என் கிரேக்க கடவுள் ஹ்ருத்திக் ரோஷனை சந்திப்பேன்.. – அர்ஜெய்

என் கிரேக்க கடவுள் ஹ்ருத்திக் ரோஷனை சந்திப்பேன்.. – அர்ஜெய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hrithik Roshan is my role model says Actor Arjaiகிராபிக்ஸ் டிசைனராக இருந்து தற்போது பலருக்கு அறிமுகமான நடிகராக மாறியுள்ளவர் நடிகர் அர்ஜெய்.

நடிகர் விஷாலின் நட்பு இவருக்கு கிடைக்கவே அதனை பயன்படுத்தி தற்போது பல படங்களில் நடித்துள்ளார்.

‘நான் சிகப்பு மனிதன்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘தெறி’, ‘சண்டக்கோழி 2’ உள்ளிட்ட பலர் படங்களில் இவரின் கேரக்டர் பேசப்படும் வகையில் இருந்தன.

படங்களில் நடிக்க தொடங்கிய பின் சினிமாவுக்கு ஏற்றவாறு தன் உடலை சிக்ஸ் பேக் வைத்து அசத்தி வருகிறார்.

தான் உடலமைப்பை மாற்றி, நடிகராக ஆனதற்கு காரணம் ஹ்ருத்திக் ரோஷன் என்று ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் அர்ஜெய்.

அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:

“2006-ம் ஆண்டு, நான் டிஜிட்டல் ஊடகம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தேன். அங்கு என் கனவான நடிப்பைப் பற்றி நான் மறந்து விட்டிருந்தேன்.

அந்த இடத்தில் என்னுடன் பல வட இந்தியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். ஒரு நாள் வேலை முடிந்து நான் வீட்டுக்குச் செல்லும்போது, இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்குச் சென்று என்ன செய்யப் போகிறாய் என்று சொல்லி, என்னை அவர்களுடன் படத்துக்கு வரச் சொன்னார்கள்.

அப்போதுதான் நான் ‘தூம் 2’ பார்த்தேன். படத்தின் நாயகன் ஹ்ரித்திக் ரோஷன். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.

அவரது நடிப்பையும், நடனத்தையும் விவரிக்க வார்த்தைகள் இல்லை.

ஏன் சென்னை வந்தாய், இப்போது என்ன செய்கிறாய் என்ற கேள்வி எழுந்தது.

அப்போதுதான் நான் ஜிம்முக்குச் செல்வது என்று முடிவெடுத்தேன். அந்த முடிவுக்கு முதல் காரணம் ஹ்ரித்திக் ரோஷன்.

அவர் தான் என் கிரேக்கக் கடவுள். எனது உந்துதல். திரைத்துறையில் நான் நடிகனாக நுழைய வேண்டும் என்று ஆர்வத்தைத் தூண்டியவர்.

இன்று நான் 15 படங்கள் வரை நடித்திருக்கிறேன். ஒருநாள் கண்டிப்பாக நான் எனது கிரேக்கக் கடவுளைச் சந்திப்பேன்”.

இவ்வாறு அர்ஜெய் தெரிவித்துள்ளார்.

Hrithik Roshan is my role model says Actor Arjai

சன் டிவியில் ரஜினி விஜய் சூர்யா படங்கள்; 2 நாட்களில் 10 படங்கள்

சன் டிவியில் ரஜினி விஜய் சூர்யா படங்கள்; 2 நாட்களில் 10 படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sun TV celebrating 27 years with 10 movies in 2 daysகொரோனா வைரசை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டிலேயே கடந்த 18 நாட்களாக முடங்கியுள்ளனர்.

இதனால் டிவி.க்களில் பழைய சீரியல்களை ஒளிப்பரப்ப தொடங்கியுள்ளனர்.

இதனையடுத்து சன் டிவி புதிய முயற்சியாக இதுவரை இல்லாத அளவில் 2 நாட்களில் 10 படங்களை ஒளிப்பரப்ப முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் 13 அன்று 5 படங்களையும் ஏப்ரல் 14 தேதியில் 5 படங்களையும் ஒளிப்பரப்புகின்றனர்.

