கரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் 1 கோடி தரும் ஜாக்கிசான்

கரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் 1 கோடி தரும் ஜாக்கிசான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jackie chan announces 1 crore for Carona Virus Medicineசீனா நாட்டில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் இந்த உலகத்தையே உலுக்கியுள்ளது.

இந்த வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகள் அச்சத்தில் இருந்தாலும் சீன மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இதுவரை பல்லாயிரக்கணக்கான உயிர்களை இந்த வைரஸ் பலி வாங்கியுள்ளது.

உலகின் சிறந்த மருத்துவர்களை இந்த வைரஸை கண்டு அச்சத்தில் உள்ளனர்.

‘எலும்புகள் உடைந்தபிறகு ஆஸ்கர் விருது…’ ஜாக்கிசான் பெருமிதம்

ஆராய்ச்சிகள் செய்து இதற்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் கரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்க தான் தயாராக இருப்பதாக உலகப்புகழ் பெற்ற ஆக்ஷன் நடிகர் ஜாக்கிசான் அறிவித்துள்ளார்.

அவரின் பதிவில்… அறிவியலும், தொழில்நுட்பமும் சேர்ந்துதான் இந்த வைரஸை வெற்றிகொள்ள முடியும்.

பலரும் இதே எண்ணத்தில் இருப்பீர்கள் என நம்புகிறேன். கரோனாவுக்கு விரைவில் மாற்று மருந்து கண்டுபிடிக்கப்படும் என உறுதியாக நம்புகிறேன்.

தனிப்பட்ட நபரோ அல்லது ஒரு குழுவோ இதற்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ஒரு கோடி) தொகையால் நன்றி சொல்ல விரும்புகிறேன். என தெரிவித்துள்ளார்.

Jackie chan announces 1 crore for Carona Virus Medicine

விஜய்-அன்பு செழியன்-AGSக்கு சம்மன்; கால அவகாசம் கேட்ட விஜய்

விஜய்-அன்பு செழியன்-AGSக்கு சம்மன்; கால அவகாசம் கேட்ட விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay gets Income Tax Dept notice He seeks more timeமாஸ்டர் பட சூட்டிங்கில் கலந்துக் கொண்டிருந்த விஜய்யை அழைத்து சென்று அவரது வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்தனர்.

மேலும் பைனான்சியர் அன்பு செழியன், பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் உள்ளிட்ட இடங்களிலும் ஓரிரு தினங்களாக சோதனை செய்தனர்.

இதில் நிறைய ஆவணங்களை வருமான வரித்துறை கைப்பற்றியது.

விஜய்க்கு பயப்படுகிறதா பாஜக..? டைரக்டர் அமீர் ஓபன் டாக்.

இந்த நிலையில் நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோருக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அதில் சொத்துக்களில் முதலீடு செய்ய தேவையான நிதி ஆதாரம், எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை செய்ய, நடிகர் விஜய் உள்ளிட்ட மூவரும் 3 நாட்களுக்குள் ஆஜராகி, கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி என்.எல்.சி வளாகத்தில் நடைபெற்று வரும் மாஸ்டர் சூட்டிங்கில் விஜய் கலந்துக் கொண்டிருப்பதால் அவர் ஆஜராக கால அவகாசம் கேட்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Vijay gets Income Tax Dept notice He seeks more time

ராம்குமார் – வரலஷ்மி சரத்குமார் – இனியா நடிக்கும் “கலர்ஸ்”

ராம்குமார் – வரலஷ்மி சரத்குமார் – இனியா நடிக்கும் “கலர்ஸ்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

colors movie pooja stillசௌதி மற்றும் U.A.E. மொழிகளில் பல படங்களை தயாரித்துள்ள பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான “லைம் லைட் பிக்சர்ஸ்” முதன்முதலாக இந்தியாவில் தமிழில் “கலர்ஸ்” எனும் படத்தை தயாரிக்கின்றது. நேற்று இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது.

நடிகர்கள் ஜெயராம், திலீப், சுரேஷ் கோபி, குஷ்பு , மாதவி, தேவயானி உள்ளிட்ட பல பிரபல நடிகர்களை வைத்து மலையாளத்தில் 25 படங்களை இயக்கியுள்ள இயக்குனர் நிஜார் இயக்கும் முதல் தமிழ் படம் “கலர்ஸ்”. இவர் மலையாளத்தில் பிரபலமான கமர்ஷியல் இயக்குனர் என்பது குறிப்பிடதக்கது.

