செக்யூரிட்டிக்கு சம்பளம் தராத ஜெயம் ரவி மீது போலீசில் புகார்

செக்யூரிட்டிக்கு சம்பளம் தராத ஜெயம் ரவி மீது போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jayam Ravi not pays security guardsசென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்படும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் மேலாளர் வின்சென்ட்.

இவர் சென்னையில் உள்ள தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகாரில்…

எங்கள் நிறுவனத்தில் 150 செக்யூரிட்டிஸ் வேலை செய்கிறார்கள்.

அவர்களை பல்வேறு நிறுவனங்களுக்கும், தனிப்பட்ட வீடுகளுக்கும் காவல் பணிக்கு அனுப்பி வருகிறோம்.

எங்கள் நிறுவனத்தில் இருந்து நடிகர் ஜெயம் ரவியின் வீட்டு பாதுகாப்புக்கு 2 காவலாளிகளை வேலைக்கு அனுப்பி வைத்தோம்.

அவர்களுக்கு தலா ரூ.35 ஆயிரம் வீதம் ரூ.70 ஆயிரம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

அவர்கள் இருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதத்திற்குரிய சம்பள பணம் ரூ.70 ஆயிரத்தை கொடுக்காமல் அவர்களை வேலையில் இருந்து நிறுத்திவிட்டனர்.

பின்னர் அந்த 2 பேரில் ஒருவரை எங்களது நிறுவனத்துக்கு தெரிவிக்காமலேயே ஜெயம் ரவிக்கு தனிப்பட்ட முறையில் காவலாளியாக நியமித்து கொண்டனர்.

ஜெயம் ரவியின் மேலாளர் சேஷகிரி என்பவர்தான் இதற்கு காரணமாக உள்ளார். இதுதொடர்பாக சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து சம்பள பாக்கியை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகார் மனுவை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Jayam Ravi not pays security guards

கமல்-ரஜினி கலந்த கலவை தான் சிரஞ்சீவி.; மோகன்ராஜா பாராட்டு

கமல்-ரஜினி கலந்த கலவை தான் சிரஞ்சீவி.; மோகன்ராஜா பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chiranjeevi is mixture of Rajini and Kamal says Mohan Rajaஇந்தியாவே திரும்பி பார்க்கும் படைப்பாக அனைத்து மொழிகளிலும் இருந்து பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிக்க, தெலுங்கு சினிமாவில் இதுவரை இல்லாத பிரமாண்டத்தில் உருவாகியிருக்கிறது சிரஞ்சீவியின் “சைரா நரசிம்ம ரெட்டி”. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் அக்டோபர் 2, 2019 ஆம் தேதி வெளியாகிறது.

பட வெளியீட்டையொட்டி சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. படக்குழுவுடன் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

தமிழில் மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் “சைரா நரசிம்ம ரெட்டி” படத்தின் உரிமையை பெரும் விலைக்கு கைப்பற்றியுள்ளது.

இவ்விழாவில் R B சௌத்திரி பேசியது….

மிகப்பெரிய பட்ஜெட் படத்தை பிரமாண்ட செட் போட்டு எடுப்பார்கள் ஆனால் இப்படத்தில் இந்தியாவின் பிரமாண்ட நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளார்கள். பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன், கன்னட ராணா தமிழக முன்னணி நாயகன் விஜய்சேதுபதி, நயன்தாரா எனப்பலர் நடித்த இந்தப் படத்தை கடந்த வாரம் பார்த்தேன்.
தமிழில் நான் தான் ரிலீஸ் செய்வேன் என அடம்பிடித்து வாங்கியுள்ளேன். தெலுங்கில் போல தமிழிலும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. தமிழில் பெரும் வெற்றி பெறும் என நம்புகிறேன் என்றார்.

இயக்குநர் விக்ரமன் பேசியது…

நான் பல காலமாக சிரஞ்சீவியின் ரசிகன். இப்படி ஒரு பிரமாண்ட படத்தில் அவரைப்பார்க்க ஆவலாக உள்ளேன். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் என்றாலே வெற்றி தான் தமிழில் அவர்கள் வெளியிடுவது இந்தப்படத்திற்கு மேலும் ஒரு பலம். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் லிங்குசாமி பேசியது

இதில் பிரமாண்ட நட்சர்திரங்கள் நடித்திருப்பதால் சௌத்திரி சார் இந்தப்படத்தை வாங்கியிருப்பார் என்றால் கிடையாது இதில் அதைத் தாண்டிய கதை இருப்பதை அவர் கண்டுபிடித்திருப்பார். தமிழில் 40 இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர்.

