ரஜினி-விஜய்க்கே கிடைக்காத அப்ளாஸ் அஜித்துக்கு மட்டும் எப்படி?

How Ajith getting more Applause than Rajini and Vijayதமிழ் சினிமாவில் வித்தியாசமான நடிகர்களில் தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜித்.

இவரை தமிழக ரசிகர்கள் தல என்றே அழைக்கின்றனர்.

ரசிகர் மன்றமே வேண்டாம் என்று இவர் சொன்னாலும் இவருக்கான ரசிகர்கள் வட்டம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது.

எந்தவொரு ஹீரோவாக இருந்தாலும் தனக்கு முடி நரைத்துவிட்டால், அதில் கருப்பு டை அடித்துவிட்டுதான் படத்தில் நடிப்பார்கள். ஆனால் தன் வெள்ளைத் தாடி, மீசை, நரைத்த தல முடி என இயற்கையான தோற்றத்துடன் நடித்து வருகிறார் இவர்.

மேலும் படத்தின் சில காட்சிகளில் தன் வயது உட்பட உண்மையான தகவல்களை அனைத்தையும் சொல்லி நடித்திருக்கிறார் தல.

சினிமாவில் நடிப்பதை தவிர இவர் எதுவும் செய்யவில்லை. அதாவது பாடுவதோ, இயக்குவதோ, பாடல் எழுதுவதோ என எதையும் செய்யவில்லை.

தான் உண்டு தன் வேலையுண்டு என செய்து வருபவர்.

ஆனால் சினிமாவைத் தாண்டியும் நிஜ ஹீரோவாகவே மக்கள் மனதில் வலம் வருகிறார்.

பைக் ரேஸ் முதல், விமானம் ஓட்டவும் செய்கிறார். பைலட் லைசென்ஸ் வைத்திருக்கும் ஒரே நடிகர் இவர் தான்.

மேலும் ஐஐடி மாணவர்களுக்கே விமான பயிற்சிகளில் (தக்ஷா) ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.

இதனால் இவரின் பெருமை ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

அஜித் பெயரை எங்கேயாவது யாராவது சொன்னால் கூட ரஜினி, கமல், விஜய்க்கு கிடைக்காத கரவொலி சத்தம் இவருக்கு (சில நேரங்களில்) மட்டும் கிடைக்கிறது. அதற்கு என்ன காரணம் தெரியுமா..?

சினிமா உலகில் 1970-80களில் பிரபல நடிகர்கள் கையாண்ட் யுக்தியை இப்போதும் அஜித் கையாள்கிறார்.

அதாவது இப்போது உள்ளது போல் டிவியோ, சோஷியல் நெட்வொர்க் அப்போது இல்லை. எனவே நடிகர்களை நாம் காண வேண்டுமென்றால் தியேட்டருக்கு வந்தே ஆக வேண்டும்.

அப்போது தியேட்டரில் கூட்டல் அலை மோதும். போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத கூட்டம், அடிதடி எல்லாம் இருக்கும். எனவே படங்களும் 100 நாட்கள் ஓடியது. மக்களும் தங்கள் அபிமான நடிகர்களை திரையில் ரசித்து வந்தனர்.

அதை தான் அஜித், நயன்தாரா போன்றவர்கள் தற்போது செய்து வருகின்றனர்.

தன் பட பூஜை, இசை வெளியீட்டு நிகழ்ச்சி, புரோமோசன் நிகழ்ச்சிகளுக்கே எதற்கும் அஜித் வருவதில்லை. இதற்கு இவர் தரப்பில் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அது ஒரு புறம் இருக்கட்டும்.

சமூக பிரச்சினைகளுக்கும் குரல் கொடுப்பதில்லை. பேட்டி கொடுப்பதில்லை.

ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எதிலும் அஜித்துக்கு அக்கவுண்ட் இல்லை. ரசிகர்களையும் அடிக்கடி சந்திப்பது இல்லை.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்கள் மற்ற நடிகர்களின் விழாக்களில் கலந்துக் கொள்கிறார்கள். அந்த பட பாடல்களை நேரில் ரிலீஸ் செய்கிறார்கள் அல்லது யூடிப்பில் வெளியிட்டு ஆதரவளிக்கிறார்கள்.

அதுபோல் விஜய்யும் சில நேரங்களில் மற்றவர்களை பாராட்டி பேசுகிறார். தன் பட இசை வெளியீட்டு விழாக்களில் ரசிகர்களை சந்திக்கிறார்.

இவர்களை எல்லாம் ரசிகர்கள் எப்படியாவது எங்கேயாவது சந்தித்து விடுகிறார்கள். அல்லது அவர்களின் பேச்சை டிவியில் பார்த்து ரசிக்கிறார்கள்.

ஆனால் இது எதையும் அஜித் செய்வது இல்லை. எனவே அவரை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அப்போது அவரின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது வேறு வழியின்றி தல தரிசனம் காண தியேட்டருக்கு கட்டுக்கடங்காத அளவில் விரைகிறார்கள்.

அதுபோல் அஜித் பற்றிய பேச்சுக்கள் பொது நிகழ்ச்சியில் எழும் போது ஆர்ப்பரிக்கிறார்கள்.

இதுவே டிஜிட்டல் உலகத்திலும் அஜித் செய்யும் ராஜதந்திரம் எனலாம்.

How Ajith getting more Applause than Rajini and Vijay

Overall Rating : Not available

Latest Post