ராம்குமார் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் வரலஷ்மி சரத்குமார், இனியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

ப்ரியதர்ஷன், ஜோசி உள்ளிட்ட பல பிரபல இயக்குனர்களுடன் பணியாற்றியவரும், தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களுக்கு இசையமைத்தவருமான S.P.வெங்கடேஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு – ஆஷி இட்டிகுலா

இயக்கம் – நிஜார்

நிர்வாக தயாரிப்பு – ஜியா உம்மன்

கதையாசிரியர் – ப்ரசாத் பாரபுரம்

இசை – S.P.வெங்கடேஷ்

ஒளிப்பதிவு – சஜன் கலதில்

படத்தொகுப்பு – விஷால்

புரொடக்ஷன் டிசைனர் – வல்ஷன்

புரொடக்ஷன் கண்ட்ரோலர் – நிஹார் முகமது

சண்டைப்பயிற்சி – “ரன்” ரவி

நடனம் – ப்ரதீப்

பாடல்கள் – வைரபாரதி

மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

இணை இயக்குனர்கள் – ரஷல் நியாஷ், சத்யசரவணா

துணை இயக்குனர் – அஸ்வின் மோகன்

உதவி இயக்குனர் – சபீர்

காஸ்ட்டுயூமர் – குமார் எடப்பால்

மேக்கப் – லிபின் மோகனன்

ஸ்டில்ஸ் – அனில் வந்தனா

டிசைன்ஸ் – முரளி

விநியோகம் – லைம் லைட் பிக்சர்ஸ்

தமிழ்நாட்டு ரசிகர்களை எளிதில் திருப்திப் படுத்த முடியாது ” மிரட்சி ” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஜீவா பேச்சு..

தமிழ்நாட்டு ரசிகர்களை எளிதில் திருப்திப் படுத்த முடியாது ” மிரட்சி ” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஜீவா பேச்சு..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jiiva at Miratchi audio launchடேக் ஓ.கே கிரியேஷன்ஸ் வழங்கும் படம் மிரட்சி. ஜித்தன் ரமேஷ் முதன் முதலாக வில்லனாக நடித்துள்ள இப்படத்தை M.V கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கிறார். இன்று இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

விழாவில்,

மிரட்சி படத்தின் தயாரிப்பாளர் ராஜன் பேசியதாவது,

“இந்தப்படம் நன்றாக வந்துள்ளது. ரமேஷ் சார் சிறப்பாக நடித்துள்ளார். நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி” என்றார்

நாயகி ஹீனா ஸஹா பேசியதாவது,

“இது என் முதல் தமிழ்ப்படம். இந்தப்படத்தில் நடித்ததை பெரிய அதிர்ஷ்டமாக உணர்கிறேன். அடுத்தடுத்த தமிழ்ப்படங்களில் நன்றாக தமிழ் பேசிடுவேன். இந்தப்படத்தில் பயணித்த அனுபவம் மிக சிறப்பானது. படத்தின் டிரைலரை நான் இப்பதான் பார்த்தேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்

இசை அமைப்பாளர் ஆனந்த் பேசியதாவது,

“நான் தெலுங்கில் 20 படங்களில் இசை அமைத்துள்ளேன். இது தமிழில் எனக்கு முதல் படம். தமிழ் படத்தில் இசை அமைக்க வேண்டும் என்பது என் கனவு. எனக்கு வாய்ப்பளித்த வம்சி கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. இந்தப்படத்தில் பாடல்கள் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. படமும் சிறப்பாக வந்திருக்கிறது” என்றார்..

இயக்குநர் M.V கிருஷ்ணா பேசியதாவது,

“இந்த விழாவிற்கு வருகை தந்த ஜீவா சாருக்கு முதல் நன்றி. டிரைலர் நன்றாக வந்துள்ளது. அதற்கு சப்போர்ட் பண்ண அனைவருக்கும் நன்றி. இது சின்னப்படமாக துவங்கி பெரிய படமாக வளர்ந்துள்ளது. தயாரிப்பாளர் ராஜன் சாருக்கு நன்றி. இந்தப்படம் இயக்குநர் படம் கிடையாது. நிச்சயம் தயாரிப்பாளர் படம் தான். அவர் என்னை நம்பி இந்தப்படத்தைத் தந்துள்ளார். இந்தப்படத்தில் ரமேஷ் வில்லன் மட்டும் அல்ல. அவர் ஹீரோவும் கூட. இந்தப்படத்திற்கு பிறகு ரமேஷ் பெரிதாக கவனிக்கப்படுவார். நாயகி ஹீனாவிற்கு ஒரு ப்ரைட் ப்யூச்சர் இருக்கிறது. ஆனந்த் தான் இன்றைய ஹீரோ. அவர் சிறப்பாக இசை அமைத்துள்ளார் பெஸ்ட் வொர்க்கை கொடுத்துள்ளார். ரமேஷ், சுரேஷ் என இரு பாடாலசியர்களும் பாடல்களை நன்றாக எழுதியுள்ளார்கள். படத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள்” என்றார்