அவர் கை வைத்தால் அது வெற்றி தான். நான் இணையத்தில் ராம்சரண் பாடல்களை பார்ப்பேன் ஹீரோயினாக யார் இருந்தாலும் இவர் மீது தான் கண் போகும். அவர் தமிழுக்கு வந்துள்ளார். வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசியது…

தமிழர்களுக்கு தெலுங்குப்படம் என்றாலே சிரஞ்சீவி படம் தான். 20 வருடங்களுக்கு முன்பே அவரது படம் எனக்கு தமிழில் 25 லட்சத்தை சம்பாதித்து தந்தது. அவருடைய மார்க்கெட் அந்த அளவு பெரியது. சூப்பர் குட் இந்தப்படத்தை வாங்கியிருக்கிறது. இந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றார்.

இயக்குநர் சசி பேசியது…

“மகதீரா” படம் சாதாரண படம் என்று நினைத்து பார்த்தேன் படம் மிரட்டலாக இருந்தது. அந்தப்படத்தின் ஹிஸ்டாரிகல் பகுதிகள் தனியே எடுக்கப்பட்டது போல் இந்தப்படம் இருக்கிறது.
பல நட்சத்திரங்கள் நடித்தாலும் சிரஞ்சீவிக்காகவே தமிழில் மிகப்பெரிய வெற்றியை இப்படம் பெறும் என்றார்.

இயக்குநர் மோகன் ராஜா பேசியது …

நான் சிரஞ்சீவின் மிகப்பெரிய ரசிகன். என் தந்தை ஹிட்லர் எடுத்த போது அவர் அருகில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் கமல் சார் ரஜினி சார் போல் தெலுங்கில் அவர்கள் இரண்டும் கலந்த ஒரே ஸ்டார் சிரஞ்சீவி சார் தான். இந்த வயதில் அவர் இப்படியான படைப்போடு வந்திருக்கிறார்.

உலகில் குழந்தையை கொஞ்சும் வளர்க்கும் அப்பாவை பார்த்திருக்கிறேன் முதல்முறையாக மகன் தந்தையை கொண்டாடும் படமாக இந்தப்படத்தைப் பார்க்கிறேன். இந்தப்படத்தில் மிகப்பெரிய ஆளுமைகள் மதித்து தங்கள் பங்களிப்பை தந்துள்ளார்கள் இப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற என் வாழ்த்துக்கள் என்றார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி

மிக அழகான காலகட்டத்தில் நான் இருக்கிறேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. ராம் சரண் மற்றும் சிரஞ்சீவி ஆகிய இருவரும் ஒரே மாதிரியான இரு வேறு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரத்திற்கு பலரது ரத்தம்மும் தியாகமும் இருக்கிறது அவற்றை ஞாபகப்படுத்தும் இரண்டு படங்களில் பணிபுரிவதை நான் பெருமையாக நினைக்கிறேன். அமித் திரிவேதி வட இந்திய சாயலே இல்லாத தென்னிந்திய இசையை இந்தப்படத்தில் கொடுத்திருக்கிறார்.

நான் என்னால் முடிந்தளவு சிறப்பான பணியை தந்துள்ளேன். இந்தப்படத்தில் வேலை பார்த்தது நல்லதொரு அனுபவமாக இருந்தது. இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

நடிகை நாயகி தமன்னா பேசியது ….

வீட்ல என்ன ஒரு சந்தோஷமான நிகழ்வு நடந்தாலும் குடும்பம் முழுதும் அங்கு இருக்க வேண்டும் இன்று நான் சினிமா கற்றுக்கொண்ட நிறைய ஆளுமைகள் இங்கு இருக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய படத்தில் நான் இருப்பதே பெருமைதான். நிறைய கற்றுக்கொள்ளும் அனுபவமாகவே இருந்தது. சுரேந்தர் ரெட்டி சார் படத்தில் பெண் கதாப்பாத்திரங்கள் அழுத்தமாக இருக்கும். இது இந்தியா முழுமைக்கும் உள்ள ரசிகர்களுக்கான படம். பாகுபலிக்கு பிறகு மிகப்பெரிய படமாக இந்தப்படம் கிடைத்திருக்கிறது.

சிரஞ்சீவி சாருடன் முதல்முறை நடித்தபோது டயலாக்கை மறந்தவிடக்கூடாது என பெரும் பதற்றம் இருந்தது. அவருடன் நடித்தது நம்பமுடியாத அதிர்ஷ்டம். நயன்தாராவுடன் நடித்ததும் மிகப்பிடித்த, மறக்க முடியாத அனுபவம். இப்படத்தில் பங்குபெறும் வாய்ப்பு தந்ததற்கு ராம்சரணுக்கு நன்றி என்றார்.

