கணவன், மனைவி உறவு பாதிப்பால் ஏற்படும் விளைவுகளை சொல்லும் ‘அதையும் தாண்டி புனிதமானது’!

கணவன், மனைவி உறவு பாதிப்பால் ஏற்படும் விளைவுகளை சொல்லும் ‘அதையும் தாண்டி புனிதமானது’!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

athiyum thaandi punithamanathuவேல்’ஸ் மூவீஸ் தயாரிப்பில் ஆர்.வெங்கட்டரமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அதையும் தாண்டி புனிதமானது’.

ஜெகின், பிரபுசாஸ்தா, திலக், ஹேமா, கோபிகா,குஷி,வீன் ஷெட்டி,வெங்கடசுப்பு, நாகமுருகேசன் போன்ற நடிகர்களுடன் கராத்தே ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

குடும்பங்களில் கணவன், மனைவி உறவுகள் பாதிக்கப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்..? என்பது பற்றியும், பெண்களை ஏமாற்றித் திரியும் ஆண்களைப் பற்றியும் அலசும் இந்த திரைப்படம் பார்க்கும் மக்களுக்கு பாடமாகவும், அதே சமயம் காமெடி கலாட்டாவாகவும் உருவாகி இருக்கிறது.

இந்த காமெடி தர்பாரில் கஞ்சா கருப்பு, முத்துக்காளை, சிசர் மனோகர், க்ரேன் மனோகர், விஜய கணேஷ், சின்னராசு, சாரைப்பாம்பு சுப்புராஜ் மற்றும் கம்பம் மீனா போன்றவர்கள் கலக்கி இருக்கிறார்கள்.

திரைக்கு வரத் தயாராக இருக்கும் திரைப்படத்தின் ஒளிப்பதிவு- வேதா செல்வம், இசை- V.K.கண்ணன், எடிட்டிங் – ஆர்.கே, இயக்கம் –ஆர்.வெங்கட்டரமணன்,
தயாரிப்பு நிர்வாகம் – மதுரை சி.ஆர்.முத்துப்பாண்டி.

தயாரிப்பு – N.பழனிவேல். மேலும் Dr.K. கருணாகரன், பாண்டிச்சேரி K. பிரகாஷ், வெள்ளோடு நாக முருகேசன், கோடி வெங்கட்லெஷ்மி, கோபாலகிருஷ்ணன், A. ராமசாமி, Dr.A. அப்துல் கபூர், P.கணேஷ், A. ஆரோக்கியராஜ், ராசினாம்பட்டி A.C.ராஜுத்தேவர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

கவிஞர் குடும்பத்தில் இருந்து ஒரு போயட் | நந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ – கவிதைத் தொகுதி

கவிஞர் குடும்பத்தில் இருந்து ஒரு போயட் | நந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ – கவிதைத் தொகுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nandhini karkyதர்பார், சர்க்கார், என்னை அறிந்தால், ஐ, சர்வம் தாளமயம், தங்க மீன்கள் போன்ற தமிழ்ப்படங்களுக்கு சப்டைட்டில் செய்த நந்தினி கார்க்கி சன் சீட்ஸ்(சூரிய விதைகள்) என்ற பெயரில் ஒரு ஆங்கிலக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்துவும் அவரது மனைவி பொன்மணி வைரமுத்து மகன்கள் மதன்கார்க்கி, கபிலன் வைரமுத்து என்ற கவிதைக் குடும்பத்தில் இப்போது அவரது மருமகள் மற்றும் மதன் கார்க்கியின் மனைவி நந்தினி கார்க்கி ஒரு ஆங்கிலக் கவிஞராய் உதயமாகியுள்ளார்.

இருட்டில் இருந்து விடியலுக்கு என்ற இரு வழிப் பயணத்தை மேற்கொள்கிறது இந்த நூல். இயற்கையின் அழகை, மாற்றங்களை ஒரு வழியில் கண்டு களித்து மனதின் மேடு பள்ளங்களில் இன்னொரு வழியில் பயணம் செய்கின்றன நந்தினி கார்க்கியின் கவிதைகள்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று, அமெரிக்காவில் பணி புரிந்து, ஏழு கண்டங்களுக்கும் பயணம் செய்த தன் அனுபவங்களின் சாறு இந்த நூல் என்று நூற்குறிப்பில் நந்தினி கார்க்கி எழுதியுள்ளார். இவர் கடந்த ஓராண்டாக தினமொரு சங்கப்பாடலை பற்றிய விளக்க உரையை இணையவழி பாட்காஸ்ட் செய்து வருகிறார்.

இந்தக் கவிதைத் தொகுப்பை நோஷன் பிரஸ் வெளியிட்டுள்ளது. அமேசான், அமேசான் கிண்டில் போன்ற தளங்களில் வெளியிடப்படும் இந்த நூல் ஆங்கிலக் கவிதை விரும்பிகளுக்கு மட்டும் விருந்தளிக்காமல் மனம் தளர்பவர்களுக்கும் மருந்தளிக்கும் என்று நம்புகிறார் நந்தினி கார்க்கி.

ரிலீசுக்கு தயாராக இருக்கும் கார்த்திக் நரேனின் “மாஃபியா”

ரிலீசுக்கு தயாராக இருக்கும் கார்த்திக் நரேனின் “மாஃபியா”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mafiaஅருண் விஜய் நடிப்பில் துருவங்கள் பதினாறு புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் படம் “மாஃபியா – பாகம் 1”. இப்படத்தை Lyca Productions சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். டீஸர் வெளியீட்டிற்கு பிறகு இந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படமாக மாறியுள்ளது “மாஃபியா”. பட வெளியீட்டை முன்னிட்டு இன்று இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

இந்நிகழ்வில் அவர் கூறியதாவது…

“மாஃபியா – பாகம் 1 “என்னோட 3 வது படம். போலீஸ் கதை. சென்னை பின்னணியில் நடக்கிறது. இரு வலிமையான பாத்திரங்கள் இடையே ஒரு கேட் அண்ட் மவுஸ் கேம் நடக்குற மாதிரியான கதை தான் இந்தப்படம். இப்படம் நான் – லீனியர் முறையில நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் நான்கு பாடல்கள் இருக்கிறது. பாடல்கள் ஒவ்வொன்றும் திரைக்கதையோட சம்பந்தபட்டதா தான் இருக்கும். தனியா இருக்காது. அருண் விஜய் போதைப்பொருள் தடுப்பு அதிகாரியா நடிச்சிருக்கார். அவரால் எல்லாவிதமான கேரக்டரும் பண்ண முடியும்னு நான் நினைக்கிறேன். அவருக்கு அந்தளவு திறமை இருக்கிறது. இரண்டு வேறு வேறு குணங்கள் கொண்ட கதாப்பாத்திரங்கள் இடையே நடக்கிற போர் தான் இந்தப்படத்தின் மையக்கதை. பிரசன்னாவின் கேரக்டர் இந்தப்படத்தில் அடக்கி வாசிக்கிற மாதிரியனாது. ஆனா நடிப்பில் கலக்கியிருக்கிறார். பிரியா பாவானி சங்கர் போலீஸ் அதிகாரியா வருகிறார். அவருக்கு முன்னாடி வேற ஹீரோயின்களும் பார்த்தோம். ஆனா இந்தக் கேரக்டருக்கு அவர் தான் பொருத்தமா இருப்பார் என்று மொத்த படக்குழுவும் சொன்னதால் அவங்கள தேர்ந்தெடுத்தோம். அவரும் நல்லாவே நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் எல்லாம் நடித்திருக்கிறார். இந்த ரோல் அவருக்கு புது மாதிரியா இருக்கும். இவங்க தவிர படத்தில் நிறைய சின்ன கதாப்பாத்திரங்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு கேரக்டரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பிப்ரவரி 5 இந்தப்படத்தின் முதல் பாடல் வெளியிட இருக்கிறோம். முழுக்க சென்னையில் தான் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம் மூன்று நாட்கள் மட்டும் தாய்லாந்தில் எடுத்திருக்கிறோம். பட வேலைகள் மொத்தமாக முடிந்து விட்டது வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

துருவங்கள் 16 புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் மாஃபியா – பாகம் 1 படத்தை Lyca Productions சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவாணி சங்கர் படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழு விபரம்

இசை – ஜாக்ஸ் பெஜாய்

ஒளிப்பதிவு – கோகுல் பெனாய்

படத்தொகுப்பு – ஶ்ரீஜித் சாரங்

சண்டைப்பயிற்சி – டான் அசோக்

கலை இயக்கம்- சிவ சங்கர்

உடை வடிவமைப்பு – அசோக் குமார்

விஷிவல் எஃபெக்ட்ஸ் – Knack Studios

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா D one

நிர்வாக தயாரிப்பு – சுந்தர்ராஜன்

தயாரிப்பு – சுபாஸ்கரன்

“ஓ மை கடவுளே” என் வாழ்வில் முக்கியமான படம் – அசோக் செல்வன்

“ஓ மை கடவுளே” என் வாழ்வில் முக்கியமான படம் – அசோக் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor ashok selvanகாதலர் தினத்தன்று காதலை ஃப்ரஷ்ஷாக சொல்லும்,
இளமை துள்ளும் காதல் படைப்பாக வெளிவரவுள்ளது “ஓ மை கடவுளே”. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். விஜய் செதுபதி மற்றும் கௌதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். பிப்ர்வரி 14 காதலர் தினத்தன்று இப்படம் வெளியாகவுள்ள நிலையில் நாயகன் அசோக் செல்வன் மற்றும் நாயகி ரித்திகா சிங் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

நடிகர் அசோக் செல்வன் கூறியதாவது…

“ஓ மை கடவுளே” என் வாழ்வில் முக்கியமான படம். பல வருடமாக இயக்குநர் அஷ்வத்தை எனக்கு தெரியும். ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணலாம்னு பேசியிருந்தோம். தமிழில் ரொமான்ஸ் கதைகள் வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு. அதனால காதல் கதை பண்ணலாம்னு முடிவு பண்ணி பண்ணதுதான் இந்தப்படம். படத்தில் நாயகி ரோல் முக்கியமானது. ரித்திகா சிங் பண்ணினா நல்லாருக்கும்னு இரண்டு பேரும் நினைத்தோம். அவங்க தேர்ந்தெடுத்து படங்கள் பண்ணிட்டு இருந்தாங்க. அதனால ஒத்துக்குவாங்களானு ஒரு தயக்கம் இருந்தது. ஆனா கதை கேட்டதும் அவங்களுக்கு பிடிச்சது. படமே அவங்கள சுத்திதான் நடக்கும். ரித்திகா மிக நட்பாக இருந்தார் அது நடிக்கும் போது எனக்கு உதவியாக இருந்தது. வாணி போஜனுக்கு ஒரு முக்கியமான ரோல். அவங்களுக்கு இது தமிழ்ல முதல் படம் நல்லா பண்ணியிருக்காங்க. அப்புறம் படத்தில் முக்கியமான பாத்திரம் ஒன்னு இருக்கு. அதுக்கு விஜய் செதுபதி அண்ணாகிட்ட கேட்டோம். அவருக்கு பெரிய மனசு எளிமையா வந்து நடிச்சு கொடுத்திட்டு போயிட்டார். விஜய் சேதுபதி இந்தப்படத்தில் கடவுளாக நடிக்கிறார். மற்றதெல்லாம் திரையில் பாருங்கள். எனக்கு நிறைய வித்தியாசமான கேரக்டர் கதைகள் செய்ய ஆசை. இப்போது காதல் கதைகள் எதுவும் வருவதில்லை அதனால் இந்தப்படம் செய்யலாம் எனத் தோன்றியது. அக்கா அபிநயா செல்வம் அவர்தான் இந்தகதையை முதலில் நம்பினார். அப்புறம் டில்லி பாபு சார் ராட்சசன் படத்திற்கு பிறகு இப்படத்தை நம்பி எடுத்தார். இருவருக்கும் எனது நன்றி. டீஸருக்கு கிடைத்த வரவேற்பு நாங்களே எதிர்பார்க்காதது. படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. எல்லாருக்கும் பிடிக்கும்.

நடிகை ரித்திகா சிங் கூறியதாவது…

அதிகமாக படங்கள் செய்வதில்லை. நல்ல படங்கள் மட்டுமே செய்யலாம்னு வெயிட் பண்ணேன். வாய்ப்புகள் வந்தாலும் தேர்ந்தெடுத்து பிடித்ததை செய்தால் போதுமென்று நினைத்தேன். இந்தக்கதை கேட்டு பிடிச்சது. இந்தக்கேரக்டர் ரொம்ப பிடிச்சது. அசோக்செல்வன் நடிக்கும்போது ரொம்ப உதவியா இருந்தார். விஜய் சேதுபதி கூட எனக்கு காட்சிகள் இல்ல. ஆனால் படப்பிடிப்பில் சென்று ஒரு நாள் அவரை சந்தித்தேன். அவருடன் “ஆண்டவன் கட்டளை” நடித்திருக்கிறேன். நிறைய பேசினோம். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நான் செய்யும் பாத்திரங்கள் எனக்கு பிடிக்க வேண்டும் படம் ஓடுகிறதா, இல்லையா, என்பது வேறு விசயம். செய்யும் வேலையில் மகிழ்ச்சியாக நாம் இருக்க வேண்டும். இபடத்தில் மிக சந்தோஷமாக இருந்தேன். படம் இளைஞர்களை ஈர்க்கும்படி அமைந்துள்ளது. எல்லோருக்கும் பிடிக்கும்.

2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படம் சென்சார் ஃபோர்டில் U/A சர்டிஃபிகேட் பெற்றுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தை Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

வாணி போஜன், M S பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து , இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து

இசை – லியான் ஜேம்ஸ்

ஒளிப்பதிவு – விது அயன்னா

படத்தொகுப்பு – பூபதி செல்வராஜ்

கலை இயக்கம் – இராமலிங்கம்

உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்

உடைகள் – முகம்மது சுபையர்

சண்டைப் பயிற்சி – ராம்குமார்

பாடல்கள் – கோ சேஷா

புகைப்படம் – ராஜா

தயாரிப்பு மேற்பார்வை – சேதுராமலிங்கம், பூர்னேஷ்

நிர்வாக தயாரிப்பு – நோவா.

தர்பார் நஷ்டம்: விநியோகஸ்தர்களுக்கு உதவ தயாரான தமிழக அரசு

தர்பார் நஷ்டம்: விநியோகஸ்தர்களுக்கு உதவ தயாரான தமிழக அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Minister says Govt ready to help in Darbar movie lossகடந்த மாதம் ஜனவரி 9ஆம் தேதி ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் உலகமெங்கும் 3 மொழிகளில் வெளியானது.

இந்த படம் உலகமெங்கும் வசூல் வேட்டை செய்த போதிலும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் நஷ்டம் அடைந்துள்ளதாக சில விநியோகஸ்தர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இந்த நிலையில் தர்பார் நஷ்டம் குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களிடம் செய்தியாளர்களிடம் கேட்டுள்ளனர்.

தர்பார் திரைப்படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் அவர்களுக்கு அரசு உதவ தயாராக உள்ளது.

ரஜினியின் ‘தர்பார்’ MASS? LOSS?; என்ன நடக்கிறது..? ஒரு பார்வை

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் நடக்கவில்லை. எனவே புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. அரசு அதிகாரி ஒருவர் தான் பார்க்கிறார். எனவே அவர்கள் அரசை அனுகினால் தேவையானவற்றை செய்ய அரசு தயாராக உள்ளது என்றார்.

மேலும் ஆன்லைன் மூலம் அரசே டிக்கெட் விற்பனை செய்யும் விவகாரத்தில் முடிவு எடப்பட்டுள்ளதாகவும், விரைவில் விலை நிர்ணயிக்கப்படும் எனவும், பண்டிகை காலங்களில் சிறப்பு காட்சிகளுக்கும் அரசே டிக்கெட் விலையை நிர்ணயிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

திருட்டு வி.சி.டி.யை ஒழிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், திருட்டு விசிடியை ஒழிக்க அரசால் மட்டும் முடியாது எனவும், திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மூன்று துறையினரும் ஒத்துழைத்தால் தான் அரசால் கட்டுப்படுத்த முடியும் எனவும் திரையரங்கில் படத்தை வெளியிடும் போது தான் திருட்டு விசிடி வெளி வருகிறது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

TN Minister says Govt ready to help in Darbar movie loss

ஆரி அர்ஜுனாவுக்கு ஜோடியாக லொஸ்லியா & ஸ்ருஷ்ட டாங்கே

ஆரி அர்ஜுனாவுக்கு ஜோடியாக லொஸ்லியா & ஸ்ருஷ்ட டாங்கே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Losliya and Srushti dange pairs up with Aari Arujuna நெடுஞ்சாலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதால் ஆரி பிரபலமானார்.

தமிழ் மீது ஆர்வம் கொண்டுள்ளதால் தமிழிலேயே தன் கையெழுத்தையும் போட்டு வருகிறார்.

அண்மையில் தனது ஆரி என்ற பெயரை ஆரி அர்ஜீனா என மாற்றிக் கொண்டார்.

இந்த நிலையில் இவர் நடிக்கவுள்ள புதிய படத்தில் 2 நாயகிகள் நடிக்கின்றனர்.

ஒருவர் ஸருஷ்டி டாங்கே. மற்றொருவர் பிக்பாஸ் புகழ் லொஸ்லியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆல்பர்ட் ராஜா இயக்கவுள்ள இந்த படத்தை சந்திரா மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.

சத்யா இசையமைக்க மக்கள் தொடர்பாளர் பணிகளை ராஜ்குமார் கவனிக்கிறார்.

Losliya and Srushti dange pairs up with Aari Arujuna

aari losliya srusti

More Articles
Follows