ஜித்தன் ரமேஷ் பேசியதாவது,

“இந்த விழாவிற்கு நிறைய ஆர்ட்டிஸை கூப்பிட்டிருந்தேன். வர்றேன் என்றார்கள். ஆனால் பிஸி காரணமாக வரவில்லை. என் தம்பி ஜீவாவை கடைசி நேரத்தில் தான் கூப்பிட்டேன். வந்துவிட்டார் அவருக்கு நன்றி. வம்சி என்னிடம் கதை சொல்லும் போது ஹீரோவாக நடிக்க தான் கேட்டார். நான் தான் வில்லன் கேரக்டரைக் கேட்டு வாங்கினேன். ஏன் என்றால் அந்தக் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. தயாரிப்பாளர் ராஜன் சார் இப்படத்தை பெரிய படமாக மாற்றி விட்டார். இசை அமைப்பாளர் பெயர் இங்கு தான் ஆனந்த். ஆந்திராவில் மந்த்ரா ஆனந்த். அவரை ஆந்திராவில் அனைவருக்கும் தெரியும். இந்தப்படத்தில் அவர் சிறப்பான இசையை அமைத்துளார்.இந்தப் படத்திற்கு அனைவரும் சப்போர்ட் பண்ணுங்க” என்றார்

ஜீவா பேசியதாவது,

“இப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை இந்த விழாவில் உங்களை சந்திப்பது சந்தோசமாக இருக்கிறது. இங்கு யாருமே தோல்விப் படம் கொடுக்க நினைப்பதில்லை. எல்லாருமே உண்மையாகத் தான் உழைக்கிறார்கள். எல்லோரின் டேலண்ட்டும் எதோ ஒருநாள் எதோ ஒரு விதத்தில் வெளிப்படும். ரமேஷுக்கு டர் ஸ்டைலில் சாருக்கானுக்கு அமைந்த மாதிரி இப்படம் அமையும். இசை அமைப்பாளர், ஹீரோயின், அனைவருக்கும் என் வாழ்த்துகள் . நான் ராம் படம் நடிக்கும்போது நான் வில்லனா, ஆண்டி ஹீரோவா என்று தெரியாமல் இருந்தேன். அப்போது அப்படத்தின் ஆர்ட் டைரக்டரிடம், ஆண்டி ஹீரோ என்பதைப் பேசினேன். அப்போது ஒரு லோக்கல் ஆள் ஆண்டி என்றால் அத்தை தானே? என்று கேட்டார். அப்போது ஆடியன்ஸ் அவ்வளவு வெகுளியாக இருந்தார்கள். ஆனால் இப்போது தெளிவாக இருக்கிறார்கள். ஆங்கிலப்படம் கூட எல்லாரையும் திருப்தி படுத்தும் படி எடுத்து விடலாம். ஆனால் தமிழ்ப்படம் அப்படி எடுப்பது கஷ்டம். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் விதவிதமான மக்கள் இருக்கிறார்கள். அவர்களை அவ்வளவு எளிதாக திருப்தி படுத்த முடியாது. ஆனால் மிரட்சி படம் அதைச் செய்யும். காரணம் டிரைலர் மிக வித்தியாசமாக இருப்பதால் நிச்சயம் இப்படம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நம்புகிறேன்; வாழ்த்துகிறேன்” என்றார்

“ஓ மை கடவுளே” – ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு – ரித்திகா சிங் !

“ஓ மை கடவுளே” – ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு – ரித்திகா சிங் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oh my kadavuleமுதல் படத்திலேயே தேசிய விருதை வென்று இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகையானவர் ரித்திகா சிங். மிகக் கவனமுடன் தன் மனதிற்கு நெருங்கிய கதாப்பாத்திரங்களை மட்டுமே செய்து வருகிறார். சிறு இடைவெளிக்கு பிறகு தமிழில், அவர் நடிப்பில், பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகும் “ஓ மை கடவுளே” படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு பெற்றிருப்பதில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.

