ரஜினி படத்தால் தள்ளிப்போன ஷாரூக் படம்.; ஜெயிலருக்கு வழிவிட்ட ஜவான்

ரஜினி படத்தால் தள்ளிப்போன ஷாரூக் படம்.; ஜெயிலருக்கு வழிவிட்ட ஜவான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஏற்கனவே இதே நாளில் வெளியிட திட்டமிட்டிருந்த படங்கள் தற்போது தங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்து வருகின்றன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘மாவீரன்’ படம் ஏற்கனவே ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ‘ஜெயிலர்’ பட ரிலீஸ் அறிவிப்பால் அந்தப் படத்தின் ரிலீஸை மாற்றி அமைத்தனர்.

அதாவது ஜூலை 14ஆம் தேதி மாவீரன் படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர்.

இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படமும் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படத்தை அட்லீ இயக்கியுள்ளார்.

முக்கிய இடங்களில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடித்துள்ளனர்.

இந்த படம் ஒரே ஹிந்தி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஷாருக்கான் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jawaan release postponed due to Rajini’s jailer

#Jawan from Septempber 7, 2023 🔥

@iamsrk @Atlee_dir @RedChilliesEnt @anirudhofficial #Jawan #JawanTeaser #SRK #ShahRukhKhan #Atlee #Anirudh #JawanFromSeptember7 #filmistreet

‘துணிவு’ இயக்குநர் வினோத்தின் சீடர் இயக்கிய ‘துரிதம்’ படம்

‘துணிவு’ இயக்குநர் வினோத்தின் சீடர் இயக்கிய ‘துரிதம்’ படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் ஹெச்.வினோத்தின் சீடரான சீனிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘துரிதம்’.

தமிழ் சினிமாவில் ரொம்பவே அரிதாக வெளியாகும் ரோடு மூவி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் சண்டியர் பட நாயகன் ஜெகன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஈடன் நடித்துள்ளார்.

முக்கிய வேடங்களில் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், பாலசரவணன், மறைந்த நடிகர் பூ ராமு ஆகியோர் நடிக்க வில்லனாக ராமச்சந்திரன் (ராம்ஸ்) நடித்துள்ளார்.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் உளுந்தூர்பேட்டையை மையமாக வைத்து சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் பல நாட்கள் படமாக்கப்பட்ட்டுள்ளது.

இந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ஹெச்.வினோத் படத்தை பாராட்டியதுடன் படம் ரிலீஸ் தொடர்பாக சில ஆலோசனைகளையும் படக்குழுவினருக்கு வழங்கியுள்ளார்.

இந்தப்படத்திற்காக அறிமுக இசையமைப்பாளர் அமுதன் ஆத்ம சாந்தி இசையமைப்பில் ஆண்ட்ரியா பாடிய “நில்லாமலே..” என்கிற பர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கு நரேஷ் என்பவர் பின்னணி இசையமைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் படத்தை திரையரங்குளில் வெளியிட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு ; ஜெகன்

இயக்கம் ; சீனிவாசன்

இசை ; அமுதன் ஆத்ம சாந்தி & நரேஷ்

ஒளிப்பதிவு ; வாசன்

படத்தொகுப்பு ; நாகூரான்

ஆக்சன் ; மணி

மக்கள் தொடர்பு ; KSK செல்வா

Thunivu director Vinoth assistant’s Thuridham

நிமிரவே விடமாட்டார் நெல்சன்..; 2 வருசம் தாடியோடு அலைந்தேன் – ‘ஜித்தன்’ ரமேஷ்

நிமிரவே விடமாட்டார் நெல்சன்..; 2 வருசம் தாடியோடு அலைந்தேன் – ‘ஜித்தன்’ ரமேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஃபர்ஹானா’. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அனுமோல், ஐஸ்வர்யா தத்தா, கிட்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மே 12ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது நடிகர் ஜித்தன் ரமேஷ் பேசும்போது,

2 வருடங்களாக தாடியுடன் சுற்றிக் கொண்டிருந்ததற்கு இப்போது படம் வெளியாவதில் மகிழ்ச்சி. நெல்சன் வெங்கடேசன் கதை கூறியதும், எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

படப்பிடிப்பு தளத்தில் என்னை நிமிர்ந்து நிற்கவே விடமாட்டார். இப்படத்திற்காக 7 கிலோ உடல் எடையைக் குறைத்தேன். என்னுடைய உடைகள் மிகவும் தளர்வாக இருக்கும். தனியாக என்னை யாராவது பார்த்தால் பிச்சைக்காரன் என்று முடிவெடுத்து விடுவார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி சொல்லியே ஆக வேண்டும். கேமராவிற்கு பின்பும் ஃபர்ஹானாவாகவே இருப்பார். அந்தளவிற்கு அர்ப்பணித்து நடித்திருக்கிறார்.

நடன இயக்குநர் என்னை நன்றாக ஆட வைத்தார். எஸ்.ஆர்.பிரபு சாருக்கு நன்றி என்றார்.

Jithan Ramesh speech at Farhana press meet

75 படங்கள்.. 20 வருடங்கள்.. ஃபர்ஹானா பேசப்படுவாள் – கிட்டி

75 படங்கள்.. 20 வருடங்கள்.. ஃபர்ஹானா பேசப்படுவாள் – கிட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஃபர்ஹானா’. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அனுமோல், ஐஸ்வர்யா தத்தா, கிட்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மே 12ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது நடிகர் கிட்டி பேசும்போது,

நான் வாழ்க்கையானாலும், வேலையானாலும் ரசித்து செய்கிறவன். முதல்முறை தொடர்பு கொண்ட நெல்சன் சாரிடம்.. இந்த கதாபாத்திரத்திற்கு நான் சரியாக வருவேனா? என்று தெரியாது. நான் மிகவும் எடை குறைந்திருக்கிறேன் என்றேன். எங்களுக்கு அதுதான் சார் வேண்டும் என்றார். கதாபாத்திரத்தை வடிவமைக்கும் திடம், காட்சிகளில் நுணுக்கம் என்று அனைத்து விஷயங்களிலும் சிறப்பானவர் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்.

நான் நடித்த 75 கதாபாத்திரங்களில் சில பாத்திரங்கள் என்னை வெகுவாக கவர்ந்தவை. அதில் ஒன்று.. இந்த படத்தில் வரும் என் கதாபாத்திரம். படபிடிப்பு இடம் பற்றா
குறையாக இருந்தாலும், என்ன தேவையோ அந்த இடத்திற்குள்ளேயே நுணுக்கமாக காட்ட வேண்டும் என்று கூறினார். அவர் கூறியதைபோல படக்குழுவினர், ஒளிப்பதிவில் திறமையாக செயல்பட்டிருக்கிறார்கள்.

மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளை அருமையாக கூறியிருக்கிறது ஃபர்ஹானா திரைப்படம்.

இந்த கதாபாத்திரத்திற்கு ஒரு குறிப்பிட்ட தளத்திற்கு கொண்டு போகும் என்று ஆழமாக நம்புகிறேன்.

ஜித்தன் ரமேஷ் உடன் சகோதரர் போலதான் பணியாற்றினேன்.
டிரீம் வாரியர்ஸ் நிறுவனம்.. முதல் 3 சிறந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒருவராக இருக்கிறார்கள்.

கடந்த 20 வருடங்களில் எனக்கு சிறப்பான கதாபாத்திரம் கிடைத்தது ஃபர்ஹானா படத்தில் தான். இதற்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றார்.

Actor Kitty praised the film Farhana

இதைவிட வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்.; ஐஸ்வர்யா தத்தா ஃஹாப்பி

இதைவிட வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்.; ஐஸ்வர்யா தத்தா ஃஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஃபர்ஹானா’. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அனுமோல், ஐஸ்வர்யா தத்தா, கிட்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மே 12ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசும்போது,

நீண்ட வருடங்கள் கழித்து திரையில் என்னைப் பார்க்கிறேன். இந்த தருணத்திற்காக பல வருடங்கள் காத்திருந்தேன். திரையில் நான் எப்படி இருக்கிறேன் என்று படம் பார்த்து விட்டு நீங்கள் அனைவரும் கூறுங்கள். நெல்சன் சாரிடம் இருந்து ஒருநாள் ஒரு செய்தி வந்தது. இப்படத்திற்காக கேட்டார். மான்ஸ்டர் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படத்தில் வரும் அந்தி மாலை.. பாடல் எனக்கு பிடித்த பாடல்.

இப்படத்தில் என்னை தேர்வு செய்ததும், டிரீம் வாரியர்ஸ் நிறுவனம், நெல்சன் வெங்கடேசன் சார் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மேடம் உடன் நடிக்கப் போகிறேன் என்றதும் இதைவிட வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்! என்னால் நடிக்கவெல்லாம் முடியாது என்று இனி யார் கூறுவார்கள்? என்று என் அம்மாவிடம் உற்சாகத்துடன் கூறினேன்.

என்னை அழகாக காட்டிய ஆடை வடிவமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் கோகுல் இருவருக்கும் நன்றி என்றார்.

What else do you want in life? Aishwarya Dutta

டிரீம் வாரியர்ஸ் சொன்னவுடனே என் நண்பர்களுக்கும் மகிழ்ச்சி – அனுமோள்

டிரீம் வாரியர்ஸ் சொன்னவுடனே என் நண்பர்களுக்கும் மகிழ்ச்சி – அனுமோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஃபர்ஹானா’. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அனுமோல், ஐஸ்வர்யா தத்தா, கிட்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மே 12ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது இசையமைப்பாளர் ஐஸ்டின் பிரபாகர் பேசும்போது,

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு சாருக்கு நன்றி. ஒவ்வொரு படமுமே படிப்பினை தான். படம் சிறப்பாக வந்திருக்கிறது. வேலை காரணமாக மூன்று மாதங்களாக வீட்டிற்கு செல்லவில்லை. அதைப் புரிந்துகொண்ட மனைவிக்கு நன்றி என்றார்.

நடிகை அனுமோள் பேசும்போது,

கேரளாவில், டிரீம் வாரியர்ஸ் நிறுவனத்தில் நடிக்கப் போகிறேன் என்று கூறியதும் என்னுடைய நண்பர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

நெல்சன் சாருக்கு நன்றி. ஐஸ்வர்யா ராஜேஷ் மேடம் எப்படி பழகுவார்கள் என்று தயங்கிக் கொண்டிருந்தேன். ஆனால், எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் நித்யா. அதை அழகாக காட்டிய இயக்குநருக்கு நன்றி. இப்படத்தில் திரில்லர், சண்டை என்று எதிர்பார்க்கும் அனைத்தும் இருக்கிறது என்றார்.

My friends are also happy as soon as they say Dream Warriors – Anumol

More Articles
Follows