2022 ஜனவரி 12 நிலவரப்படி… பொங்கல் ரேஸில் ‘தேள்’ & மற்ற 9 படங்கள் பற்றிய பார்வை..

2022 ஜனவரி 12 நிலவரப்படி… பொங்கல் ரேஸில் ‘தேள்’ & மற்ற 9 படங்கள் பற்றிய பார்வை..

பொங்கல் சமயத்தில் வெளியாகவிருந்த ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘ராதே ஷ்யாம்’ மற்றும் ‘வலிமை’ ஆகிய படங்கள் தங்கள் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்தன.

இதனையடுத்து மற்ற தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை பொங்கல் தினத்தில் வெளியிட முன்வந்துள்ளனர். ஒரு சில படங்கள் அறிவிக்கப்பட்டு பின் வாங்கியது.

தற்போது இன்றைய நிலவரப்படி பொங்கலுக்கு மோதவுள்ள படங்கள் பற்றிய ஒரு பார்வை இதோ… (சில படங்கள் ஓடிடியில் ரிலீசாகிறது)

1. சசிகுமார் நடித்த ’கொம்பு வச்ச சிங்கம்டா’ 2. விதார்த் நடித்த ’கார்பன்’ 3. சதீஷ் நடித்த ’நாய் சேகர்’ , 4. அஸ்வின் நடித்த ‘என்ன சொல்ல போகிறாய்’, மற்றும் 5. ‘மருத’ 6. ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா 7. ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த தேள், மற்றும் 8 பாசக்கார பய, 9 புத்தம் புது காலை விடியாதா?, 10 சினம் கொள் ஆகிய படங்கள் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஜனவரி 13 மற்றும் 14ல் வெளியாகவுள்ள படங்கள் பற்றிய ஒரு பார்வை இதோ…

தேள்.

நடிகர் ஹரிகுமார் இயக்கியுள்ள தேள் படத்தில் பிரபுதேவா மற்றும் சம்யுக்தா ஜோடியாக நடித்துள்ளனர். பிரபுதேவா மகனாக ஈஸ்வரி ராவ் அம்மாவாகவும் நடித்துள்ளனர். இப்படத்தினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது

ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா

லட்சுமிமேனன் கதாநாயகியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா.

கே எஸ் ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியன் எழுதி இயக்கியுள்ளார். சந்தோஷ பாண்டி ஒளிப்பதிவில் கே.ஜெய் க்ரிஷ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு சந்திரகுமார் படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்கிசோஃபிரினியா எனும் மன சிதைவு நோயை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.

நாய் சேகர்

கிஷோர் ராஜ்குமாரின் இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ள படம் நாய் சேகர். சதீஷ், பவித்ரா லெட்சுமி ஜோடியாக நடித்துள்ளனர். அஜேஷ் இசையமைத்துள்ளார். வடிவேலு நடித்த ஒரு படத்தில் நாய்சேகர் என்பது அவரது கேரக்டர் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஜிஎஸ் குழுவினர் நாய் சேகர் பெயரை விட்டுக் கொடுக்காத காரணத்தினால் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்து வருவது தனிக்கதை. இந்த படத்தை லைகா தயாரித்து வருகிறது.

கொம்பு வச்ச சிங்கம்டா

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார், மடோனா செபஸ்டின், சூரி, மறைந்த இயக்குநர் மகேந்திரன், ஹரிஷ் பெரடி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. இந்தர் குமார் தயாரித்துள்ளார்.

கார்பன்

ஹிப் ஹாப் ஆதி நடித்த அன்பறிவு படத்தில் வில்லனாக நடித்திருந்தார் விதார்த். இந்த அன்பறிவு படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் விதார்த் நடிப்பை பாராட்டும்படியாக இருந்தது,

தற்போது விதார்த் நடிப்பில் 25வது படமாக உருவாகியுள்ள படம் “கார்பன். ஶ்ரீனிவாசன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

கனவில் காண்பவை எல்லாம் நிஜத்தில் அப்படியே அசலாக நடப்பதால் இந்த படத்திற்கு கார்பன் என பெயர் வைத்திருக்கிறார்களாம்.