தயாரிப்பாளர் ராம்சரண் பேசியது….

எல்லாருடைய அன்புக்கும் நன்றி. இந்தப்படத்தை நம்பி தமிழில் வாங்கியதற்கு R B சௌத்திரி சாருக்கு நன்றி. படத்தில் பணிபுரிந்து அனைவருக்கும் நன்றி. நான் விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ரசிகன்.

96 படம் பார்த்து அழுதிருக்கிறேன். ரசித்திருக்கிறேன். அவர் இந்தப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டது சந்தோஷம். நயன்தாரா தமிழ் சூப்பர்ஸ்டார் அவர் இந்தப்படத்தில் நடித்ததும் சந்தோஷம்.

தமன்னாவும் நானும் நடித்த படத்திற்கு அப்பா வந்திருந்தார். நான் மீண்டும் சினிமாவுக்கு வந்தால் தமன்னாவுடன் நடிப்பேன் என்றார். விளையாட்டுக்கு சொன்னார் என்று நினைத்தேன். சினிமாவின் மேஜிக் அதுதான் இப்போது அது நடந்திருக்கிறது. நான் அப்பாவுக்கு கொடுத்த கிஃப்ட் என்கிறார்கள்.

ஆனால் இது அவர் எனக்கு கொடுத்த கிஃப்ட். 10 வருடங்களுக்கு முன்பே இந்தக்கதையை கேட்டார். அப்போதிலிருந்து உருவான படம் இது. கமல் சார் இப்படத்தில் மூன்று நிமிடம் குரல் தந்துள்ளார் அவருக்கு என் நன்றி. 10 நாட்கள் முன் அரவிந்த்சாமி சார் வீட்டுக்கு வந்திருந்தார் ‘இவ்வளவு பெரிய படம் எடுக்கிற என்னயெல்லாம் கூப்பிடல’ எனக்கேட்டு அவரே அப்பாவுக்கு டப்பிங் பேசுகிறேன் என்றார்.

கொஞ்சம் கூட ஈகோ இல்லாத அவரது மனதிற்கு, அன்பிற்கு நன்றி இந்த வாரம் படம் வருகிறது. எல்லோருக்கும் பிடிக்கும் பாருங்கள், கொண்டாடுங்கள் என்றார்.

சிரஞ்சீவி பேசியது…

நடிகனாக நான் பிறந்த சென்னைக்கு மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி. R B சௌத்திரி படத்தை வாங்கியதற்கு அவருக்கு மிகப்பெரிய நன்றி. “சைரா நரசிம்மா ரெட்டி” எனது நெடு நாள் கனவு.

பல காலமாகவே பட்ஜெட் பெரிதாக இருந்ததால் உருவாக்க முடியாத கனவாக இருந்தது. நான் சிறு இடைவேளைக்கு பின் சினிமா வந்த பிறகு தமிழில் வந்த “கத்தி” படத்தை ரீமேக் செய்து நடித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஏன் இப்போது சைரா செய்யக் கூடாது என நினைத்தேன் பாகுபலியின் வெற்றி நிறைய நம்பிக்கை தந்தது. ஏன் இந்தப்படத்தை நாம தயாரிக்கக் கூடாது என ராம்சரணைக் கேட்டேன் அவர் அவருடைய இரண்டாவது படத்திலேயே வரலாற்று கதை காஸ்ட்யூம் போட்டு நடித்து விட்டார்.

நான் 150 படம் நடித்தும் வரலாற்று கதையில் நடிக்கவில்லை. இந்தப்படம் அந்தக் கனவை நனவாக்கி தந்துள்ளது. தமிழில் கேட்டுக்கொண்டவுடனே கமல் குரல் தந்துள்ளார் அரவிவிந்த் சாமி டப்பிங் பேசியுள்ளார் இருவரின் அன்பிற்கும் நன்றி.

இது ஒரு மொழிக்கான படமில்லை. வரலாற்றில் மறக்கப்பட்ட வீரனின் கதை அனைத்து மொழிக்குமான படம், இந்தியப்படம். இப்படத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவும், ஆசிர்வாதமும் படத்திற்கு வேண்டும். வாழ்த்துங்கள் என்றார்.

“சைரா நரசிம்ம ரெட்டி” படத்தினை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். பருச்சூரி சகோதரர்கள் இப்படத்தினை எழுதியுள்ளார்கள். நடிகர் ராம் சரண் Konidela Production கம்பெனி சார்பில் தயாரித்துள்ளார்.
அமித் திரிவேதி இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜீவன் கலை இயக்கம் செய்து காலத்தை கண்முன் கொண்டு வந்துள்ளார்.

