கொரோனா தடுப்பூசி போட்டதால் நடிகர் விவேக்கிற்கு ஹார்ட் அட்டாக்.? மருத்துவர்கள் விளக்கம்

vivek (2)சின்ன கலைவாணர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விவேக்.

இவர் சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று கொரோனா தடுப்பூசி கொண்டார்.

இந்நிலையில் இன்று குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு விவேக் மயங்கி விழுந்துள்ளார்.

தற்போது சென்னையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கூறியதாவது…

கொரோனா தடுப்புபூசிக்கும் நடிகர் விவேக்கின் உடல்நிலை கோளாறுக்கும் சம்பந்தம் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனைக்கு வரும் போதே சுயநினைவு அற்ற நிலையில் தான் அனுமதிக்கப்பட்டார் விவேக்.

நடிகர் விவேக் அவர்களுக்கு கொரோனோ அறிகுறி இல்லை.

எக்மோ கருவி மூலம் அவரது உடல் தற்போது வரை சீராக உள்ளது. எக்மோ சப்போர்ட்டில் அவர் இருக்கிறார்.

100% ரத்த குழாயில் அடைப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் 5.8 லட்சம் நபர்கள் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். எனவே இதற்கும் மாரடைப்புக்கும் சம்பந்தம் இல்லை.

தற்போது அவரின் உடல் நிலை மோசமாக உள்ளது. 24மணி நேரம் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.”

இவ்வாறு மருத்துவர் ராஜு சிவசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Hospital press release regarding comedy Actor Vivek

Overall Rating : Not available

Latest Post