முன்னாள் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் விஷால்.? இந்நாள் முதல்வரின் அதிரடித் திட்டம்

முன்னாள் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் விஷால்.? இந்நாள் முதல்வரின் அதிரடித் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆந்திராவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தற்போதைய முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 தொகுதியில் 151 தொகுதிகளை கைப்பற்றி ராட்சச பலத்துடன் ஆட்ச்சியை கைப்பற்றியது.

இவரை எதிர்த்து நின்ற சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்த்துக்கூட கிடைக்காத நிலைமைக்கு தள்ளப்பட்டது, நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி வெறும் 1 தொகுதியை மட்டும் கைப்பற்றியது பவன் கல்யாணும் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார்.

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளை கடந்த நிலையில் வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.

ஜெகன் மோகனின் வியூகம்..

கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சி ஆந்திர மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி இம்முறையும் தனித்து களம் காண உள்ளார்.

கடந்த முறையை விட இம்முறை அதிக தொகுதிகளை வென்றுவிட வேண்டும் என்றும் முனைப்பு காட்டி வரும் சூழ்நிலையில் அதிலும் குறிப்பாக தற்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சந்திரபாபு நாயுடு எம்.எல்.ஏவாக இருக்கும் குப்பம் தொகுதியில் வலுவான வேட்பாளரை நிற்க வைக்க வேண்டும் என்று எண்ணிய ஜெகன் மோகன் ரெட்டி அதற்காக நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஆந்திராவில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ஏன் நடிகர் விஷாலை தேர்வு செய்கிறார் ஜெகன் மோகன் ?

சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, இப்பகுதி கர்நாடகா மற்றும் தமிழகத்தின் எல்லை பகுதி, கர்நாடகாவின் கே.ஜி.எஃப் லிருந்து வெறும் 22 கிலோமீட்டர் மட்டுமே அதே போல் சித்தூரிலிருந்து தமிழக எல்லையான காட்பாடி வெறும் 30 கிலோமீட்டர் மட்டுமே ஆகும்.

குப்பம் தொகுதி உட்பட சித்தூர் மாவட்டத்தில் பெரும் அளவில் தமிழகத்திலிருந்து வேலைக்கு சென்று குடியேறியவர்வர்களே தற்போது அங்கு பெரும் வாக்காளர்களாக உள்ளனர்.

இதனால் தமிழக மக்களுக்கு மிகவும் அறிந்த முகமான அதே வேளையில் ஆந்திர மக்களுக்கும் தெரிந்த முகமான ஒருவரை தேர்வு செய்ய ஆலோசித்த போது சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ வும் மாநில அமைச்சருமான பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி பரிந்துரைத்த பெயர் நடிகர் விஷால்.

நடிகர் விஷாலை அமைச்சர் பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி பரிந்துரைக்க காரணம் என்ன ?

ஏற்கெனவே மேற்கூறிய காரணமான தமிழ் மக்களுக்கும் ஆந்திர மக்களுக்கும் நன்கு அறிமுகமான நபர் நடிகர் விஷால், அது மட்டுமின்றி நடிகர் விஷால் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக அவரது தந்தை ஜி.கே.ரெட்டியின் கிரானைட் குவாரியில் வேலை செய்து வந்தார். நடிகர் விஷாலின் தந்தை அதிகமானா கிரானைட் குவாரி நடத்திவந்தது ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அதிலும் குறிப்பாக குப்பம் தொகுதியை மையப்படுத்தியே இருந்தது, பல ஆண்டுகாலம் விஷால் அங்கே தங்கி வேலைப்பார்த்த காரணத்தால் அத்தொகுதி முழுவதும் விஷாலிற்கு தெரிந்த இடங்கள் என்பதாலும் தான் அமைச்சர் பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி விஷாலை பரிந்துரைத்தாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தரப்பிலிருந்து விஷாலிடம் பேசியதாகவும் விஷாலின் பதிலிற்காக காத்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

Vishal to contest against former chief minister?

JUST IN நடிகை மீனா கணவர் வித்யாசாகர் திடீர் மரணம்.; நடந்தது இதுதான்.!

JUST IN நடிகை மீனா கணவர் வித்யாசாகர் திடீர் மரணம்.; நடந்தது இதுதான்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் மீனா.

வளர்ந்து குமரி ஆனபிறகு தென்னிந்தியாவின் அனைத்து சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்டவர் மீனா.

அழகும் திறமையும் நிறைந்த மீனாவிற்கு கண்ணழகி என்ற பட்டப்பெயரும் உண்டு.

