தியேட்டர்களுக்கு 3 மாத மின் கட்டணம் ரத்து.. ரூ.10 லட்சம் வரை கடனுதவி..; முதல்வர் பிறந்தநாள் பரிசு

தியேட்டர்களுக்கு 3 மாத மின் கட்டணம் ரத்து.. ரூ.10 லட்சம் வரை கடனுதவி..; முதல்வர் பிறந்தநாள் பரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jaganMohanReddyகொரோனா ஊரடங்கால் இந்தியா முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டன.

கிட்டத்தட்ட 7 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த அக்டோபர் மாதம் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

50% பார்வையாளர்களுடன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி தியேட்டர்கள் திறக்கபட்டன.

ஆனாலும் தியேட்டர்களில் கூட்டம் இல்லை.

இந்த நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியான அறிவிப்பை தெரிவித்துள்ளார்.

அதில்…

ஆந்திராவில் உள்ள அனைத்து தியேட்டர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாத மின் கட்டணம் முழுமையாக ரத்து.

தற்போதைய மின் கட்டணத்தை தவணை முறையில் கட்டவும் அனுமதி.

மேலும் நகரங்கள், புறநகர்களில் உள்ள தியேட்டர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் உள்ள தியேட்டர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த கடனுக்கு வட்டி இல்லை என்றும் ஆந்திர முதல்வர் அறிவிப்பு.

இன்று டிசம்பர் 21ஆம் தேதி
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் 48வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Jagan Mohan Reddy’s birthday gift to the theatre owners

வியக்க வைத்த சிம்பு… மழையிலும் ‘மாநாடு’ நடத்திய வெங்கட்பிரபு

வியக்க வைத்த சிம்பு… மழையிலும் ‘மாநாடு’ நடத்திய வெங்கட்பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maanadu simbuஈஸ்வரன் படத்தை தொடர்ந்து சிலம்பரசன் நடித்து வரும் படம் மாநாடு.. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார்.

அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு, இந்தப்படத்தில் வித்தியாச தோற்றங்களில் சிலம்பரசனின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தின.

கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது..

அங்கே திட்டமிட்டபடி வெளிப்புற காட்சிகளை படமாக்கும்போது புயல் மற்றும் மழை காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

STR & Gautham Karthik’s Next Has Been Titled As #PathuThala

அதேசமயம் அந்த சமயத்திலும் கூட, சிலம்பரசனின் ஒத்துழைப்பால் ஒருநாளை கூட வீணாக்காமல், உள்ளரங்கு காட்சிகள் அனைத்தையும் திட்டமிட்டதற்கு முன்னதாகவே படமாக்கியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு,

அதன்பின்னும் மழை விடாமல் தொடர்ந்தததால் தான், மாநாடு படக்குழுவினர் வேறு வழியின்றி சென்னை திரும்பவேண்டிய சூழல் ஏற்பட்டது..

விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் பாண்டிச்சேரி மற்றும் ஏற்காடு கிளம்புகிறது மாநாடு படக்குழு..

சிலம்பரசன் TR இன் ஈஸ்வரன் படம் மிக விரைவாக முடிக்கப்பட்டது..

சிம்புவின் ‘போடா போடி 2’.. விக்னேஷ் சிவன் & வரலட்சுமியை கழட்டி விட்ட பதம் குமார்

அதேபோல் மிகப்பெரிய பட்ஜெட், அரசியல் படம் என்பதால் அதிக எண்ணிக்கையிலான துணை நடிகர்கள் கூட்டம் என இருந்தாலும் கூட, மாநாடு படமும் திட்டமிட்டதற்கு முன்னதாகவே படப்பிடிப்பு முடிவடைந்து உரிய நேரத்தில் ரிலீஸுக்கும் தயாராகிவிடும் என்று படக்குழுவினர் கூறியுள்ளார்கள்.

இந்த சுறுசுறுப்பையும் வேகத்தையும் சிலம்பரசன் T R தொடர்ந்தார் என்றால் நிச்சயமாக வருடத்திற்கு மூன்று படங்களை அவரால் கொடுக்க முடியும் என்று திரையுலகில் பேச ஆரம்பித்துவிட்டனர்..

STR’s work is very very much appreciated by Maanaadu team

மாஸ்டர் சென்சார் சஸ்பென்ஸ்..; நீடிக்கும் சிக்கல்.. குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்

மாஸ்டர் சென்சார் சஸ்பென்ஸ்..; நீடிக்கும் சிக்கல்.. குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

masterலோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’.

இதில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், ஜோடியாக மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர்.

2021 பொங்கலுக்கு திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே படக்குழு படத்தை தணிக்கைக்கு அனுப்பியுள்ளது.

இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளதால் 9 இடங்களில் காட்சிகளை கட் செய்ய அறிவுரை வழங்கியுள்ளதாம் சென்சார்.

ஒரு வேளை படக்குழு ஓகே சொன்னால் UA சான்றிதழும் நோ சொன்னால் ‘A’சான்றிதழ் கிடைக்கும் என தெரிகிறது.

Here is clarification about Vijay in Master censor

ஷங்கர் – விக்ரம் – ஏஆர். ரஹ்மான் ஆகியோரது மகன்களின் புதிய படம் வைரல்

ஷங்கர் – விக்ரம் – ஏஆர். ரஹ்மான் ஆகியோரது மகன்களின் புதிய படம் வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் – விக்ரம் – ஏஆர். ரஹ்மான் கூட்டணியில் மிகப்பிரம்மாண்டமான உருவாகி மெகா ஹிட்டான படம் ‘ஐ’.