தன்யா பாலகிருஷ்ணன் நாயகியாக நடிக்க, விக்ரம் ஜெகதீஷ் (ஒண்டிகட்ட படப்புகழ்), பாவ்லின் ஜெஷிகா (வாய்தா படப்புகழ்) மாரிமுத்து, மூணார் ரமேஷ், நிதீஷ் அஜய், வினோத் சாகர், மூர்த்தி (பிச்சைக்காரன் படப்புகழ்) டபுட் செந்தில், சுபா வெங்கட், பேபி ஜனனி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

மருத

பிக்வே பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜிஆர்எஸ் என்பவர் நடித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘மருத’. இந்த படத்தில் நடிகை ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சரவணன், விஜி, வேலா ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடல் ஒன்றை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன சொல்ல போகிறாய்..

ஹரிஹரன் இயக்கத்தில் ட்ரைடன்ஸ் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் என்ன சொல்ல போகிறாய். இதில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின்குமார் நாயகனாக நடித்துள்ளார்.
இவருடன் அவந்திகா, தேஜு அஸ்வினி, ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

புத்தம் புது காலை விடியாதா…

ஐந்து தனித்தனி கதைகளை உள்ளடக்கிய புத்தம் புது காலை திரைப்படம் கடந்த 2020ல் ரிலீசானது. சுதா கொங்கரா, கௌதம் வாசுதேவ் மேனன், சுஹாசினி மணிரத்னம், ராஜீவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ் என 5 இயக்குநர்கள் இந்த படங்களை இயக்கியிருந்தனர்.

தற்போது இதன் இரண்டாம் பாகம் புத்தம் புது காலை விடியாதா என்ற பெயரில் உருவாகியுள்ளது.

இரண்டாவது கோவிட்-19 லாக்டவுனில் அமைக்கப்பட்ட இக்கதைகள், காதல் மற்றும் இரண்டாவது வாய்ப்புகள் குறித்துப் பேசுகின்றன. ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அர்ஜுன் தாஸ், திலிப் சுப்பராயன், கௌரி ஜி கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் ஜோஸ், நதியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந்த் மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் நடித்துள்ள கதைகளை பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் ஆண்டனி மற்றும் சூர்ய கிருஷ்ணா ஆகியோர் இயக்கியுள்ளனர்.

புத்தம் புதுக் காலை விடியாதா… வரும் பொங்கல், ஜனவரி 14, 2022 அன்று Amazon Prime Video-இல் ரிலீசாகிறது.

சினம் கொள்…

ரஞ்சித் ஜோசப் என்பவர் இயக்கத்தில் ‘சினம் கொள்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை Sky magic பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்ய லட்சுமி டாக்கீஸ் நிறுவன சார்பில் பாக்ய லட்சுமி வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஆண்டவன் கட்டளை, மிக மிக அவசரம் போன்ற படங்களில் நடித்த அரவிந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் நர்வினி டெய்சி, லீலாவதி, பிரேம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – M.R.பழனிக்குமார் இசை – N.R.ரகுநந்தன் வசனம் மற்றும் பாடல்கள் – தீபச் செல்வன். எடிட்டிங் – அருணாசலம் சிவலிங்கம். கலை – நிஸங்கா ராஜகரா. சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் – நித்தியானந்தம். தயாரிப்பு நிர்வாகம் – R.வெங்கடேஷ் தயாரிப்பு – காயத்ரி ரஞ்சித், பாக்யலட்சுமி வெங்கடேஷ். கதை, திரைக்கதை, இயக்கம் – ரஞ்சித் ஜோசப்.

படம் வருகின்ற (14.01.2022) பொங்கல் அன்று Eelam play என்ற ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

Here’s full film details of 2022 pongal release

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *