ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு பட டைட்டில் லுக் வெளியானது

Ex Chief Minister Late Jayalalithaa biopic titled The Iron Lady‘சக்தி’ என்ற படத்தை வரலட்சுமி நடிப்பில் இயக்கி வருகிறார் பிரியதர்ஷினி.

அந்த படம் இன்னும் ரிலீசாகாத நிலையில் தன் படத்தை அதிரடியாக சில மாதங்களுக்கு முன்பே அறிவித்தார் பிரியதர்ஷினி.

அதுவும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கி, தயாரிக்கப் போவதாக அறிவித்தார்.

இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

இப்படத்திற்கு ‘தி ஐயர்ன் லேடி’ (The Iron Lady) என்று டைட்டில் வைத்துள்ளனர்.

விரைவில் படத்தின் தொடக்க விழா நடக்கும் என போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

இவையில்லாமல் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தை, இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் விஜய் ஆகியோரும் தனித்தனியாக இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Ex Chief Minister Late Jayalalithaa biopic titled The Iron Lady

Overall Rating : Not available

Related News

வரலட்சுமி நடித்து வரும் ‘சக்தி’ என்ற…
...Read More

Latest Post