நடிக்க வரமாட்டுறாரு.; செம லாஸ்… சிம்பு மீது ஞானவேல்ராஜா புகார்

 Gnanavel Raja complaint against Simbu on his call sheet issueநடிகர் சிம்பு மீது புகார் கொடுக்காத தயாரிப்பாளர்களை எண்ணிவிடலாம் போல. தினம் அவர் மீது புகார்கள் வருகின்றன.

பரபரப்பாக அறிவிக்கப்பட்ட மாநாடு படத்தை சிம்புவின் கால்ஷீட் சொதப்பலால் அவரை படத்தில் இருந்து நீக்கினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இந்த நிலையில் கன்னட படமான மப்டி படத்தின் ரீமேக்கில் சிம்பு, கௌதம் கார்த்திக் இருவரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்.

கன்னட படத்தை இயக்கிய நார்தன் தான் தமிழிலும் இந்த படத்தை இயக்கினார். சிம்பு சிவ ராஜ்குமார் கதாபாத்திரத்திலும், கௌதம் கார்த்திக் ஸ்ரீமுரளி கதாபாத்திரத்திலும் நடித்து வந்தனர்.

இப்பட ஷூட்டிங்கிற்கும் சிம்பு செல்லாமல் இருந்துள்ளார்.

அப்படியே வந்தாலும் பாதிநாள் தான் சூட்டிங்கில் இருப்பாராம்.

தற்போது சிம்புவின் பிரச்சினையால் இந்த படமும் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் இணைத்து புகார் கடிதமாகத் தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்துள்ளார் ஞானவேல் ராஜா.

Gnanavel Raja complaint against Simbu on his call sheet issue

Overall Rating : Not available

Latest Post