மேலும் இப்படத்தில் பணிபுரிந்த மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்

எடிட்டிங் – ஶ்ரீகர் பிரசாத்
வசனம் – விஜய் பாலாஜி
VFX மேற்பார்வை – கமல் கண்ணன்
உடை வடிவமைப்பு – சுஷ்மிதா கோனிடெலா, அஞ்சு மோடி , உத்தாரா மேனன்.
ஸ்டண்ட் – க்ரேக் பாவெல், லீ விட்டேக்கர், ராம் – லக்‌ஷ்மன்.
இணை இயக்கம் – பாலகிருஷ்ணன் தேவர்
உதவி இயக்கம் – பெல்லம்கொண்டா சத்யம் பாபு
ஆகியோர் இப்படத்தில் பணிபுரிந்துள்ளார்கள்.

Chiranjeevi is mixture of Rajini and Kamal says Mohan Raja

syeraa press meet

என்னை வைத்து இளையராஜாவை சிறுமைப்படுத்த வேண்டாம்.. – சீனுராமசாமி

என்னை வைத்து இளையராஜாவை சிறுமைப்படுத்த வேண்டாம்.. – சீனுராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Seenu Ramasamy clarifies Ilayaraja issueஇளையராஜா விவகாரம் குறி்த்து இயக்குனர் சீனு ராமசாமி விளக்கம்.

என் நெஞ்சம் நிறைந்த தமிழ் மக்களுக்கு வணக்கம்,

நான் கதை,திரைக்கதை வசனமெழுதி இயக்கிய மாமனிதன் படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைப்பது அனைவரும் அறிந்ததே.

இளையராஜா அவர்களிடம் அவரது புதல்வர் யுவன் என்னை அழைத்துச் சென்றார். இசை மூத்தவர் பாதம் தொட்டு வணங்கினேன்

“திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது, நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும்” என்றேன் ‘அது சரி’ என்று சிரித்தபடி வந்தார்.

பாடல் காட்சிகளோடு சேர்த்து 2 மணி நேரம் 17 நிமிடம் ஓடக்கூடிய முழு படத்தையும் அவருக்கு காட்டினோம்.

படத்தின் இடைவேளைக்கு கூட அனுமதிக்காமல் முழு படத்தையும் ஒரே மூச்சில் பார்த்து முடித்தார்.

படத்தில் பாடல் காட்சி வரும் போது மட்டும் உதாரணத்திற்கு “உன்ன விட இந்த உலகத்தில் உயர்த்தது ஒன்னும் இல்ல” அது மாதிரி சார் என்று மட்டும் கூறுவேன். அவ்வளவுதான்

1000 படங்களுக்கு மேல் இசை அமைத்த இசைஞானியை இதற்கு மேல் விளக்கம் சொல்லி நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

இளையராஜா பாடலுக்கு மெட்டு போடுகிறார் .அதற்கு யுவன் இசை கோர்க்கிறார். இது இருவரும் சேர்ந்து வேலை செய்யும் படம். பின்னணி இசை சேர்ப்பில் அவருக்கு நான் யோசனை சொல்ல முடியுமா, எனினும் பின்னணி இசையில் எனது எண்ணங்களை கடிதமாக எழுதி தந்தேன். அவர் அன்போடு பெற்றுக் கொண்டார்.

படத்தில் பாடல்கள் என்று வந்த போது “அண்ணன் பழனி பாரதிக்கு கவிஞர் ஏகாதேசிக்கும் கொடுக்கலாம்” என்றேன் யுவன் தரப்பில் “திரு.பா. விஜய்” என்றார்கள். நான் சம்மதித்தேன்.

ரெக்கார்டிங் தருவாயில் “பாடல் வரிகளில் ஏதேனும் மாற்றம் வேண்டுமெனில் நீங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.எனக்கு இயக்குநராக முழு சுதந்திரம் தயாரிப்பாளராக வழங்கியிருக்கிறார் யுவன்.

இது நான் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணி புரியும் 4வது படம். இசைஞானியுடன் பணி புரியும் முதல் படம் . மாமனிதன் எனக்கு 7வது படம்.

இளையராஜா அவர்கள் மீது எனக்கு இருக்கிற நேசத்தால் அவர் பிறந்த பண்ணைபுரத்தில் கதாநாயகன் வாழும் ஊராக படம் பிடித்திருக்கிறேன்.

இளையராஜா அவர்களின் சொந்த ஊரில் அவர் நடந்த தெருக்களில் படம் பிடித்த பெருமையில் இருக்கிறேன்.