ஷங்கர் – விக்ரம் கூட்டணியில் உருவான படம் ‘அந்நியன்’.

இதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

பெரும்பாலும் ஷங்கர் இயக்கிய படங்கள் என்றாலே இசை ஏஆர். ரஹ்மான் தான்.

‘ஜென்டில்மேன்’ தொடங்கி பல ஹிட் படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் ஒரு படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் சங்கர் ஆகியோருடன் அமீன் அமர்ந்துள்ளார்.

இந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

A pic of Dhruv with Shankar and Rahman son goes viral

Jr Vikram Jr Shankar Jr Rahman

‘A1’ வெற்றிக்கு பிறகு மீண்டும் அப்பா-மகனாக MS பாஸ்கர் & சந்தானம்

‘A1’ வெற்றிக்கு பிறகு மீண்டும் அப்பா-மகனாக MS பாஸ்கர் & சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhanamஆர்.கே.என்டெர்டெய்ன்மென்ட் சி.ரமேஷ்குமார் தயாரிப்பில், ஆர்.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் புதிய படமொன்றில் நடிக்கிறார்.

இப்படத்தில் அவருக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார்.

இவர்களுடன் ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொல்லுசபா ஸ்வாமிநாதன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

முதன்முறையாக சந்தானம் படத்தில் சாம் சி.எஸ். இசையமைத்து கைகோர்த்துள்ளார்.

திரைப்படத்தை மாதவன் எடிட்டிட் செய்கிறார்.

நடிகர் சந்தானம் ‘பாரிஸ் ஜெயராஜ்’ என்ற படத்தில் நடித்து முடித்த கையோடு இந்த புதிய படத்திற்கான படப்பிடிப்பில் கும்பகோணத்தில் இணைந்துள்ளார்.

கும்பகோணத்தைத் தொடர்ந்து திருச்சி, ஸ்ரீரங்கம், சென்னை உள்ளிட்டப் பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அறிமுக இயக்குநராக இணைந்துள்ளார் ஸ்ரீனிவாச ராவ்.

இவர், ‘வல்லினம்’ படத்தின் இயக்குநர் அறிவழகனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். நிறைய விளம்பரப் படங்களையும் இவர் இயக்கியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

இப்படத்தைப் பற்றி ஸ்ரீனிவாச ராவ் கூறுகையில்…

“இந்தத் திரைக்களம் சந்தானத்துக்கு மிகவும் பொருந்தியுள்ளது.

காமெடி கதைக்களம் என்றாலும் கூட தந்தை – மகன் இடையே நடைபெறும் காட்சிகள் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தந்தை – மகனையும் உணர்வுப்பூர்வமாக பிணைத்துவைக்கும்.

ஒரு தந்தைக்கும் – மகனுக்கும் இடையே நடந்த சம்பவங்களையும், அவர்கள் கடந்துவந்த உணர்வுப் போராட்டங்களையும் இப்படம் பிரதிபலிக்கும் என்பதால் படத்தைக் காண்போர் தங்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு ஒன்றிப்போக முடியும்.

மேலும், அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜனரஞ்சகமான கதையாக உருவாக்கப்பட்டுள்ளதால் ஏ, பி, சி என எல்லா சென்டர்களிலும் படம் நல்ல வரவேற்பைப் பெறுமென்பதில் ஐயமில்லை.

காமெடி, உணர்வுப்பூர்வமான காட்சிகள் மட்டுமல்லாமல் இதுவரை ஏற்றிராத புதிய வேடத்தில் மற்றொரு அழகிய பரிணாமத்தில் நடிக்கிறார்.

இது அனைவரின் புருவத்தையும் உயர்த்தி பாராட்டு பெறும் மற்றும் இன்றைய அரசியல் அமைப்பை வெளிப்படுத்தும் வகையில் பல சுவாரஸ்யமான ஜனரஞ்சகமான காட்சிகளுடன் இப்படம் உருவாக்கப்படுகிறது.

ஹீரோயினாக புதுமுகத்தை அறிமுகம் செய்கிறோம். மேலும், படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது.

கும்பகோணத்தைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெறும்.

அரசாங்கம் வழிகாட்டுதலின்படி கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றியே படப்பிடிப்பு நடைபெறுகிறது” என்றார்…

Santhanam and MS Bhaskar joins for a new untitled film

‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ஜோடியாக டிவி சீரியல் நடிகை

‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ஜோடியாக டிவி சீரியல் நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் மற்றும் ஷீலா ஜோடியாக நடித்த படம் ‘திரெளபதி’.

இப்படம் நாடக காதல், ஆணவக் கொலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

இப்படம் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்தது.

தனது அடுத்த படத்திற்கு ‘ருத்ர தாண்டவம்’ என பெயரிட்டுள்ளார் மோகன்.

இதிலும் ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் தான் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்நிலையில், இப்பட ஹீரோயின் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிவி சீரியல்களில் நடித்து வரும் தர்ஷா குப்தா, இப்படத்தின் மூலம் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

TV actress Darsha Gupta to play the female lead in Richard’s next film

dharsha gupta

More Articles
Follows