ஏப்ரல் 13-ம் தேதி காலை 9.30 மணிக்கு ‘கத்திசண்டை’, 12 மணிக்கு ‘ரமணா’, 3 மணிக்கு ‘மீசைய முறுக்கு’, 6,30 மணிக்கு ‘சீமராஜா’ மற்றும் 9.30 மணிக்கு ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

ஏப்ரல் 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு ‘கலகலப்பு 2’, 12.30 மணிக்கு ‘காப்பான்’, 3.30 மணிக்கு ‘டகால்டி’, 6.30 மணிக்கு ‘தர்பார்’ மற்றும் இரவு 9.30 மணிக்கு ‘நண்பேன்டா’ ஆகிய படங்கள் ஒளிபரப்பாகின்றன.

சன் டிவி தொடங்கி 27 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு தான் இந்த ஏற்பாடாம்.

திரைப்படங்களை மட்டுமே ஒளிபரப்பும் பல சேனல்கள் உள்ளன.

ஆனால் அதை தாண்டி தாண்டி இதர சேனல்களில் இப்படியான தொடர் படங்கள் ஒளிபரப்பு இதுவரை நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sun TV celebrating 27 years with 10 movies in 2 days

ஊரடங்கு காலத்தில் ‘மாஸ்க்’ திருமணம் செய்த ஹீரோ & ஹீரோயின்

ஊரடங்கு காலத்தில் ‘மாஸ்க்’ திருமணம் செய்த ஹீரோ & ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actors Arnav Vinyaas and Vihana got married அர்னவ் வினாயஸ் மற்றும் விஹானா… இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

மண்டியா என்ற பகுதியை சேர்ந்தவர் அர்னவ் வினாயஸ். கர்நாடகாவில் சிவமொக்காவை சேர்ந்தவர் விஹானா.

இவர்கள் இருவரும் கன்னட சினிமாவின் இளம் நடிகர், நடிகை ஆவார்கள்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.

எனவே பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய காத்திருந்தனர்.

நட்சத்திர ஜோடிகள் என்பதால் பிரமாண்டமாக திருமணத்தை நடத்தவிருந்தனர்.

ஆனால் தற்போது கொரோனா வைரசை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இவர்கள் மிக எளிமையாக திருமணம் செய்துள்ளனர்.

இருவரின் குடும்பத்தினர் மட்டுமே விழாவில் கலந்துக் கொண்டுள்ளனர்.

மணமக்கள் இருவரும் மாஸ்க் அணிந்தபடியே திருமணம் செய்தனர்.

Actors Arnav Vinyaas and Vihana got married

அடுத்த படத்தை அறிவித்தார் அட்லி; PASSION STUDIOSவுடன் கூட்டணி

அடுத்த படத்தை அறிவித்தார் அட்லி; PASSION STUDIOSவுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Atlees next movie announcement is here விஜய்யின் ஆஸ்தான இயக்குனர்கள் வரிசையில் அண்மையில் இணைந்தார் இயக்குனர் அட்லி.

விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

இதில் பிகில் ரூ. 300 கோடியை அள்ளியதாக நெட்டிசன்கள் அள்ளிவிட்டனர்.

இதனையடுத்து விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்தனர் என்பது வேறுக்கதை.

தற்போது ஷாருக்கானை வைத்து அட்லீ படமெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார் அட்லீ.

படத்தில் நடிப்பது யார்? உள்ளிட்ட விவரங்கள் நாளை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

PASSION STUDIOS நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை அட்லி தயாரிக்கிறாராம்.

ஏற்கெனவே ஐகே இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தை அட்லி தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Atlees next movie announcement is here

ரத்தம் தெறிக்கும் டைட்டில்; அதிரடி வீடியோவை வெளியிட்ட விஷ்ணு விஷால்

ரத்தம் தெறிக்கும் டைட்டில்; அதிரடி வீடியோவை வெளியிட்ட விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishnu vishal next movie titled Mohandas பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகர் ராணாவுடன் விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ள படம் ‘காடன்’.

இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பட வெளியீடு தள்ளிப் போனது.

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எஃப்ஐஆர்’, ‘இன்று நேற்று நாளை 2’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், ”என்னுடைய புதிய படத்தை ஏப்ரல் 11 அன்று தொடங்குவதாக இருந்தேன்.

ரசிகர்களாகிய நீங்கள் அனுமதித்தால் வித்தியாசமான முயற்சியாக டைட்டில் அறிவிப்பை டீசராக வெளியிட உள்ளேன் என கருத்து கேட்டிருந்தார்.

