விருது பெற ஆசை.. பொறுப்பற்ற செயல்.; தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கே ஆர் கண்டனம்

விருது பெற ஆசை.. பொறுப்பற்ற செயல்.; தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கே ஆர் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கே ஆர் இன்று வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை வெளிவந்த தமிழ் படங்களில் சிறந்த படம், சிறந்த நடிகர் நடிகைகள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 10 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவையும், அதே காலகட்டத்தில் வெளியான படங்களில் மானியம் பெற தகுதியான சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் 14 பேர் அடங்கிய ஒரு குழுவையும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

அதற்காக மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் அரசு அறிவித்துள்ள இரண்டு குழுக்களிலும் யார் தலைவர் மற்றும் உறுப்பினராக இருக்கிறார்கள் என்பதை எப்போதுமே ரகசியமாக வைத்திருப்பது தான் மரபு.

விருது மற்றும் மானியத்திற்கு உரியவர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் போது தான் அதை தேர்வு செய்தவர்கள் யார் என்பதே தெரியவரும்‌.

தேசிய திரைப்பட விருது தேர்வு குழு மற்றும் சர்வதேச திரைப்பட விருது தேர்வு குழுக்களில் நான் தலைவர் மட்டும் உறுப்பினராக பங்கேற்ற அனுபவத்தில் இதை குறிப்பிடுகிறேன்.

ஆனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இரண்டு தேர்வுக் குழுவிலும் இடம் பெற்றிருக்கும் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெயர்களை சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.

இது விளம்பரப்படுத்துவதற்கான அறிக்கை அல்ல. உறுப்பினர்கள் மூலம் அந்த செய்தி பல வாட்ஸ் அப் குரூப் களிலும் பகிரப்பட்டு சோசியல் மீடியாக்கள் வரை வந்துவிட்டது.

இது மிகவும் தவறான முன்னுதாரணம்.்ஏனென்றால் ஒவ்வொரு நடிகருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தங்களுக்கும் தங்கள் படங்களுக்கும் விருது கிடைக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும் .

அத்துடன் ஒரு படத்திற்கு அரசாங்கம் ரூ. 7 லட்சம் மானியமாக வழங்குவதால் அந்த தொகையை பெற வேண்டும் என்ற ஆர்வம் நிச்சயமாக இருக்கும். இதனால் சிலர் சம்பந்தப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கொண்டு ஆதிக்கம் செலுத்தவோ நிர்பந்தப்படுத்தவோ அல்லது வேறு வழிகளில் முயற்சி செய்யவோ வாய்ப்பு இருக்கிறது.

ஒரு சிலர் இதை தவறாக பயன்படுத்தி தயாரிப்பாளர்களை ஏமாற்றவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இப்படி ஒரு சூழல் உருவாக காரணமாக இருந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பொறுப்பற்ற செயல் கண்டிக்கத்தக்கது.

ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களின் நலனுக்காக இன்னும் மூன்று ஆண்டுகள் நீங்கள் செயல்பட வேண்டி இருப்பதால்
அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று சங்க நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

கேயார்

Irresponsible act.; KR Condemns Producers Association

தனுஷ் ரசிகர்களை ஏமாற்றிய பிரபல நிறுவனம் மன்னிப்பு கோரியது.!

தனுஷ் ரசிகர்களை ஏமாற்றிய பிரபல நிறுவனம் மன்னிப்பு கோரியது.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் தனுஷுடன், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் மற்றும் நிவேதிதா சதீஷ் நடித்துள்ளனர்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

‘கேப்டன் மில்லர்’ படம் குறித்த அப்டேட் இன்று காலை 10:25 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு
நேற்று அறிவித்தது.

இந்நிலையில், கேப்டன் மில்லர்’ படத்தின் அப்டேட் 10:25 மணிக்கு வெளியாகவில்லை.

இதனால், தனுஷின் படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்த ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.

மேலும், சத்ய ஜோதி பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் “தாமதத்திற்கு மன்னிக்கவும் ரசிகர்கள், ‘கேப்டன் மில்லர்’ படத்தின் அறிவிப்பு இன்று மாலை 4:00 மணிக்கு வெளியாகும்” என நேரத்தை மாற்றியது.

Captain Miller update to be out shortly

‘கங்குவா’ டெக்னீஷியன் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்ட சூர்யா – ஜோதிகா

‘கங்குவா’ டெக்னீஷியன் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்ட சூர்யா – ஜோதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யாவின் மெகா பட்ஜெட் படமான ‘கங்குவா’ வர்த்தக வட்டாரங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அலைகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொடைக்கானலில் ஒரு புதிய மேஜர் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது, அங்கு ஹை ஆக்டேன் ஆக்ஷன் காட்சிகள் தயாராகி வருகின்றன.

ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர், சூர்யா ஜோதிகாவுடன் இருக்கும் குடும்ப புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ‘கங்குவா’ படப்பிடிப்பிற்கு இடையே கொடைக்கானலில் அன்பான வரவேற்பு அளித்த சூர்யா, ஜோதிகாவுக்கு மனமார்ந்த நன்றிகள். இது உண்மையிலேயே மறக்க முடியாத மகிழ்ச்சியான சந்தர்ப்பம்!” என தெரிவித்துள்ளார்.

Suriya and Jyothika’s hearty gesture to ‘Kanguva’ chief technician and family

‘கேம் சேஞ்சரை முடித்துவிட்டு இந்தியனை கவனிக்கும் ஷங்கர்

‘கேம் சேஞ்சரை முடித்துவிட்டு இந்தியனை கவனிக்கும் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் ஷங்கர் ஒரே நேரத்தில், கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’, ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படங்களை இயக்கி வருகிறார்.

இந்தியன் 2 படப்பிடிப்புக்காக தென்னாப்பிரிக்கா சென்றிருந்த அவர், கடந்த மாதம் இந்தியாவுக்கு திரும்பி
வந்தார்.

ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் 23ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி,அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஸ்ரீகாந்த், ஜெயராம், நவீன் சந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், ‘கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் ட்விட்டர் பதிவில், ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் அட்டகாசமான க்ளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும், இன்று முதல் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Shankar’s ‘Game Changer’ movie climax scens wrapped up

JUST IN அஜித்தை வைத்து ட்ரெண்ட் செட் செய்தவர் வெங்கட் பிரபு.. – நடிகர் ராம்கி

JUST IN அஜித்தை வைத்து ட்ரெண்ட் செட் செய்தவர் வெங்கட் பிரபு.. – நடிகர் ராம்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள படம் ‘கஸ்டடி’.

இவர்களுடன் அரவிந்தசாமி, சரத்குமார், பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு இளையராஜா – யுவன் இணைந்து இசை அமைத்துள்ளனர்.

இந்தப் படம் வரும் மே 12-ம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் தற்போது லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராம்கி மேடையில் பேசும் போது…

‘கஸ்டடி’ படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. வெங்கட் பிரபு தன் படங்கள் மூலம் ட்ரெண்ட் செட் செய்வார்.

‘மங்காத்தா’ படத்தில் நடிகர் சால்ட் & பெப்பர் லுக்கில் அஜித்தை நடிக்க வைத்தார். இன்று நாங்கள் வெளியே வரும்போது சால்ட் அண்ட் பெப்பர் லக்கில் வெளியே வருவதற்கு அதுதான் காரணம்்

விரைவில் வெங்கட் பிரபு ஹிந்தியில் படம் செய்ய வேண்டும்.. செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று பேசி முடித்தார் ராம்கி.

அதன்பின்னர் தொகுப்பாளினி விஜே அஞ்சனா.. சார் உங்க இளமையின் ரகசியம் சொல்லிட்டு போங்க சார் என்று கெஞ்சினார்.. ராம்கி சிரித்தபடியே சென்றார்.

Venkat Prabu set trend with Ajith says Ramki

JUST IN 65 பேர் தான் வந்துருங்கீங்க.; ‘கஸ்டடி’ ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் அசிங்கப்படுத்திய ‘பிக்பாஸ்’ பிரபலம்

JUST IN 65 பேர் தான் வந்துருங்கீங்க.; ‘கஸ்டடி’ ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் அசிங்கப்படுத்திய ‘பிக்பாஸ்’ பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள படம் ‘கஸ்டடி’.

இவர்களுடன் அரவிந்தசாமி, சரத்குமார், பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு இளையராஜா – யுவன் இணைந்து இசை அமைத்துள்ளனர்.

இந்தப் படம் வரும் மே 12-ம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் தற்போது லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் பிக்பாஸ் புகழ் அபிஷேக் மற்றும் விஜி அஞ்சனா தொகுத்து வழங்கி வருகின்றனர்.

மாலை 6:00 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்ட இந்த நிகழ்ச்சி கூட்டமே வரவில்லை என்பதால் காலம் தாமதம் ஆகி 8 மணி அளவில் துவங்கியது.

அப்போது மேடையில் பேசிய அபிஷேக்..

“மொத்தமே 65 பேர் தான் வந்து இருக்கீங்க. கூட்டம் முக்கியமல்ல.. நிகழ்ச்சி தான் முக்கியம்.. ” என பேசிய படியே நிகழ்ச்சியை ஆரம்பித்தார்.

Empty chairs at Custody Pre Release event

More Articles
Follows