தமிழ் சினிமாவில் ரஜினி கமல்.. மலையாள சினிமாவில் மோகன்லால் மம்மூட்டி.. தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி வெங்கடேஷ்.. உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மீனா.

மேலும் அஜித் விஜய் பிரசாந்த் ஆகியோருடனும் நடித்துள்ளார் மீனா.

‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் ரஜினியுடன் குழந்தையாக நடித்தவர் மீனா.

பின்னர் எஜமான் முத்து வீரா படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த மீனா 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

அட்லி இயக்கிய ‘தெறி’ படத்தில் விஜய்யின் மகளாக நடித்தவர் நைனிகா.

மேலும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்தில் அரவிந்தசாமியின் மகளாகவும் நடித்தார் நைனிகா.

மீனா தன்னுடைய கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.

கடந்த ஆண்டு மீனா மற்றும் அவரது கணவர் வித்யாசாகர் கொரோனாவில் பாதிப்படைந்தனர்.

இவர்கள் கொரொனாவிலிருந்து மீண்டாலும் அதன் பக்கவிளைவுகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர் வித்யாசாகர்

நுரையீரலில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்துள்ளார் வித்யாசாகர்.

நுரையீரல் பாதிப்படையவே அதை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் வித்யாசாகர்.

நுரையீரல் டோனருக்காக (அதாவது நுரையீரல் தானமாக வழங்குபவர் எவரேனும் இருந்தால்) அவர்களுக்காகக் காத்திருந்த சூழ்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் நுரையீரல் முற்றிலும் செயலிழந்து உள்ளது. இதனால் எக்மோ சிகிச்சையில் இருந்துள்ளார்.

பின்னர் எம்ஜிஎம் மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும் அவரது உடல் நிலைமை மோசம் அடைந்துள்ளது. எனவே சிகிச்சை பலன் இன்றி இன்று ஜூன் 28ஆம் தேதி இரவு காலமானார் வித்யாசாகர்.

தன் இளம் வயதிலேயே தன் கணவரை இழந்துள்ளார் நடிகை மீனா.

மேலும் நைனிகா தன் குழந்தை பருவத்தில் தன் தந்தையை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Meenas husband Vidyasagar passes away.

கூடுதல் தகவல்..

அதாவது புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கிற போது உண்டாகக் கூடிய நோய். பெங்களூருவில் அவருடைய வீட்டுக்கு அருகே நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. அதனால் அலர்ஜி ஏற்பட்டு அவருக்கு சுவாசப் பிரச்னை ஏற்பட்டது. ஏற்கெனவே இந்தப் பாதிப்பு இருந்த நிலையில் கொரோனா வைரஸாலும் அவர் பாதிக்கப்பட்டார்

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.; ஒரேநாளில் சிம்பு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.; ஒரேநாளில் சிம்பு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்த ‘மாநாடு’ படம் 117 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

எனவே சிம்புவின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது சிம்பு நடிப்பில் ‘மஹா’ மற்றும் ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய படங்கள் ரீலுசுக்கு தயாராகவுள்ளன.

(மகா திரைப்படம் அடுத்த ஜூலை மாதம் 22ம் தேதி வெளியாக உள்ளதாக இன்று சற்றுமுன் அறிவிப்பு வெளியானது. இந்த செய்தியை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.)

சில மாதங்களுக்கு முன் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்ற ‘காலத்துக்கும் நீ வேணும்…’ என்ற பாடல் வெளியானது.

இப்படத்தை கௌதம் மேனன் இயக்க ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

‘வெந்து தணிந்தது காடு’ பட இசை விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமான நடத்த படத்தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் சிம்புவின் தந்தை டிஆர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் இந்த விழா ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும் சிம்பு மற்றும் டி ஆர் இருவரும் தற்போது அமெரிக்காவில் உள்ளனர்.

அங்கு டி ராஜேந்தருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டிஆர் உடல்நலம் தேறியபின்பு இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்ப்பார்க்கலாம்.

இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தை செப்டம்பர் 15ம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஒரே நாளை சிம்பு படத்தில் இரண்டு பட ரிலீஸ் தேதி அறிவிப்புகளும் வெளியானது சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

Double treat for Simbu fans in a single day

‘மாநாடு’ படத்தின் ‘மஹா’ வெற்றிக்கு பிறகு சிம்புவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அப்டேட்

‘மாநாடு’ படத்தின் ‘மஹா’ வெற்றிக்கு பிறகு சிம்புவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த ‘மாநாடு’ படம் கடந்த 2021 நவம்பர் மாதம் வெளியானது.

