birthday today

விஸ்வாசம் சூட்டிங்கில் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கில் அஜித் பங்கேற்பு

விஸ்வாசம் சூட்டிங்கில் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கில் அஜித் பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dancer Saravanan died at Ajiths Viswasam shooting spotசிவா இயக்கத்தில் விஸ்வாசம் சூட்டிங்கில் கலந்துக் கொண்டு நடித்து வருகிறார் அஜித்.

சத்யஜோதி தயாரித்து வரும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இறுதிக்கட்ட சூட்டிங்கை எட்டியிருக்கும் நிலையில் ஒரு பாடல் மட்டுமே எஞ்சியிருப்பதாக கூறப்படுகிறது.

அந்தப் பாடல் படப்பிடிப்பின் போது அஜித்துடன் நடனம் ஆடிய குரூப் டான்ஸர்களில் ஒருவரான சரவணன் திடீரென வாந்தி எடுத்துள்ளார்.

எனவே அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த சரவணனுக்கு வயது 42.

இறந்தவரின் உடலை சைதாப்பேட்டை எடுத்து வரும்வரை அனைத்து செலவுகளையும் அஜித் கவனித்திருக்கிறார். மேலும், சைதாப்பேட்டையில் நடைபெற்ற இறுதிச் சடங்கிலும் பங்கேற்றி இருக்கிறார் அஜித்.

Dancer Saravanan died at Ajiths Viswasam shooting spot

சர்கார் படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த சங்கீதா விஜய்

சர்கார் படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த சங்கீதா விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Wife Sangeetha watched Sarkar with Thalapathy fansசன் பிக்சர்ஸ் -விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான சர்கார் திரைப்படம் இன்று தீபாவளி தினத்தன்று வெளியானது.

இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

சர்காரை வரவேற்கும் வகையில் விஜய் ரசிகர்கள் மேள தாளங்கள் முதல் பாலாபிஷேகம் வரை செய்தனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் ‘சர்கார்’ படத்தை ரசிகர்களுடன் கண்டுகளித்துள்ளார்.

அவருடன் நடிகை வரலட்சுமி, இயக்குநர் அட்லி மற்றும் அவரது குடும்பத்தினரும் வந்துள்ளனர்.

இத்தகவலை வெற்றி திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கௌதமன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

Vijay Wife Sangeetha watched Sarkar with Thalapathy fans

அஜித்துடன் மோதல்; பர்ஸ்ட் லுக்கிலேயே கன்பார்ம் செய்தார் சிம்பு!

அஜித்துடன் மோதல்; பர்ஸ்ட் லுக்கிலேயே கன்பார்ம் செய்தார் சிம்பு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbus Vandha Rajavaathaan Varuven clash with Viswasam on 2019 Pongalத்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண், சமந்தா நடித்த ‘அத்திரண்டிகி தாரேதி’ என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார் சுந்தர் சி.

நான்கு நந்தி விருதுகளைப் பெற்ற இந்தப் படம் கன்னடம் மற்றும் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழில் சிம்பு நாயகனாக நடித்து வரும் இப்படத்தை லைகா தயாரித்து வருகிறது.

நாயகிகளாக மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா நடிக்க, மகத் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று தீபாவளியன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

“வந்தா ராஜாவாதான் வருவேன்” என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வருகின்றனர் என்பதையும் அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே அஜித்தின் விஸ்வாசம் படமும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Simbus Vandha Rajavaathaan Varuven clash with Viswasam on 2019 Pongal

str sundar lyca

விக்ரமின் கடாரம் கொண்டான் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்

விக்ரமின் கடாரம் கொண்டான் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

First look of Vikrams 56th film Kadaram Kondan released by Kamal

கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

இது விக்ரம் நடிக்கும் 56-வது படமாக உருவாகி வருகிறது.

இதில் விக்ரம் உடன் கமல் மகள் அக்‌ஷராஹாசன் நடிக்க, தூங்காவனம் பட இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்கி வருகிறார்.

கடாரம் கொண்டான் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் விக்ரம் முழுவதும் நரைத்த தாடி மீசையுடன் ஸ்டைலிஷ் ஆக காணப்படுகிறார்.

First look of Vikrams 56th film Kadaram Kondan released by Kamal

More Articles
Follows