Breaking: ஞானவேல்ராஜாவின் *தேள்* படத்தில் பிரபுதேவா-ஹரிக்குமார்

Breaking: ஞானவேல்ராஜாவின் *தேள்* படத்தில் பிரபுதேவா-ஹரிக்குமார்

Gnanavel Raja Prabudeva Harikumar teams up for Thealபிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தன் புதுப்படத்தின் பூஜை இன்று நடத்தியுள்ளது.

ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு தேள் என பெயரிட்டுள்ளனர்.

பிரபுதேவா நாயகனாக நடிக்க, நடிகர் ஹரிக்குமார் இப்படத்தை இயக்குகிறார்.

சத்யா இசையமைக்க, விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்கிறார். அன்பு அறிவு சண்டைப் பயிற்சியை மேற்கொள்ள, கேஎல் பிரவீன் எடிட்டிங் செய்கிறார்.

படத்தின் நாயகி மற்றும் இதர கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Gnanavel Raja Prabudeva Harikumar teams up for Theal

Studiogreen‏ @StudioGreen2 8m8 minutes ago
We are extremely delighted in sharing our next film titled #Theal starring the Dancing legend @PDdancing ,Directed by #Harikumar ,Music through @CSathyaOfficial ,Camera helmed by @shuttervik ,Editing by @Cinemainmygenes & Stunts by @anbariv !

theal movie pooja

Exclusive: 2018 தீபாவளி ரேஸில் மோதும் விஜய்-சூர்யா-தனுஷ்

Exclusive: 2018 தீபாவளி ரேஸில் மோதும் விஜய்-சூர்யா-தனுஷ்

Dhanush movie will clash with Vijay and Suriya on 2018 Diwaliதீபாவளி என்றாலே பட்டாசு, புதிய ஆடை, இனிப்பு பலகாரங்கள் ஆகியவற்றுடன் புதிய சினிமா படங்களும் இணைந்து விட்டது.

எனவே தீபாவளி அன்று வெளியாகும் படங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எப்போதுமே இருக்கும்.

இந்தாண்டு 2018 தீபாவளிக்கு ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படம் ரிலீசாகிறது.

இத்துடன் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே படமும் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பல தடைகளை தாண்டி தனுஷ் நடித்து படமும் வெளியாகிறது.

கௌதம் மேனன் இயக்கியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படத்தையும் தீபாவளியன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Dhanush movie will clash with Vijay and Suriya on 2018 Diwali

மக்கள் நல இயக்கத்தை தொடங்கிய விஷாலுக்கு கமல் வாழ்த்து

மக்கள் நல இயக்கத்தை தொடங்கிய விஷாலுக்கு கமல் வாழ்த்து

Kamalhassan wishes Vishal for his Makkal Nala Iyakkamநடிகர் விஷால் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடினார். இத்துடன் அவர் நடித்த இரும்புத் திரை படத்தின் 100வது நாள் விழாவும் சென்னையில் கொண்டாடப்பட்டது.

அப்போது ரசிகர்கள் முன்னிலையில் தன் ரசிகர் மன்றங்களை மக்கள் நல இயக்கமாக அறிவித்தார்.

மேலும் தனி கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார். அதில் விவேகம் விடா முயற்சி உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றன.

இந்நிலையில் விஷால் புதிய அமைப்புக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Kamalhassan wishes Vishal for his Makkal Nala Iyakkam

விஜய் படத்தில் மீண்டும் கெஸ்ட் ரோலில் ஏஆர். முருகதாஸ்

விஜய் படத்தில் மீண்டும் கெஸ்ட் ரோலில் ஏஆர். முருகதாஸ்

Director AR Murugadoss plays cameo role in Vijays Sarkarசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் படம் சர்கார்.

ஏஆர். முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் ஸ்டில்களை அதிகாரப்பூர்வமாக ஒவ்வொரு நாளும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதில் 4வது நாள் போட்டோவில் விஜய்யின் இணைந்து முருகதாஸ் நடனம் ஆடுவது போல் ஒரு காட்சி உள்ளது.

ஏற்கெனவே கத்தி படத்தில் விஜய்யுடன் ஒரு காட்சியில் தோன்றினார் முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Director AR Murugadoss plays cameo role in Vijays Sarkar

விஷாலை கிண்டலடித்த கேமியோ பிலிம்ஸின் இமைக்கா நொடிகள் என்னாச்சு..?

விஷாலை கிண்டலடித்த கேமியோ பிலிம்ஸின் இமைக்கா நொடிகள் என்னாச்சு..?

imaikka nodigalஅதர்வா, நயன்தாரா, விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் இமைக்கா நொடிகள்.

டிமான்டி காலனி புகழ் அஜய்ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தை கேமியோ பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

இப்படம் வெளியாவதற்கு முன்பே அதாவது 4 நாட்களுக்கு முன்பே இப்படத்தை பத்திரிகையாளர்களுக்கு போட்டு காண்பிப்பதாக தயாரிப்பாளர் இதன் பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.

மேலும் பேசும்போது… விஷால் தன் இரும்புத் திரை படத்தை முதலில் திரையிடும் போது பாதி படம்தான் காண்பித்தார். ஆனால் முழுப்படத்தை ஆகஸ்ட் 26ஆம் தேதியே திரையிடுவோம் என பேசியிருந்தார்.

ஆனால் இமைக்கா நொடிகள் படத்தை இதுவரை திரையிடவில்லை.

ஒருவேளை நாளை திரையிட முடிவி செய்துவிட்டார்களோ? என்னவோ?

சொன்ன வாக்கு என்னாச்சு சார்..?

சீமராஜா & 96 படங்களுடன் மோத தயாராகும் நரகாசூரன்

சீமராஜா & 96 படங்களுடன் மோத தயாராகும் நரகாசூரன்

Naragasooran release pushed to 13th September 2018‘துருவங்கள் 16’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’.

இதில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ரோன் இதான் யோகன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு தேதி பல முறை அறிவிக்கப்பட்டு அடிக்கடி தள்ளிக் கொண்டு போனது.

தற்போது இறுதியாக செப்டம்பர் 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தன்று வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீமராஜா’, விஜய்சேதுபதி நடித்துள்ள ‘96’, சமந்தா நடித்துள்ள ‘யு டர்ன்’ ஆகிய படங்களும் இதே நாளில் ரிலீசாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Naragasooran release pushed to 13th September 2018

More Articles
Follows