இந்த படம் சிம்புவுக்கு மாபெரும் வெற்றியைத் தந்தது.

எனவே அவரின் அடுத்த படம் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

இந்த நிலையில் நடிகர் சிம்பு மற்றும் நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மஹா’.

‘வாலு’ படத்திற்கு பிறகு சிம்பு ஹன்சிகா ஜோடி இதில் இணைந்துள்ளது.

‘வாலு’ பட சமயத்தின் போது இவர்களுக்குள் காதல் முளைத்தது. அதன்பின்னர் இவர்கள் பிரேக்கப் செய்துகொண்டனர்.

இந்த நிலையில் இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் என்பவர் தயாரித்துள்ளார்.

இந்த படம் நடிகை ஹன்சிகாவின் 50வது படமாகும்.

இந்தப்படத்தை யு.ஆர்.ஜலீல் என்கிற உபைத் ரஹ்மான் ஜமீல் என்பவர் இயக்கினார்.

ஒரு கட்டத்தில் தனக்கு தெரியாமல் படத்தை முடித்து, ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சிப்பதாகக்கூறி, படத்தை வெளியிட தடைகோரி இயக்குனர் ஜமீல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்தப் படத்தை தனக்கு தெரியாமல் தன் உதவி இயக்குனரை வைத்து படம் பிடித்து உள்ளார் தயாரிப்பாளர் என்ற குற்றச்சாட்டை அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார் டைரக்டர் ஜலீல்.

மேலும் அதற்கான நஷ்ட ஈடாக ரூபாய் 10 லட்சம் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த பிரச்சினைகளால் படத்தின் வெளியீடு தள்ளிக் கொண்டே போனது.

கிட்டத்தட்ட 2 – 3 ஆண்டுகளாக இந்த படம் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அடுத்த மாதம் ஜூலை 22-ஆம் தேதி ‘மஹா’ படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Simbu’s next film release date update

‘அடங்காதே’ பட இயக்குனரின் அடுத்த அதிரடி.; ஹரிஷ் – அதுல்யாவின் பற்றி எரியும் போஸ்டர்

‘அடங்காதே’ பட இயக்குனரின் அடுத்த அதிரடி.; ஹரிஷ் – அதுல்யாவின் பற்றி எரியும் போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜிவி பிரகாஷ் & சரத்குமார் இணைந்து நடித்த ‘அடங்காதே’ படத்தை இயக்கியவர் சண்முகம் முத்துசாமி.

இவரின் அடுத்த பட இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அதுல்யா இணைந்து நடித்து வருகின்றனர்.

எம்எஸ் பிரபு என்பவர் ஒளிப்பதிவு செய்ய திபு நினன் தாமஸ் இசை அமைக்கிறார்.

தேர்ட் ஐ என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பாக தேவராஜன் மார்க்கண்டேயன் தயாரித்துள்ளார்.

இந்தநிலையில் இந்தப்படத்திற்கு டீசல் என்று டைட்டில் வைத்து ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

ஒரு போஸ்டரில் அனல் பறக்க போஸ் கொடுத்துள்ளார் ஹரிஷ் கல்யாண்.

மற்றொரு போஸ்டரில் ஹரிஷ் மற்றும் அதுல்யா இணைந்து டீசல் டேங்க் பின்னணியில் போஸ் கொடுத்துள்ளனர்.

Adangathey director’s next film is titled Diesel

‘விக்ரம்’ படத்தை தொடர்ந்து விக்ரம் நடித்த படத்தையும் வாங்கினார் உதயநிதி

‘விக்ரம்’ படத்தை தொடர்ந்து விக்ரம் நடித்த படத்தையும் வாங்கினார் உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’.

நடிகர் சீயான் விக்ரம் இந்த படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டியும், வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க செவன்த் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதே நிறுவனம் சமீபத்தில் தயாரித்து வெளியான திரைப்படம் காத்து வாக்குல இரண்டு காதல்.

இதில் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார்.

இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தற்போது இதே நிறுவனம் தயாரித்த கோப்ரா படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த படமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படம் ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் திரையரங்கு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த ‘விக்ரம்’ படத்தையும் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தான் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக ‘டான்’ உள்ளிட்ட மிகப் பெரிய படங்களின் வெளியீட்டு உரிமையை உதயநிதி பெற்று வருகிறார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Red Giant Movies Acquires TN Distribution Rights Of Vikram Starrer Cobra

More Articles
Follows