படம் குறித்து நடிகை ரித்திகா சிங் பகிர்ந்து கொண்டதாவது…

“ஓ மை கடவுளே” என் வாழ்வில் ஸ்பெஷலான படம். 3 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வந்திருக்கிறேன். மனதிற்கு பிடித்த நல்ல கதாப்பத்திரங்கள் மட்டுமே செய்வது என்கிற முடிவில் இருந்தேன். இந்தப்படத்தின் கதை கேட்டபோது இது எனக்கு கிடைத்த தங்கவாய்ப்பாக தோன்றியது. இக்கதையில் முதலில் என்னை ஈர்த்த விசயம், நாயகி ஒரு கிறிஸ்த்துவ மணப்பெண்ணாக வருவது தான். என் நெடுநாளைய சிறு வயது கனவு அது. மேலும் படத்தின் திரைக்கதை அற்புதமாக இருந்தது. படம் முழுக்க நீங்கள் புன்னகை தவழும் முகத்துடன் இருப்பீர்கள். அசோக் செல்வன் மிகத்திறமை வாய்ந்த நடிகர் இப்படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் குவியும். வாணி போஜன் ஒரு அற்புதமான நடிகை. அவரை சுற்றி இருப்பவர்களிடம் எப்பொதும் புன்னகை தவழும். நேர்மறை தன்மை மிக்க பண்பாளர். இப்படம் மூலம் அவர் என் சகோதாரியாக மிக நெருக்கமான உறவாகிவிட்டார். “ஓ மை கடவுளே” வெறும் ரொமான்ஸ் படம் மட்டுமே இல்லை. உறவுகளின் வலிமையை, நட்பின் பெருமையை பேசும் படமாக இப்படம் இருக்கும். டிரெய்லரில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் படத்தில் பெரும் பங்கு வகிக்கும். இப்படம் உங்கள் மனதில் பல காலம் நீங்காது நிற்கும் என்றார்.

2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படத்தை Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து “ஓ மை கடவுளே” படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

அசோக்செல்வன் நாயகனாக நடிக்க ரித்திகா சிங் நாயகியாக நடித்துள்ளார்.
வாணி போஜன், M S பாஸ்கர், சாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து , இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து

இசை – லியான் ஜேம்ஸ்

ஒளிப்பதிவு – விது அயன்னா

படத்தொகுப்பு – பூபதி செல்வராஜ்

கலை இயக்கம் – இராமலிங்கம்

உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்

உடைகள் – முகம்மது சுபையர்

சண்டைப் பயிற்சி – ராம்குமார்

பாடல்கள் – கோ சேஷா

புகைப்படம் – ராஜா

தயாரிப்பு மேற்பார்வை – சேதுராமலிங்கம், பூர்னேஷ்

நிர்வாக தயாரிப்பு – நோவா.

வேன் மீது ஏறி நின்று மாஸ் காட்டிய ‘மாஸ்டர்’ விஜய்

வேன் மீது ஏறி நின்று மாஸ் காட்டிய ‘மாஸ்டர்’ விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாஸ்டர்’ பட சூட்டிங்கில் விஜய் நடித்துக் கொண்டிருந்தபோதே வருமானத் வரித்துறையினர் விஜய்யை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதனால் 2 நாட்களாக சூட்டிங் தடைப்பட்டது.

விஜய்யிடம் இருந்து ரொக்கமாக பணம் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் அவரிடம் உள்ள சில ஆவணங்களை வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றதாக கூறப்பட்டது.

இதனையடுத்து மீண்டும் மாஸ்டர் சூட்டிங்கில் கலந்துக் கொண்டார் விஜய்.

ஆனால் பாதுகாக்கப்பட்ட இடமான நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க கூடாது என பாஜக.வினர் போராட்டம் நடத்தினர்.

இதனையறிந்த விஜய் ரசிகர்கள் அங்கு திரண்டனர்.

இதனால் இரு தரப்பும் மோதல் உருவாகவே பாஜகவினரை சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதனால் மாஸ்டர் சூட்டிங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரியிலிருந்து காரில் வந்த விஜய் சூட்டிங்கில் கலந்துக் கொண்டார்.

என்.எல்.சி. 2-வது சுரங்க நுழைவாயில் பகுதி வழியாக அவரது கார் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு சென்றது.

என்.எல்.சி. தொழிலாளர்கள் மற்றும் வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த படப்பிடிப்பு வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த படப்பிடிப்புக்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும். மந்தாரக்குப்பம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

இந்த நிலையில் விஜய்யை காண என்.எல்.சி முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.

எனவே படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த அங்குள்ள வேன் மீது ஏறி தன் ரசிகர்களை பார்த்து கை அசைத்து செல்ஃபி எடுத்தார் விஜய்.

Vijay fans Mass crowd at Master shooting Neyveli spot

More Articles
Follows