பெரும்பாலான ரசிகர்கள் வெளியிடுங்கள் என கூறியிருந்தனர்.

அதன்படி தற்போது சற்றுமுன் மோகன் தாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள டைட்டில் மோசன் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

ரத்தக்கறை பதிந்த டீசர்ட்டை வாஷிங் மெஷின் போட்டு துவைக்கிறார்.

அத்துடன் விஷ்னு சிக்ஸ் பேக்கில் தன் உடலையும் காட்டியிருக்கிறார்.

இந்த வீடியோ அவரின் ராட்சசன் பட லெவலில் இருப்பதாக ரசிக்ரகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். இதனை ‘களவு’ படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்குகிறார்.

ஒளிப்பதிவாளராக விக்னேஷ் ராஜகோபாலன், இசையமைப்பாளராக கே.எஸ்.சுந்தரமூர்த்தி ஆகியோர் பணிபுரிகின்றனர்.

Vishnu vishal next movie titled Mohandas

பாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்!

பாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rashmi gopinathகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு நாடே முடங்கி கிடக்கிறது. அரசின் உத்தரவை மதித்து சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர். இதில் சிலர் மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக நல்ல ஆலோசனைகளையும் தருகின்றனர். யோகிபாபுவுடன் ‘காக்டெய்ல்’ மற்றும் சி.வி.குமார் தயாரிப்பில் ஒரு படம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ராஷ்மி கோபிநாத் மக்களுக்கு சில ஆலோசனைகளுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்..

“இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்றுநோயாக இருக்கிறது. அதனால் தயவுசெய்து வீட்டேலேயே இருங்கள். பொறுப்பில்லாமல் வெளியில் சுத்த வேண்டாம். பொழுதுபோக்கிற்காக நண்பர்களுடன் அரட்டை அடிக்க, பார்ட்டிக்கு செல்ல என வீட்டைவிட்டு எதற்காகவும் அநாவசியமாக வெளியே செல்லவேண்டாம். அப்படி செய்தால் அது நம் அனைவரையுமே கடுமையாக பாதிக்கும்.

இந்த சமயத்தில் நான் எனது நேரத்தை வீட்டில் எப்படி செலவிடுகிறேன் தெரியுமா..? என்னைப் பற்றி நிறைய அறிந்துகொள்ள முயற்சிக்கிறேன்… எனது உடல்நலத்தில் கவனம் செலுத்துகிறேன். உடற்பயிற்சி செய்வதிலும், கேக் செய்வதிலும், சுத்தம் செய்வதிலும், இதற்கு முன்பு பார்க்க எனக்கு நேரமில்லாத நிறைய திரைப்படங்களை பார்ப்பது, படிப்பது, ஆன்லைனில் ஒரு சில நடிப்பு வகுப்புகளை எடுத்துக்கொள்வது மற்றும் நிறைய தூங்குவது என எனது நேரத்தை பயன்படுத்தி கொள்கிறேன்.

அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்வது என்றாலும் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்.. உங்களுக்கான மாஸ்க்கை நீங்களே தயார்செய்துகொள்ள முடியும்.. எனக்கும் எனது குடும்பத்துக்கும் இந்த மாஸ்க்குகளை என் அம்மா தான் வீட்டிலேயே தயார் செய்தார்.

இந்த ஊரடங்கு முடிந்த பிறகும் நீங்கள் வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாஸ்க் இல்லையா..? உங்கள் முகத்தை மறைக்க துப்பட்டா அல்லது கைக்குட்டையை பயன்படுத்தலாம்..

தயவுசெய்து சுகாதார நிபுணர்களுக்காக மாஸ்க்குகளை கொஞ்சம் விட்டுக்கொடுங்கள். ஏனென்றால் நம்மை விட அதிகமாக அவர்களுக்குத்தான் தேவைப்படும். அவர்கள் அனைவரும் நமக்காக போராடிக்கொண்டு இருக்கும் உண்மையான ஹீரோக்கள்.

பாதுகாப்பாக இருங்கள். ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள். நாம் அனைவரும் நேர்மறை கருத்துக்களுடன் ஒன்றாக இணைந்து இந்த வைரஸை விரட்டியடிப்போம்’ என விழிப்புணர்வு செய்தியுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார் ராஷ்மி கோபிநாத்.

More Articles
Follows