தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து 3வது முறையாக விஜய்யும் ஏஆர். முருகதாஸ் அவர்களும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இப்டபத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பழ.கருப்பையா, ராதாரவி, உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் பாடகர் விபின் அனேஜா இப்படத்தில் ஒர பாடலை பாடவிருக்கிறாராம்.
இதுகுறித்து விபின் கூறும்போது,..
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுவது என் கனவாக இருந்தது. இந்தி பாடல்களை பாடி வந்த என்னிடம், தமிழில் பாட விருப்பமா? என கேட்டார். நான் உடனடியாக ஓகே என்று கூறிவிட்டேன்.
இவர் ஏற்கெனவே ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரிகளில் பாடியிருக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
Jazbaa singer Vipin Aneja collaborates with AR Rahman for Vijay 62