இதில் என் பெயரை வைத்து இளையராஜா அவர்களை சிறுமைப்படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் மேலும்

நான் யாரையும் அவருக்கு சிபாரிசு செய்யவில்லை. என் மீது அவருக்கு கோபம் இருப்பதாகவும் கூறுவது பொய்.

நானும் யுவனும் கவிஞர் வைரமுத்துவுடன் நான்கு படத்தில் பணி புரிந்தோம். தர்மதுரையில் வைரமுத்து பாடல் வரிகளுக்கு தேசிய விருது கிடைத்தது

இந்த முறை நானும் யுவனும் இசைஞானியுடன் பணிபுரிறோம், நிச்சயமாக இந்த படத்தின் கலைஞர்களுக்கும் தேசிய விருது கிடைக்குமென கருதுகிறேன்.

அன்புடன்
சீனுராமசாமி
திரைப்பட இயக்குநர்

Director Seenu Ramasamy clarifies Ilayaraja issue

சூட்டிங்கில் அருண்விஜய் காயம்; முதலுதவி செய்த ஸ்டண்ட் சில்வா

சூட்டிங்கில் அருண்விஜய் காயம்; முதலுதவி செய்த ஸ்டண்ட் சில்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arun Vijay got injured on the shooting spot of AV 30 ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் அருண்விஜய் நடித்துவரும் புதிய படமொன்றின் சண்டைக்காட்சியில் மீண்டும் ஒரு விழுப்புண் அவர் உடலில் ஏறியிருக்கிறது.

ஆம். சண்டைக்காட்சியில் மீண்டும் காயமடைந்திருக்கிறார் அருண் விஜய்.

இது குறித்து புன்னகையுடன் அருண் விஜய் கூறியதாவது…

“எதிர்பாராத முறையில் ஏற்பட்ட இந்தக் காயம், நடிகர் என்ற முறையில் என் திரைவாழ்க்கையில் சகஜமான ஒன்றுதான். கண்ணாடி பாட்டில் ஒன்றை நான் உடைப்பது போன்ற காட்சியை சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா அமைத்திருந்தார்.

சுகர் கிளாஸ் எனப்படும் ஒருவகைக் கண்ணாடியைத்தான் சண்டைக் காட்சிகளில் பயன்படுத்துவது வழக்கம்.

இந்தக் கண்ணாடி கடினமாக இருந்தாலும், எதிர்பாராமல் தவறு நேரும்போதுகூட உடலுக்கு ஊறு விளைவிக்காது.

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் இந்தக் கண்ணாடியை பயன்படுத்துவதற்கு முப்பது நிமிடங்கள் முன்புதான் வெளியே எடுக்க வேண்டும்.

காட்சியை படமாக்க சில நிமிடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தக் கண்ணாடி எதிர்பாராதவிதமாக என் முன்னங்கையில் காயத்தை ஏற்படுத்திவிட்டது.

கையிலிருந்து ரத்தம் சொட்ட ஆரம்பத்த பிறகுதான் காயத்தையே நான் கவனித்தேன். உடனடியாக வந்து ஸ்டண்ட் சில்வா எனக்குத் தேவையான முதலுதவிகளைச் செய்தார்” என்றார் அருண் விஜய்.

அருண் விஜய் 30 என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் அருண் விஜய். ஏற்கெனவே குற்றம் 23 படத்தில் கம்பீரமான காவல்துறை அதிகாரியாக வந்த அருண் விஜய்க்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூவி ஸ்லைட்ஸ் பி.லிட் சார்பில் உருவாகும் இந்தப் படத்தை ‘ஹரிதாஸ்’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்குகிறார்.

‘சகா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஷபீர் இசையமைக்க, தடம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கோபி ஒளிப்பதிவு இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

Arun Vijay got injured on the shooting spot of AV 30

இனி முன்னணி நடிகைகள் எனக்கு ஜோடியாக நடிப்பார்கள்:நடிகர் அப்புக்குட்டி கலகல பேச்சு!

