ஜெயம் ரவியின் 25வது படத்தை இயக்கும் லட்சுமண்

Jayam Ravi to play a farmer in his 25th film Produced by his Mother in lawஅடங்க மறு படம் வரை 24 படங்களில் நடித்து இருக்கிறார் ஜெயம் ரவி.

தற்போது அவரது 25-வது படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை ‘போகன்,’ ‘ரோமியோ ஜூலியட்’ ஆகிய 2 படங்களை டைரக்டு செய்த லட்சுமணி இயக்கவுள்ளார்.

இப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

இதுபற்றி டைரக்டர் லட்சுமன் கூறியதாவது:-

‘‘ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளத்தக்க கதைக்களத்தை கொண்ட படம், இது.

கதாநாயகி மற்றும் மற்ற நடிகர்-நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இமான் இசையமைக்கிறார். ஜெயம் ரவி படத்துக்கு இவர் இசையமைப்பது, இது நான்காவது முறை.

இதில் ஜெயம் ரவி விவசாயி கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது’’ என்றார்.

Jayam Ravi to play a farmer in his 25th film Produced by his Mother in law

Overall Rating : Not available

Latest Post