இனி முன்னணி நடிகைகள் எனக்கு ஜோடியாக நடிப்பார்கள்:நடிகர் அப்புக்குட்டி கலகல பேச்சு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Appu Kuttyகதிர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ ’கதிரேசன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘வாழ்க விவசாயி’. தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி. எல் .பொன்னி மோகன். அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீடு நேற்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ரவீந்திரன் சந்திரசேகரன், இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் ஸ்ரீபாலாஜி,இயக்குநர் சார்லஸ், இயக்குநர் ராசி .அழகப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி ஜி சேகரன், தயாரிப்பாளர் டிசிவா, தயாரிப்பாளர் பால்டிப்போ கதிரேசன், இயக்குநர் பொன்னி மோகன், நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, நடிகர் ஹலோ கந்தசாமி,நடிகை ஸ்ரீ கல்கி, நடிகர் திலீபன், பாடகர் அந்தோணி தாசன், இசையமைப்பாளர் ஜெய்கிருஷ், ஒளிப்பதிவாளர் ரத்தன் சந்த் , பாடலாசிரியர் தமயந்தி, நடன இயக்குநர் காதல் கந்தாஸ், கலை இயக்குநர் சரவணன் அபிராமன் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ ’ கதிரேசன் வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து ‘வாழ்க விவசாயி’ படத்தின் டீஸரை இயக்குநர் சுசீந்திரன் வெளியிட, தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் இயக்குநர் பொன்னி மோகன் பேசுகையில்,

“விவசாயிகளைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் தற்போது ஏராளமான திரைப்படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இது குறித்து மீம்ஸ்களும் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் வாழ்க விவசாயி என்று ஏன் படமெடுக்கவேண்டும் என்று தோன்றியது என்றால்,நான் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன்.என்னுடைய தந்தையார் குள்ளமான உருவம் தான். ஆனால் பன்னிரண்டு அடிக்கு மேல் இருக்கும் ஏர் கலப்பையை தூக்கிக் கொண்டு கம்பீரமாக நடப்பார். எங்கம்மா காளைமாட்டை பிடித்துக் கொண்டு அதிகாலை மூன்று மணியளவில் வீட்டிலிருந்து வயலுக்கு நடந்து செல்வார்கள். எங்களுடைய தெருவில் உள்ள விவசாயிகள் இது போல் நடந்து செல்வது திருவிழா போல் இருக்கும். ஆறு மைல் தொலைவு நடந்து சென்று வயலில் வேலை செய்வார்கள். நான் அந்த கலப்பையைத் தூக்க முயன்றிருக்கிறேன். என்னால் முடியாது. அதை அசைக்கக்கூட முடியவில்லை. அதே போல்காளை மாட்டின் அருகே செல்லக்கூட முடியாது. ஆனால் என்னுடைய அம்மா அதனை வசப்படுத்தி வைத்திருந்தார். அதனால் என்னுடைய சிறியவயதில் ஹீரோ ஹீரோயினாக தெரிந்தவர்கள் விவசாயிகள் தான். அதனால் விவசாயிகளின் பெருமையை எடுத்துரைக்கவேண்டும் என்று எண்ணினேன். என்னுடைய கிராமத்தில் விவசாயிக்கு உடல் நலம் சரியில்லை என்றால், அந்த வீட்டிலுள்ள பெண் விவசாயியான அவரது மனைவி அந்த கலப்பையை சுமந்து செல்வதையும், விவசாயத்திற்கு உதவி புரிவதையும் பார்த்திருக்கிறேன். நமக்கு அத்தியாவசியமான உணவைத் தயாரிக்கும் விவசாயிகளைப் பற்றி இந்தப் படைப்பை உருவாக்கியிருக்கிறேன். அதற்கேற்றாற் போல் அப்புக்குட்டியும், வசுந்தராவும் அமைந்திருக்கிறார்கள். நான் சிறிய வயதில் நேரில் கண்டதை அப்படியே கண்முன் கொண்டு வந்தார்கள்.

நடிகர் அப்புக்குட்டியும், வசுந்தராவும். இதற்காக அவர்களைப் பாராட்டுகிறேன். படத்திற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள். இந்த மருத நிலத்தின் படம், அனைவரின் மனதில் இடம்பெறவேண்டும் என்று விரும்புகிறேன்.” என்றார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில்,

“அழகர்சாமியின் குதிரை படத்திற்குப் பிறகு அப்புக்குட்டியைச் சந்திக்கும் போதெல்லாம். சரியான கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்கவேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டேயிருப்பேன். ஏனெனில் அவர் ஒரு சிறந்த நடிகர். அவருடைய ஸ்கிரீன் பிரசென்ஸ் நன்றாக இருக்கும். நீண்ட நாளிற்கு பிறகு அப்புக்குட்டி யதார்த்தமாக திரையில் தோன்றியிருக்கிறார். இதற்காக இயக்குநருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அழகர்சாமியின் குதிரை படத்தில் அப்புக்குட்டி நடிக்கும் போது, அவருக்கு ஜோடியாக நடிக்கப் பல நடிகைகள் முன்வரவில்லை. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை வசுந்தராவை மனதார பாராட்டுகிறேன். நடிகை வசுந்தரா சிறந்த நடிகைஎன்பதை பக்ரீத் உள்ளிட்ட பல படங்களில் நிரூபித்திருக்கிறார். முதல் படத்தில் தொழில்நுட்பக் கலைஞர்கள் அமைவது கடினம். இந்தப் படத்தின் இயக்குநருக்கு அது அமைந்திருக்கிறது. அதற்காகப் பாராட்டுகள். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் என அனைவரும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள் என்பது படத்தின் டீஸர் மற்றும் இசையை பார்க்கும் போது உணர முடிகிறது. தற்போதைய சூழலில் ‘வாழ்க விவசாயி ‘ என்கிற டைட்டிலில் படம் வெளியாகியிருக்கிறது என்றால் இதைத் திரையரங்கத்திற்கு சென்று பார்ப்பவர்களின் கூட்டம் குறைவு தான். ஆனால் படத்தில் கமர்சியல் அம்சங்கள் இருப்பதால் படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

ஒரு தயாரிப்பாளர் என்பவர் இயக்குநருக்கு அப்பா அம்மாவிற்குச் சமம். ஏனெனில் அப்பா அம்மாவிற்குப் பிறகு ஒரு இயக்குநரை நம்பி பணத்தை முதலீடுசெய்பவர்கள் தயாரிப்பாளர்கள் தான். விவசாயத்தை மையமாகக்கொண்ட இந்தக் கதையையும், அப்புக்குட்டி போன்ற நடிகர்களையும் நம்பி படத்தைத் தயாரித்த இந்தத் தயாரிப்பாளரை நான் மனதார வாழ்த்துகிறேன்.

இந்தப் படத்தை வெற்றி பெறவைக்கவேண்டும் என்று ரசிகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தை வாங்கி வெளியிடும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் அவர்களுக்கும் என்னுடைய நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர் ‘லிப்ரா ‘ரவீந்திரன் சந்திரசேகரன் பேசுகையில்,“இந்தப் படத்தின் விழாவில் கலந்துகொள்ளுமாறு நடிகர் அப்புக்குட்டியும், படக்குழுவினரும் சில தினங்களுக்கு முன் என்னைச் சந்தித்தனர். அப்போது படத்தைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் படத்திற்கு ‘வாழ்க விவசாயி’ என்று டைட்டில் வைத்திருந்தது பாஸிட்டிவ்வாக இருந்தது. அது எனக்கு பிடித்தது. தற்போதைய சூழலில் விவசாயிகளைப் பற்றி வணிகரீதியான படங்களில் சில இடங்களில் மட்டும் விவசாயத்தைப் பற்றி வசனங்களாக மட்டுமே இருக்கும்.

தயாரிப்பாளரைப்பற்றி எனக்கு முன்பே வேறு வகையில் தெரியும். தயாரிப்பாளர் இந்தப் படத்தின் கதையை நம்பிப் படமெடுத்திருக்கிறார். அவருக்கு வணிகத்தைப்பற்றி எதுவும் தெரியாது என்பதையும் பேசும் போது தெரிந்து கொண்டேன். இருந்தாலும் அவர்களின் அழைப்பை ஏற்று இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தின் டீஸர் மற்றும் பாடல்களை பார்த்த பின்னர் தான் இந்த படத்தின் தரம் எனக்குத் தெரிந்தது. இப்போதுதான் இப் படத்தை நான் வெளியிட முடிவு செய்திருக்கிறேன். இயக்குநர் சுசீந்திரன் சொல்லி விட்டார் என்பதற்காக இதனைச் சொல்லவில்லை. இப்படத்தின் தரமும், கன்டென்டும் எனக்கு பிடித்திருக்கிறது.

இது போன்ற சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஊடகம் தான் சிறந்த ஸ்பான்ஸர். இந்த படத்திற்கு வேறு ஒரு தினத்தில் இதனை விட வித்தியாசமான முறையில் விழா ஒன்றை வைத்து வெளியீட்டை அறிவிக்கிறேன். அதற்கு முன்னதாக படக்குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்துவேன்.இந்தப் படத்தை திட்டமிட்டு, விளம்பரப்படுத்தி, நல்லமுறையில் தியேட்டருக்குக் கொண்டு வந்துவிடுவேன்.ஆனால் தியேட்டருக்கு ரசிகர்கள் வருகை தந்து என்னையும் வெற்றி பெறச் செய்யவேண்டும். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் , இயக்குநர், நடனஇயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்.
வாழ்த்துகள்”என்றார்.

நடிகை வசுந்தரா பேசுகையில்,“ இந்தப் படத்தின் இயக்குநர், நாயகன், தயாரிப்பாளர் ஆகியோர் விவசாயத்தைப் பின்னணியாகக் கொண்டவர்கள். அவர்கள் விவசாயத்தைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் நேர்த்தியாகவும், யதார்த்தமாகவும், நேர்மையாகவும் ஒரு படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தப் படைப்பிற்கு என்னால் முடிந்த வரை ஒத்துழைப்பு அளித்திருக்கிறேன். இந்தப் படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு விவசாயிகளைப் பற்றியும், அவர்களின் தற்போதைய நிலையைப்பற்றியும் உணந்திடவேண்டும். அவர்களை உணர வைத்துவிடமுடியும் என்று நம்பி படக்குழுவினர் பணியாற்றியிருக்கிறார்கள். சிறிய பட்ஜெட் படங்களை ஊடகங்கள் தான் சிறந்த முறையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். அப்புக்குட்டிக்கு ஜோடியாக இதில் நடித்திருக்கிறேன் என்பதை விட ஒரு விவசாயிக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். நகரத்து பெண்ணான என்னிடம் கிராமத்து பெண்ணாக எப்படி நடிக்கவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்து இயக்குநர் என்னிடமிருந்து நடிப்பை வாங்கியிருக்கிறார், அதற்காகஇயக்குநருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் விருது பெறுவதைக் கடந்து அனைவருக்கும் பிடித்த கமர்சியல் அம்சம் ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது. ”என்றார்.

நடிகர் அப்புக்குட்டி பேசுகையில்,“ நான் நடித்த படமொன்று மேடையிலேயே பிசினஸ் ஆகியிருக்கிறது. இதற்காக நான் சந்தோசப்படுகிறேன். இனி நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிடுவேன்.நம்பிக்கையிருக்கிறது. பயப்படாதீர்கள். ஏன் நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கக்கூடாதா? நான் திரைத்துறைக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்லும் போது, என்னுடைய அம்மாவை நான் நேரில் பார்த்தது போலிருந்தது. எங்களிடம் விவசாய நிலம் கிடையாது. என்னுடைய பெற்றோர்கள் விவசாய கூலித் தொழிலாளர்கள் தான். நான் ஏன் சென்னைக்கு வந்தேன் என்றால் விவசாயம் செய்வதற்கு நிலமில்லை. நிலமிருந்தால் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருப்பேன். எனக்குஒரு வேளை சோறு போடக்கூட அம்மாவால் முடியவில்லை.பிறகுநாம் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றுஎண்ணி, என்னுடைய தேவைகளுக்காக நான் சென்னைக்கு வந்தேன். அதைவிட உண்மையான விசயம் என்னவென்றால், விவசாயம் அழிந்துவிட்டது. விவசாயிகள் படும் கஷ்டத்தை இயக்குநர் விவரிக்கும் போது,இந்தப் படத்தின் கதையை விடக்கூடாது என்று எண்ணி, உடனடியாக ஒப்புக்கொண்டேன். என் கூடநடிப்பதற்கு நடிகைகள் தயங்குகிறார்கள். ஏன் தயங்க வேண்டும்? நான் நடிகனில்லையா? என்னையும் நடிகராக ஏற்றுக்கொள்ளக்கூடாதா..?அந்தவகையில் என்னுடன் நடித்த நடிகை வசுந்தராவை நான் மனதார பாராட்டுகிறேன். இனிமேல் என்னுடன் நடிப்பதற்கு நடிகைகள் முன் வருவார்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக இயக்கியிருக்கிறார். அழகர்சாமியின் குதிரை படம் எப்படி எனக்குப் பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்ததோ.. அதே போல் இந்த வாழ்க விவசாயி படமும் எனக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.

கடனை திருப்பி தராத கமல்..; ஞானவேல் ராஜா பகிரங்க புகார்

கடனை திருப்பி தராத கமல்..; ஞானவேல் ராஜா பகிரங்க புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Gnanavel Raja complaints against Kamalhaasanநடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்த படம் உத்தம வில்லன் படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது.

இப்படத்தை இயக்குனர் லிங்குசாமி தயாரித்திருந்தார். அந்த சமயத்தில் இப்படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தம்மை அணுகியதாகவும், தமது தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறி, முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்றதாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தமது படத்தில் நடிக்க அவர் முன்வரவில்லை எனவும், 10 கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தரவில்லை என ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் ஞானவேல் ராஜாவிடம் இது தொடர்பாக தாங்கள் எதுவும் பேசவில்லை எனவும் லிங்குசாமியிடமே அப்போது அனுகியதாக கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Producer Gnanavel Raja complaints against Kamalhaasan

More Articles
Follows